பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒலி மாசுபாடு

ஒலி மாசுபாடு பற்றிய குறிப்புகள்

ஒரு கண்ணோட்டம்

இந்த குறிப்பிட்ட ஒலி மாசுபாடானது, தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் அதிக பயன்பாட்டால் ஏற்படும் மிகையான சத்தமாகும். நாம் ஒவ்வொரு நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் சப்தங்களை எழுப்புகிறோம். இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.

டெசிபல் முறையின் ஒலியின் அளவானது அளவீடப்படுகிறது. டெசிபல் - 10 ல் ஒன்று ஒரு பெல்லாகும். அதாவது ஒரு பெல் இரண்டு திண்ணத்திற்கு இடையேயுள்ள வேறுபாடாகும் (1,10). ஒரு பெல் மற்றொன்றை விட பத்துமடங்கு பெரியதாகும். திண்ணத்தின் அளவானது இரண்டு வெவ்வேறு திண்ணத்தின் ஒப்பீடாகும். அதாவது திண்ணத்தின் அளவு - 10 log10 (1/10) (dB) உதாரணமாக இரண்டு செறிவுகளான 10.8 வாட்ஸ் / மீட்டர்2 மற்றும் 10.4 வாட்ஸ் / மீட்டர்2 இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு 10,000 யூனிட்களாகும். இதனை 4 பெல்கள் அல்லது 40 டெசிபல்கள் என்றும் கூறலாம்.

ஒலியினால் ஏற்படும் டெசிபலின் அளவு

கேட்பதின் ஆரம்ப நிலை

0 dB

மோட்டார் சைக்கிள் (30அடி)

88 dB

சலசலவென ஒலி

20 dB

உணவு அரைக்கும் கருவி (3அடி)

90 dB

சிறிய முணுமுணுப்பு (3அடி)

30 dB

பாதாளத் தொடர்

94 dB

இரைச்சலற்ற வீடு

40 dB

டீசல் வண்டி (30அடி)

100 dB

இரைச்சலற்ற தெரு

50 dB

அறுவடை இயந்திரம் (3அடி)

107 dB

சாதாரண உரையாடல்

60 dB

காற்றழுத்த முறையில் இயங்கும் கடாவு ஆணி (3அடி)

115 dB

காரின் உள்ளே

70 dB

சங்கிலி ரம்பம் (3அடி)

117 dB

சப்தத்துடன் பாட்டு (3அடி)

75 dB

அதிக சத்தத்துடன் கூடிய நடனம்

120 dB

மோட்டார் வண்டி (25அடி)

80 dB

ஜெட் விமானம் (100அடி)

130 dB

மற்ற ஒலி அளவீடுகள்

 • சமூக மக்கள் ஒலியின் சமமான / நிகரான நிலை
 • கலவையான ஒலியின் விகிதம்
 • சமமான ஆற்றல் அளவு
 • ஒலி மற்றும் அதன் எண்ணிக்கையின் அட்டவணை
 • ஒலி கதிர்வீச்சின் முன்கணிப்பு
 • ஒலி அலகு
 • ஒலி நிலை
 • ஒலி மாசுபாடு நிலை
 • ஒலி விகிதம்
 • உணர்ந்து கொள்ளும் ஒலியின் நிலை
 • போக்குவரத்து ஒலியின் அட்டவணை
 • சப்தத்தின் அளவு (இரைச்சலின் அளவு)
 • சப்தத்தின் அளவு மீட்டர்
 • சப்த அழுத்த அளவு
 • உலக ஒலி செல்லும் திட்டம்

ஆதாரங்கள் மற்றும் முறைகள்

ஒலி மாசுவிற்கு கீழ்கண்ட பிரிவுகள் மிக முக்கியமான ஆதாரங்களாகும்.

 • சாலை போக்குவரத்து இரைச்சல்
 • விமான இரைச்சல்
 • இரயில் இரைச்சல்
 • அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி
 • ஏற்றதற்ற நிலத்தின் பயன்பாடு
 • தொழிற்சாலை இரைச்சல்

ஒலி மாசுபாட்டின் விளைவு

 • தென்னாப்பிரிக்காவின் ஜோகானஸ் பேர்க் பகுதியானது, இடஅமைப்பு மற்றும் அதிகமாகிவரும் கட்டிடம் போன்றவற்றின் இரைச்சலினால் பெரிதும் பாதித்துள்ளது. மேலும் காலை நிலையையும் அதாவது குளிர் காலத்தில் தட்பவெப்பநிலையானது நேர்தலைகீழாக மாறுகிறது (வால்ஸ்லி, 1997).
 • வாழ்வியல் / உடலியல் சார்ந்த விளைவு
 • அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறனின் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்பட்டு திறனை இழந்துவிடுகின்றனர்.

உளவியல் சார்ந்த விளைவு

ஒலி / இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் மற்றும் பொருத்து பழகிக் கொள்ளும் தன்மைகள் இருந்தாலும் அதிகமான தாக்கத்தின் போது செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற பகுதிகள் மற்றும் இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் தாக்குகிறது.இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்

தொடர்பு (தகவல் தொடர்பு)

ஒலி அளவின் தலையீட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உற்பத்தியில் இழப்பீடு ஏற்படுகிறது.

சோர்வு மற்றும் தலைவலி

ஏற்றுக்கொள்ளதக்காத இரைச்சல் அல்லது ஒலியினால் மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.

தொழில்ரீதியான இரைச்சல்

தொழில் சம்பந்தப்பட்ட இரைச்சலினால் சோர்வு, தலைவலி, உற்பத்தியில் இழப்பு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் போன்றவை ஏற்படுகின்றது. இதன் விளைவானது பாதிக்கப்படும் மனிதனின் வயது, பாலினம் மற்றும் கேட்கப்படும் திறனின் காலம் போன்றவற்றை பொருத்து அமைகிறது.

போக்குவரத்து

மோட்டார் வண்டிகள், பேருந்துகள், இரயில் வண்டி மற்றும் விமானம் போன்றவற்றின் இரைச்சல் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்றது. அதிக நகர மக்கள் இருக்கும் இடங்களில், இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இது கட்டுப்படுத்த முடியாத அதிக இரைச்சல் சப்தத்துடன் மற்றும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். இரயில் வண்டி இயக்கம் அதிகமுள்ள சுற்றுப்புற குடியிருப்புகளில் ஒலியின் அளவானது 80-100 டெசிபல் மற்றும் மூன்று அடுக்கு குடியிருப்பின் திறந்த வெளியில் 90 டெசிபலாகும் பதிவாகிறது.

சமூக இரைச்சல்

அதிக இரைச்சலினால் தலைவலி, எரிச்சல், குழப்பம் போன்றவை ஒலி மாசுபட்டால் ஏற்படுகிறது. இந்த நிலையானது கடந்த 20 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. சமூக இரைச்சலுக்கு கீழே கொடுக்கப்பட்ட ஆய்வுகள் ஆதாரமாகும்.

வார்ட் & சுட்வெல்ட், 1973

மனவழுத்தம், நிலையற்ற தன்மை மற்றும் அதிவேகமான பேச்சு

டேமன், 1977

சுற்றுவட்டப்பகுதியில் சுமூக வாழ்க்கை நிலை பாதித்தல்

ஆப்பிள்யார்டு & லின்டெல், 1972

அக்கம் பக்கத்து வீடுகளில் சமூக உறவு குறைவு

கொஹென், எவன்ட், கிரான்ட்ஸ் & ஸ்டெகோல்ஸ், 1980

பள்ளி சம்பந்தமான செயல் திறன் குறைதல்

கொஹென் மற்றும் சிலர் வீட்ச் 1996

உயர் இரத்த அழுத்தம்
18-19 வயதுடையவர்களில் 60 சதவிகித மக்களின் கேட்கும் திறன் குறைதல்

அய்ரிஸ் & ஹீக்ஸ், 1986

உரத்த இசையால், மனிதனின் ஒருமுகப்படுத்திய தீவிரத்தின் தன்மையில் பாதிப்பு

தைய்கன், 1988

உறக்கம் புறக்கணிப்பு

ஒலி மாசுக்கட்டுப்பாடுபாதுகாப்பு

அலுவலகங்களில் இரைச்சல் ஏற்படுத்தும் கதவுகள், மதில், மேல் முகப்பு போன்றவற்றின் தொந்தரவை தடுப்பதற்கான வழியை கையாளுதல்

 • திரையரங்கு மற்றும் சினிமா போன்றவற்றில் ஏற்படும் எதிரொலியை தடுக்க கடத்தாப் பொருட்களின் பயன்பாடு
 • தொழிற்சாலையில் வேலை செய்யும் வேலையாட்களை பாதுகாக்க காதுகளில் பொருத்தப்படும் ஒரு கருவியின் பயன்பாடு
 • நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நகர குடியிருப்புகளில் கட்டமைப்பானது ஒலித்தடையை கொண்டு அமைப்பதால் போக்குவரத்து வாகனங்களின் இரைச்சலை குறைக்கலாம்

தாவர வளர்ப்பு

 • ஒலி மாசுபாட்டினை உட்கிரகிக்கவும், தடுக்கவும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதி போன்றவற்றை பசுமை நகரமாக மாற்றுவது

பகுதிகளாக பிரிப்பு

 • குடியிருக்க தகுதியான பகுதிகளாக நகர பகுதிகளை பிரித்து மறுகட்டமைப்பு செய்வது
 • அருகிலிருக்கும் கட்டங்களை பொருத்து தொழிற்சாலை ஒழுங்கான மேம்பாட்டு கூட்டடைப்புடன் பிரித்தல்

  ஆதாரம் :தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

   

Filed under:
3.02739726027
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
DR.B.RAMMANOHAR Feb 20, 2015 09:03 PM

நல்ல கருத்துகள் ! மிக அவசியமான பகுதி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top