பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உலகம் வெப்பமயமாதல்

உலகம் வெப்பமயமாதல் பற்றி இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது.

உலகம் வெப்பமயமாதல் - விளக்கம்

உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.

உலகம் வெப்பமயமாதலின் காரணங்கள்

 1. அதிக பயன்பாட்டில் உள்ள தொல்லுயிர் எச்சஎரிபொருள்
 2. அதிக பயன்பாட்டிலுள்ள தொல்லுயிர் எச்சஎரிபொருட்கள் வெளியேற்றும் அதிக அளவ பசுமைகுடிால் வாயுக்கள், அதிலும் கார்பன்டைஆக்ஸைடு
 3. காட்டழிப்பு நகராக்கம் - அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால், பயன்பாட்டில் உள்ள நிலங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த செயலால் பல்வேறு பகுதிகளில் வனப்பகுதிகளை அழிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால், சுற்றுப்புற்சசூழலின் கார்பன்டைஆக்ஸைடின் பக்களிப்பு அதிகரிக்கிறது
 4. மின்பொருளில் குளோரோஃபுளோரோ கார்பனின் பயன்பாடு -CFC அல்லது குளோரோஃபுளோரோ கார்பன் என்பது ஒரு வாயு. இது வாயுமண்டலத்திலுள்ள ஒசோனை (O3) குறைக்கிறது. இதனால் ஒசோன் தளர்வு ஏற்பட்டு சூரிய கதிர்வீச்சின் அளவானது அதிகரிக்கிறது.
 5. வெளிபுறத்தில் எரிக்கப்படும் குப்பை -உலகளவில் வெளிப்புறமாக எரிக்கப்படும் குப்பையிலிருந்து வெளியேற்றப்படும், பசுமைகுடில் வாயுக்கள்
 6. வாகனம் மற்றும் தொழிற்சாலை வெளியேற்றம்
 7. எரிமலை குமறல்

உலகம் வெப்பமயமாதலின் அறிகுறிகள்

 1. பூவியில் பனிக்கட்டியின் அமைப்பு உருகி கீழிறங்குதல் (அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் பனிக்கட்டி)
 2. ஆர்டிக் பகுதியில் புதரின் அதிகரிப்பு
 3. சூரியனிலிருந்து புவிக்கு வரும் வெப்பத்தினை திருப்பி அனுப்பும் தன்மை குறைந்துள்ளது. (நாசாவால் (NASA) கண்டறியப்பட்ட ஆராய்ச்சி). புவியின் வெண்எகிர்சிதறலானது 22.5 சதவீதம் குறைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, புவியிலிருந்து சூரிய வெளிச்சத்தை நிலாவிற்கு பிரதிபலிக்கும் தன்மை குறைந்துள்ளது.
 4. காற்று திசையில் மாறுபாடு

தாக்கம்

 • புயல் வானிநிலை (சூறாவளி, வெள்ளம், பலத்த புயல் காற்று மற்றும் புயல் காற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு)
 • வறட்சி, பசி மற்றும் நோய் பரப்பு போன்றவை அதிகரித்தல், குறிப்பாக ஏழை நாடுகளில்.
 • மழையின் காலம் மாறுபாடு அடையும் பொழுது, ஏரி மற்றம் குளங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படுவதால் நீர் நில வழிகள் அழிந்து வருகிறது.
 • பவளப் பாறையில் சேதம்
 • ஒசோனின் தட்ப வெப்பநிலை அதிகரிப்பு
 • கடல் சார் நோய்கள்
 • சூழ்நிலைமண்டல பெருமதிக்குறைவு
 • உயிரியற் பல்வகைமை சரிவு
 • பொருளாதார மற்றும் சமூக மந்தம்

எல் நினோ

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது.

லா நினா

எல்நினோவிற்கு எதிர்மறையானது லா நினா ஆகும். இது கிழக்கத்திய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை ஏற்படுத்துவதாகும். இதன் தாக்கத்தின் போது, பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டுவரும். இது பொதுவாக எல்நினோவிற்கு அடுத்ததாக வரும். லா நினாவின் அர்த்தம் “சிறு பெண்” ஆகும். எல் நினோவிற்கு எதிர்மறையாகும்.

ஒசோன் படலம்

ஒசோன் படலம், நமது வளிமண்டலத்தில் பாதுகாப்பு படலமாகும். (O3, மூன்று ஆக்ஸிஜன் அணு). புவி நிலப்பரப்பிலிருந்து இது 19-30கி.மீ இடைதொலைவில் உள்ளது. இந்தபடலமானது சூரியனிலிருந்து வரும் புறஊதாகதிர்களை தடுக்கிறது. இந்த ஒசோன் படலம் இல்லாமல் இருந்தால் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகயிருக்கும். இந்த உலகில் ஒருவரும் உயிர் வாழமுடியாதநிலை ஏற்படும். இந்த படலத்தில் நிலைப்பாடு 10ppm ஆகும். இந்த ஒசோன் படலமானது சூரியஒளியை ஆக்ஸிஜனாக மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அளவானது இருப்பிலிருக்கும் நைட்ரஜன் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒசோன் படலத்தில் தளர்வு காணப்படுகிறது. 1970ல் கண்டறியப்பட்ட குளோரோஃபுளோரோ கார்பன் ஒசோன் படலத்தை தாக்குகிறது. இந்த குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) குளிர்சாதனப்பெட்டி குளிர்விப்பான் மற்றும் காற்றில் மிதக்கும் தின்ம துகள்கள் தெளிப்பான் போன்றவற்றில் இருக்கிறது. நாம் இந்த சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும்போது புவியின் ஒசோன் படலத்தில் தளர்வு  ஏற்படுகிறது. எனினும் தற்போது வரும் பொருட்களில் CFC ஆனது இருப்பதில்லை. மேலும் இது மட்டுமல்லாமல், மற்ற பொருட்களான புரோமைன் ஹேலோகார்பன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் போன்றவையும் தாக்குகிறது.

ஓசோன் படல தளர்வின் விளைவு

 • அதிக புறஊதாகதிர்கள் புவியை வந்தடைதல் (இதனால் புவி சமையல் அடுப்பினை போல் இருக்கும்)
 • அதிக வெப்பத்தால் உலக வெப்பமயமாக்கலின் அபாயம் அதிகரிக்கிறது

ஒசோன் படலத்தை CFC எப்படி தளர்த்துகிறது?

 • மூலக்கூறில் ஒரு புளோரைன் அணு ஒரு கார்பன் அணு மற்றும் 3 குளோரின் அணுக்கள் உள்ளது. இது புறஊதா கதிரால் தாக்கப்படுகிறது.
 • இதில் ஒரு குளோரின் அணு உடைந்து ஒசோனை (O3) தாக்குகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு வெளியேறி குளோரின் மோனாக்ஸைடை உருவாகிறது. இந்த குளோரின் மோனாக்ஸைடு ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறினை வெளியேற்றுகிறது.

அமிலமழை

அமிலமழை என்பது மற்ற மழையை போல அல்லாமல் அதிக அளவு அமிலத்தன்மையுடைய ஒரு வகை மழையாகும். மழைநீரானது சிறிதளவு அமிலத்தன்மையையும் 5 மற்றும் 6 காரஅமிலநிலையையும் கொண்டுயிருக்கும். நீரானது வளிமண்டலத்தில் ஆவியாகி கார்பன்டைஆக்ஸைடு உடன் கலந்து ஒரு வாரத்தில் அமிலமாகமாறிகிறது. அமில மழையானது அதிக கார அமிலநிலையை கொண்டது. காற்று மாசுபடுத்திகளான சல்பர்டைஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் போன்றவற்றின் தாக்கத்தினால் இது உருவாகிறது. இந்த சல்பர்டைஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு நீருடன் கலந்து அமிலத்தை தருகின்றது.

அமிலமழையின் தாக்கம் என்ன?

 • பெருங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் அரிப்பு
 • மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படிதல்
 • சுற்றுவட்ட நிலப்பரப்பில் உள்ள நச்சு கலந்த தாதுக்களான அலுமினியம் மற்றும் பாதரசம் போன்றவற்றை பிரித்தெடுத்தல், ஏரிகள் நீர் நிறைந்த பகுதிகளில் தொற்றுகளானது அதிகமாக இருத்தல்
 • மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிதல்

உலகம் வெப்பமயமாதலின் தன்மை

உலக வெப்பமயமாதலின் தன்மையானது பசுமைகுடிலின் வாயு மற்றும் இதன் வளிமண்டலத்தின் ஆயுட்காலம் போன்ற மூலக்கூறின் வினைத்திறனை பொருத்துள்ளது. கார்பன் டைஆக்ஸைடின் தொகுப்பினை பொறுத்து GWP-ன் தன்மை அளவீடு செய்யப்பட்டு, தனிப்பட்ட நேர அளவு மூலம் மதிப்பிடப்படுகின்றது. 20 வருட கால அளவில் அதாவது குறுகிய கால அளவில் மூலக்கூறானது அதிக யைகொண்டு இருக்கும். ஆனால் 100 வருட கால அளவில் குறைவாகவே இருக்கும். மாறாக மூலக்கூறானது, கார்பன்டைஆக்ஸைடை விட நீண்ட வளிமண்டல ஆயுட்காலம் கொண்டிருக்கும் போது இதன் GWP ஆனது குறித்த நேரத்தில் அதிகரிக்கும்.

பல்வேறு பசுமைகுடில் வாயுக்களின், வளிமண்டல ஆயுட்காலம் மற்றும் க்கு உதாரணங்கள் பினவருமாறு

 • கார்பன்டைஆக்ஸைடு ஆனது மாறுபட்ட வளிமண்டல் ஆயட்காலத்தை கொண்டது. இதனை தனிப்பட்ட துல்லியமாக வரையறுக்க முடியாது. சமீபத்திய நிலவரப்படி, எரிக்கப்படும் தொல்லுயிர் எச்சப் எரிபொருட்களின் வளிமண்டல கார்பன்டைஆக்ஸைட்டின் ஆயுட்காலம் பத்தாயிரம் வருடமாகும் எல்லா கால கட்டங்களிலும் கார்பன்டைஆக்ஸைடின் ஆகும்.
 • மீத்தேன் - வளிமண்டல ஆயுட்காலம் 1213 வருடங்கள் ஆகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 72,100 வருடங்களில் 25 மற்றும் 500 வருடங்களில் 7.6ஆகும். நீண்ட கால வருடங்களில் குறைந்து கொண்டெ வரும். வளிமண்டல வேதியியல் மாற்றத்தின் போது மீத்தேனானது நீராகவும், கார்பன்டைஆக்ஸைடாகவும் மாறுகிறது.
 • நைட்ரஸ் ஆக்ஸைடின் வளிமண்டல ஆயுட்காலம் 114 வருடங்களாகும். GWP ஆனது 20 வருடங்களில் 289, 100 வருடங்களில் 298 மற்றும் 500 வருடங்களில் 153 ஆகும்.
 • குளோரோபுளோரோ கார்பன் 12 - ன் வளிமண்டல ஆயுட்காலம் 100 வருடங்களாகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 11,000, 100 வருடங்களில் 10.900 மற்றும் 500 வருடங்களில் 5200 ஆகும்.
 • ஹைட்ரோ குளோரோஃபுளொரோ கார்பன் 22 - ன் வளிமண்டல் ஆயுட்காலம் 12 வருடங்களாகும். இதன் GWP ஆனது 20 வருடங்களில் 5160, 100 வருடங்களில் 1810 மற்றும் 500 வருடங்களில் 549 ஆகும்.
 • ட்ராபுளோரோமீத்தேனின் வளிமண்டல ஆயுட்காலம் 50,000 வருடங்களாகும், இதன் GWP ஆனது 20 வருடங்களில் 5210, 100 வருடங்களில் 7390 மற்றும் 500 வருடங்களில் 11,200 ஆகும்.
 • சல்பர்ஹெக்ஸாஃபுளோரோரைடு -ன் வளிமண்டல ஆயுட்காலம் 3200 வருடங்கள் ஆகும். இதன் GWP ஆனது 20 ஆண்டுகளில் 16300, 100 வருடங்களில் 22800 மற்றம் 500 ஆண்டுகளில் 32600 ஆகும்.
 • நைட்ரஜன் டரைபுளோரைடின் வளிமண்டல ஆயுட்காலம் 740 ஆண்டுகள் ஆகும். இதன் GWP ஆனது 20 ஆண்டுகளில் 12300, 100 ஆண்டுகளில் 17200 மற்றும் 500 ஆண்டுகளில் 20700 ஆகும்
ஆதாரம் :தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
3.00787401575
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top