অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஆற்றலின் ஆதாரங்கள்

ஆற்றலின் ஆதாரங்கள்

புதுப்பிக்கவல்ல ஆற்றல்

சூரிய ஆற்றல்

சூரியன்தான் முதல் ஆதார சக்தி. நமது வீடுகளைப், பகல் நேரத்தில் ஒளியூட்டுகிறது. நமது துணிகளையும், விவசாயப் பொருட்களையும் காய வைக்கிறது. நம்மையும் கதகதப்பாக வைத்திருக்கிறது . இன்னும் இதுபோன்ற பல பயன்பாடுகளைச் செய்கிறது. ஆனால் இதன் ஆற்றல் இதையெல்லாவற்றையும் விட மிகப் பெரியது.

சாதக அம்சங்கள்

 • இது நிரந்தரமான, இயற்கை வள ஆதாரம்
 • இலவசமாகக் கிடைக்கிறது
 • மிக அதிகமான அளவில் கிடைக்கிறது
 • சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதது.

பாதக அம்சங்கள்

 • பருவகால மாறுபாடுகளையும் சீதோஷ்ண நிலையையும் சார்ந்தது. எனவே எல்லாக் காலத்திலும் உபயோகிக்க முடியாதது.
 • இதை உபயோகிப்பதற்கான, தொடக்க கட்டச் செலவுகள், முதலீடுள் மிக அதிகமாகும்

சூரிய சக்தியைப்பயன்படுத்த உதவும் தொழில்நுட்பங்கள்

மின்சாரத்தை உருவாக்க, சூரிய சக்தியைப் பயன்படுத்த முடியும். சூரிய போட்டோவால்டிக் செல்களின் மூலம், சூரியனின் கதிர்கள் ‘டிசி’ மின்சார சக்தியாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உருவாகும் மின்சாரத்தை அதே நிலையிலும் உபயோகிக்கலாம், பாட்டரியிலும் சேமித்துவைக்கலாம். இவ்வாறாகச் சேமித்து வைக்கப்பட்ட மின்சாரத்தை சூரிய சக்தி கிடைக்காத போது உபயோகிக்கலாம். இன்றைய காலகட்டத்தில், வீடுகள் மற்றும் தெருக்களில் விளக்குகள் எரிப்பதற்கும், கிராமங்களில் பாசன பம்புகளை இயக்குவதற்கும் வெற்றிகரமாக உபயோகப்படுத்தபடுகிறது. மலைசார்ந்த இடங்களில், தண்ணீரைச் சுடவைப்பதற்கு சூரிய சக்தி உபயோகமாகிறது.

காற்று ஆற்றல்

காற்று என்பது தரை மற்றும் கடல் பகுதிகளில் இயல்பாக இயங்கிவரும் சக்தி. இந்த காற்று, காற்றாலைகளில் உள்ள விசிறியின் பிளேடுகளை சுழலச் செய்கிறது. இந்த விசிறி ஒரு நீண்ட குழாய் அல்லது ஜெனரேட்டரின் ஊடே பொருத்தப்பட்டு இருப்பதால், பிளேடுகளின் சுழற்சியின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த முறையில் இந்தியாவில் 45000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. உலகத்திலேயே, மிகப்பெரிய அளவில் காற்று சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் 5ஆம் இடத்தில் இருக்கும் இந்தியா, 1870 மெகாவாட் அளவை எட்டியிருக்கிறது. இதில் தனியார் அமைப்புகள் 95 சதவிதக் காற்றாலை நடத்திவருகின்றனர்.

சாதக அம்சங்கள்

 • சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது
 • மிக அதிக அளவிலும், இலவசமாகவும் கிடைக்கக்கூடியது

பாதக அம்சங்கள்

 • மிக அதிகமான முதலீடு தேவைப்படுவது
 • காற்றின் வேகம் எப்போதும் ஒரே சீராக இருக்காது என்பதால் உற்பத்தியாகும் மின்சார அளவில் பாதிப்பு உண்டாகும்

பயோமாஸ், இயற்கை எரிபொருள்

பயோமாஸ் என்றால் என்ன?

தாவரங்கள், ஒளிச்சேர்க்கையின் மூலம் சூரிய ஒளி சக்தியைத் தன்னுள்ளே வைத்து அதன் மூலம் பயோமாஸை உற்பத்தி செய்கிறது. இந்த பயோமாஸ், பல்வேறு சுழற்சிகளைக் கடந்து, பல்வேறு விதமான எரிசக்தி வள ஆதாரங்களை உருவாக்குகிறது. உதாரணமாக, பிராணிகளுக்கான தீவனம், இதனால் உண்டாகும் மாட்டுச் சாணம், விவசாயச் செயல்பாட்டினால் உண்டாகும் கழிவுகள் போன்றவை சமைப்பதற்கு வேண்டிய எரிபொருளாக உதவுகின்றன. இந்தியாவில் தற்போது இருக்கக்கூடிய பயோமாஸின் அளவானது, ஒரு ஆண்டுக்கு 120 - 150 மில்லியன் மெட்ரிக் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடானது நாட்டிலுள்ள விவசாய மற்றும் வனப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கழிவுகளின் அளவை வைத்து மதிப்பிடப்பட்ருக்கிறது. இதன் மூலம் 16000 மெகாவாட் (மெ.வா) அளவு எரிசக்தியைப் பெறலாம்.

பயன்பாடு

பயோமாஸ் என்பது நாட்டில் உபயோகிக்கப்படும் மொத்த எரிபொருளில் மூன்றில் ஒரு பங்கு சக்தியை அளிக்கும் முக்கியமான எரிசக்தி வள ஆதாரமாகும். அதுவும் கிராம்புறங்களில் 90% வீடுகளில் இவைதாம் எரிசக்தியாகப் பயன்படுகிறது. வீடுகளில் சமைப்பதற்கும் பொருட்களைச் சூடாக்குவதற்கும் பயோமாஸ் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விவசாயக் கழிவுகள், மரம், கரி மற்றும் காய்ந்த சாணம் ஆகியவையே இதற்காகப் பயன்படுத்துப்படும் பயோமாஸ் வகைகள்.

சாதகமான அம்சங்கள்

 • உள்ளூரிலேயே கிடைப்பது, சில இடங்களில் அதிக அளவில் கிடைப்பது
 • புதையுண்டிருக்கும் எரிபொருள்களை விட இவை சுத்தமானவை. கார்பன்-டை ஆக்ஸைடை உட்கொள்வதால், பயோமாஸ் சுற்றுப்புறச் சூழலையும் தூய்மையாக்குகிறது

பாதகமான அம்சங்கள்

 • இவ்வகையான எரிபொருளைச் சேகரிக்கத் தேவைப்படும் வேலைபளு
 • வீட்டிற்குள், அதுவும் சரியான காற்று வெளியேற வசதியில்லாத சூழ்நிலையில் சமைக்கும்போது, சாண எரிபொருள் போன்றவை வெளியிடும் புகை, கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்
 • பயோமாஸைத் சிக்கனமின்றி பயன் படுத்துவது தாவரங்கள் அழியக் காரணமாக இருக்கிறது. இதனால், சுற்றுப்புறச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகிறது

பயோமாஸ்ஸை (தாவரப்பொருட்கள்) சிறப்பாகப் பயன்தரும் விதத்தில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள்

 • நல்ல முறையில் வடிவமைக்கப்பட்ட அடுப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், புகையில்லாத வகையில் எரிபொருளைச் சிக்கனப் படுத்த முடியும்
 • பயோமாஸை, ஒரு இடத்தில் சேர்த்து அடக்கி சிறிய கட்டிகளாக (பிரிக்குட்) உருவாக்கினால், அதை சேமித்து வைக்க குறைவான இடம் தேவைப்படுவதுடன் அதிக அளவில் பயன்பாடும் இருக்கும்
 • இயற்கை பொருட்களை இயற்கை எரிவாயுவாக மாற்றுவதற்கு, அவற்றை இயற்கையான முறையில் மட்கச் செய்வது, எரிவாயு தயாரிப்பதற்கு மட்டுமின்றி, விவசாய நிலங்களுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும்
 • பயோமாஸ் பொருட்களை எரிவாயுவாக மாற்ற, முறைப்படுத்தப்பட்ட குறைவான காற்றை செலுத்துவதன் மூலம் அவற்றைக் குறிப்பிட்ட அளவிற்கு வெப்பமூட்டி மட்கச் செய்ய முடியும்
இயற்கை எரிபொருள்

இயற்கை எரிபொருள் பெரும்பாலும் கால்நடைகளின் பசுந்தீவனத்திலிருந்து, விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் பதப்படுத்துவதன்மூலம் மற்றும் சமையல் எண்ணெய் மறுபதனிடுதல் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இயற்கை எரிபொருளில் பெட்ரோலியம் இல்லை. ஆனாலும் இவற்றுடன் பெட்ரோலைக் கலந்து இயற்கை எரிபொருள் களவை உருவாக்க முடியும். டீசல் இன்ஜின் இயந்திரத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல், இந்த எரிபொருளை பயன்படுத்த முடியும்.

இயற்கை எரிசக்தியை மிக எளிமையான முறையில் பயன்படுத்த முடியும். இது இயற்கையோடு கலந்து அழியும் தன்மை உடையது. விஷத்தன்மை இல்லாதது. மிக முக்கியமாக இதில் சல்ஃபர் மற்றும் வாசனை/ மனம் ஏதும் இல்லாதது.

தண்ணீர், புவி வெப்ப அற்றல்

தண்ணீர்

மேலிருந்து விழும் நீரும், கடலின் அலைகளும் ஆற்றலின் மூலங்கள் ஆகும். 2005 ஆம் ஆண்டின் மின் உபயோகத்தில், 26%, நீர்சக்தி ஆற்றல் மூலம் அளிக்கப்பட்டது. தற்போது, சிறு திட்டங்களைக் கொண்டு, மின்சார வசதியில்லாத தொலைதூரக் கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்படுகிறது. இந்தியாவில், சிறு நீர்சக்தியின் மூலம் கிடைக்கும் எரிசக்தி திறன், சுமார் 15,000 மெ.வாட் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10-12 வருடங்களில், 3 மெ.வாட் திறன் கொண்ட சிறு நீர்சக்தி திட்டங்களின் திறன், 63 மெ.வாட் இல் இருந்து 4 மடங்கு உயர்ந்து, 240 மெ.வாட் ஆகியுள்ளது. 1423 மெ.வாட் க்கு மேல் மொத்த திறன் வாய்ந்த, 25 மெ.வாட் திறன் கொண்ட 420 சிறு நீர்சக்தி திட்டங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டுள்ளன. இவைகளை போல, 521 மெ.வாட் மொத்த திறன் வாய்ந்த மேலும் 187 நீர்சக்தி திட்டங்கள் கட்டுமான பணியில் உள்ளது.

புவி வெப்ப ஆற்றல்

பூமியில் இருந்து உற்பத்தியாகும் வெப்பத்தை புவி வெப்பம் என்கிறோம். சூடான நீர் ஊற்றுகள் புவி வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளன. நம் நாட்டில், சுமார் 300 வெப்ப நீர் ஊற்றுகள் இருந்தாலும், அவை தற்போது ஆற்றல் உற்பத்திக்கு பயன்படத்தப்படவில்லை.

புதுப்பிக்கப்பட முடியாத ஆற்றல்

நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியன புதுப்பிக்கப்பட முடியாத சக்தி வள ஆதாரங்களாகும். இவை புதையுண்ட எரிபொருள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இவையெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தாவரங்களின் எச்சங்கள். புதையுண்டிருக்கும் எரிபொருள்கள்தாம் இன்று பெருமளவில் எரிசக்தியாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்திலுள்ள நிலக்கரி இருப்பில் இந்தியா சுமார் ஏழு சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. நாட்டின் 50% எரிசக்தித் தேவையை நிலக்கரிதான் பூர்த்தி செய்கிறது. ஒரு ஆண்டிற்கு 114 மெ.டன் அளவு எண்ணெய் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. இதில் 75% இறக்குமதி செய்யப்படுகிறது. புதையுண்ட எரிபொருளை எடுத்து எரிப்பதன் மூலம் மிகப் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

மூலம் : நுழைவாயிலின் உள்ளடக்க குழு

தொடர்புடைய வளங்கள்

 1. http://mnre.gov.in/mission-and-vision-2/achievements/
 2. http://edugreen.teri.res.in/
 3. இந்தியாவின் நிலக்கரி சேமிப்பிடங்கள்
 4. இந்திய எரிசக்தி புள்ளிவிபரம், 2013


© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate