பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பிராணிகள் நல வாழ்வு / வனங்கள் மற்றும் வன உயிரிகள் பாதுகாத்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வனங்கள் மற்றும் வன உயிரிகள் பாதுகாத்தல்

வனங்கள் மற்றும் வன உயிரிகள் பாதுகாத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

மக்களுக்கு முடிந்த அளவு அதிக காலத்திற்கு இயற்கை அல்லது சூழ்நிலை நடுநிலை பாதிக்காத வண்ணம் நன்மைகளை கிடைக்கச் செய்யுமாறு வளங்களை மேலாண்மை செய்வது என்பது பாதுகாத்தலுக்கான வரையறையாகும். இயற்கை வாழிடத்தில் காணப்படும் வீட்டில் பழக்கப்படுத்தப்படாத மற்றும் வளர்க்கப்படாத உயிர்கள் வனஉயிர்களாகும்.

பாதுகாப்பிற்கான தேவை

வனஉயிர்கள் என்பவை பேணிப் பாதுகாக்க வேண்டிய சொத்தாகும். ஏனென்றால் அவை மனமகிழ்வு சூழ்நிலை, கல்வி, வரலாறு மற்றும் அறிவியல் அடிப்படையில் மதிப்புமிக்கதாகும். சூழ்நிலை சமநிலைக்கு வனஉயிரிகள் அவசியம். சுற்றுலாவிற்கு வனஉயிரிகளால் பெரிய முன்னேற்றம் ஏற்படும். ஏராளமான தாவரங்கள் மருத்துவ குணங்கள் மிக்க பொருட்களை அளிக்கின்றன. மரபுப் பொறியியலுக்குப் பயன்படும் மரபுப் பொருளுக்கான முக்கிய ஆதாரமாக வன உயிரிகள் விளங்குகின்றன. இந்தியா மித வெப்பநாடாக உள்ளதால், நாட்டின் பல பகுதிகளிலும் தாவரங்கள் வளர்ச்சிக்கு இவ்வெப்பம் உகந்ததாக உள்ளது.

காடுகளின் வகைகள்

பாலைவனம் (வறண்ட காடுகள்): இராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவின் தென்பகுதிகள்

 • இலையுதிர் காடுகள்
 • பசுமைமாறாக் காடுகள் - வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் : மேற்குத் தொடர்ச்சி மலைகள், இந்தியாவின் வடகிழக்கு மலைப்பகுதிகள், இமயமலை அடிவாரம்
 • மலைக்காடுகள் - இமயமலை
 • அலையிடைக்காடுகள் - கங்கா மற்றும் மகாநதி கழிமுகப்பகுதிகள்

காடுகள் அழிதல் மற்றும் காடுகளைப் பெருக்குதல்

சுயநலமிக்க சில சமூக விரோதிகள் இயற்கை வளத்தை சீர்குலைக்கின்றனர். இது காடுகளை அழித்தல் ஆகும். மழை அளவு குறைதல், தட்பவெப்பநிலை மாற்றம், மண் அரித்தல், பச்சை வீட்டு விளைவு (பூமிப்பந்து சூடாதல்) போன்றவைக் காடுகள் அழிவதால் நேரும் சில தீய விளைவுகளாகும்.

புதிய மரங்கள் நடப்படுவது காடாக்கல் அல்லது காடுகள் பெருக்கம் எனப்படும். இது பொதுவாக பாலைவனங்களிலும் திறந்தவெளிகளிலும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. காடாக்கல் என்பது இரண்டு வகையான திட்டங்களைக் குறிக்கோளாக கொண்டுள்ளது. அவை, சமுதாயக்காடுகள் வளர்ப்பு மற்றும் வேளாண்காடுகள் வளர்ப்பு ஆகியவனவாகும்.

மர நலவிரும்பிகள் அமைப்பினை ஆங்காங்கே ஏற்படுத்தி அதிக அளவு மக்கள் சேர்க்கப்படலாம். அவர்கள் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடுவதோடு தங்களது நண்பர்களுக்கும் மரக்கன்றுகளைச் சிறப்பு நாட்களில் பரிசாக அளிக்கலாம்.

சமுதாயக் காடுகள்

 • இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் 1976-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கங்கள், இயற்கைக் காடுகளை மேம்படுத்துவது மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்களில் காடுகள் உருவாக்குவது ஆகும்.
 • சாதரண மனிதன் கூட மரங்களை நட்டு வளர்த்து அதன் மூலம் அதிகரித்துவரும் கட்டுமான மரம் விறகு மற்றும் தீவனத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வைப்பதும் கூட அத்திட்டத்தின் நோக்கம்.
 • இதன் மூலம் பாரம்பரியமிக்க காடுகளையே நம்பி அவற்றிற்குத் தொந்தரவு தரும் நிலை குறையும்.

வேளாண் காடுகள்

விவசாயப் பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் எல்லைகளிலும் தனியார் நிலங்களின் ஓரங்களிலும் மரங்களை நடுவது வேளாண் காடுகள் திட்டம் ஆகும்.

வேளாண்பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளைப் பெருக்குவதற்கு இத்தகைய நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மரங்களை அழிப்பதால் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. மண் அரிமானம் ஏற்படுகின்றது. மழைக்காலங்கள் மாறுபடுகின்றன. புவி வெப்பமயமாக வழி வகுக்கிறது.

தாவர மற்றும் விலங்கு வகைகள்

இந்தியாவில் ஏராளமான வகையைச் சார்ந்த தாவரங்கள் உள்ளன. சுமார் 45,000 சிற்றினங்கள் உள்ளன. இவற்றில், 15000 பூக்கும் தாவரங்கள், 1.676 பாசியினங்கள், 1940 படர்தாவரங்கள், 12480 பூஞ்சைகள், 64 திறந்த விதைத் தாவரங்கள், 2843 பிரியோடைட்கள், 1012 டெரிடோஃபைட்டுகள் ஆகும்.

இந்தியாவில் ஏராளமான விலங்குகள் உள்ளன. அவை 81251 சிற்றினங்களைச் சார்ந்தவை. உலக விலங்கினங்களில் 6.67 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இவற்றில் 60,000 வகைப் பூச்சிகள், 5000 மெல்லுடலிகள், 373 வகை பாலூட்டிகள், 1228 வகை பறவைகள், 446 ஊர்வன, 204 இரு வாழ்விகள், 2546 வகை மீன்கள் உள்ளன. இந்திய விலங்குகள் அளவீடு அமைப்பு நம்நாட்டிலுள்ள விலங்கு ஆதாரங்களை அளவிடுகிறது. அச்சுறுத்தப்பட்ட நிலையிலுள்ள சிற்றினங்கள் ஆரம்ப கால உயிர்கள் நீரில்தான் வாழ்ந்தன. பிறகு தாவரங்கள் நிலத்தில் வாழ ஆரம்பித்தன. இவை புதிய உணவு ஆதாரங்களாக விளங்கியதால் சில விலங்குகள் நீரை விட்டு வெளியேறின. அவை சுவாசத்திற்காக செவுள்களுக்குப் பதிலாக நுரையீரல்களை உருவாக்கிக் கொண்டன. முதலில் நிலத்திற்கு வந்தவை இருவாழ்விகள் ஆகும்.

டயனோசர்கள்

டயனோசர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முந்தையவை. அவற்றின் பெயர்கள் கிரேக்க மற்றும் லத்தீன் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டவை. டயனோசார் என்ற வார்த்தை பயங்கரமான பல்லிகள் என்ற பொருள் தருவதாகும்.

காண்டாமிருகங்கள், திமிங்கலங்கள், ஓநாய்கள், கழுகுகள் மற்றும் மழைக்காடுகளிலுள்ள சில பறவைகள், விலங்குச் சிற்றினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. சில விலங்குகள் அவற்றின் தோல் எலும்புகள் அவை வாழுகின்ற இடம் ஆகியவற்றை அடையும் பொருட்டு கொல்லப்படுகின்றன. பிற விலங்குகள் மனிதனால் உருவாக்கப்படும் வேதியியற் பொருட்களிலுள்ள நச்சு மற்றும் இதர பொறிகளால் கொல்லப்படுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் மிகவும் அழகான பறவைகளுள் ஒன்றான மோனல் முற்றிலும் அழியும் நிலையை நெருங்கும் அளவு வேட்டையாடப்பட்டுவிட்டது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் முற்றிலும் அழிந்து விடும் அபாயத்தில் உள்ள சிற்றினங்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையிலுள்ள சிற்றினங்கள் எனப்படுகின்றன.

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

நூற்றாண்டின் ஆரம்பத்தில் 40000 ஆக இருந்த புலிகளின் பாந்திரா டைகரிஸ் எண்ணிக்கை, 1972-ல் 1827 ஆக குறைந்துவிட்டது. 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி புலி பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.

யானைகள் பாதுகாப்புத் திட்டம்

நமது தேசியப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் விலங்கு. தந்தங்களின் திருட்டு மற்றும் யானைகளின் வசிப்பிடங்களை அழிக்கும் முயற்சி ஆகியவற்றால் இந்திய யானைகளின் (எலிஃபாஸ் மேக்ஸிமஸ்) எண்ணிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் குறிக்கோளுடன் கூடிய யானைகளுக்கான திட்டம் ஏற்படுத்தப்பட்டது. வசிப்பிடத்திற்காக மனிதனுக்கும் யானைக்கும் வாழிடப் போட்டியினால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

காண்டாமிருகப் பாதுகாப்புத் திட்டம்

வேட்டையாடல் மற்றும் வெள்ளத்தினால் இந்திய காண்டாமிருகங்கள் அல்லாத ஒற்றைக் கொம்பன் (ரைனோ யூனிகார்மிஸ்) எண்ணிக்கையில் குறைந்து போனது. இச்சிற்றினத்தைப் பாதுகாக்க நடுவண் அரசினால் துத்வா தேசிய பூங்காவில் புனரமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கங்கள் சரணாலயம்

1972-ல் குஜராத் அரசு கிர் வன விலங்குச் சரணாலயத்தில் உள்ள பெருமை வாய்ந்த சிங்க இனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இச்சரணாலயத்தின் தேசியப் பூங்கா மற்றும் வாழிட சுற்றுச்சூழல் சமநிலை உரிய முறையில் பாதுகாக்கப்பட்டதன் விளைவாகச் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

முதலைகள் வளர்ப்புத் திட்டம்

அழியக் கூடிய நிலையிலிருந்த கீழ்க்கண்ட மூன்று வகை முதலைகளான நன்னீர் வாழ் முதலை (குரோகோடைல்ஸ் பாலுஸ்ட்ரிஸ்) உவர்நீர் வாழ் முதலை (கிரிஸிடைலஸ் போரோஸஸ்) அரிய இனமான காரியல் (கிராவியாலிஸ் கேங்டிக்கஸ்) காப்பதற்காக, முதலை வளர்ப்பு மற்றும் பராமரிப்புத்திட்டம் 1975ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது.

சிவப்புப் புள்ளிவிவரப் புத்தகம்

 • சிவப்புப் புள்ளி விவரப் புத்தகம் என்பது அச்சுறுத்தப்பட்ட சிற்றினங்கள் அல்லது அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக் கொண்டிருக்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட புத்தகமாகும்.
 • இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பானது (ஐயுசிஎன்) சிகப்பு புள்ளி விவரப்புத்தகத்தைப் பராமரித்து வருகின்றது.
 • இந்தியாவில் இந்திய ஒற்றைக்கொம்பன், நீலகிரிக்குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய சிங்கம், இந்தியப் புலி, ஓலிவர் ரிட்லி ஆமை போன்ற விலங்குகளும் மோனல் இந்திய நாரை மற்றும் காட்டுக் கோழி ஆகிய பறவைகளும் அழியும் நிலையில் உள்ளன.
 • என்.ஜி.சி: இது இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் அமைப்பு, இதன் விரிவாக்கம் தேசிய பசுமைப்பயிர்கள் அமைப்பாகும்.
 • சிங்கம், புலி, சிறுத்தை, பனி சிறுத்தை மற்றும் மேகநிற சிறுத்தை இந்தியாவில் உள்ளன. சிறுத்தை 1950லிருந்து அழிந்த இனமாக உள்ளது.
 • புகழ்வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமையின் இனவிருத்தி இடம் ஒரிஸா கடற்கரை.
 • பருந்து அலகு ஆமை தமிழ்நாட்டின் கடற்கரையில் இனவிருத்தி செய்கின்றது.

வலசை போதல்

 • அரிஸ்டாடில், 384-322 கிமு விலங்குகளின் வரலாறு எல்லா விலங்குகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளுர உணர்கின்றன. விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும் குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விளைகின்றன. எனவே அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன.
 • அரிஸ்டாடில் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவகால இடப்பெயர்வைக் கண்டறிந்திருந்தார்.
 • குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து வேறொரு வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசைப் போதல் ஆகும்.
 • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவிலுள்ள மிகவும் வண்ணமயமான இனவிருத்தி இடங்களில் ஒன்றாகும்.
 • இச்சரணாலயம் அப்பகுதி உள்ளுர் மக்களால் 250 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 • வேடந்தாங்கல், ஊசிவால்குருவி, கார்கனே, நீளசிறகு வாத்து, சாம்பல் வாத்து, சான்டுபைப்பர் பறவை மற்றும் பல வலசை போகும் பறவைகளுக்கு உறைவிடமாக உள்ளது.
 • வலசைப் போகும் பறவைகளின் வழித்தடப் புள்ளி வங்கிகள் ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்ல தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன. பிறகு ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்குச் செல்ல துவங்குகின்றன. உதாரணமாக வடக்கு ஐரோப்பியாவிலுள்ள குருவிகள், ஆப்பிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6800 மைல்கள் (11000கிமீ) அல்லது அதிகமாக பறந்து செல்கின்றன. அவை குழுக்களாகச் செல்லும்போது அவற்றைக் கொன்று திண்ணும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசைப் போகும் பல பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில்தான் தங்களது இருப்பிடத்தை அறிகின்றன.
 • பாலைவன வெட்டுக் கிளிப்பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக (ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50000 மில்லியன் இருக்கும்) இடம்பெயரும்போது ஒரு நாளைக்கு 3000 டன்கள் தாவரங்களை உண்கின்றன.
 • சால்மன் மீன்கள் இனவிருத்திக்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல்கள் (சுமார் 2400 கி.மீ) வரை பயணிக்கின்றன. முற்றிலும் ஆற்றலிழந்த நிலையில் இன விருத்திக்குபின் பல மீன்கள் இறந்து விடுகின்றன.
 • பிரேசில் ஆமைகள் இனவிருத்திக்காக எட்டு வாரங்களில் 1250 மைல்கள் (2000 கி.மீ) பயணிக்கின்றன.
 • வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000 கி.மீ) மேலாக பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் மிகவும் அதிக தூரம் நடைபெறும் வருடாந்திர வலசைப்போதலாகும். சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் அரசாங்கம் வன உயிரிகளைப் பாதுகாக்க தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் அமைத்தல் போன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.

சரணாலயம்

விலங்குகளை நல்ல முறையில் காத்து பராமரிக்கப்படும் இடம் சரணாலயம். இங்கு விலங்குகளைக் கொல்லுதல் அல்லது பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் சுமார் 500 சரணாலயங்கள் உள்ளன. விலங்குகளைப் பராமரிப்பதைத் தாண்டி, சரணாலயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மக்களுக்கு விலங்குகளைப் பற்றி அறிவுறுத்துவது ஆகும்.

ஒரு சிற்றினம் வாழ்வதற்குத் தேவையான வாழிடம் அழிக்கப்பட்டாலோ அல்லது அந்தக் குறிப்பிட்ட சிற்றினம் அழிக்கப்பட்டாலும் உயிர்ப்பன்மை இழப்பு ஏற்படுகிறது. முதலாவது குறிப்பிட்ட பொதுவாக அதிகளவு நடக்கக் கூடியதாகும்.

குறிப்பிட்ட சிற்றனமானது பொருளாதார இலாபத்திற்காகப் பயன்படுத்தப்படும்போது அல்லது விளையாட்டிற்காக அல்லது உணவிற்காக வேட்டையாடப்படும்போது இரண்டாவது குறிப்பிட்டது நடக்கிறது.

உயிர்ப்பன்மை பாதுகாத்தலின் முக்கிய குறிக்கோள்கள் மற்றும் நன்மைகள்

 • உணவுச் சங்கிலியின் தொடர்ச்சியைப் பாதுகாத்தல்
 • தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப்பன்மை பாதுகாக்கப்படுகிறது.
 • பொழுது போக்கு மற்றும் சுற்றுலா போன்ற உடனடி நன்மைகளைச் சமுதாயத்திற்கு அளிக்கிறது.
 • பூமியில் வாழ்க்கைக்கான ஆதார அமைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்த உறுதியளிக்கின்றது.

தேசியப் பூங்காக்கள்

இயற்கையான சுற்றுச் சூழலோடு வன உயிரிகளைப் பாதுகாக்கும் பொருட்டு அர்ப்பணம் செய்யப்பட்ட நிலப்பரப்பு தேசியப் பூங்காக்கள் எனப்படும்.

பல தேசியப் பூங்காக்கள் ஆரம்பத்தில் வன உயிரிச் சரணாலயமாகத் தான் இருந்தன. இந்தியாவில் சுமார் 89 தேசியப் பூங்காக்கள் உள்ளன.

உயிர்பன்மையத்திற்கு அச்சுறுத்தல்கள்

 • தற்சமயம் உயிர்பன்மயமானது, 10 முதல் 100 மில்லியன் சிற்றினங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 1.4 மில்லியன் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.
 • உலகத்தில் 12 பிரம்மாண்ட பன்மையிடங்கள் உள்ளன. இந்தியா அவற்றுள் ஒன்றாகும்.
 • உயிர்ப்பன்மை இழப்பிற்கு வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, சிற்றினங்களுக்கிடையே ஏற்படும் இயற்கையான போட்டி, மகரந்தச் சேர்க்கைக் குறைவு மற்றும் நோய்களுக்கு காரணமாகின்றன.
 • மனிதனே உயிர்பன்மை இழப்புக்கு காரணம். வீடு கட்டுதல், விவசாயம், அணைகள் மற்றும் நீர் இருப்புகள் கட்டுதல் சாலைகள், இருப்புப் பாதைகள் அமைத்தல் போன்ற வளர்ச்சிப் பணிகள் வாழிட அழிவுக்கு காரணங்களாக அமைகின்றன.
 • ஒரு சிற்றினம் அழிந்தாலும் அது மிகப்பெரிய இழப்பாகும். ஏனென்றால் ஒவ்வொரு உயிர் வடிவமும் மீட்க முடியாத மரபு ஆதாரங்களின் சேமிப்பு இடமாகும்.
 • முற்றிலும் அழித்தல் என்பது மீளக் கொணர முடியாத நிகழ்வாகும். ஒரு சிற்றினம் முற்றிலும் அழிந்தால் அது பிற சிற்றினங்களின் தொடர் அழிவிற்கு வழிகோலும்.

பாரம்பரிய அறிவு மற்றும் உயிர்ப்பன்மையில் மக்களின் ஆரம்பப் பங்கு

புனிதச் சோலைகள்

இவை சமுதாயத்தால் பாதுகாக்கப்பட்ட பரந்த வனப்பரப்பாகும். அதில் ஒரு கோவில் அல்லது குறிப்பிட்ட ஒரு வனத்திற்குரிய கடவுள் இருப்பதால் அந்தப் புனிதச் சோலையைப் பாதுகாப்பது முன்மையானதாகும். மொத்த சமுதாயமும் அதில் ஈடுபடுத்தப்படுகிறது. மரங்களை வணங்கும் மரபினால் பாதுகாப்பு என்பது இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

வணங்கப்படும் சிற்றினம் மக்கள் சார்ந்திருக்கும் வகுப்பு, பகுதி மற்றும் கிடைப்பதிலான உபயோகம் போன்றவற்றால் வேறுபடுகிறது. இந்த பாரம்பரிய வழக்கங்களால் இந்த சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பசுமை அமைதி அமைப்பு திமிங்கலங்களை வேட்டையாடுவதைத் தடைசெய்ய காரணமாக இருந்தது. சுந்தர்லால் பகுகுணாவினால் ஆரம்பிக்கப்பட்ட சிப்கோ இயக்கம் இமயமலையின் சில பகுதிகளில் மரங்கள் விழுவதைத் தடுத்து நிறுத்தியது.

ஆதாரம் : தமிழ்நாடு வனத்துறை

2.77272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top