பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விலங்குகள்

சூழலியலைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

சூழலியல் என்பது மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இவற்றின் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தொடர்பினை பற்றி அறிவதாகும்.

சூழ்நிலை மண்டலம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் இடமாகும்.

வாழிடம் என்பது ஒரு தாவரம் அல்லது விலங்கு வாழ்வதற்கு இயற்கையாக அமைந்த சுற்றுச்சூழல் அமைப்பாகும்.

சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும்.

சூழ்நிலை மண்டலத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்திற்கும் இடமுண்டு. எனவே மக்கள், விலங்கு மற்றும் தாவரங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்தே உயிர்வாழ்கின்றன. இவ்வுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

உதாரணமாக, மான் போன்ற தாவர உண்ணிகள் தாவரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. சிங்கம் போன்ற மாமிச உண்ணிகள் மான், போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.

எலிகள் மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களை அதிகளவில் சேதப்படுத்துகின்றன. எனவே பாம்புகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

விலங்குகள் தங்களின் பசிக்காக வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதர்கள் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுகின்றனர். இது மிகவும் கொடூரமான செயல்.

தாவரங்களினால் உணவு  கிடைக்கிறது. மரங்கள் நீரை தன் வேருக்குள் பாதுகாத்து காற்று மாசுபடுவதையும் ஒலி மாசுபடுவதையும் தடுக்கின்றன. மேலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இது உயிர்கள் வாழ பெரிதும் உதவுகின்றது. எனவே தாவரங்கள் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.

நாம் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் இயற்கை வாழ்விடங்களான காடுகளை பாதுகாக்க வேண்டும்.

சிலந்தி தான் வாழ்வதற்காக வலையை பின்னுகின்றது. மேலும் பூச்சிகளை உணவாக பிடிக்க இந்த வலையை பயன்படுத்துகின்றன. இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் சிலந்தியின் வலையை போன்று ஒன்றோடொன்று சார்ந்துள்ளது. அதனால்தான் அதை வாழ்க்கைச் சங்கிலி என்று அழைக்கிறோம்.

தாவரங்களிலிருந்து உணவு கிடைக்கிறது. மேலும் நீரை தன் வேருக்குள் உள்ளடக்கி கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றுகிறது. இது உயிர்கள் வாழ இன்றியமையாததாகும். மேலும் இவை பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு வாழ்விடமாகவும் உள்ளன. மற்ற விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்து மறைத்துக் கொள்ள இந்த தாவரங்கள் உதவுகின்றன. அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக தாவரங்கள் விளங்குகின்றன.

பறவைகள் தங்கள் சிறகுகளை விரித்து வானில் பறக்க விரும்பும். இயற்கை வாழ்விடத்திலிருந்து பறவைகளையும் விலங்குகளையும் பிரித்து கூண்டுக்குள் அடைத்து வைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். எந்த தவறும் செய்யாமல் கூண்டுக்குள் கைதிகளை போல் அடைத்து வைக்கின்றனர்.

வேட்டையாடுவது கொடுமையான செயல்

வேட்டையாடுவது என்பது அனைத்து விலங்குகளையும் அழித்து விடும். இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுகின்றன. சிறுத்தை புலியினம் வேட்டையாடுதலினால்தான் அழிந்து விட்டது.

வனஉயிரினங்கள் ஏதேனும் நகரத்தில் வாழ்கின்றனவா?

பறவைகள், பூச்சிகள், அணில் போன்ற பாலூட்டிகள் வனவுயிரினங்கள் ஆகும். இவை நகரங்களில் காணப்படுகின்றன.

சூழலியலில் பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை மண் வளத்தை செழிப்பாக்குகின்றன. பெரும்பாலான விலங்குகளுக்கு உணவாக விளங்குகின்றன. மேலும் இவை பிடிக்கப்பட்டு கண்ணாடி குடுவையிலோ அல்லது வலையிலோ அடைத்து வைக்கப்படுகின்றன. பூச்சிகளை அதன் கூட்டத்திலிருந்தும் இயற்கை வாழ்விடத்திலிருந்தும் பிரித்து அடைத்து வைப்பது மிகவும் கொடுமையான செயலாகும்.

பட்டுப்புடவை பட்டு பட்டுப்பூச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த பட்டுப்பூச்சியை விட்டால் அழகான பட்டாம்பூச்சியாக வளரும். நம்மை அலங்கரித்துக் கொள்ள மற்ற உயிரினத்தை நாம் கொல்லக் கூடாது.

சூழலியலில் பாம்புகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களை அதிகளவில் சேதப்படுத்தும் எலிகளை  பாம்புகள் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் பாம்புகளை பார்த்து நாம் பயப்படுகிறோம் அல்லது வெறுக்கிறோம். சிலவகை பாம்புகளே விஷத்தன்மையுள்ளவை. நாம் அவைகளை விட உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவை நம்மை பார்த்து பயப்படுகின்றன. நாம் அவைகளை தாக்கினால்தான் நம்மை கடிக்கும்.

பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகளுக்கு மரங்கள் வாழிடமாக உள்ளது. நாம் நம் வீட்டை அழிப்பதை விரும்ப மாட்டோம். அதுபோல காட்டை நாம் அழிக்கக்கூடாது. அவற்றை பாதுகாக்க வேண்டும்.

விலங்குகளை அதன் மென்மையான ரோமத்திற்காக மனிதர்கள் வேட்டையாடுகிறார்கள்.

மனிதர்களைப்போல் குரங்குகளும் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்பும். ஆனால் அவைகளை அதன் குடும்பத்திலிருந்து பிரித்து சங்கிலியால் கட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவது மிகவும் கொடுமையான செயல்.

விலங்குகள் நெருப்பை கண்டு அஞ்சும். இருப்பினும் இந்த புலியை சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கட்டாயப்படுத்தி பயிற்சி அளித்து நெருப்பு வளையத்திற்குள் பாய வைக்கிறார்கள். இது மிகவும் கொடுமையான செயலாகும்.

இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் கடல் ஆமைகள் மிகவும் பழமை வாய்ந்த உயிரினமாகும். கடல் ஆமைகள் உலகத்தின் பல பகுதிகளை தாண்டி நீந்தி வந்து  இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் முட்டையிடுகின்றன. ஆனால் மனிதர்கள் தங்களின் உணவுக்காக கடல் ஆமைகளையும் அதன் முட்டைகளையும் வேட்டையாடுகின்றனர். இது கடலின் சூழலியலை பாதிக்கிறது.

மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்கள் சுகாதாரமற்ற நீராலும் சூரியஒளி மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமலும் வளர்க்கப்படுவதால் அவைகள் இறக்க நேரிடுகிறது. மீன் தொட்டியில் மீன்களை அடைத்து வளர்ப்பதும் ஒரு கொடுமையான செயலாகும்.

விலங்குகளை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. அவை

உயிரியல் பன்வகைமைச் சட்டம் (2002)

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972)

வனச்சட்டம் (1927)

வீட்டு விலங்குகள்

வீட்டு விலங்குகள் மனிதர்களிடம் மிகவும் அன்பாகவும் நல்ல நண்பர்களாகவும் பழகுகின்றன.

அவைகள் நமக்கு பல வகைகளில் உதவுகின்றன.

நாய் நமது வீட்டை பாதுகாக்கிறது.

பசு பால் தருகிறது.

குதிரை மற்றும் எருது போன்ற விலங்குகள் போக்குவரத்திற்கு உதவுகின்றன.

சில விலங்குகள் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, வியாதியை பரப்பும் உயிரினங்களை அழித்து நம்மை பாதுகாக்கின்றன.

மனிதர்களை தங்களுடைய நண்பர்களாக கருதி அவைகள் நமக்கு இவை அனைத்தையும் செய்கின்றன.

ஆனால் சில மனிதர்கள் வீட்டு விலங்குகளிடம் அன்பாக இருப்பதில்லை.

விலங்குகளும் நம்மை போன்ற ஒரு உயிர்தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவைகளுக்கும் பசி, வலி, மகிழ்ச்சி, சோகம் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் உண்டு.

அவைகளால் அழவும் முடியும்.

நாய் மனிதனுக்கு உற்ற நண்பனாக விளங்குகிறது. ஒரு நாயை தத்தெடுப்பதாக இருந்தால், அதை அதன் வாழ்நாள் முழுவதும் மிகவும் அக்கறையுடன் பாதுகாத்து வளர்க்கவேண்டும். சில மோசமான மனிதர்கள் மட்டுமே அவர்களது வளர்ப்பு பிராணியை வீடு மாற்றும் போதோ அல்லது அந்த வளர்ப்பு பிராணிக்கு வயதாகும் போதோ தெருவில் அனாதையாக விட்டு செல்கின்றனர்.

 

பூனை பூனையின் வாலில் தகர டப்பியை கட்டுவதும் மேலும் பூனையின் மீது கல்லை எரிவதும் மிகவும் கொடுமையான செயல். மனிதர்கள் எருதுகளிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். அவைகளுக்கு வேலை வாங்கும் அளவுக்கு சரியான உணவு, நீர் கொடுப்பதில்லை. மேலும் கூர்மையான பொருட்களால் அடித்து துன்புறுத்துகின்றனர். எருதுகள் பாரத்தை சுமக்க முடியாமல் போனால் அவைகளை மாமிசத்திற்காக விற்றுவிடுகின்றனர்.யின் வாலில்

கோழி, கூண்டில் அடைக்கப்பட்டு, காலம் முழுவதும் கம்பியின் மீது நின்று வாழும் நிலையில் உள்ளது. மேலும் சிலர் கோழிகளின் கால்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு மிதிவண்டியில் எடுத்து செல்கின்றனர். அவற்றின் சிறகுகள் மிதிவண்டியின் சக்கரத்தில் பட்டு வெட்டப்படுகிறது. இவையெல்லாம் சட்டத்திற்கு எதிரான மற்றும் மிகவும் கொடுமையான செயலாகும். கோழிகளை கூடையில் வைத்து எடுத்து செல்வதுதான் பாதுகாப்பானதாகும்.

பல பந்தயங்களில் வெற்றி பெற்ற குதிரையை, வயதானவுடன் குதிரை வண்டி ஓட்டுபவரிடம் விற்று விட்டனர். பின்பு இந்த குதிரைக்கு மிகக்குறைந்த உணவும் நீரும் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

விலங்குகளை உணவுக்காக இடமாற்றம் செய்யும் பொழுது வாகனங்களில் அவைகளை ஒன்றின் மேல் ஒன்றாக நிறுத்தி, கால்கள், கொம்புகள் உடையும் அளவிற்கு நீர், உணவு இல்லாமல் அடைக்கப்படுகின்றன. விலங்குகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்படுகிறது. இரத்தம் சிந்தி வலியுடன் அவைகள் மெல்ல மெல்ல உயிரிழக்கின்றன.

நாம் மாமிசம் உண்பதாலும் விலங்குகளின் பொருட்களை பயன்படுத்துவதாலும் அவற்றின் துன்பத்திற்கு காரணமாகின்றோம். எனவே நாம் மாமிசம் உண்ணாமல் விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்போமானால் விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்க முடியும்.

விலங்குகளை பாதுகாக்க பல அமைப்புகள் செயல்படுகின்றன. புளூ கிராஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு விலங்குகளை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளது. ரெட் கிராஸ் என்ற அமைப்பு மனித நலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிசிஏ – விலங்கு வதை தடுப்பு சங்கம்

பிஎஃப்ஏ - விலங்குகளுக்காக நாம்

மற்றும் பல அமைப்புகள் உள்ளன.

வெள்ளை நிற சதுரத்திற்குள் பச்சை நிற வட்டம் கொண்ட குறியீடு ஒரு உணவுப் பொருளின் மீது இருக்குமானால் அது சைவ உணவாகும்.

விலங்குகளை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன.

அதை விலங்குவதை தடுப்பு சட்டம் (1960) என்று அழைக்கிறோம்.

மனிதர்களும் ஒரு சமூக விலங்குகள் தான்.

விலங்குகளிடம் அன்பாக இருங்கள்

இந்த உலகம் அவர்களுக்காகவும்தான்.

ஆதார்ம். சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

Filed under:
2.94117647059
mithran Mar 31, 2020 09:54 AM

மனிதனை நேசிக்காத மனிதன் விலங்குகளிடம் நிறைய கயிற்றுக்கொள்ளவேண்டு ம்

rajkumar Nov 08, 2014 12:29 AM

good

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top