பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / நெருப்பு பரவாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நெருப்பு பரவாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்பம்

நெருப்பு பரவாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்பம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பொதுவாக, கட்டிடங்களில் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்துக்களை தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல்வேறு தொழில்நுட்ப அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தீ தடுப்பு நடவடிக்கைகளில், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றால் கவனிக்கப்படும் உத்தியாக ‘அக்ரிலிக் ரெசின் மற்றும் சிலிக்கான் சீலண்ட்’ முறை இருக்கிறது. மேற்பூச்சாக அமைக்கப்படும் இந்த தீ தடுப்பு தொழில் நுட்ப முறை சார்ந்து, கட்டிட விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் ஆகியவற்றை சரி செய்யும் பல்வேறு ரசாயனங்களும் சந்தையில் கிடைக்கின்றன.

நெருப்பு பாதிக்கும் இடங்கள்

ஒரு கட்டிடத்தில் உள்ள மரக்கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் போன்றவை அமைந்துள்ள பகுதிகள் எளிதாக தீப்பற்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் இதர பொருட்களையும், கட்டிடத்தில் தீ விபத்து நேரிட வாய்ப்புள்ள இடங்களையும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். குறிப்பாக, பிளைவுட் தடுப்புச் சுவர்கள், திரைச்சீலைகள் ஆகியவை இருக்கும் பகுதிகளை கவனித்துக்கொள்ள வேண்டும்.

நேரடியாக பூசலாம்

மேற்கண்ட ‘அக்ரிலிக் ரெசின் மற்றும் சிலிக்கான் சீலண்ட்’ ஆகியவை பல்வேறு பரப்புக்களின் மீதும் எளிதாகப் பூசும்படியாக இருக்கும். குறிப்பாக, அவற்றின் மேல் பிரைமர் போன்ற பொருட்களை அடிக்க வேண்டிய தேவை இல்லை. அதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரடியாகவே ‘சீலண்ட்’ பூசப்படலாம். அதன்பின், நன்றாக காய்ந்ததும், பிடிமானத்துடன் நல்ல வலுவாக ஒட்டிக் கொள்ளும்.

சீலண்ட் செயல்பாடு

இந்த ‘சீலண்ட்’ பூசப்பட்ட பரப்புகளுக்கு அருகிலோ அல்லது அதன் மீதோ தீ உள்ளிட்ட காரணங்களால் வெப்ப நிலை அதிகரிக்குமானால், ‘சீலண்ட்’ பூசப்பட்ட பகுதியின் கன அளவு அதிகமாகி விடும். அதாவது, உப்பிப் பெருக ஆரம்பிக்கும். இவ்வாறு ஏற்படும் உப்புதல் காரணமாக தீ மற்றும் புகையை கவசம் போன்று மூடப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தப்படும். அதன் காரணமாக, தீ அல்லது புகை மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்படும். நெருப்பால் பாதிப்புகள் ஏற்படும்போது வேறு முறைகளை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லாமல். தாமாகவே தீயை தடுக்கும் இந்த அணுகுமுறை வித்தியாசமான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

நச்சு பொருட்கள் வெளியாவதில்லை

குறிப்பாக, இதர வகை நெருப்பு தடுப்புப் பொருட்கள், நெருப்பை அணைக்கும்போது ஒரு வகை வாயு கலந்த நச்சு பொருட்கள் வெளியாவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், நெருப்பினால் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் அதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிமையான பயன்பாட்டுக்கு உகந்ததாக இருப்பது அவசியம். அதற்கேற்ப, ‘பயர் ஸ்டாப் அக்ரிலிக் ரெசின் மற்றும் சிலிக்கான் சீலண்ட்’ பயன்பாடு எளிதாகவும், பக்க விளைவுகளற்ற பாதுகாப்புக்கு உகந்தது என்ற அடிப்படையில் கட்டுமான வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

ஆதாரம் : உங்கள் முகவரி - நாளிதழ்

3.21428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top