অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நீடித்த வாழ்வும் நீரும் - அறிமுகம்

நீடித்த வாழ்வும் நீரும் - அறிமுகம்

அறிமுகம்

நீரின்று அமையாது உலகு என்பார் திருவள்ளுவர், நீரே நமது நீடித்த வாழ்வுக்குக் காரணமாக அமைகின்றது.

எர்தியான் என்பது பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கான விப்ரோவின் நீடித்தவாழ்வுக் கல்வித்திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் நீடித்த வாழ்வுக்கல்வியை அதிகப் பொருளுடையதாக்குவதே இதன் நோக்கம். வாழ்க்கையிலும் கல்வியிலும் பல்வேறு துறைகளை இணைத்துக் புரிந்து கொள்ளவும், பண்முகப் பார்வை கொண்டு ஆராயவும் வழிகாண்பதே இதன் குறிக்கோளாகும். கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் வாழும் சமூகத்தைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ள இத்திட்டம் உதவும். இதன் ஒரு பகுதியாக, நீங்கள் குழுக்களை அமைத்து இக்கற்றல் திட்டத்தில் பங்குகொள்ளலாம். இத்திட்டத்தின் கருப்பொருள் தண்ணீர் அனுப்பப்டும் செயலறிக்கையின் அடிப்படையில் எர்தியன் விருதுக்குச் சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

விருதுபெறும் பள்ளிகள், கல்லுாரிகளுடன் நீண்டகாலத் தொடர்புகொண்டு ஆசிரியர்களையும், மாணவர்களையும் பயன்படுத்தி நீடித்த வாழ்வுக்கல்வியினை ஒருங்கிணைத்து மேம்படுத்தலாம்.

தண்ணீர் ஏன்?

நீடித்த வாழ்வு என்பது வாழ்விடம், வளங்கள் அவற்றைப் பெறும் முறை மற்றும் பங்கீட்டு முறையுடன் மிக நுட்பமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. இவையனைத்தையும் விட தண்ணீர் உயரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, பருவமாற்றம், அரசியல், வேளாண்மை, சமூகநீதி, அயல்நாட்டுக்கொள்கை, உள்ளூர் பண்பாடு என இன்னபிறவற்றின் மீதும் தாக்கம் கொண்டதாக உள்ளது. 12ஆம் திட்டக்குழுவின் அறிக்கையின்படி, தண்ணீரை மையப்படுத்திய முக்கியகாரணிகளாகத் தகுந்த தெரிந்த உதாரணங்களைக் கொண்டு கீழ்க்காண்பவை தரப்பட்டுள்ளன.

தண்ணீர் வழங்குவதற்கான வளம் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. முந்தைய காலத்தைவிட நீர் ஆதாரங்கள் மாறிக்கொண்டே உள்ளன, சில நிகழ்வுகளில் அதிகப் பயன்பாடு காரணமாக நீர் ஆதாரங்கள் வறண்டு போய்விட்டன, வாழ்க்கைச்சூழலும் அழிந்து விட்டன. சில ஆதாரங்கள் கீழே படவடிவில் தரப்பட்டுள்ளன.

படம் 1 காலப்போக்கில் நன்னீர் ஆதாரங்கள் மாறிவருகின்றன.

படம் 2 காலப்போக்கில் ஊரல் கடல்

நாடு முழுவதும் குறைந்து வரும் தண்ணீர்த்தளம்

விரைவான நகரமயமாதலாலும் திட்டமில்லாத வளர்ச்சியாலும் பெங்களூரு மாநகரத்தில் நிலத்தடி நீர் மட்டம் மிகவிரைவாகக் குறைந்து வருகிறது. உதாரணம் சொல்லவேண்டுமானால் பல குழுமங்களின் மையமாக உள்ள ஒயிட் பீல்டு என்னும் இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 5-6 மீட்டர் ஆழத்தில் (16 அடி அல்லது வகுப்பறையின் உயரம்போல 11/2 மடங்கு) இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 30 மீட்டர் ஆழத்திற்கு (98 அடி அல்லது இரண்டு பள்ளிப்பேருந்துகளின் நீளம்) இறங்கிவிட்டது. பெங்களூரின் சர்ஜாபுர சாலை போன்ற பகுதிகளில் 1000 முதல் 1200 அடி வரை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. இருப்பினும் தண்ணர் கிடைப்பது உறுதிப்படுத்தாததாகவே உள்ளது.

ஃபுளூரைடு, ஆர்சானிக், யுரேனியம் போன்றவை கலந்து தண்ணீர்த் தரம் குறைந்து விட்டதென்னும் புகார்கள் அதிகமாகி வருகின்றன. தொழிற்சாலைகளின் சுத்திகரிப்படாத கழிவுநீராலும், கழிவுநீர்க் கால்வாய்களாலும் ஆறுகளும் நிலத்தடி நீரும் மாசுப்படுத்தப்படுகின்றன.

குளிர்பானத் தொழிற்சாலை ஒன்றினால் கேரள மாநிலம் பிளச்சுமடா என்னும் சிற்றுாரில் தண்ணீரின் தரமும் அளவும் குறைந்து விட்டதைத் தொழிற்சாலைப் புறக்கணிப்பால் தண்ணீர் மாசுபாடுற்றதற்கு உதாரணம் காட்டலாம். இத்தொழிற்சாலை நாளொன்றுக்கு 510,000 லிட்டர் நிலத்தடிநீரை உறிஞ்சுகிறது. 1லிட்டர் குளிர்பானம் தயாரிக்க 3.5 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி, மீதி நீரை முறைகயாகச் சுத்திகரிக்காமல் கழிவுநீராக வெளியேற்றுகிறது. இப்பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள், கைக்குழாய், திறந்துகிணறுகளில் சேகரிக்கப்பட்ட மற்றும் காரீயம் அதிக அளவில் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றங்களும் அவை நீர்ச்சுழற்சியில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாகின்றன.

ஆண்டு மழைப்பொழிவு (மி.மீ) 35) ஆண்டுகள்

படம் 3 : கடந்த 25 ஆண்டுகளில் பெங்களூரில் மழைப்பொழிவில் ஏற்பட்ட மாற்றங்கள்.

நாடு மற்றும் உலகளவில் தண்ணீர்ப் பயன்பாட்டாளர்கள் மற்றும் தண்ணீர்ப் பயன்பாடுகளுக்கான போரட்டம் வளர்ந்த வண்ணமாக உள்ளது.

மைசூர் சமஸ்தானமாகவும் சென்னை மாகாணமாகவும் இருந்த காலத்தில் அதாவது 1892ஆம் ஆண்டில் கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான காவிரி நீர்ச்சிக்கல் தோன்றியது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1850ஆம் ஆண்டில், இரண்டு மாகாணங்களும் காவிரியின் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதெனத் திட்டங்கள் வகுத்தன. மைசூர் மகாராஜாவுக்கு அதிகாரங்கள் மாற்றித்தரப்பட்டதும், தண்ணீர்ப்பயன்பாடு குறித்து முடிவுசெய்ய 1890இல் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டன. ஓர் உடன்படிக்கையின் கையொப்பமானது காவிரி நீரைப்பயன்படுத்திப் பெரிய அளவில் வேளாண்மை மேற்கொள்ளத் தமிழ்நாட்டுக்கும் நீர்ப்பாசனத்துக்காக மைசூர் மாநிலத்துக்கும் தண்ணர் தேவைப்பட்டது. 1924இல் மீண்டும் போராட்டம் ஏற்பட்டது. நாடு விடுதலை பெற்றதும் புதிதாகத் தோன்றிய கேரளாவும், புதுச்சேரியும் இப்போராட்டத்தை தீவரப்படுத்தின. அவ்வப்போது போராட்டங்கள் தலைதுாக்கிய வண்ணமாக 10 ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. கர்நாடகாவுக்கு 37 சதவீதம் தமிழ்நாட்டுக்கு 58 சதவீதம் கேரளாவிற்கு 4 சதவீதம் புதுச்சேரிக்கு 1 சதவீதம் என்னும் 2013 ஆம் ஆண்டு பங்கீட்டுத் தீர்மானத்துக்கு எதிராக மாநிலங்கள் முறையீடு செய்த வண்ணம் உள்ளன.

உட்பொருள்

செயல்களின் வடிவமைப்பு

1. ஒவ்வோரு செயலும் குறிக்கோள், அறிவுரைகள், கருவிப்பேழை, சிந்தனைகள் என நான்கு பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

(i) நீங்கள் ஏன் இச்செயலைச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கோள் குறிப்பிடுகிறது.

(ii) இச்செயலை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை அறிவுரைகள் விளக்குகின்றன.

(iii)நீங்கள் பயன்படுத்தக்கூடிய தரவுகளுக்கான படிவத்தைக் கருவிப்பேழை கூறுகிறது. இது உங்கள் விருப்பத்துக்குட்பட்டது. ஆனால் கூறப்பட்டுள்ள தகவல்களைத் திரட்டுவது உங்களுக்குப் பயன்தரும்.

(iv) அனுபவத்தின் முக்கிய பகுதி சிந்தனை ஆகும். தரவுகள் / கண்டுபிடிப்புகள் குறித்துச் சிந்திப்பதற்குத் தரப்பட்டுள்ள வினாக்களை நிச்சியமாகப் பயன்படுத்தவும் கருத்துகளைத் தாண்டியும் சிந்தித்துப் பார்க்கவும்.

சிந்தித்துப் பார்க்கவும்.

(அ) வகுப்பில் கற்றுத் தரப்படும் பாடங்களுடன் நீங்கள் அறிந்தவற்றை கட்டாயமாக இணைத்துப் பார்க்கவும். இது நீங்கள் சிந்திப்பதற்கு அதிகக் கருத்துகளை உருவாக்கும்.

(ஆ) ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் தரவுகளைத் தொகுத்த பிறகு எப்படி உணர்ந்தீர்கள் என்பதைச் சிந்திக்கவும்.

(இ) நண்பர்கள், வகுப்புத்தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளியிலுள்ள பணியாளர்கள், உதவியாளர்கள், அரசு அதிகாரிகள் இது குறித்து வல்லுநர்கள் போன்று எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவு அதிகமான பேர்களுடன் உரையாடுகள்.

குறிப்பு

பகுதி அ 5 மற்றும் (ஆ) விற்கு இச்சிந்தனைப் பகுதி உங்களுக்கு உதவும். இவற்றை ஆவணப் படுத்தியோ அனுப்பவோ தேவையில்லை.

பங்கேற்பதற்கான வழிகாட்டி

உங்கள் செயலறிக்கை எவ்வாறு மதிப்பிடப்படும்

நீங்கள் அனுப்பும் செயலறிக்கைகள் பொருத்தமான, பரந்த அணுகுமுறையடிப்படையில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். எந்த அளவு உண்மையாகச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முழுமைத்தன்மை, செயல்களை ஆவணப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முழுத்தன்மை செயல்களை ஆவணப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட படைப்புத்திறன், கூர்ந்துநோக்கும் திறன், பரந்த இணைப்புகளை நன்கு தொகுத்துப் பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அமையும்.

இது பற்றிய நெறிமுறை, பார்வை குறித்துத் தெளிவான எண்ணத்தைத் தோற்றுவிக்க முக்கியமான மதிப்பீட்டு வரையறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ளவற்றை மட்டுமே அப்படியே எடுத்துக்கொள்ளாமல், மேலே குறிப்பிட்டப்படி பரந்த அணுகுமுறையைக் கவனத்தில் கொள்ளவும்.

  • ஆவணப்படுத்தி உள்ள விவரங்களில் காட்டியபடி செயல்களை மேற்கொள்வதில், அளிக்கப்பட்ட தரவுகளில், செயல்களைச் செய்ததற்கான மற்ற சான்றுகளில் உண்மைத் தன்மை.
  • ஆவணப்படுத்தலில் படைப்பாக்கம், அறிந்த பல பகுதிகளை ஒன்றாக முழுமைப்படுத்தித் திறம்பட அறிவிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளை, பல்வேறு படிவங்களைப் பயன்படுத்துதல். தரவுகளை அளிப்பதற்கும் மேலாகச் சிக்கல்களை நன்கு புரிந்துகொண்ட உணர்வை ஆவணப்படுத்திக் காட்டுதல்.
  • மேற்கொள்ளப்பட்ட செயல்கள் எவ்வளவு நேர்த்தியாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்பட்டன.
  • மற்ற சிக்கல்களுடன்தன் தொடர்புகள் எந்த அளவுக்கு நீடித்த வாழ்வு குறித்த புரிதலுக்கு விரிவுபடுத்தி ஆராயப்பட்டன.
  • பகுதி ஆய்வில் எழப்பட்டுள்ள சிக்கல்கள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்கள் புரிந்து கொள்ளப்பட்டனவா? சிந்தனை செய்யப்பட்டனவா? நன்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளனவா?

பகுதி (அ) -வுக்கான திட்டவட்டமான நெறிமுறைகள்

பல்வேறு கருவிகள் அல்லது வழங்கும் வடிவங்களைப் பயன்படுத்திப் பகுதி அ - வை கவர்ச்சிகரமாகவும், வேடிக்கையாகவும், சுவை மிக்கதாகவும் அமைக்க முடியும்.

கதை கூறுதல் - செயல்முடிவுகளைக் கூறும்போது தங்களின் அனுபவங்களைக் கதை போலத் தொகுத்துக் கூறுதல் (எடுத்துக்காட்டு) பகுதி - அ - வைப் புரிந்து கொண்ட முழு அனுபவத்தையும் ஒருவர் கதைபோலக் கூறுதல், பல்வேறு கதாபாத்திரங்கள் தண்ணீர் ஆதாரத்தைக் கண்டறிதல், தண்ணீர்த் தேவை, தண்ணீர்த்தரம் போன்றவற்றை அறிதல், கதாபாத்திரங்களுக்கான உரையாடல் வடிவில் தரவுகளை வெளிப்படுத்துதல்.

வரைதல் / படவடிவம் : தண்ணீர்ப் பயன்பாடு அல்லது தண்ணீர் ஆதாரம் போன்றவற்றை குறித்த சுவையான தகவல்களைக் காட்சிப்படுத்தி விளக்கமளிக்கத் தக்க கோட்டுப்படங்கள், ஒவியங்கள், வண்ணப்படங்களை உருவாக்கிப் பயன்படுத்துதல்,

தரவு வரைபடங்கள் மற்றும் காட்சிப்படங்கள் தரவுகளைச் சுவைபட விளக்கமாக வழங்குவதற்கு இவற்றை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு விருப்பமான முறையில் படைப்புத்திறன் / புத்தக்கத் திறன் கொண்டு செயலறிக்கையினைச் சிறந்த வண்ணம் அளிக்கலாம்.

பகுதி-ஆ-வுக்கான திட்டவட்டமான நெறிமுறைகள்

பகுதி - ஆ வுக்குப் பகுதி - அ வினின்றும் வேறுபட்ட அணுகுமுறை தேவையாகிறது. பகுதி - அ வில் தண்ணீர் பற்றி நீங்கள் அறிந்துகொண்டவற்றைப் பார்த்த அளவில் மற்றும் மற்றத் துறைகளுடன் இணைத்துப்பார்ப்பதே பகுதி-ஆ வின் நோக்கமாகும். நீங்கள் ஆய்ந்து கண்டறியத் தேவையான அணுகுமுறை தேவையாகிறது. பகுதி- ஆ வில் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு எளிதில் விடைகான முடியாது. நேரடியான சரியான விடையும் அவற்றுக்கு இல்லை. இப்பயிற்சியைச் சரியான வழியில் செய்யவும், குழுவானது பரந்த அளவிலான கண்ணோட்டத்தைக் கொள்ளவும் தங்கள் வாதங்களுக்குத் தக்க சான்றுகளைப் போதுமான அளவில் வழங்கவும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மிக முக்கிய பங்காற்ற முடியும்.

இப்பிரிவுக்கு விடையளிப்பதற்குக் குழுக்கள் - இரண்டு வகை அணுகுமறைகளைப் பின்பற்ற முடியும். இப்பிரிவு முழுவதையும் முழுமையாகப் படிக்கவும். பின்னர், இரண்டில் / அல்லது இரண்டு முறையையும் இணைத்துச் செயலறிக்கை எழுதவும்.

ஆழ்ந்த முறை : எடுத்துக்காட்டாக குழுவானது மழைநீர்ச் சேகரிப்புக் குறித்து ஆராய முடிவுசெய்யலாம். அது தொடர்பாக பல்வேறு அமைப்புகளை, அவற்றின் வடிவமைப்புகள், அவற்றின் நன்மை தீமைகள், அடையும் முறைகள், மற்ற அமைப்புகளைக் காட்டிலும் ஏற்படக்கூடிய மதிப்புக் கூடுதல்கள், குறைபாடுகள், இடம் சார்பொருத்தங்கள் போன்றவை குறித்த வினாக்களை ஆராயலாம்.

அகன்ற முறை : எடுத்துக்காட்டாக மற்றொரு கிராமம் / நகரம் / பட்டினம் ஆகியவற்றிலுள்ள தண்ணீர்ச் சமத்துவம் குறித்து ஆராய விரும்பலாம். மக்கள் தொகை அதன் தண்ணீர்த் தேவை பயன்பாட்டுப் புள்ளி விவரங்கள், கழிவுநீர்ச் சுத்தகரிப்பு, வீட்டுக்கு வெளியே கழிவுநீர் உருவாகும் ஆதாரங்கள், ஆற்றல் செலவீடு, தண்ணீர் இழப்பினால் ஏற்படும் வருவாய் இழப்பு, சுற்றுச்சூழலில் நிலத்தடி நீர்ப்பயன்பாட்டுத்தாக்கம், பொருளாதாரம் பண்பாடு, மரபுநிலைகள், நல்வாழ்வு, ஊழல் போன்றவற்றின் மீதான தாக்கம் ஆகிய பிரச்சினைகள் குறித்து ஆராயலாம்.

ஆசிரியரின் பங்கு

கீழ்க்காணும் வகையில் குழுக்களுக்கு வழிகாட்டலாம். அதிக தகவல்களுக்காக பிற ஆதார வள புத்தகங்கள்

1. எர்தியன் இணையதளத்துக்கும் செயல்களை நன்கு புரிந்துகொள்ளப் பயன்படும் காட்சிப்படங்கள் நெறிப்படுத்தலாம்.

2. வகுப்பறையில் கற்ற பாடங்களுடன் செயல்களை இணைத்துப்பார்க்கவும், கூடிச் செயலாற்றுதல், விசாரணை செய்தல், தோழமை பேணுதல் ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு உதவி புரிதல்.

3. ஒவ்வொருவரும் புரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ளவும். வினாக்கள் எழுப்பவும் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஒன்றாகச் சிந்திக்கவும் கலந்துரையாடல் குழுச்சிந்தனை போன்றவற்றை ஏற்பாடு செய்தல், ஒவ்வொரு மாணவர்கள் சிந்திப்பதற்காக உங்கள் சொந்தக்கருத்துகளைக் கூறுவதுடன், மாணவர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தவும் வினாக்கள் எழுப்பவும் ஊக்கப்படுத்தவும்.

4. அதிக அளவிலான கருத்துரைகள் பெறுவதற்காக நண்பர்களுடன் ஆசிரியர்களுடன், பள்ளி நிர்வாகிகளுடன், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுவதை ஊக்கப்படுத்தவும்.

5. வகுப்புகளில் கற்ற பாடங்களுடன் / தலைப்புகளுடன் இணைத்துப் பார்த்து ஆராய்வதை ஊக்கப்படுத்துதல். இது அழுத்தமதாகப் புரிந்து கொள்ள உதவிசெய்வதுடன், மேலும் சிந்திப்பதற்கு அடிகோலுகிறது. செயலறிக்கையின் பகுதி - அ-5 மற்றும் பகுதி - ஆ வுக்கு இது உதவியாக இருக்கும்.

தரவுகள் திரட்டல்

இரண்டு வழிகளில் தரவுகளைத் திரட்ட முடியும்

* நேரடியான (முதல்) அனுபவத்தின் மூலம் திரட்டப்படும் தரவுகள் முதனிலைத் தரவுகள் எனப்படும். எடுத்துக்காட்டாக நீங்கள் உருவாக்கிய மழைமானியின் மூலம் மழைப்பொழிவுத் தரவுகளைச் சேகரித்தல்.

* முன்னமே வெளியாகிய ஆதாரங்களிலிருந்து தரவுகளைத் திரட்டுதல் இரண்டாம் நிலைத் தரவுகள் எனப்படும். எடுத்துக்காட்டாக மழைப்பதிவுத் தரவுகளைப் பதிவுசெய்து பராமரித்து வரும் வானிலை ஆராய்ச்சித்துறை அல்லது மற்ற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மழைப்பொழிவுத் தரவுகள்

நினைவில் கொள்ள வேண்டிய செய்திகள்

  • படைப்புத் திறனோடு ஆவணங்களை உருவாக்கும்போது, பகுதி அ மற்றும் பகுதி ஆ-வில் குறிப்பிட்டுள்ள மையப்பணிகளை / தேவைகளைத் தயவுசெய்து மறந்து விடாதீர்கள்.
  • செயல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 4 செயல்களில் 2 விருப்பத் தேர்வுச் செயல்களை முயற்சி செய்யவும்.
  • சிந்தனைகளிலிருந்து கூடுமானவரை அதிகமான தரவுகளைச் சேகரிக்கவும்.

அடிக்கடி எழுப்பப்படும் வினாக்கள்

இதற்குத் தேவைப்படும் காலம் எவ்வளவு?

குறிப்பாகப் பகுதி அ- செயல்களும் ஆவணப்படுத்தப்படும் ஒவ்வோர் குழுவுக்கும் வாரத்துக்கு 2-3 மணிநேரமும் 3-4 வாரங்களும் தேவைப்படும். இச்செயல்களைச் செய்ய வகுப்பு இல்லாத ஒய்வுநேரங்களைக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் உதவலாம். பகுதி -ஆ- எழுதுவதற்கு ஆராய்ச்சியும் கலந்துரையாடலும் தேவையாகின்றன. இவ்வாராய்ச்சிப் பணியை மேற்கொள்ள ஒய்வுப்பாட வேளைகளை அல்லது பள்ளி முடிந்த பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்கள் பெற்றோர்கள் உதவியை நாடலாம்.

இது எப்படி பயனுள்ளதாகும்?

பள்ளிக் கல்வித் திட்டத்திற்குள் தொடர்பு மற்றும் முழுமை மதிப்பீட்டின் கீழ் செயல்திட்ட அடிப்படையிலான கற்றல் செயலாக இத்தண்ணீர் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றிய பல்வேறு கூறுகளைக் கற்பதுடன் இத்திட்டம் அறிவியில், சமூக அறிவியல், கணிதத்தில் உள்ள தலைப்புகளையும், கருத்துகளையும் ஒருங்கிணைக்கிறது. குழுப்பணி கூர்ந்து நோக்கல், பதிவிடல், ஆவணப்படுத்தல், ஆராய்தல், பகுத்தாய்வு செய்தல், ஒருங்கிணைத்துக் தொகுத்தல், சிந்தித்தல், எழுதுதல், படைப்பாக்கம் மற்றும் வடிவமைப்பு போன்ற முக்கிய ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்பினை எர்தியான் வழங்கியுள்ளது.

ஆதாரம் : விப்ரோ லிமிடெட், பெங்களூரூ© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate