பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / டெங்கு விழிப்புணர்வு செயலி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டெங்கு விழிப்புணர்வு செயலி

மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட டெங்கு காய்ச்சல் குறித்த மொபைல் செயலி (Fight Dengue TN) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

செயலியின் சிறப்பம்சங்கள்

  • டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் முட்டையிட்டு வளர ஏதுவான இடங்கள் எவை என படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
  • பொது மக்களுக்கு ஏற்படும் ஐயங்களை போக்கும் வகையில் கேள்வி பதில் பகுதி, சித்த மருத்துவம் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறைகள் போன்றவை குறித்தும் தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.
  • பொது சுகாதாரத் துறையின் 24 * 7 கட்டுப்பாட்டு மையத்தின் கைப்பேசி எண்கள் : 9444340496, 9361482899, தொலைப்பேசி எண்கள் : 044-24350496, 24334811, 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 தகவல் மையம் ஆகிய தொலைப்பேசி எண்களை செயலியிலிருந்தே தொடர்புக்கொள்ளும் வழியும் உள்ளது.
  • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பேசிய குறும்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

  • உங்கள் கைப்பேசி மூலமாக கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) செல்லவும்
  • Fight Dengue TN என்று தேடுதல் பட்டியலில் (Search bar) டைப் செய்து தேட வேண்டும்.
  • இறுதியில், 'Fight Dengue TN' யை தேர்வு செய்தால் அதனை பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவிக்கொள்ளலாம் (install).

நன்றி : மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத் துறை, தமிழ்நாடு அரசு

ஆதாரம் : தினமலர் நாளிதழ்

2.87096774194
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top