பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பேரழிவு மேலாண்மை

மனிதனால் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த இயலாது. பேரழிவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் பேரழிவுகள் மதிப்பீடு மற்றும் கூட்டு உதவி அமைப்பு

பேரழிவில் சிக்கித்தவிக்கும் நாடுகளின் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வமைப்பு அழிவின் விளைவுகளைத் துரித கணிப்பு செய்வதோடு, சர்வதேச அளிவில் என்னென்ன உதவிகள் பெறலாம் என்பதையும் அக்குறிப்பிட்ட நாடுகளின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றன.

சர்வதேச பேரழிவுகள் குறைப்பு மற்றும் திட்டமிடுதல்

இது உலகளவில், பேரிடர் மேலாண்மை செயல்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பாகும். இதன் தலைமையகம் ஜெனிவாவில் உள்ள பாலேஸ் டெஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

1990-2000க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகள் சர்வதேச பேரழிவுகள் குறைப்பு வருடங்களாக ஐ.நா. அமைப்பினால் அனுசரிக்கப்பட்டது.

யோஹகாமா பேரழிவுகள் குறைப்பு மற்றும் திட்டமிட்ட செயல்முறைகள்: இது தேசிய அளவிலான இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு, ஆயத்த நடவடிக்கைகள் பற்றியது.

2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பான் நாட்டிலுள்ள கோபே என்னும் இடத்தில் உலகப் பேரழிவுகள் குறைப்பு மாநாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைப்பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள்

 • தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
 • அவசர சேவை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • பேரிடர் மேலாண்மை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • தேசிய பேரழிவு அவசர சேவை நிதியம் மற்றும் பேரழிவு நிவாரண உதவி நிதியம் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ளது.
 • பத்தாவது ஐந்தாண்டு திட்ட வரைவில் பேரழிவு மேலாண்மை குறித்த பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
 • பேரழிவு மேலாண்மை குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
 • பேரழிவு மேலாண்மை குறித்த தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
 • பேரழிவு மேலாண்மை சட்டம், 2005 வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேரழிவு அமைச்சகம்

 • இயற்கை பேரழிவுகள்,  உள்துறை
 • வறட்சி நிவாரணம்,  விவசாயம்
 • விமான விபத்துகள், விமான போக்குவரத்து
 • ரயில் விபத்துகள், ரயில்வே
 • இரசாயனம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்
 • உயிரியல், சுகாதாரம்
 • அணுசக்தி, அணு ஆற்றல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 • பேரழிவைக் சமாளித்தல்: பேரழிவின் விளைவுகளை சமாளிக்கும் / எதிர்கொள்ளும் வகையில் சமுதாயத்தை தயார் நிலையில் வைத்திருத்தல்.
 • பேரழிவு முன்னேற்பாடு: பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் மீட்புப்பணியில் திட்டமிட்ட செயலாக்கம்.

அவசர மீட்புப் பணிகள்:

 • பேரழிவுகள் ஏற்படும் முன்னரும், அந்நிகழ்வின் போதும் மேற்கொள்ளப்படும் இப்பணி கீழ்கண்ட செயல்பாடுகளைக் கொண்டது.
 • அபாயத்தை எதிர் நோக்கியுள்ள பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல்.
 • அவசர உதவிப் பணிகள் செய்தல்.
 • அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளைச் சந்தித்தல்.

பேரழிவுகளுக்குப் பிந்தைய செயல்பாடுகள்

எந்த பேரழிவின் போதும் அவசரகால நடவடிக்கை மிகக் குறுகிய காலமே தேவை. ஆனால் அதற்கு பிந்தய காலகட்டமே மிக முக்கியமானது. இதனை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். அவை,

மறுவாழ்வு பணிகள்: அவசரகாலப் பணிகள் முடிவடையும் நிலையில் இப்பணிகள் தொடங்கப்படுகின்றன. இக்காலகட்டத்தில் மக்களும், பாதிப்படைந்த சமுதாயமும் மீண்டும் சகஜநிலைக்குத் திரும்பும் முயற்சியை மேற்கொள்கின்றன. உதாரணமாக, நகரப்பகுதிகளில் மீண்டும் துவங்கும் குடிநீர் விநியோகம் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் சீரமைப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மறுகட்டுமானப் பணிகள்: சேதமடைந்த கட்டிட பாகங்களை அப்புறப்படுத்துதல், விவசாயப் பணிகளை சீரமைத்தல், வியாபாரம் மற்றும் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குதல் போன்றவை இந்நிலையில் அடங்கும்.

பேரழிவுகளை எதிர்கொள்ளுதல்

அரசாங்க உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்தடைய தாமதம் ஏற்படுதல் பேரழிவின் தீவிரத்தன்மையே காரணமாக அமையலாம். ஆதலால் சமுதாயம், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் தனி நபர்களின் பங்களிப்பு பேரழிவுகள் மேலாண்மையில் மிக முக்கியமானதாகும். அவற்றில் சில பின்வருமாறு:

 • வெவ்வேறு பேரழிவுகள் மற்றும் நம் வசிப்பிடங்களில் அவற்றின் தாக்கத்தின் தன்மை ஆகியவற்றை பற்றி அறிந்து வைத்திருத்தல்.
 • அவசரகால திட்டம் அமைத்து வைத்திருத்தல்.
 • குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து பேரழிவுகளின் போது செய்யத் தகுந்த மற்றும் தகாத காரியங்களை குறித்து விவாதித்தல்.

ஆபத்துப் பகுதிகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்போது செய்ய வேண்டிய காரியங்கள்:

 • முதலுதவி, நெருப்பை அணைத்தல் போன்ற சிறிய பயிற்சிகளை தெரிந்துகொள்ளுதல்.
 • அவசர காலங்களில் நாம் இருக்கும் இடங்களிலிருந்து தப்பிச் செல்லும் வழிமுறைகளை அறிந்து வைத்திருத்தல்.
 • அத்தியாவசியமான பொருட்கள் கொண்ட "அவசரகால தேவை பெட்டி" ஒன்றை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருத்தல்.
 • அதிகாரப்பூர்வ அறிவுப்புக்களின்படி உடனடியாக செயல்படுதல்.
 • அவசர உதவி மையங்களின் தொலைபேசி எண்களை ஞாபகத்தில் வைத்திருத்தல்.
 • பதற்றம் இல்லாமல் அமைதியாக இருத்தல்.

சில அவசர உதவிப் பிரிவுகளின் எண்கள்

காவல் துறை - 100

தீயணைப்பு துறை - 101

ஆம்புலன்ஸ் - 102

அவசரகால தேவை பெட்டி

 • அவசரத் தேவைப் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் வைத்திருத்தல்.
 • முதலுதவிப் பெட்டி (பஞ்சு, காயக்கட்டு துணி, சோப்பு மருந்துகள், வீக்கம் மற்றும் சீழ் உருவாவதை தடுக்கும் க்ரீம்கள்)
 • டார்ச் லைட், பேட்டரி
 • சிறிய வானொலி
 • நீர்புகாப்பெட்டிகளுள்ள தீக்குச்சிகள்
 • குடிநீர்
 • உடனடியாக கெடாத உணவுப் பொருட்கள்
 • ஆடைகள்
 • போர்வை/துண்டு
 • பற்பசை, பிரஷ், சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள்
 • கத்தி, பிளேடு, குப்பிகளை திறக்க உதவும் சாவி

இயற்கை

இயற்கையைக் கட்டுப்படுத்த மனிதனால் இயலாது. அழிவுகளும், அபாயங்களும் எந்நேரத்திலும் நிகழக்கூடியவை. இவற்றை நாம் அணுகும் முறைகளே பேரழிவிலிருந்து நம்மைக் காக்கும். எப்பொழுதும் தயாராகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருத்தல் அவசியம். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையே நம்மை பேரழிவுகளிருந்து காக்கும் மிகச் சிறந்த வழி. மனிதன் இயற்கையின் ஒரு பகுதியே. இயற்கையை கட்டுப்படுத்த நினைப்பது அழிவின் ஆரம்பம்.

இயற்கையை மதித்து நடக்க வேண்டுமென்பதே பேரழிவுகள் நமக்கு கற்பிக்கும் பாடம்.

தொடர்புடைய வலையதளங்கள்

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்.

2.87234042553
joy Oct 24, 2016 06:46 PM

வெரி குட்

சாந்தக்குமார் Jun 16, 2016 08:12 AM

போட்டித் தேர்வுக்கு பயனுள்ள குறிப்புகள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top