অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

  • இளைஞர்களுக்கு தேர்தல் வினாடி வினா
  • இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பினை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கு, வினாடிவினா நிகழ்ச்சியை பெருநகர சென்னை மாநகராட்சி நடத்த உள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • தேர்தல் வினாடி வினா
  • தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக வினாடிவினா நிகழ்ச்சியானது 14.04.2024 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெறவுள்ளது.

  • உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII's ஹேக்கத்தான் 2023-24
  • உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII's ஹேக்கத்தான் 2023-24 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

  • இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2024
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பள்ளிக் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்துள்ள "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" [YUva VIgyani KAryakram (YUVIKA)] பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சி
  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் சென்னை செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • இசை விழா
  • சென்னை இசை நகரம் எனும் யுனெஸ்கோ அறிவிப்பினைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 5 அன்று தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இசை விழா பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள்
  • பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் பிரதமரின் விருதுகளுக்கான திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024
  • புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024 பிப்ரவரி 2 அன்று நடைபெறவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய, முதலாவது உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அகில இந்திய துணை தொழிற் தேர்வு, மார்ச் 2024
  • கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • இளையோர் சங்க நிகழ்ச்சி
  • நாட்டின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசின் முன்முயற்சியான இளையோர் சங்கத்தின் நான்காம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி
  • சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் மூன்று நாள் பயிற்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் தேர்தல்கள் வினாடி வினா போட்டி
  • தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி 21.01.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 11 முதல் 11:15 வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023
  • இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 [India International Science Festival (IISF) 2023] இந்தியாவின் அறிவியல் திறனை வெளிப்படுத்துவதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைத் திறம்படத் தொடர்புகொள்வதற்கு விரிவான வரைபடத்தை வகுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு விஞ்ஞானிகா அறிவியல் இலக்கியத் திருவிழாவை (Vigyanika, the science literature festival) வழங்குகிறது.

  • அனுபவ் விருதுகள் திட்டம் 2024
  • அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும்/ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அனுபவ் இணையதளத்தில் சமர்ப்பித்த தங்களது பணி அனுபவங்களை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகள் மதிப்பிட்டு வழங்கும் அனுபவ் விருதுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • பாரத் டெக்ஸ் 2024
  • "பாரத் டெக்ஸ் 2024"-ன் கீழ்" தொழில்நுட்ப ஜவுளியில் புதுமைகளை அதிகரிப்பது - தொழில்நுட்ப ஜவுளியில் படைப்பாற்றலைக் உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்" என்ற தலைப்பிலான நிகழ்வுக்கு 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் மூலம் ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • சென்னை புத்தகக் காட்சி 2024
  • சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 03.01.2024 முதல் 21.01.2024 வரை நடைபெற உள்ள 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • சென்னையில் சணல் கண்காட்சி
  • சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களான சணல் பொருட்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சணல் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கவும் சென்னையில் சணல் கண்காட்சி 13.12.2023 முதல் 19.12.2023 தேதி வரை நடைபெறவுள்ளது.

  • பாரத் டெக்ஸ் 2024
  • பாரத் டெக்ஸ் 2024 (Bharat Tex 2024) என்பது 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பு (Textile Export Promotion Councils) மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் (Ministry of Textiles) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் உலக மகா ஜவுளி நிகழ்வாகும். இதை 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை புதுதில்லியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
  • மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சி.ஏ.பி.எஃப்) கான்ஸ்டபிள் (ஜி.டி), எஸ்.எஸ்.எஃப் மற்றும் ரைபிள்மேன் (ஜி.டி) அசாம் ரைபிள்ஸ் ஆள்தேர்வு 2024-க்கான போட்டித் தேர்வு அறிவிப்பு.

  • கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்பு (2024)
  • சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • காசி தமிழ் சங்கமம்
  • 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30, 2023 வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • தேசிய பால் தினம்
  • கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில் குவஹாத்தியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் 26.11.2023 அன்று கொண்டாடப்படவுள்ள தேசிய பால் தினம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • 5-வது தேசிய நீர் விருது 2023
  • 5 வது தேசிய நீர் விருதுகள் 2023, அக்டோபர் 13  அன்று தேசிய விருது போர்ட்டல் மூலம் தொடங்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • அரசியலமைப்பு தினம்
  • அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், அரசியலமைப்பு விநாடி -வினா மற்றும் முகப்புரையின் இணையதள வாசிப்பில் பங்கேற்க நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

  • 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா
  • கோவாவில் நவம்பர் 20, 2023 அன்று நடைபெறும் உலக சினிமாவை காட்சிப்படுத்தும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • சங்க இலக்கிய ஓவியப் போட்டி
  • சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு "சங்க இலக்கிய ஓவியப் போட்டியை" தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவுள்ளது.

  • இந்தியக் கடற்படை பெருங்கடல் பாய்மரப் படகுப் போட்டி 2023
  • கடல் சாகசத்தை ஊக்குவிக்கும் வகையில், புதுதில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை பாய்மரப் படகு சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியக் கடற்படை கொச்சியில் இருந்து கோவாவுக்கு நவம்பர் 22 முதல் 26 வரை கமாண்ட்களுக்கு இடையேயான பாய்மரப் படகுப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
  • 2023-2024 ஆம் ஆண்டு 23-வது அஞ்சல் வழி/பகுதி நேர (மாறுதலுக்கு உட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • அண்ணா பதக்கம்
  • ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் "அண்ணா பதக்கம்" விருதுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை
  • சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சகம் ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate