பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒலி மாசு

ஒலி மாசு பற்றிய குறிப்புகள்

வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது நல்ல காற்று, குடிதண்ணீர் இருப்பிடம் ஆகியவற்றோடு. அமைதியும் முக்கியம். இனிய ஓசையாகவே இருக்க வேண்டும்.

ஒலி பெருக்கி மிதமான அளவுடன் செயல்பட்டால் இனிமையாகக் கேட்கலாம். அதேநேரம் ஒலி பெருக்கியின் சத்தம் அளவுக்கு மிஞ்சும்போது இரைச்சலாக மாறிவிடுகிறது நம்மால் எதுவும் கேட்க இயலாது.

ஒலி மாசு உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதனை உணராவிட்டால் உடல் உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாக இருக்கலாம்.

வெளிப்படும் மிதமிஞ்சிய ஒலிகளால் மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறது என்பதை அறியாமல்  இளைஞர்களின் விருப்பம் இதில் மோசமாக உள்ளது.

அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தில் மின்னனு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்

ஆனால் ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மைடையது என்பதனை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

செவியால் 120 டெசிபல் மேலான அதிர்வுகளைக் கேட்க முடியாது. அளவு அதிகரித்தால் செவி பாதிக்கப்படும்.

நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கி மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதனை பார்க்கலாம்.

இதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில் அவர்கள் செவித்திறன் பாதிக்கப்படும்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

ஒலி மாசைக்கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின் போதும் வெளியாகும் ஒலியின் அளவு அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதிற்கு உட்பட்டோர்) ஒலி மாசு காரணமாக கேட்புத்திறன் இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பலரும் காது, இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத்தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும் 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சலால் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புலன் அயர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் 1000 பேருக்கு 35 பேர் எனும் வீதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் 10 வீதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவீதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை குறைவாக ஒலியும் மூளையின் முக்கிய மையங்களை பாதித்து இயல்பான உறக்கத்தை குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் அதிக ஒலியையோ எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர் இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே இரைச்சலை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்

ஒலி மாசில் வாகன ஒலிப்பான்கள் பெரும் பங்கு கொள்கின்றன

பறவை இனங்கள் அமைதியின்மை காரணமாக அழியத் தொடங்கிவிட்டன

வாகனங்கள் , தொழிற்சாலைப் பகுதிகளில் 75 டெசிபலுக்கும் வர்த்தக பகுதிகளில் 65 டெசிபலுக்கும் குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபலுக்கும் மேல் ஒலி எழுப்பக்கூடாது என்றும், மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலிருந்து 100 மீட்டர்கள் வரை அமைதியிடங்களாக அறிவிக்கப்படுகிறது. ஆகவே இவைகளை மக்கள் கடைப் பிடித்தால் ஒலி 'மாசு' ஏற்படாது. 

ஒலி 'மாசு' அடைவதை தடுப்பதற்கான செயலில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

3.04347826087
s.ravi sankar Jun 09, 2015 04:06 PM

"வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது நல்ல காற்று, குடிதண்ணீர் இருப்பிடம் ஆகியவற்றோடு. அமைதியும் முக்கியம். ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாக இருக்கலாம்" என்ற ஆசிரியரின் வரிகள் அபாரம் .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top