பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பேரழிவுகள் / நிலநடுக்கம் - புதிய தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிலநடுக்கம் - புதிய தொழில்நுட்பம்

நிலநடுக்கத்திலிருந்து தப்பிக்க கண்டறியப்பட்ட புதிய தொழில்நுட்பம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வீடுகளைக் கட்ட நாம் தேர்ந்தெடுக்கும் நிலம் உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் எந்த நிலமுமே உறுதியானதல்ல. கொதிநீருக்கு மேல் உள்ள திடப்பொருள் போலதான் நிலம் இருக்கிறது. (நிலத்தைத் தோண்டினால் தண்ணீர் வருகிறது என்பதையும் பூமியின் நடுப்பகுதி சூடான நீர்க் குழம்பினால் ஆனது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.)

நிலநடுக்கத்துக்குத் தாக்குப் பிடிக்கும் ஒரு புதிய அறிவியல் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் நிலநடுக்கம் ஏன் உண்டாகிறது என்பதற்கான ஒரு முக்கியக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

திரவம் வெப்பத்தைக் கடத்துவதற்கும், ஒரு திடப்பொருள் வெப்பத்தைக் கடத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. உலோகத்தின் ஒரு முனையைத் தீயில் காட்டினால் அந்த வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக மறுமுனையை அடையும். தீயில் உள்ள முனைதான் அதிக வெப்பத்துடன் இருக்கும்.

நிலநடுக்கம் ஏன் உண்டாகிறது

 • வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை வெப்பப்படுத்தும்போது நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். மேலாக இருக்கும் தண்ணீர் சற்று அதிக வெப்பத்துடன் இருக்கும். ஏனென்றால் தண்ணீரில் வெப்பம் பரவுவது ‘கன்வெக் ஷன்’ என்ற முறையில். அதாவது கீழே வெப்பமாக இருக்கும் தண்ணீர் மேலெழும்பும். பிறகு மேலே உள்ள தண்ணீர் கீழே வரும். இந்த முறையில்தான் மாறித் மாறி திரவத்தின் வெப்பம் அதிகமாகிறது.
 • பூமிக்கு அடியிலுள்ள தண்ணீர்க் குழம்பு சின்னச் சின்னப் பாறை வடிவில் உள்ளன. இவை ஒன்றை ஒன்று அழுத்தும்போது சில சமயம் சக்தி வெளிப்படும். இந்தச் சக்தி வெளிப்படும்போது அந்தப் பாறைகள் தங்கள் இருப்பிடத்தைச் சரி செய்து கொள்ளும். இந்தச் சமயத்தில் நிலத்தில் அதிர்ச்சிகள் உண்டாகின்றன. இவை அதிகமாகும்போது அதை நிலநடுக்கமாக நாம் உணர்கிறோம்.
 • இந்த அதிர்ச்சி அலைகள் இரண்டு விதமானவை. ஒன்று, மேலும் கீழுமானவை. இரண்டு, பக்கவாட்டில் அசைபவை. இவற்றில் இரண்டாவது வகைதான் அதிக ஆபத்தானவை. (எளிமையாகச் சொல்வதானால் கட்டிடமே கொஞ்சம் மேலெழும்பி மீண்டும் பழைய நிலைக்கு வருவதைவிடக் கட்டிடம் பக்கவாட்டில் பிளவு பட்டால் அது மேலும் விபரீதம்தானே!). இரண்டாவது வகை அதிர்ச்சி அலைகளால் கட்டிடத்தின் புவிஈர்ப்பு மையம் மாறக் கூடும். இதன் காரணமாகக் கட்டிடம் இடிந்து விழும்.
 • அஸ்திவாரம் அசைவதால்தானே நிலநடுக்கம் ஏற்படுகிறது? கட்டிடத்தின் அஸ்திவாரப் பகுதியும், பூமியும் இணைக்கப்படாமல் இருந்தால் நில நடுக்கம் ஏற்படும்போது கட்டிடங்கள் தப்பித்துவிடுமே! முதலில் கேட்பதற்கு அபத்தமாக இருந்தாலும் இந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

நிலநடுக்கம் தாங்கும் கட்டிடத் தொழில்நுட்பம்

 • கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு படுகையை நிலைநிறுத்துகிறார்கள். ரப்பர், எஃகு என்று அது மாறி மாறி அமைந்திருக்கிறது இந்தப் படலம். இதனால் நிலநடுக்கத்தின்போது ரப்பர் படலங்கள் அசைந்து கொடுக்க, கட்டிடங்கள் தப்பிக்கின்றன (ஆனால் இதெல்லாம் லேசான நிலநடுக்கங்களுக்குதான் உதவும்).
 • பின் ஜப்பானியப் பொறியாளர்கள் ரப்பருக்குப் பதிலாக வேறொன்றை முயன்றார்கள். அது காற்று! ஒரு காற்றுப் படலத்தின்மேல் கட்டிடம் எழுப்பப்பட்டால் நிலநடுக்கத்தின்போது அந்தக் கட்டிடம் பாதுகாப்பாகத்தானே இருக்கும்? நிலநடுக்கத்தின்போது இந்தக் காற்றுப் படலம் கட்டிடத்தை சுமார் 3 சென்டி மீட்டர் அளவுக்கு உயர்த்துகிறது. பின் நிலநடுக்கம் குறைந்தவுடன் கம்ப்ரஸர் தானாக ஆஃப் ஆகிறது. கட்டிடம் மீண்டும் பழைய நிலையில் உட்கார்ந்து கொள்கிறது. ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது இந்தத் தொழில்நுட்பம்.
 • ஸ்டார்ன்ஃபோர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில பொறியாளர்கள் சமீபத்தில் வேறொரு ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள். ‘நடுக்கக் குறைப்பான்களை’ (Vibration Dampers) உருவாக்கியிருக்கிறார்கள். இவை அதிர்ச்சிகளைத் தங்களுக்குள் உள்வாங்கிக் கொள்கின்றன.
 • அதாவது கட்டிடம் ஆடும்போது இவை அந்தச் சக்தியை உறிஞ்சிக் கொண்டு எதிர்த்திசையில் செயல்படுகின்றன. எந்தத் திசையிலும் சுமார் 5 அடிவரை இவற்றால் செயல்பட முடியுமாம். ஆனால் இவற்றை (குறைந்தபட்சம் இப்போதைக்கு) எல்லாராலும் பயன்படுத்த முடியாது. காரணம் இதன் விலை மிக மிக அதிகம். எனவே வானுயர் ஸ்பெஷல் கட்டிடங்களுக்குதான் இவை பொருத்தப்பட உள்ன.

இந்தத் தொழில்நுட்பத்தை எப்படிச் செயல்படுத்துகிறார்கள்.

 • இதில் கட்டிடம் அஸ்திவாரத்திலிருந்து எழும்புவதில்லை.
 • அது சுமார் ஒரு டஜன் எஃகு மற்றும் பிளாஸ்டிக் பகுதிகளின்மீது இணைக்கப்படுகிறது.
 • அசையும் தன்மை கொண்ட இவை ஒவ்வொன்றும் சுமார் நாலரை அங்குலம் விட்டம் கொண்டவை.
 • அதே சமயம் கட்டிடமும் மேலும் உறுதியானதாகக் கட்டப்படுகிறது.

ஆதாரம் : தி-ஹிந்து தமிழ் நாளிதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top