பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலைவனமயமாதல்

பாலைவனமயமாதலுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பாலைவனமயமாதல் நிலச்சீரழிவு மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டம்

பாலைவனமாதல் என்பது நிலச் சீரழிவை பற்றியதொன்றாகும். நிலவளங்களின் உற்பத்தித் திறன் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளாலும் காலநிலை மாற்றத்தாலும் அழிந்து வருகிறது. பாவைவனமாதல் பூமியின் மூன்றின் ஒரு பங்கு மேற்பரப்பையும் சுமார் ஒரு மில்லியன் மக்களையும் பாதிப்படைய செய்கிறது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் பரந்த விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறிவருவதால் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகுகிறார்கள். நகர்புறங்களில் குடிசைப்பகுதிகளில் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சமூகப்பிரச்சனைகளுக்கும் நில சீரழிவு முக்கிய காரணமாக அமைகிறது.

நிலச்சீரழிவு

அதிக முக்கிய ஆதாரமாகவும் பிரதான உற்பத்தி மையமாகவும் விளங்கும் நிலத்திலுள்ள மண்ணின் தன்மை உயிர்ம உற்பத்தி திறனை இழக்கும் பொழுது உலகலாவிய பிரச்சனை எழுகிறது. சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் மனித சமுதாயத்தில் நிலச்சீரழிவு பெரும் தாக்கத்தை  ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் மொத்த பரப்பளவாகிய 329 மில்லியன் ஹெக்டேரில் 266 மில்லியன் ஹெக்டேர் சாத்தியமான பயன்பாட்டிற்கு உதவுகிறது. நிலவளங்கள கீழ்கண்ட பல்வேறு வகையான நிலச்சிரழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

1. நீர் மற்றும் காற்றினால் மண்ணரிமாணத்தால் பாதிக்கப்படுதல்.

2. உப்பு மற்றும் கார தன்மையால் பாதிப்படைதல்.

3. நீர் தேக்கத்தினால் பாதிப்படைதல்.

4. இயற்கை காடுகளை அழித்து சாகுபடி செய்தல்.

5. இதர காரணிகளால் பாதிப்படைதல்.

பாலைவனமாதல்

மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றங்களால் வறண்ட நிலங்களின் மண் வளம்குன்றி குறுகிய தாவரங்கள் இல்லாத தரிசு நிலங்களாக மாறிவருகிறது.

காற்று மற்றும் நீரினால் நிலத்திலுள்ள மேல்மண் அடித்து செல்லப்பட்டு மண்வளத்தை இழக்கிறது. தீவர விவசாயம் காடழிப்பு மோசமான நீர்பாசன நடைமுறை அதிகப்படியான மேய்ச்சல் மாசுபாடு போன்ற காரணிகள் பாலைவனமாவதற்கு வழிவகுக்கிறது.

மனிதர்களின் செயல்பாடுகளினால் நிலவளம் பெரிதும் பாதிப்படைந்து உலகம் முழுவதும் நமக்கு உணவு  பாதுகாப்பு  அச்சுறுத்தல் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது.

நிலச்சிரழிவிற்கான காரணங்கள்

உவர் நீர் தேங்குதல்

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு உபயோகப்படுத்தப்படும் இரசாயண உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவையோடு முறையற்ற நீர்பாசனத்தாலும் உப்புத் தன்மையை அதிகரிக்க முக்கிய பங்கை வகிக்கிறது.

வேளாண்மை உற்பத்தி கால்நடை பெருக்கம் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையே உள்ளே பல்வேறு நெருங்கிய தொடர்பால் நிலச்சீரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரத்திலும் குறிப்பாக கிராமப்புறங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மண்அரிப்பு

வளமான மேல்மண் உருவாக சுமார் 600-700 வருடகால அவகாசம் தேவைப்படும். இத்தகைய மேல் மண்ணின் இழப்பு இயற்கை வளங்களின் நிரந்தர இழப்பாக கருதப்படுகிறது.

அதிகபடியான கால்நடை மேய்ச்சல் காடழிப்பு மற்றும் முறையற்ற வனமேலாண்மை போன்றவை இயற்கையான தாவர வளங்கள் அழிய காரணமாக உள்ளதோடு மண் அரிமானத்திற்கு வழி வகுக்கிறது.

சுரங்கத் தொழில் மற்றும் தொழிற்சாலைகள்

சுரங்கத்தொழில் மற்றும் தொழிற்சாலை பெருக்கத்திற்கு மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளே காரணமாகும். சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் மண் நிலத்தின் மேற்பரப்பில் கொட்டப்படுவதால் நிலத்தின் வளம் வெகுவாக குறைவடைகிறது.

சுரங்கம் காரணமாக ஏற்படும் நிலச்சீர்கேடு

விவசாயத்திற்கு அடுத்ததாக சுரங்கத் தொழிலே நிலச்சீர்கேடு அடைவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். திறந்த வெளி சுரங்க நிலத்தை மீட்டுவதே இன்று நம் நாட்டின் பல பகுதிகளில்  சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருக்கின்றது.

உலர்தன்மை குறைந்த வளம் வறட்சி மற்றும் நச்சுத்தன்மை போன்ற பல பிரச்சனைகள் சுரங்கப் பகுதிகளில் காணப்படுவதால் தாவர வளங்களை உடனடியாக மேம்படுத்துதல் மிகவும் இன்றியாமைதாகும்.

அதிக மேய்ச்சல்

சமூக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் இந்தியாவில் பெருமளவில் உள்ளது. உலகிலேயே கால்நடை அதிகமுள்ள நாடுகளின் முதல் இடத்தை பிடித்திருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.

ஆனால்  மேய்ச்சலுக்குத் தேவையான போதுமான நிலம் இல்லாமையால் வளமான பகுதியின் தரம் வளங்குன்றிய நிலமாக மாறிவிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆதிக நிலச்சீர்கேட்டால் கால்நடைகளின் எண்ணிக்கை குறைவடைந்து அவற்றை வாழ்வாதாரமாக சார்ந்து வாழும் மனிதர்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகிறது.

காடழிப்பு

உலகில் 1.6 மில்லியன் மக்கள் வனப்பகுதிகளில் பெறப்பட்ட பொருட்களை தங்கள் வாழ்வாதாராமாக கொண்டிருக்கும்  சூழ்நிலையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள காடுகள் காட்டில் மரம் வெட்டுதல் மற்றும் புல்டோசருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.

(ஆதாரம்: வனவியல் துறை உணவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் அமைப்பு).

மரம் எரிபொருள் மரக்கட்டை மற்றும் இதர பொருள்களுக்காக இயற்கை வளங்கள் காடுகள் மற்றும் புதர்களை அழித்தல் காடழிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அத்துடன் நிலச்சீர்கேட்டையும் ஏற்படுத்தி பாலைவனமாதலுக்கான வழிவகை செய்கிறது.

வெள்ளம் மற்றும் வறட்சி

அதிநவீன விவசாயம் செய்வதற்கு அதிக்கப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சி மனிதனாலும் இயற்கையாகவும் ஏற்படுகிறது. எனினும் மனிதனால் ஏற்படுத்தப்படும் காரணிகளே பெரும் பங்கை வகிக்கிறது.

காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழித்தல் மேய்ச்சல் நிலத்திற்கான சரியான பராமரிப்பு இல்லாததால் அதிகளவு நிலத்தடி நீரை வெளியெடுத்தல் ஆறுகள் ஏரிகள் மற்றும் நீர்தேக்கங்களில் வண்டல் படிதல் போன்ற காரணங்களால் வறட்சிப் பகுதிகள் உருவாகிறது. அதேபோல் குறுகிய காலத்தில் பெய்யும் கனமழையால் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டு மண்வளம் பாதிபடைகின்றது.

இந்தியாவின் நிலச்சீரழிவு

நாட்டின் மொத்த பரப்பளவாகிய 329 மில்லியன் ஹெக்டேரில் 266 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே சாத்தியமான பயன்பாட்டிற்கு உதவுகிறது. இந்த 266 நிலப்பரப்பில் 175 நிலப்பரப்பு மண் அரிப்பு, தண்ணீர் தேக்கம், சாகுபடி மாற்றம் மற்றும் உப்புத் தன்மையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் தொகை அழுத்தம், காடழிப்பு, வன வளங்களின் இழப்பு போன்றவை மண் அரிப்பை ஏற்படுத்தி சீர்கேடு அடைவதற்கு காரணங்களாக அமைகிறது. ஓவ்வொரு ஆண்டும் சுமார். 12000 மில்லியன் டன் மேல் மண் இழக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமான நீர்ப்பாசனம், வெள்ளம், வறட்சி, அதிக கால்நடை மேய்ச்சல், தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசுக்கள், பூச்சிக்கொள்ளிகள், இரசாயண உரங்கள் போன்றவை நிலச்சீரழிவு ஏற்படுத்தும் காரணிகளாக அமைகின்றன. இவ்வனைத்துக் காரணங்களும் வறண்ட நிலத்தை தரிசு நிலமாக மாற்றி இறுதியாக பாலைவனமாக்குகிறது.

இந்தியாவில் தனித்துவம் வாய்ந்த இயற்கை வாழ்விடங்கள் பல வியக்கத்தக்க விலங்குகள் மற்றும் உலகின் பழமை வாய்ந்த நகரங்களை உள்ளடக்கியது. இவை காலப்போக்கில் திறந்தவெளி அருங்காட்சியங்களாக காட்சியளிக்க வாய்ப்பிறுக்கிறது.

பாலைவனமாவதின் விளைவுகள்

நிலவளம் குறைதல் மோசமான தண்ணீர் தட்டுப்பாடு வறட்சி வெள்ளம் உற்பத்திதிறன் குறைதல் ஆகியன பாலைவனத்தின் முக்கிய காரணங்களாகும். இது கிராமப்புற மக்களையே பெரிதும் பாதிக்கிறது. சுமார் 15 மில்லியன் மக்கள் வளம் குறைவான நிலத்தை நம்பியே வாழ்கின்றனர். உலகில் சுமார் 42 சதவீதம் ஏழைமக்கள் நிலவளம் குறைந்த நிலத்தில் வாழ்கின்றனர். இதனால் காலநிலை பேரிடர் ஏற்படும் போது அம்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

110 உலக நாடுகள் பாலைவனமாகக்கூடிய அபாய கட்டத்தில் உள்ளன. 2020 ஆண்டிற்குள் 60 மில்லியன் மக்கள் பாலைவனப் பகுதியான துணை சஹாராவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடியெரும் அபாயம் உள்ளது. பாலைவனமாதல் அதிகரித்தால் காலநிலை இடர்கள் ஏற்பட்டு உலகம் பெரிதும் பாதிக்கப்படும்.

உலகின் பாதி கால்நடைகள் உலர் நிலங்களில் தான் உள்ளன. உணவு உற்பத்தி குறைந்தால் அதனாலும் மோசமான நிலையை உலகம் எதிர்கொள்ள நேரிடும்.

நிலத்திலும் மண்ணிலும் மனிதனால் ஏற்படுத்தப்படும் தாக்கம்

கால்நடை மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் எரிசக்தி, விறகு மற்றும் நிலத்தின் தேவைப்பாடு அதிகரிக்கிறது. குறைந்து வரும் காடுகளின் பரப்பு நிலத்தின் மீது பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. இந்தியா ஒரு விவசாயிகளின் நாடு.

எனவே விவசாயிகளுக்கு நிலம் பாதிப்புக்குள்ளாவதை குறித்து அறிவுறுத்த வேண்டியது அவசியம்.

மண் மற்றும் நீர் பாதுகாப்பு

தற்போது மண் மற்றும் நீர் பாதுகாப்பு பணிகளில் மாநில அரசுகளின் பங்களிப்பும் விவசாயிகளின் பங்களிப்பும் குறைவாக உள்ளது. பாலைவனமாவதை தவிர்க்க மண் நீர் பாதுகாப்பு இன்றியமையாதது. இரசாயன பூச்சி கொல்லிகள் மற்றும் உரங்கள் அதிக நீர்பபாசனம் மற்றும் அளவுக்கு அதிகமாக விவசாயம் செய்தல் போன்றவற்றால் நிலத்தின் வளம் குறைய காரணங்களாக உள்ளன.

நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு

நில வளங்களை பாதுகாக்க, கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, நிலையான விவசாய முறைகளை பின்பற்றுதல் அவசியமாகும். இந்தியாவில் பல பகுதிகளில் நீர் மற்றும் சதுப்பு நில விவசாயம் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகுகின்றது. குறைந்த அளவு நீர் நிலையான விவசாயம் நீர் தேவைகளையும் மற்றும் லாபத்தை அதிகரிக்கும். தீவன வங்கிகள் அமைத்தல் மேய்ச்சலால் ஏற்படும் பிரச்சனைகள் குறைவடையும்.

ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்கள் குறைந்து வரும் பொது இடங்களான மேய்ச்சல் நிலத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலவளம் மற்றும் நில உற்பத்தியை மேம்படுத்தி விவசாயத்தை பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.

நீர்பற்றாக்குறை மற்றும் நிலவளம் குறைதல்

நிலவளம் குறைதல் நீர்பற்றாகுறைக்கு வழிவகுக்கிறது. குறைந்த அளவு மழை பகுதிகள் மற்றும் நிலத்தடி நீர் சேகரிப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே வறட்சியாக உள்ள  இடங்களில் நீர்வளத்தை எளிதில் உயர்த்துவதற்கு தாவர வளங்களை மேம்படுத்தவும் நிலத்தடி நீர் சேகரிப்பும் சிறந்த தீர்வாகும்.

உலக பாலைவனமாதல் தடுப்பு நாள்

உலகில் 40 சதவீதம் வறண்ட நிலங்கள் உள்ளன. அது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் எளிதில் பாதிக்கபடக் கூடியவர்களாக உள்ளனர். ஜூன் 17 உலக பாலைவனமாதல் தடுப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நிலையான வளர்ச்சிக்கு ஊக்கமிகு ஆதரவளர்களாக மக்களை உருவாகுதல், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து மக்கள் புரிந்து கொள்ளவும் அதை பற்றிய மனோபாவத்தை மாற்றவும் துணை நிற்றல், வளமாக மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க அனைத்து நாடுகளுக்கும் மற்றும் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் பங்களிப்பு அளித்தல் போன்றவற்றை வலியுறுத்துகிறது.

நிலபாதுகாப்பிற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம்

இயற்கையைப் பாதுகாத்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுவே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கிறது. நில பாதுகாப்பு முழுமையானதாக இருத்தல் அவசியம். பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் குறைந்து வரும் நிலப்பகுதி பாலைவனமாவதை அதிகரிக்கிறது.

இயற்கையை பாதுகாக்கும் வாழ்க்கை செயல் முறைகள் என்பது அனைத்து உயிரினங்களின் வாழ்விடத்தையும் பாதுகாத்தல் என்பதாகும். நாம் நம் பூமியின் வளங்களை அதற்கு நியாயமான அணுகுமுறையுடன் சீராக பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து மக்களுக்கு இயற்கை வளங்கள் சென்றடையும் வகையில் வாழ்தல் அவசியமாகும்.

மண்பாதுகாப்பு வழிமுறைகள்

1. காடு வளர்ப்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரித்தல்.

2. கட்டுப்படுத்தப்பட்ட மேய்ச்சல் அடர்தீவனம் மற்றும் முறையான கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை.

3. 3R - பயன்படுத்தும்  அளவைக் குறைத்தல் மறுசுழற்சி செய்தல் மறு பயன்பாட்டுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் பின்பற்றுதல்.

4. விவசாயத்திற்கு பயன்படுத்தும் இரசாயான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு மாற்று வழி கண்டுபிடித்தல்.

5. தொழிற்சாலைக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி, சுத்திகரிப்பு நிர்வாகம் செய்தல்.

6. மக்கும் குப்பைகளை பயன்படுத்துதல் மற்றும் குப்பை குவியல்களை குடியிருப்பு பகுதியிலிருந்து அகற்றுதல்.

7. நீர் நிலை மேலாண்மை நீரைத் தேக்கி அணைக்கரை மற்றும் நீர் நிலைகளை மறு சீரமைப்பு செய்தல்.

8. நகர்ப்புறத்தில் மக்கள் குடியேற்றத்தைத் தடுத்தல் கண்காணித்தல்.

9. தொழிற்சாலைக் கழிவுகளை தடுத்தல், கண்காணித்தல்.

10. ஆரோக்கியமான விவசாயம் மற்றும் உணவு முறைகளை பற்றிய அறிவை பெருக்குதல்.

11. மண் வளத்தை  மறுசீரமைப்பு செய்தல்.

நில ஆதாரங்கள் வளங்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவோம். நிலங்கள் பாலைவனமாகாமல் தடுப்பதற்கான செயல்களில் நம்மை நாமே ஈடுபடுத்தி கொள்வோம்.

ஓவ்வொரு மனிதனும் தன்னை இத்தகைய செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டால் சீரழிந்து கவலை தரும் நிலையிலுள்ள சுற்றுச்சூழலை சீரமைக்கலாம்.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.93939393939
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top