பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை / பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைத்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைத்தல்

பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைக்கும் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்பான பொருட்களை மனித இனம் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் (நிலைகளிலும்) பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு சுமார் 12 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், மூட்டைகட்ட பயன்படுத்தும் தெர்மா கோல் மற்றும் பஞ்சு போன்ற அட்டை ஆகியவைகள் சுமார் 50 விழுக்காடுகள் உள்ளது. இக்கழிவுகள் நமது சீரற்ற கலாச்சாரப்படி ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பின் தனியாக சேகரிக்கப்படாமல் குப்பைகளில் போடப்படுகிறது. இம்மக்கா கழிவுகள், மக்கும் திடக் கழிவுகளுடன் குப்பைகளில் கலந்துவிடுகிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுமுறையும் பயன்படுத்த தரம் பிரிக்க வேண்டியுள்ளது.

கழிவுகளை ஆரம்பத்திலேயே தனித்தனியே இரண்டு தொட்டிகளில் (மக்கும் குப்பை & மக்கா குப்பை) சேகரித்தால் வெவ்வேறு இடங்களில் தரம் பிரிப்பது தவிர்க்கப்படும். மேலும் பள்ளி மாணவ மாணவியருக்கு மக்கா குப்பையில் அடங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வீட்டிலிருந்து பள்ளிக்குக் கொண்டு வந்து மொத்தமாக சேர்த்து அதனை மறுசுழற்சியில் பயன்படுத்தத் தேவையான பழக்கவழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இச்செயல் கடைபிடிக்கப்பட்டால் வீடும், தெருக்களும் பிளாஸ்டிக் கழிவுகளின்றி சுத்தமாக இருக்கும். இவ்வாறு கழிவுகளைத் தரம் பிரித்து அகற்றும் பழக்க வழக்கங்களை மனித இனம் மேற்கொள்வது அவசியமாகும். கழிவுகளை அகற்றுவது மிகவும் கடினமாக இருப்பதுடன், இக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், சமூக சீர்கேடு ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காரணியாக இருக்கிறது. இப்பிளாஸ்டிக் கழிவுகளை 2509 செல்சியஸ் வெப்ப அளவிற்கு எரியூட்டினால், இதனிலிருந்து வெளிப்படும் அமிலவாயு காற்றில் கலந்து காற்றினை வெப்பமாக்கி, புவியையும் வெப்பமயமாக்கி சுற்றுச்சூழலை சீர்கேடு அடையச் செய்துவிடும்.

தார்ச்சாலைடில் பிளாஸ்டிக் பயன்பாடு

சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், ஊராட்சி அமைப்புகளில் உள்ள மகளிர் குழுக்களின் மூலமாக 1.60 மி.மீ. முதல் 2.50 மி.மீ. அளவுள்ள சிறு சிறு துகள்களாக, அரசு மானியத்தில் வழங்கப்பட்ட, வெட்டு இயந்திரங்களின் உதவியால் வெட்டப்பட்டு, சேகரித்து வைக்கப்படுகிறது. பின்பு இவை, தார்ச்சாலை அமைக்க சேகரிக்கப்பட்ட 110° செல்சியஸ் அளவிற்கு சூடுபடுத்தப்பட்ட கற்களுடன் சேர்த்து சுழற்சி முறையில் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலக்கப்படும் போது, கற்களில் உள்ள 1709 செல்சியஸ் வெப்பத்தினால், 30லிருந்து 60 வினாடிகளுக்குள் சிறு துகள்களாக நறுக்கப்பட்ட, பிளாஸ்டிக் துகள்கள் இளகி, கற்களின் மேல் போர்த்தியது போல், கற்களின் மேற்பரப்புகளை முழுவதுமாக மூடிவிடுகிறது.

இவ்வாறு இளகிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்ட கற்கள், உறுதியானவையாகவும், பிடிப்புத் தன்மையுள்ளதாகவும், மாறிவிடுகிறது. மேலும், கற்களின் மேற்பரப்பில் உள்ள சிறு சிறு நுண் இடைவெளி முழுவதுமாக மூடப்படுவதால், அதனுள், மழைநீர் அல்லது உப்பு கலந்த நீர் புகாமல் தடுக்கப்படுகிறது. இதனால், கற்கள் மழைநீரை உறிஞ்சி சிறு சிறு கற்களாக உடைவது தவிர்க்கப்படுவதுடன், சாலை, குறுகிய காலத்திற்குள் பாழ்படுவது தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு, இளகிய பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்ட கற்களுடன், 1650 செல்சியஸ் வெப்ப அளவில் சூடுபடுத்தப்பட்ட தார் சேர்க்கப்படுகிறது.

மேலே கூறப்பட்ட வெப்ப அளவுகளில், தயார் செய்யப்பட்ட கலவையானது, 1109 - 1209 செல்சியஸ் வெப்ப அளவிற்குள்ளாக, தயார் நிலையில் உள்ள சாலைகளில் பரப்பப்பட்டு, கனமுள்ள சாலை உருளை வண்டி மூலம் இறுக்கம் கொடுக்கப்பட்டு, பிளாஸ்டிக் தார்ச் சாலை அமைக்கப்படுகிறது. 10 சதுர மீட்டர் அளவும் 25 மி.மீட்டர் கனமும் உள்ள பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்க, 27 கிலோ தார்க்கலவையும் 3 கிலோ பிளாஸ்டிக் நறுக்குகளும் தேவைப்படும். சாதாரண தார்ச் சாலை அமைக்க 30 கிலோ தார்க்கலவை தேவைப்படும். ஒரு பிளாஸ்டிக் சாலை அமைக்க தார்க்கலவையின் அளவில் 10 சதவீதம் பிளாஸ்டிக் நறுக்குகள் தேவைப்படும். பொதுவாக, இந்தத் தொழில்நுட்ப முறையை உபயோகித்து, அனைத்து வகையான சாலைகளும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட சாலைகள், உறுதி வாய்ந்தவையாகவும் மழைக்காலங்களில் சேதமடையாமலும் பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாட்டினால் புற ஊதா நிறக் கதிர் வெளிப்பாடு இல்லாமலும், அதிக கனரக வாகனப் போக்குவரத்தை தாங்கக் கூடியவையாகவும், குறைந்தது 7 வருடங்களுக்கு எந்தவித சேதாரம் இல்லாமலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தத் தொழில்நுட்ப முறையின் மூலம் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த 2011-12 மற்றும் 2012-13ஆம் ஆண்டுகளில் முறையே 445.20 கி.மீ. மற்றும் 577.70 கி.மீ. நீள சாலைகள் அமைக்க மொத்தம் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் அமைக்க மொத்தம் 1280 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுதல், புவி வெப்பமடைதல், மழையின்மை, நீர்வழிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவது போன்றவை தவிர்க்கப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்ப முறையினால், நாம் அடையும் சுற்றுச்சூழல் நன்மைகள்

  • பிளாஸ்டிக் கழிவுகள் உபயோகத்தினால், 2% மடங்கு கன அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிப்பாடு தவிர்க்கப்படுவதால் புவி வெப்பமயமாதல் குறைகிறது.
  • நிலம் மற்றும் காற்று மண்டலம் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. நிலப்பகுதி பிளாஸ்டிக் கழிவுகளினால் மூடப்படுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை எரியூட்டுவதும் தவிர்க்கப்படுகிறது.

ஆதாரம் : திட்டம், மாத இதழ்

ஆக்கம் : டாக்டர் மல்லேசப்பா, ஐ.எஃப்.எஸ். இயக்குனர், சுற்றுச் சூழல் துறை, தமிழக அரசு.

3.02564102564
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top