பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மானிட புவியியல்

மானிட புவியியல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மனிதர்கள் பூமியில் 6000ம் வருடத்திலிருந்து உள்ளனர். அக்காலத்திலிருந்து சில நூறு காலம் வரை மக்கள் குறைவாக காணப்பட்டனர். அக்காலத்திற்கு பிறகு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மிக விரைவாக உயர்ந்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்கள் தொகை 6 பில்லியனாக பதிவானது. 6 பில்லியனிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டிலிருந்து 4 மடங்காக அதிகரித்தது. இதனால் ஒவ்வொரு வருடமும் 82 மில்லியன் மக்கள் தொகை கூடியது.

உலகம் முழுவதும் சமமற்று காணப்படும் மக்கள் தொகை அடர்த்தி பல்வேறு காரணங்களால் வேறுபடுகிறது. அதாவது ஏன் சில இடங்களில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ளதென்றும் சில இடங்களில் ஏன் மக்கள் வசிக்க முடியாமல் உள்ளது என்பதை கீழே உள்ள பத்திகளில் விளக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தொகை அதிகம் இருப்பதற்கான காரணங்கள்

இயற்கை காரணங்கள்

இயற்கை மற்றும் புவியியல் காரணிகள் புவியில் மக்கள் அடர்த்தி அதிகம் வகிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஓர் பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகரிப்பதற்கு அங்கு உள்ள முகடு, கால நிலை, மண், இயற்கை தாவரங்கள், நீர், கனிமவளங்கள் முக்கிய பங்காற்றுகின்றது. மலைப் பகுதிகள், கடின வகை தரைப் பகுதிகளில் மனிதர்கள் வசிப்பதற்கான வசதிகள் கிடைப்பதில்லை. இதை எப்படி நாம் கூறுகின்றோம் என்றால் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் சமவெளிகளிலும் செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்தனர். எ.கா. எகிப்தில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு இந்தியாவில் உள்ள சிந்து நதி பள்ளத்தாக்குகளாகும்.

பொதுவாக சமவெளி, ஈரக்காலநிலை, செழிப்பான மண் வளத்தில் நீண்ட நாள் பயிர் செய்ய ஆற்று நிலங்கள் உள்ள பகுதியில் மக்கள் அதிகமாகவும் மேலும் கடினவகை அல்லது பாதகமான காலநிலை வளம் குறைந்த மண் உள்ள பகுதிகளில் மக்கள் குறைவாகவும் வசிக்கின்றனர். இயற்கை சூழல் மக்கள் தொகை அடர்த்தியின் அமைப்பை மாற்றி அமைக்கிறது.

கலாச்சார காரணங்கள்

மக்கள் தொகை அடர்த்தியில் கலாச்சாரம் முக்கிய பங்காற்றுகிறது. எப்படியென்றால் மக்களின் பாரம்பரியம், நிகழ்வுகள் இரண்டும் கலாச்சாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. எ.கா. ஜெர்மானியர்கள், சீனர்கள் அமெரிக்காவின் பல பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்கள் அவர்கள் இந்த நாட்டைச்சாந்தவர்கள் என அடையாளம் காட்டுகிறது.

பொருளாதார காரணங்கள்

மக்கள் இடம் பெயர்வதற்கு பொருளாதாரக் காரணம் ஓர் முக்கிய பங்காற்றுகிறது. இந்த இடப்பெயர்வு கிராமங்களிலிருந்து நகரத்திற்கும், நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் செல்வதாக இருக்கலாம். ஒரு பகுதிக்கு மக்களை இழுப்பது அங்கு உள்ள பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பான வேலை வாய்ப்பு முக்கிய காரணியாக உள்ளது. அதேபோல் கடினமான பொருளாதார நிலைகளான வேலை வாய்ப்பின்மை, வறுமை, பட்டினி பசிபோன்ற காரணங்களும் மக்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயரத் தூண்டுகிறது. எ.கா. ஐஸ்லாந்து நாட்டில் 1846ம் ஆண்டு ஏற்பட்ட உருளைக்கிழங்கு பஞ்சத்தால் 10 லட்சம் மக்களுக்கும் மேற்பட்டோர் வடஅமெரிக்காவிற்கு வேலைவாய்ப்பு தேடி குடி பெயர்ந்தனர்.

அரசியல் காரணங்கள்

அரசியல் காரணங்களில் பாதகமான பொருளாதார திட்டங்கள், அரசியல் போராட்டங்கள், மத மற்றும் சாதிச் சண்டை, போர் இது போன்ற மற்றும் பல காரணங்கள் ஓர் இடத்தில் உள்ள மக்கள்தொகை அடர்த்தியை பாதிக்கிறது. குறிப்பாக பெர்சியன் வளைகுடா போர், காங்கோ, எத்தியோபியா, சூடான் போர்கள், ஸ்ரீலங்கா, ருவாண்டா நாட்டில் நடந்த இனச் சண்டைகள் ஹைட்டி நாட்டில் நடந்த இராணுவ ஆட்சி ஒருங்கிணைந்த ரஷ்யாவிலிருந்து பிரிக்கப்பட்ட 15 நாடுகள் போன்ற காரணங்களால் புதிய இருப்பிடம் தேடி பத்து லட்சத்திற்கும் மேலான மக்கள் அகதிகளாக சென்றனர்.

மக்கள் தொகை அடர்த்தியின் அமைப்பு

ஓர் பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள அடிப்படை காரணி மக்கள் தொகை ஆய்வாகும். தனி ஒரு நாட்டின் மக்கள்தொகை மற்றும் மக்கள் தொகையின் போக்கு அதன் அமைப்பை அங்கு உள்ள புவியியல் அமைப்பு, அரசியல் நிலை சுற்றுச்சூழல் மற்றும் வளங்கள் நிர்ணயிக்கிறது. உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் உலகத்தில் உள்ள 10 நாடுகள் 60 சதவீதத்தை கொண்டுள்ளது.

மக்கள் தொகை அடர்த்தி என்பது நிலத்திற்கும் அந்த நிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகைக்குள் உள்ள விகிதமாகும். மொத்த நிலப்பரப்பில் மொத்த மக்கள்தொகையை வகுத்தால் எப்பகுதியில் எவ்வளவு மக்கள் தொகை நெருக்கம் உள்ளது என்பது தெரியும். இந்த தகவல்களை மற்ற நாட்டு மக்கள் தொகை பண்புடன் எளிதாக கணக்கிட முடியும். ஊட்டச்சத்து அடர்த்தி என்பது நாட்டின் அல்லது அறுவடை நிலத்தை வைத்து வகுத்தால் கிடைக்கும் விடையே ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்ககூடிய உண்மையான ஊட்டச்சத்து அளவாகும். இந்தியா, சைனா, இந்தோனேஷியா, விவசாயம் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருப்பதனால் ஒரு நபருக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே கொண்டுள்ளனர். மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டுள்ளது. குறைவான நிலங்கள் அதிக மக்களுக்கு உணவளிப்பதனால் மக்கள் தொகை வளர்ச்சிக்கும், குறைவுக்கும் உள்ள தொடர்பு மாறுபடுகிறது.

அதிக மக்கள் அடர்த்தி உள்ள பகுதிகள்

ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 100 நபர்களுக்கு அதிகமான மக்கள்தொகையை பெற்றுள்ள பகுதியில் நல்ல செழிப்பான மண், சாதகமான காலநிலை, அதிக தொழிற்சாலைகள் உள்ளது. உலகிலேயே அதிகளவு மக்களடர்த்தி உள்ள முக்கியமான நான்கு பகுதிகள் அவையாவன:

  • கிழக்காசியா (சைனா, ஜப்பான், கொரியா, தைவான்)
  • தெற்கு மற்றும் தென்கிழக்காசியா
  • வட மேற்கு ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்த, பெல்ஜியம், லக்ஸம்பர்க், அயர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி)
  • வடஅமெரிக்காவின் கிழக்கு பகுதிகள் ஆகிய நாடுகளாகும்.

உலகின் மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதம் உலகின் 5 சதவீத நிலத்தில் உள்ளது 33 சதவீத நிலம் வசிக்க முடியாத நிலையில் உள்ளது. நகர பரப்பிலும் நவீன தொழிற்சாலை நகரங்களிலும் அதிக அளவில் மக்கள் குழுமியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் 75 சத வீதத்தினர் மாநகரத்தை சுற்றி வசிக்கின்றனர். தொழிற் சாலையாலும், வியாபாரமயமாக்களாலும் மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். தொழில்நுட்பம் பல நவீன நகரங்களுக்கு தற்காலிகமான சூழலை ஏற்படுத்துகிறது.

வட மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்கள் மிக அதிகமாக நகரங்களில் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 75 சதவீத வட அமெரிக்க மக்கள் நகரவாசிகளாவார்கள். நகர நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் கிராமங்களும், விவசாய நிலங்களும் கிடையாது அனைத்து இடங்களும் நகரங்களாகும். அனைத்து மக்களும் நகரவாசிகளாவார்கள்.

குறைவான மக்களடர்த்தி கொண்ட மாகாண பகுதிகள்

பாதகமாக கால நிலை, விவசாயத்திற்கு பொருந்தாத நிலப்பகுதிகளில் மக்கள் குறைவாக வசிக்கின்றனர். அப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மழைப்பொழிவில்லாத நீர்ப்பாசனமில்லாத வறட்சி நிலம்.
  • உயர் அட்சத்தில் உள்ள குளிர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத பகுதிகள்.
  • மலைப் பகுதியில் சாகுபடிக்கு பொருந்தக்கூடிய நிலத்தில் காலநிலை கடினமான மிக கடினமானதாக இருக்கக்கூடிய பகுதி.
  • வெப்ப மண்டல ஈரப் பகுதிகளில் அதிகஅளவு வெப்பநிலை அதிகளவு மழைப்பொழிவு உள்ளதால் மலேரியா, போன்ற நோய்கள் வரக்கூடிய பகுதி.
  • கனிம வளங்களும், காட்டுப் பொருட்களும் எடுப்பதற்கு முன் உள்ள கிராம பகுதிகள்.

மக்கள் தொகை அடர்த்தி மிதமாக உள்ள பகுதிகள்

இப்பகுதியில் சாதகமற்ற நிலம், காலம், செழிப்பற்ற மண், போன்ற பகுதியில் பொருளாதார நடவடிக்கை நடைபெறும். உதாரணமாக சுரங்கத் தொழில், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகள். இப்பகுதியில் மக்கள் இத்தொழில்களை நம்பிஉள்ளதால் குறைவாக வசிக்கின்றனர்.

மக்கள் தொகை வளர்ச்சி

மக்கள் தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் ஒருவருடத்தில் மக்கள் தொகை மாறுவதாகும். இந்த மாற்றம் கடந்த பத்து வருட கணக்குப்படி சதவிகிதத்திலோ அல்லது எண்ணிக்கையிலோ மாறியிருக்கலாம். ஓர் இடத்தில் மக்கள் தொகை மாற்றம் பரப்பு விகிதம், இறப்பு விகிதம், இடப்பெயர்வு போன்றவைகளால் நடைபெறுகிறது. ஓர் வருடத்தில் 1000 நபர்களில் பிறப்பு விகிதம் மற்றும் இறப்புவிகிதத்தை கணக்கிடுவது கச்சா பிறப்பு விகிதம், கச்சா இறப்பு விகிதம் எனப்படுகிறது. ஓர் வருடத்தில் இயற்கையாக அதிகரிப்பு அல்லது குறைப்பு விகிதத்தை எண்ணிக்கையின் வேறுபாடு அல்லது ஒரு வருட பிறப்பு இறப்பு விகிதமே தீர்மாணிக்கிறது.

ஓர் வருடத்தில் பிறப்பு விகிதத்தினும், இறப்பு விகிதம் குறைந்து இருந்தால் பிறப்பு அதிகரிக்கும். அதே போல் இறப்பு விகிதம் அதிகரித்து பிறப்பு விகிதம் குறைந்தால் மக்கள் தொகை வளர்ச்சி குறையும். தொற்று நோய், நீண்ட நாள் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை போன்ற காரணங்களில் ஓர் பகுதியில் மக்கள் தொகை வேகமாக குறைவதற்கு காரணங்களாகும். மாறாக பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதிகள், நகர சுகாதாரம் மூலம் ஒருதலைமுறையில் தீடீரென இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.

இடப்பெயர்வு

மக்கள் தொகை மாற்றத்தில் மூன்றாவது கூறு இடப்பெயர்வு மேலும் ஓர் பகுதியில் மக்கள் தொகை அமைப்பு மற்றும் மாற்றத்தை தீர்மானிப்பதில் முக்கியமாக உள்ளது. இந்த மாற்றம் ஓர் பகுதியில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம். மேலும் ஓர் இடத்தில் உள்ள வளத்திற்கும் மக்கள் தொகைக்கும் இடையே உள்ள தொடர்பை சமப்படுத்துகிறது. இடப்பெயர்வு அமைப்பு கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

நிலப்பகுதி அடிப்படையில் குடிபெயர்தல்

குடிபெயர்வு கிராமத்திலிருந்து கிராமம், கிராமத்திலிருந்து நகரம், நகரத்திலிருந்து நகரம், நகரத்திலிருந்து கிராமம் மற்றும் நாடு விட்டு நாடு செல்கின்றனர்.

தற்காலிகம், நிரந்தர அடிப்படையில் குடி பெயர்தல்

ஒரு நபர் வேலையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு ஓர் இடத்தில் வேலை பார்ப்பது அல்லது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாறிச் செல்லுதல் மற்றும் நடுநிலை மாநகராட்சியை சுற்றி வேலை பார்ப்பது ஆகிய செயல்கள் இதனுள் அடங்கும்.

முடிவுரை

உலகத்தில் தற்பொழுதுள்ள 1.3 சதவீத மக்கள் தொகை வளர்ச்சி 54 வருடத்திற்கு முன் உள்ள மக்கள் தொகை வளர்ச்சியை விட இருமடங்கு அதிகமானது – தற்போது உள்ள வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால் 2054ல் 6 பில்லியன் 12 பில்லியன் ஆக மக்கள் தொகை இருக்கும் என தோராயமாக மதிப்பிடப்படுகிறது. உலக மக்கள் தொகை வளர்ச்சி அதிகபட்சமாக 1960ம் ஆண்டில் 2 சதவீதமாக இருந்தது இந்த வளர்ச்சி 35 வருட வளர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகமானது.

உலக மக்கள் தொகையின் ஆண்டு சராசரி வளர்ச்சி 1.3 சதவீதமாக உள்ளது. நடப்பில் இது குறைவானது. உண்மையாகவே மிக வேகமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த வளர்ச்சி விதிகம் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது வளர்ந்த நாடுகளில் 1000 பில்லியன் மக்கள் தொகையையும் வளரும் நாடுகளில் 4000 பில்லியன் மக்கள் தொகையையும் கொண்டிருக்கும். இதே வளர்ச்சி விகிதம் 50 வருடம் இருந்தால் வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகள் 2000 மில்லியன் மக்கள் தொகை குறைவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.22727272727
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top