பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / நிகழ்வுகள் / ஆதார் எண் பெறுவதற்காக 301 இடங்களில் உதவி மையங்கள்
பகிருங்கள்

ஆதார் எண் பெறுவதற்காக 301 இடங்களில் உதவி மையங்கள்

ஆதார் எண் பெறாதவர்களுக்காக 301 இடங்களில் ஆதார் உதவி மையங்கள் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 28 வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிகழ்ச்சி

எப்பொழுது ?

Dec 28, 2016 10:00 AM நோக்கி (to)
Feb 28, 2017 04:00 PM

இதுவரை ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் மீண்டும் பெறுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 285 மையங்களையும், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் 15 மையங்களையும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையத்தையும் என மொத்தம் 301 இடங்களில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது.

இம்மையங்கள் இன்று தொடங்கி வரும் 2017 பிப்.28-ம் தேதி வரை செயல்படும். இந்த மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண்ணுக்கு பதிவு செய்துவிட்டு ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் அல்லது தொலைத்தவர்கள் நேரில் சென்று பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு, கைவிரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து சில விநாடிகளில் ஆதார் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

அந்த ஆதார் எண்ணை அருகில் உள்ள இ-சேவை மையங்களில் தெரிவித்து ரூ. 30 செலுத்தி ஆதார் பிளாஸ்டிக் அட்டையாகவோ அல்லது ரூ.10 செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top