பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / நிலையான மேம்பாடு / இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

உலகளவில் இன்று சூழல் அறிஞர்களும் பொருளாதார வல்லுனர்களும் பலவகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விடை தேட முயலுகின்றனர். சில தகவல்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் இன்று சூழல் அறிஞர்களும் பொருளாதார வல்லுனர்களும் பலவகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விடை தேட முயலுகின்றனர்.  இன்றைய வளர்ச்சி நிலைத்த மேம்பாட்டை தரக்கூடியதா?  காடுகள் விளை நிலங்களுக்காகவும், குடியமர்த்தலுக்காகவும், சாலைகளுக்காகவும் தொடர்ந்து அழிக்கப்படலாமா? பெட்ரோலிய பொருட்களை தொடர்ந்து பூமியிலிருந்து உறிஞ்சி பயன்படுத்தலாமா?  நவீன விவசாயம் தொடரலாமா?  பெருகிவரும் தேவைகளுக்கு எவ்வளவு காலம் வரை குறைந்து வரும் இயற்கை வளங்கள் ஈடுகொடுக்க முடியும்?

என விவாதங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

நிலைத்த மேம்பாடு என்றால் என்ன?

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குழுமத்தின் வரையரையின்படி நிலைத்த மேம்பாடு என்பது “இன்றைய சந்ததியினரின் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமல்லாது வரும் சந்ததியினரின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க வல்லதாக அமைவது” என்பதாகும்.

சுருங்கச் சொன்னால் இன்றைய தேவைகளின் தாக்கம் வருங்கால சந்ததியினரின் இயற்கைவள தேவைகளை பாதிக்கப்படாமலிருத்தல் என்பதாகும்.

நிலையற்ற மேம்பாட்டின் அறிகுறிகள்

நம்முடைய இன்றைய வாழ்க்கைமுறை சிறப்புற அமைவதற்கு பல வகையான நிலைத்த மேம்பாட்டு வழிகளை கடைபிடிப்பது அவசியம். நிலையற்ற மேம்பாட்டின் அறிகுறிகள்

மக்கட்தொகை பெருக்கம்

ஏழ்மையும் சுகாதாரகேடும்

மாசடைந்த காற்று, நீர் மற்றும் நிலம்

பெருகிவரும் குப்பை மற்றும் அபாயக் கழிவுகள்

பூமி வெப்பமடைதல், உயரும் கடல்மட்டம், மாறிவரும் சீதோஷன நிலை

அளவுகடந்த பெட்ரோலிய பொருட்கள் உபயோகம்

அறிய உயிரினங்கள் அழிந்து போதல்

உலகளவில் பல மாநாடுகளும், கருத்தரங்கங்களும் நிலைத்த மேம்பாட்டிற்காக நடத்தப்பட்டுள்ளன.  சூழல் கல்விக்காக டிபிலிசியில் மாநாடு நடத்தப்பெற்றும், ரியோவின் புவி உச்சி மாநாட்டிற்கு பின்பும் சூழல் விழிப்புணர்வில் எந்த ஒரு பெரிய மாற்றமும் தென்படவில்லை.

காலத்தின் கேள்வி?

நிலைத்த மேம்பாட்டிற்காக செய்யப்பட வேண்டிய செயல்கள் அதிகம்.  இவற்றை எதிர்காலத்திற்காக திட்டமிடுதலைக் காட்டிலும், நிகழ்காலத்தில் திட்டமிட்டு நிறைவேற்றப்படுவதே பின்னாளில் நிலைத்த மேம்பாடு தொடருவதற்கான வழி.

மக்கள்தொகை பெருக்கமும் அதன் தாக்கமும்

பெருகிவரும் மக்கட்தொகை இயற்கை வளங்களின் மீது அளவிடற்கறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  அவர்களின் உணவுத் தேவைகளுக்காக அதிக விளைநிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் தேவை.  விளைவு, காடுகள் அழிக்கப்படுகின்றன.  1980 முதல் 1995 வரை ஏறக்குறைய 180 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதி வளரும் நாடுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது.  அழிந்துவரும் காடுகள், மாறிவரும் வாழிடங்கள் மற்றும் சீதோஷன நிலை அரிதான உயிரினங்கள் அழிந்து போக வழிவகுக்கிறது.

அபாயமான நிலை

உலக மக்கட்தொகை கணிப்புகளின்படி, 2030 களில் 9 பில்லியனை எட்டும்.  கடந்த 1000 வருடங்களில் மக்கட்தொகை பெருக்கம் பலமடங்கு பெருகியுள்ளது.  1950ல் 2 பில்லியனாக இருந்தது, 2014ல் 7 பில்லியனாக உயர்ந்துள்ளது.  உலக மக்கட்தொகை குறைந்தது 7.7 பில்லியனிலிருந்து அதிகபட்சமாக 11.2 பில்லியன்வரை வளர்ந்த பின்னேரே சமச்சீரடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாரத்தின் சுமை

உலகின் புவிப்பரப்பில், 2.5 சதவிகிதம் மட்டுமே உள்ள இந்தியாவில் உலக எருமைகளில் பாதியும், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியையும்,  கால்நடைகளில் ஏழில் ஒரு பகுதியையும்  சுமக்க வேண்டியுள்ளது.  இந்தியாவின் மொத்த புவிப்பரப்பான 328.73 மி.ஹெ. நிலத்தில் 142.21 மி.ஹெ. மட்டுமே விளைநிலமாக உள்ளது.  அதிகரித்து வரும் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியில் நிலத்தின் வளம் குறைக்கப்பட்டு வருவதோடு, கால்நடைகளின் உணவு தேவைகளும் மறுக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

குடும்பக்கட்டுப்பாடு - இன்றைய தேவை

இந்திய மக்கட்தொகை கட்டுப்படுத்துதல் வாழ்க்கை தர மேம்படுதலுக்கும், இயற்கைவளங்கள் காக்கப்படுவதற்கும் மிகவும் அவசியமாகும்.

மிதமிஞ்சிய நிலையில் பற்றாக்குறை

உலகெங்கும் சில நாடுகளில் உணவுப் பொருட்கள் மிஞ்சிய நிலையில் இருந்தாலும் 800 மில்லியன் மக்கள் சரிவர உணவு கிடைக்காத நிலையில் உள்ளனர்.  அவற்றில் 20% வளரும் நாடுகளில் உள்ளனர். 200 மில்லியன்ற்கும் மேற்பட்ட குழந்தைகள் உலகளவில் சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : சி.பி.ஆர்.சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.76470588235
Arivumathi Dec 16, 2016 06:18 PM

எனக்கு இந்த சமுக கருத்து லைக் பண்ணுறன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top