பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / வீட்டு சுற்றுச்சூழல் / வீட்டு பராமரிப்புக்கு எளிய குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீட்டு பராமரிப்புக்கு எளிய குறிப்புகள்

வீட்டை பராமரிக்க சில குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

நோக்கம்

வீட்டில் எந்த பொருளையும் அதற்குரிய இடத்தில் வைப்பதோடு சரியாக பராமரித்து வருவதும் முக்கியம். பொருள் சிறியது அல்லது பெரியது என்ற வித்தியாசம் பார்க்காமல் பராமரித்து வந்தால்தான் பயன்படுத்தக்கூடிய காலமும் அதிகரிக்கும். கட்டிடத்தின் சுவர்கள், தரைகள், கூரைகள் ஆகியவை மட்டுமே வீடாக மாறிவிடாது. தலை வாசலில் இருந்து பின்புற தோட்டம் வரையில் உள்ள எல்லாவித பொருட்களும் சேர்ந்துதான் வீடாக மாற்றம் பெறுகிறது.

அவற்றை சரியாகவும் முறையாகவும் பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் பொருட்கள் தன்மை மாற்றமடைந்து அவற்றின் பயன்கள் குறையக்கூடிய நிலை ஏற்பட்டு விடும். அதனால் வீட்டு பராமரிப்பில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே அக்கறை செலுத்துவது அவசியமாகிறது. வீட்டில் இருக்கும் பொருட்களை பராமரிக்கும் ‘ஹவுஸ் கீப்பிங்’ முறைப்படி சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.

சோபாக்கள் பராமரிப்பு

  1. துணியால் அமைக்கப்பட்ட சோபாக்களை விடவும் ‘லெதர்’ சோபாக்கள் அதிகமாக வெப்பத்தை வெளிப்படுத்தும் தன்மை பெற்றவை. அதனால் வீடுகளில் இருக்கும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில் அல்லது ஹால்களில் பயன்படுத்துவதே சிறந்தது. குளிர் சாதன வசதி இல்லாத இடங்களில் ‘லெதர்’ சோபாக்களை பயன்படுத்துவது நன்மை தராது.
  2. பகலில் அல்லது இரவில் உறங்குவதற்காக ‘லெதர்’ சோபாக்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படி உறங்குவது உடலின் வெப்ப நிலையை அதிகமாக்கி விடும்.
  3. கண்ணை கவரும் அழகிய வண்ணத்தோடு இருக்கிறது என்பதற்காக நான்கு புறமும் சிறிய அளவிலான கால்கள் இல்லாமல் தரையோடு ஒட்டியுள்ள மாடலில் இருக்கும் சோபாக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதன் அடிப்புறம் சேரும் குப்பை கூளங்களை சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும்.
  4. எந்த இடத்தில் சோபாவை போடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இடத்தின் அளவுக்கு தகுந்த பொருத்தமான சோபாக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அழகாக இருக்கும். சிறிய ஹாலில் பெரிய சோபாவை போட்டால் பொருத்தமாக இருக்குமா..?  மூவர் அமரக்கூடிய மரத்தாலான சோபாவின் இடத்தை விடவும் இரண்டு மடங்கு இடத்தை லெதர் சோபா அடைத்துக் கொள்ளும். அதனால் சரியான தேர்வு அவசியம்.

கண்ணாடி ஜன்னல் பராமரிப்பு

  1. கண்ணாடிகளை துடைக்கும்போது அதிலிருக்கும் ‘பெயிண்ட் டிசைன்கள்’ பாதிப்படையாதபடி ‘வினிகர்’ கலக்கப்பட்ட தண்ணீரில் ‘ஸ்பாஞ்சை’ நனைத்து சுத்தம் செய்யலாம். அதிகப்படியான தண்ணீர் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு இருக்காது துடைப்பது அவசியம். அப்போதுதான் அறை வெளிச்சமாக தெரியும்.
  2. நேரடியாக வெயில் படும்போது ஜன்னல் கண்ணாடிகளை துடைப்பது சரியான முறையல்ல. சூரிய வெளிச்சம் தூசிகளை கண்டறிய உதவினாலும் ஈரம் உடனே காய்ந்து விடுவதால் துடைத்த இடம் கோடுகளாக தெரியும்.
  3. ‘அலுமினிய பீடிங்குகள்’, ஜன்னலை திறக்க உதவும் அமைப்புகள், கண்ணாடி ஒட்டப்பட்ட ‘பேஸ்ட்’ தன்மை எவ்வாறு இருக்கிறது என்று மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
  4. ‘போராக்ஸ் பவுடர்’ கலந்த தண்ணீர் அல்லது ‘அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு’ திரவம் கொண்டு கலக்கப்பட்ட தண்ணீர் கொண்டு கண்ணாடிகளை சுத்தம் செய்தால் அவை ‘பளபளவென’ மின்னும்

ஆதாரம் : தினத்தந்தி

2.89473684211
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top