অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வானிலை மேப்பு விவரங்களும் குறியீடுகளும்

வானிலை மேப்பு விவரங்களும் குறியீடுகளும்

அறிமுகம்

அண்மைக் காலத்தில் துல்லியமான வானிலை அறிவிப்புகள் பற்றிய தேவைகள் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வேளாண் பண்ணை வரையிலும், செயற்கைகோள் அனுப்புதல் நிலையத்திலிருந்து வணிக தொழில்கள் வரை; பொதுமக்களிடையேயும் நம்பத்தகுந்த வானிலைச் செய்திகளின் தேவை அதிகரித்து வருகிறது. வேளாண் சார்ந்த திட்டங்களுக்கு வானிலை அறிவிப்புகள் இன்றியமையாதது. மனிதர்களின் செயல்பாடுகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வானிலைக் கூறுகளால் பாதிக்கப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. பலகட்டத்தில் துல்லியமான வானிலை அறிவுப்புகள் வளிமண்டல ஆராய்ச்சியில் இலக்காக அமைகின்றன.

வானிலை அறிவிப்பாளர்களின் பணி மிகவும் நுணுக்கமானது; பல படிநிலைகளைக் கொண்டவை. புள்ளிவிவரங்களைச் சேகரித்தல், ஒலிபரப்புதல், ஒன்றுதிரட்டுதல் ஆகியன வானிலை அறிவிப்பில் முக்கிய படிநிலைகளாகும்; துல்லியமான முன் அறிவிப்புகளுக்கு இத்தகைய படிநிலைகள் அவசிய தேவைகளாகும். தவிர தகுந்த நேரத்திலும் அறிவிக்கப்படல் அவசியமாகும். இவற்றைத் தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதுவே முன்அறிப்புகளும் தாமதமாக ஒலிபரப்பாகும். மக்களில் பலர் இருபது நிமிடங்களுக்கு முன்னர் எத்தகைய வானிலை நிலவியது என்பதை அறிந்து கொள்ளுவதில் விருப்பம் காட்டுவதில்லை பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நிலவ கூடிய வானிலையை முன்பாக அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகையினால்தான் வானிலைக் குறியீடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இக்குறியீடுகளால் மிகக் குறுகிய நேரத்திலேயே வானிலை மேப்புகளை படித்தறியலாம்.

வானிலைக் குறியீடுகள்

ஏராளமான வானிலைக் குறியீடுகள் உள்ளன. அவற்றுள் சில மழை, பனி, மின்னல் போன்ற வானிலை நிகழ்வுகளைக் காட்ட பயன்படுகின்றன. தவிர காற்றின் வேகம், மேகங்களின் வகைகள், காற்றின் வெப்பநிலை, காற்றின் அழுத்தம் ஆகியனவற்றை சித்தரிப்பதற்கும் குறியீடுகள் உள்ளன. வானிலையாளர்கள் வானிலை முன் அறிவிப்புகளை தக்க நேரத்தில் ஒலிபரப்ப இத்தகைய குறியீடுகள் பயன்படுகின்றன.

உலக வானிலை கழகத்தின் அறிக்கையின்படி தற்சமயம் ஏறக்குறைய 9525 நிலம்பதிவு நிலையங்களும் கடற்பரப்பிலிருந்து 7,424 கப்பல்களும் 664 ராடார் நிலயங்களும் 2306 மேல்மட்ட காற்று பதிவு நிலையங்களும் வானிலை புள்ளி விவரங்களைச் சேகரித்து அவற்றின் மைய நிலையங்களுக்கு அனுப்புகின்றன. அங்கிருந்து மூன்று உலக வானிலை மையங்கள் அமைந்துள்ள மெல்போர்ன் (ஆஸ்திரேலியா), மாஸ்கோ (முந்தைய சோவியத் ருஷ்யா) வாஷிங்டன் டி. சி. (அமெரிக்க ஐக்கிய நாடு) ஆகிய மையங்களுக்கு ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றைத் தவிர 25 மண்டல மையங்கள் உள்ளன. இந்த நிலையங்களிலிருந்து தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலமாக 15 மில்லியன் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து ஒலிப்பரப்பாகின்றன. வானிலை புள்ளி விவரங்கள் உலக வானிலை கண்காணிப்புத் தொகுதியின் கீழ் பன்னாட்டு அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இம்முறை 1965 ஆம் ஆண்டு உலக வானிலைக் கழகத்தால் துவக்கப்பட்டது.

இந்தியாவில் தேசிய வானிலை மையம் பூனாவில் (மகாராஷ்ட்ரா) அமைந்துள்ளது. இந்திய வானிலைத் துறை 1875 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் தேசிய வானிலை சேவையைப் புரிகிறது. வானிலை, நிலநடுக்கம், இவற்றைச் சார்ந்த இதர தொடர்புகளையும் தெரிவிக்கின்ற அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறது. நிர்வாக வசதிக்காகவும் தொழில் நுணுக்க கட்டுப்பாட்டிற்காகவும் கொல்கொத்தா, சென்னை, கெளஹாத்தி, மும்பாய், நாக்பூர், நியூடெல்லி ஆகிய நகரங்களை தலைமையகங்களாக கொண்டு ஆறு வட்டார வானிலை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

வட்டார வானிலை மையம் சென்னையில் ஏப்ரல் மாதம் 1945 ஆம் வருடம் தென்மண்டல வானிலை சேவைகளின் மேற்பார்வைக்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் அடைக்கப்பட்டது. இம்மையம் தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது.

வானிலை மையங்கள் நிலத்தில் இருப்பினும் கடல்பரப்பில் இருப்பினும் அவை நாளொன்றுக்கு நான்குமுறை 0, 06, 12, 18 மணிநேரத்தில் கிரீன்விச் நேரப்படி வளிமண்டல நிலைகளைப் பற்றி அறிவிக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வானிலை மையங்களின் புள்ளிவிவரங்களைக் கொண்டு மேற்பரப்பு வானிலை விளக்கப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. பண்னாட்டு ஒப்பந்தப்படி குறியீடுகளை பயன்படுத்தி வானிலை புள்ளிவிவரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

களப்பணி செய்பவர்கள் நடத்தை அவர்களிடையே நடைபெறும் நிகழ்ச்சிகள், செயற்பாடுகள் என்பவை அவை நிகழும் பொழுதே கண்காணித்துப் புள்ளி விவரங்கள் சேகரிக்கின்றார். இவற்றைப் பூரணமாக தெரிந்து கொள்வது ஆழ்ந்து நோக்குதல், நேர்க்காணல், புள்ளி விவரச் சான்றுகள் போன்றவற்றால் எளிதாகின்றது. களப்பணியாளர் பின்பற்றும் வழி முறைகள் யாவும் அவர் எவ்வகையான கேள்விகளுக்கு பதில் காண விழைகிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. எவ்வொரு களப்பணியானாலும், ஒரு சில முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் அத்தியாவசியம். அவைகீழ்கண்டவற்றை மனதில் கொண்டு செய்யப்படவேண்டும்.

  1. களப்பணியின் நோக்கமும், நடத்தும் வகையும்.
  2. பணியில் ஈடுபட இருப்பவர்களின் நலனும் பாதுகாப்பும்.
  3. பெற்றோர், பள்ளி/நிறுவன அதிகாரிகள் போன்றவர்களுக்கான அறிவிப்பும், தகவல்களும்.
  4. களப்பணியின் அமைவிடப் பாதுகாப்பு (Conservation of sites)
  5. மக்களிடையே நன் மதிப்பையும் தெளிவையும் உருவாக்கும் வகையாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

களப்பணியில் ஈடுபடுவதை சுவரில்லா வகுப்பறைகள் மூலம் கற்றறிதல் எனவும் கருதலாம். மாணவ, மாணவிகளுக்கு களப்பணிக்கு முன்னர் வழங்கப்படும் அறிவுரைகள் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதனைத் தெளிவுறுத்துவதாகவும் அமைதல் வேண்டும். களப்பணியில் மூன்று முக்கிய நடவடிக்கைகள் உண்டு. அவையாவன

  1. களப்பணியினைத் திட்டமிடல் (Planning the Field work)
  2. களப்பணியினை நடத்துதல் (Conducting the Field work)
  3. களப்பணியிலிருந்து கற்றறிந்தவற்றை தொகுத்தளித்தல் (Documenting the Field work) புவியியலில் சுற்றுச் சூழல் என்பது மிகவும் முக்கியமான ஒரு கூறாக கருதப்படுகிறது.

நாம் சுற்றுச் சூழலை பல வகையாக பாகுபடுத்தி படித்தறியலாம். இயற்பு, சமுதாய, பொருளாதார மற்றும் பணிச் சூழல்கள் (Physical, Social, Economic task environments) என பலச் சூழல்கள் உண்டு. இச்சூழல்கள் தனித்து காணப்படுவதில்லை. என்றாலும், அவற்றை தனித் தனியாக ஆய்வு செய்து அறிந்து கொள்ளலாம். புவியியலில் இயற்புச்சூழல் என்பது பல வகைகளில் ஆய்வு செய்யப்படுகின்றது. சிறப்பாக, நிலம், நீர், காற்று என்ற மூன்று கூறுகளின் வழியாக இயற்புச்சூழலை புவியியலில் கற்றறிகின்றோம். இவை புவியியலில் களப்பணி செய்வதற்குறிய வாய்ப்புகளைத் தருகின்றன.

களப்பணிகளை முழுமையாக செய்துமுடிக்க கீழ்வருபவனவற்றை கடைபிடித்தல் அவசியமாகும்.

  1. களப்பணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளைத் தொகுத்தல்.
  2. முன் கூட்டி திட்டமிடல்
  3. பயணம் மற்றும் களத்தில் தங்குவதற்கான முன் ஏற்பாடுகள் செய்தல்.
  4. களப்பணியின் தேவைக்கேற்ப பிறவற்றை தயார் செய்தல்.

களப்பணியும் அறிக்கை தயாரித்தலும்

மனிதர்கள் வாழ்கின்ற புவிப்பரப்பினைப் பற்றி கற்றறிவதே புவியியலின் முக்கிய நோக்கமாகும். புவிபரப்பில் மனிதஇனமும் ஏனைய இயற்கை தோற்றங்களும் முக்கிய கூறுகளாக அமைகின்றன. நிலம், அதன் தோற்றம், வானிலை, காலநிலை, கடல் மற்றும் அதன் பண்பு நலன்கள் ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றங்களை இயற்புப் புவியியலாகக் கற்றறிகின்றோம். மனிதர்கள், அவரது வாழ்க்கை, தொழில்கள், வளர்ச்சி, மேம்பாடு, நலவாழ்வு, எண்ணங்கள் மற்றும் பாவனைகள் போன்றவற்றை மக்கள் புவியியலில் படித்தறிகிறோம். எனவே, இயற்புப்புவியியல் மற்றும் மக்கள் புவியியல் என்பவை புவியியலின் இரு பெரும் பிரிவுகளாக கருதப்படுகின்றன. இவை மனிதர்களின் கல்வி மேம்பாடு, அவர்களின் நடத்தைகள் போன்றவற்றையும் தெளிவுபடுத்துகின்றன. புவியியலில் முக்கியமாக மூன்று பண்புகளை நாம் மனதில் இருத்திக் கொள்ளல் வேண்டும்.

  1. அமைவிடம் இயற்பு மற்றும் மனிதக்கூறுகள் இடத்திற்கு இடம் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை விளக்குகின்றன.
  2. உயிரின் சமுதாயமும் நிலமும்

புவித்தொகுதியின் பகுதிகளுக்கு இடையே நிலவுகின்ற பிணைப்புகளும் அவ்விடத்திற்குறிய இயற்கை மற்றும் மனிதச் சமுதாய நிலைகளும் எவ்வாறுள்ளன என்பதைத் தெளிவாக்குகின்றன.

பிணைப்புகள்

மண்டலங்களுக்கு இடையேயான பிணைப்புகளை பரப்புச் சார்பு மற்றும் சூழ்தொகுதிச் சார்பு அணுகு முறைகளினால் கற்றறிவது. பரப்பு சார்ந்த பாகுபாடு புவியியலின் மையக் கருவாக கருதப்படுகிறது. இதனை தெளிவாக புரிந்துகொள்ள களப்பணி எவ்வாறு துணைபுரிகிறது என்பதனை கீழ் காணலாம்.

புவியியல் களப்பணி

களப்பணி என்பது முதன்மைப் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் கடைபிடிக்கும் பல முறைகளின் தொகுப்பாகும்.

இம் முறைகள் நிலவரைப் படங்கள், கள் விவரப்படங்கள் வரைவது, ஆழ்ந்து நோக்குதல், நிலப் பயன்பாடுகள் குறித்தும், நகர்புற அமைப்பு குறித்தும் அளவைகள் எடுத்தல் மற்றும் தனிமனிதர்களை பேட்டி கண்டு விவரம் சேகரித்தல் என்பனவற்றை உள்ளடக்கியவை.

புவியியலில் இரண்டாம் நிலை புள்ளி விவரங்களை அதிகமாக பயன்படுத்தும் சூழ்நிலைகள் எழுந்தபொழுது, களப்பணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

சில புவியியலாளர்களின் மத்தியில் களப்பணி என்பது கற்று தருதலின் (teaching) ஒரு முக்கிய ஆதாரமாக மட்டுமே பயன்பட்டும் வந்தது. இதற்குக் காரணம், புவியியலில் புள்ளி விவரங்கள் கொண்டு பகுத்தறிதல் என்பது 1950-ம் வருடங்களில் வெகுவாகப் பயன்படத் தொடங்கியதே எனலாம். என்றாலும், இன்றும் களப்பணியின் முக்கியத்துவம் உணர்ந்து பல புவியியல் அறிஞர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று களப்பணி என்பது முதன்மை விவரங்கள் சேகரித்தலில் சிறப்பு முறையாக இருந்தாலும் கூட, சமூக ஆய்வுகளில் பெருமளவில் பயன்படுகிறது. இதன் மூலம் அன்றாட வாழ்க்கை நேரடியாகவும், பங்கேற்றல் வழியாகவும் ஆழ்ந்து நோக்கப்பட்டு முதன்மை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

விவரங்கள் சேகரிப்பின், அவற்றை பகுத்தாய்வதற்கான முறைகளை தெரிந்தெடுத்தல்.

களத்திற்கு பயணமும், களப்பணி செய்தலும் சில களப்பணிகளில் பகுப்பாய்வு முறைகள் தேவைப்படுவதில்லை. ஏனெனில், அவை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் மூலமாக களப்பணிகள் நடைப்பெற்று இருக்கலாம்.

  • ஆழ்ந்து நோக்குதல் (Observation)
  • நேர்க் காணல் (Interview)
  • பங்கேற்றல் (Participation)
  • விவரங்களை முறைப்படுதல் (Data processing)
  • விளக்கம் தருதல் (Interpretation)

மேற்கூறியவற்றுள் முதலாவது செயலை மட்டும் பின்னணியாகக் கொண்டு அமையலாம். அதாவது. எல்லா களப்பணிகளும் மேற்கூறிய ஐந்து செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்று நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உண்மையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்ற வகையான களப்பணிகளை அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட செயலை அடிப்படையாகக் கொண்டும் நடத்தலாம்.

நேர்க்காணல் என்ற செயல் முறையைப் பயன்படுத்தும் களப்பணிகளின் மூலமாக முறையான விவரங்களை சேகரிக்கலாம். பங்கேற்றல் என்ற செயல் முறையைப் பின்பற்றாமல் நேர்க்காணல் வழியாக மட்டுமே விவரங்களைச் சேகரிக்கவும் இயலும். பங்கேற்றல் முறையினைப் பின்பற்றி நடத்தப் பெறும் களப்பணியின் வாயிலாக பெறப்படும் விவரங்கள் புள்ளி (Statistical) விவரங்களாக இல்லாமல், 'உரை' அல்லது 'வார்த்தை' (textual or verbal) விவரங்களாக இருக்கலாம். உரை மற்றும் வார்த்தைகளாலான விவரங்கள் தரும் விளக்கங்களை எண்கணித முறைகளுக்கு உட்படுத்த இயலாது; நேரடியாக பயன்படுத்தக் கூடிய வகையில் அவை அமைகின்றன. இவ்விவரங்களை வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்யவும் விவரணம் செய்யவும் பயன்படுத்துகின்றனர். களப்பணியில் ஈடுபடும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் புவிநிகழ்ச்சிகளைப் பற்றிய பொதுவான விளக்கங்களை நேரடியாக பெறுகின்றனர்.

அறிக்கை தயாரித்தல்

ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் விவரங்களும் பயன்படும் வகையில் வெளியீடுகளாக வருகின்ற வரையில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மதிப்பற்றவைகளாகவே இருக்கின்றன. ஆதலால் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் முடிவுகளை வெளிப்படுத்துவது அவர்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை தரமான அறிக்கையாக தயாரித்து வெளியிடலாம். அறிக்கை தயாரித்தலில் மூன்று முக்கிய படிநிலைகள் உள்ளன.

அறிக்கை வரையறை

தரமான அறிக்கை ஒன்றை தயாரிக்க அதை திட்டமிட்டு வரையறை செய்வது முதல்படியாகும். அறிக்கை படிப்பதற்கு எளிதாகவும் சுருக்கமாகவும் முறையாகவும் அமைய வேண்டும். அனுபவமில்லாத எழுத்தாளர்கள் முன் வரைவு திட்டங்களின்றி எழுதுவதால் அவர்கள் தயாரிக்கின்ற அறிக்கைகள் தெளிவாக இருப்பதில்லை. புள்ளி விவரங்களை பகுப்பாய்வு செய்யும்பொழுதும் அவற்றை வகைப்படுத்தும்பொழுதும் அறிக்கைக்கான முன்வரைவு இயல்பாகவே வெளிப்படுகிறது. அறிக்கை முன்வரைவின் பொழுது ஆராய்ச்சி முடிவுகளை எவ்வாறு வெளிபடுத்துவது என்பது முடிவாகிறது.

அறிக்கையின் முக்கிய நோக்கங்களை வரிசைப்படுத்துவதற்கான பல வழிகள் முன்வரைவில் திட்டமிடப்படுகிறது. அவற்றுள் முக்கியமான ஒன்றாக அறிக்கையில் எழுதப்பட வேண்டிய அனைத்து கருத்துகளையும் குறிப்புகளாக வைத்துக்கொள்வது முதல்படியாகும். அடுத்ததாக அக்குறிப்புகளை கருத்துகளின் அடிப்படையில் வரிசைபடுத்துவதாகும். சில எழுத்தாளர்கள் குறிப்புகளை தனித்தனியாக சிறிய அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்வர். இத்தகைய அட்டைகள் குறிப்பு அட்டைகள் (Index card) எனப்படுகின்றன.

பிற ஆசிரியர்களும் குறிப்பு அட்டை முறைப் போன்று மற்றொரு முறையை பின்பற்றுகின்றனர். இம்முறையில் இட்டைகளுக்கு பதிலாக முழு அளவிலான காகிதத்தாள் பயன்படுத்தப்படுகிறது. இத்தாளில் அறிக்கையின் முடிவுகள் விரிவான குறிப்புகளாக அவற்றிற்கான தலைப்புகளுடன் எழுதிவைக்கப்படுகின்றன.

இந்த முறையின் மூலமாக இறுதி அறிக்கை மிக விரைவாக தயாரிக்க இயலுகிறது. ஒவ்வொரு தலைப்பும் விரிவான குறிப்புகளாக எழுதப்பட்டிருப்பதினால் அவற்றை ஒருங்கிணைத்து அறிக்கையை முழுமையாக தயாரிப்பது எளிதாகிறது.

ஒரு சிலர் கணிணியை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். மேற்கூறிய முறைகள் அனைத்தும் உங்கள் சிந்தனையில் உதித்கின்ற கருத்துகளை ஒழுங்கு படுத்தி தரமான அறிக்கை தயாரிக்க உதவுகிறது. உங்கள் கருத்துகளை முன்வரைவு குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்கின்ற பழக்கத்தை வளர்த்து கொள்வது பின்னர் அறிக்கை தயாரிக்க உதவும்.

முதல் அறிக்கை

முதல் அறிக்கை தயாரிக்க முறையாக அமைக்கப்பட்ட முன்வரைவுகளும் வரைபடங்களும் உதவுகின்றன. முதல் தடைவையே இறுதி அறிக்கையை எழுத முயலக் கூடாது. முன்வரைவுகளும் வரைபடங்களும் உங்கள் நினைவில் இருக்கும்பொழுதே முதல் அறிக்கையை எழுத தொடங்குங்கள். முதல் அறிக்கையை எவ்வளவு சீக்கிரம் எழுத முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக எழுத ஆரம்பியுங்கள். நீங்கள் எழுத விரும்புகின்ற அனைத்தையும் எவ்வாறு வெளிபடுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறே எழுதலாம். முன்வரைவுகளின் அடிப்படையில் உங்கள் நினைவிற்கு வருகின்ற கருத்துகளை எழுதுங்கள். அறிக்கை முழுமையாக முடியும் வரையில் நீங்கள் எழுதியவற்றை திருப்பி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.

இறுதி அறிக்கை

முதல் அறிக்கையை திருத்தி அமைப்பதை வீட்டிற்கு வெள்ளை அடிப்பதுடன் ஒப்பிடலாம். வீட்டிற்கு வெள்ளை அடிப்பதினால் வீடு புது பொலிவுடன் தோற்றமளிக்கிறது, அதன் அமைப்பு மாறுவதில்லை. அதுபோல அறிக்கையை வாசிப்பதன் மூலமாக அதன் தரம் வெளிபடுகிறது. முதல் அறிக்கையை திருத்தி அமைப்பதற்கு முன்னர் அந்த அறிக்கை தரம் வாய்ந்தது அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். முதல் அறிக்கை தயாரித்த பின்னர் அதை உடனடியாக படித்து பார்க்காதீர்கள். அந்த அறிக்கையை சில நாட்கள் அல்லது ஒரு நாளைக்கு மட்டுமாவது கட்டி வைத்து விடுங்கள். இந்த இடைவேளையில் புதிய கருத்துகள் உங்கள் சிந்தனையில் உருவாகலாம். இத்தகைய சிந்தனைகள் உங்களை நல்ல படைப்பாளிகளாக மாற்றக் கூடும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate