பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

திடக்கழிவு மேலாண்மை

திடக்கழிவு மேலாண்மை பற்றிய தகவல்

திடக்கழிவு

மேற்பார்வை பொறியாளர் அவர்கள் தலைமையில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை துறையில் திடக்கழிவுகளை களைதல் சென்னை மாநகராட்சியின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். சென்னை மாநகரிலிருந்து தினமும் சராசரியாக 4500 மெ.டன் குப்பை சேகரித்து களையப்பட்டு வருகிறது. நகரின் முக்கியமான சாலைகள் மற்றும் வணிகவளாக பகுதிகளில் இரவு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மண்டலங்களிலும் வீட்டுக்கு வீடு குப்பை சேகரித்தல் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உருவாகும் குப்பையின் அளவு மற்றும் குப்பையில் அடங்கியுள்ள பொருட்கள்

ஒரு நாளைக்கு ஒரு நபர் உருவாக்கும் குப்பையின் அளவு

700 கிராம்

ஒரு நாளைக்கு உருவாகும்

4500மெட்ரிக் டன் குப்பை

திடக்கழிவுகளின் அளவு கட்டுமான மற்றும் கட்டட இடுபாட்டுக்கழிவுகள்

700 மெட்ரிக் டன்

 

குப்பையில் அடங்கியுள்ள பொருட்கள்

பௌதீக கூறுகள்

 

உணவுக்கழிவுகள்

8.00 %

தாவரக்கழிவுகள்

32.25 %

மரக்கழிவுகள்

6.99 %

நுகரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்

5.86%

தொழிற்சாலைக்கழிவுகள்

1.18 %

இரும்பு மற்றும் உலோகங்கள்

0.03 %

கந்தைகள் மற்றும் துணிகள்

3.14 %

காகிதங்கள்

6.45 %

ரப்பர் மற்றும் தோல்பொருட்கள்

1.45 %

கற்கூளங்கள்

34.65 %

வேதியல் பகுப்பாய்வு

 

ஈரப்பதம்

27.60 %

பி.ஹெச் மதிப்பு

7.68 %

சிதையக்கூடிய பொருட்களின் அளவு

39.06 %

கரிமங்களின் அளவு

21.53 %

நைட்ரஐன் அளவு

0.73 %

பாஸ்பெரஸின் அளவு

0.63 %

பொட்டாசியத்தின் அளவு

0.63

பல்வேறு வகையை சேர்ந்தவர்கள் உருவாக்கும் குப்பையின் அளவு அந்தந்த வகைப்படி

குடியிருப்பு பகுதிகள்

68 %

வணிகப்பகுதிகள்

16 %

அரங்கங்கள், பள்ளிகள், நிறுவனங்கள்

14 %

தொழிற்சாலைகள்

2 %

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள்

தனியே களையப்படுகின்றன

திடக்கழிவுகள்

முதல் நிலை குப்பை சேகரிக்கும் பணி

 • பணியாட்களை உபயோகித்து பணி செய்தல்
 • துப்புரவு பணி காலை 6.30 மணி முதல் காலை 10.30 வரையிலும் மற்றும் மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை
 • காம்பேக்டர் மற்றும் மூன்று சக்கர மிதி வண்டி வாகனங்கள் துப்புரவு பணி காலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
 • இரவு துப்புரவு பணி இரவு 9.00 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரை

ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணி அளிக்கப்படுகிறது.

பயன்படுத்தப்படும் தளவாடங்கள்

 • துடைப்பம்
 • கூடைகள் (மூங்கில் மற்றும் அலுமினியம்)
 • பிரஷ்கள்
 • இரும்பு தகடு (பென்கு)
 • தொட்டியுடன் கூடிய தள்ளு வண்டிகள்
 • மூன்று சக்கர மிதிவண்டிகள்
 • சக்கரத்துடன் கூடிய தள்ளு வண்டி (Rotomould)

பணியின் செயல்பாடுகள்

 • பெருக்குதல், சேகரித்தல் மற்றும் சேகரித்த குப்பையை தொட்டிகளில் சேர்த்தல்
 • வீட்டுக்கு வீடு சென்று குப்பை சேகரித்தல்
 • வீடுகளில் தரம் பிரிக்கப்பட்ட குப்பையை மூன்று சக்கர மிதிவண்டிகள் அல்லது இலகுரக வாகனங்க(சுடிவடிஅடிரடன)
 • பணியின் செயல்பாடுகள்

இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு ( போக்குவரத்து )

 • தெருக்களிலிருந்து நேரடியாக குப்பை கொட்டும் வளாகத்தில் களைதல்
 • குப்பை மாற்று நிலையங்களிலிருந்து குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு சென்று களைதல்
 • ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு நடைக்கும் வழித்தடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது்து செய்தல்)

வாகனங்களின் இயக்க நடை எண்ணிக்கை

 • கனரக வாகனங்கள் தினமும் இரண்டு நடைகள்
 • இலகுரக வாகனங்கள் தினமும் மூன்று நடைகள்

குப்பை மாற்று நிலையங்கள்

குப்பை மாற்று நிலையங்களின் எண்ணிக்கை

8 + 3 (விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள்)

தினசரி குப்பை மாற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் குப்பையின் அளவு

4000 மெ.டன் குப்பை

 

குப்பைகளைக் களைதல்

தற்பொழுது குப்பை கொட்டும் வளாகங்களில் குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு பின்னர் அவைகளை கட்டுமான கழிவுகள் கொண்டு மூடப்பட்டு வருகிறது. தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் குப்பை கொட்டும் வளாகத்தை சுகாதார முறையில் சீரமைத்தல் அல்லது அறிவியல் ரீதியில் மூட ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து உலகளாவிய விருப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவற்றிலிருந்து தகுதியான தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய செயல்பாடுகள்

குப்பையை தரம் பிரித்தல்

 • அனைத்து மண்டலங்களிலும் வீட்டுக்கு வீடு சென்று குப்பையை தரம் பிரித்து சேகரித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி சுமார் 95 சதவிகிதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
 • வீட்டுக்கு வீடு சென்று குப்பையை சேகரிக்கும் திட்டத்திற்கு மூன்று சக்கர மிதி வண்டி வாகனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்பொழுது சுமார் 2800 மூன்று சக்கர மிதி வண்டி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சாலைகளில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
 • குப்பையை தரம் பிரித்தல்
 • குப்பை தரம் பிரித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்படும் குப்பையின் அளவு குறைவதால் குப்பைக் கொட்டும் வளாகத்தின் ஆயுட் காலம் அதிகரிக்கும்
 • குப்பையை தரம் பிரித்து மக்கக்கூடிய குப்பைகளை கொண்டு வீடுகளிலேயே உரம் தயாரித்து தாவரங்களுக்கு பயன்படுத்துதல்
 • குப்பையை தரம் பிரித்து மறு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் குப்பையை மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு மீதம் உள்ள மக்காத குப்பைகளை குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லுதல்

புதிய திட்ட பணிகள்

 • திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில் முனைவோர்கள் கீழ் கண்ட செயல் திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
 • ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை பதனிடுதல் வசதிகள் நிறுவுதல்
 • குப்பை கொட்டும் வளாகங்களை சீரமைத்தல் மற்றும் அவைகளை அறிவியல் ரீதியில் மூடுதல்
 • வீட்டுக்கு வீடு சென்று குப்பை சேகரித்தல் மற்றும் அவைகளை ஒருங்கிணைந்த திடக்கழிவு பதனிடுதல் திட்ட வளாகத்திற்கு கொண்டு சென்று சேர்த்தல்


திடக்கழிவு மேலாண்மை
2.80769230769
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
அருள் Mar 12, 2020 07:05 PM

சரி ஆனால் மாதம் ரூ 10 எதர்க்கு வசூல் செய்யரிங்க

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top