பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / குழந்தைகள் நலன் சார்ந்த சுகாதார நிகழ்வுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகள் நலன் சார்ந்த சுகாதார நிகழ்வுகள்

இந்தியாவில் குழந்தைகள் நலனில் சுகாதார நிகழ்வுகள் (Health programmes in India related to child health) பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்தியா சுதந்திர நாடாகிய பின், மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பலமுறைகள் மேற்கொண்டுள்ளது. இந்த முறைகளிலெல்லாம் முன்னோடியாக இருப்பது மத்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய சுகாதார திட்டங்களான தொற்றுநோய்களை கட்டுப்படுத்துதல் அல்லது ஒழித்தல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்துக்களின் நிலையை அதிகரித்தல், கிராமப்புற மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல் மற்றும் கிராமநலனில் முன்னேற்றம். பல பன்னாட்டு நிறுவனங்களான WHO, UNICEF, SIDA, DANIDA, USAJD போன்றவை தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை கொடுத்து இவைகளை செயல்படுத்த துணைபுரிகிறது. குழந்தை நலனில் தற்போது செயலில் உள்ள திட்டங்களைக் குறித்து சுருக்கமாக கீழே பார்க்கலாம்.

தாய் மற்றும் சேய் நலத்திட்டம்

தாய் மற்றும் சேய் நலம் என்பது தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சுகாதாரத்தை பேணுதல், நோய்களைத் தடுத்தல், நோய்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் புணர்வாழ்வு அளித்தலாகும்.

தாய்சேய் நலத்தின் முக்கிய குறிக்கோள்கள்

* தாய், பிரசவத்தின்போது இளங்குழந்தை மற்றும் குழந்தை பருவ இறப்பு மற்றும் நோய் விகிதத்தை குறைத்தல்.

* இனப்பெருக்க நலத்தினை மேம்படுத்துதல்

* குடும்பத்திற்குள் குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சியை ஊக்குவித்தல்

* தாய்சேய் நல சேவையின் உடனடி குறிக்கோள் வாழ்நாள் முழுவதும் நலத்துடன் இருத்தல்.

பிரசவத்திற்கு முந்திய பராமரிப்பு

பிரசவத்திற்கு முந்திய பராமரிப்பு என்பது கருவுற்ற நிலையில் பராமரித்தலாகும்.

இரத்தசோகைக்கான பரிசோதனை, ஹீமோகுளோபின் அளவை மதிப்பிடுதல், இரத்த அழுத்தத்தை பதிவு செய்தல் மற்றும் கருப்பையின் உயரத்தை கணக்கிடுதல் போன்றவை எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் பிரசவத்திற்கு முன் செய்யப்பட வேண்டும்.

* இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மருந்துகளை கொடுத்தல்

* இரணஜன்னிக்கு எதிரான நோய்த்தடுப்பு

* ஊட்டச்சத்து, குடும்ப நலத்திட்டம், சுயகவனிப்பு, பிரசவம் மற்றும் பெற்றோர் பருவம் போன்றவற்றை குறித்து குழுவாகவோ அல்லது தனியாகவோ போதிக்க வேண்டும்.

பிரசவத்தின்போது பராமரிப்பு

இந்த திட்டத்தில் பிரசவம், பயிற்சி பெற்றவர்களால் நடைபெறவேண்டும்.

தாய்ப்பால் கொடுத்தல், நோய்த்தடுப்பு, குடும்பநலத்திட்டம் மற்றும் பொதுவான சுத்தம் குறித்த கல்வியறிவும், தாய்மார்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் கவனிப்பு (Care of children)


பச்சிளங் குழந்தையின் முதல் பராமரிப்பு

இளங்குழந்தையின் முதல்வார காலக்கட்டம் மிகவும் முக்கியமானது

நோக்கங்கள்

• இருதய, சுவாச பணிகளை சரிவர நிலைநிறுத்தல்

* உடல் வெப்பநிலையை பேணுதல்

• நோய் தொற்றை தவிர்த்தல்

* திருப்திகரமான உணவூட்டல் முறையை செயல்படுத்துதல்

* பிறப்பிலேயே அல்லது பின் ஏற்படும் பிரச்சனைகளை உடனே கண்டுபிடித்து சிகிச்சையளித்தல்

சுவாசப்பாதையை சுத்தம் செய்தல் :

சுவாசப்பாதையில் உள்ள சளி மற்றும் சுரப்புகளை சுத்தம் செய்வதால் சுவாசத்தை நிலைப்படுத்தலாம். குழந்தையை தலைகீழாக பிடிப்பதால் சுரப்புகள் எளிதாக வெளியேற உதவும். மென்மையாக உறிஞ்சுவதின் மூலமும் சளி மற்றும் அம்னியாடிக் திரவத்தை வெளியேற்றலாம்.

அப்கார் மதிப்பீடு : அப்கார் மதிப்பீடு 1 நிமிடம், 5 நிமிடம் மற்றும் 10 நிமிடங்களில் எடுக்கப்பட வேண்டும். இருதயதுடிப்பு, சுவாசம், தசைவலிமை, தூண்டுதல் வினை மற்றும் குழந்தையின் நிறம் முதலியவற்றை உடனடியாக மற்றும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தொப்புள் கொடி கவனிப்பு : துடிப்பு நின்றவுடன் தொப்புள்கொடியை வெட்டி, பிறகு கட்ட வேண்டும். தொற்று நீக்க கருவிகளைப் பயன்படுத்தி தொப்புள் கொடியைக் கட்டுவதால் இரணஜன்னி ஏற்படுவதை தடுக்கலாம். முடிந்த அளவுக்கு தொப்புள் கொடியை உலர்நிலையில் வைக்க வேண்டும்.

கண்ணின் பராமரிப்பு : பிறந்த குழந்தையின் கண்கள் திறப்பதற்கு கண்ணின் இமைகளை சுத்தமான ஈரப்பஞ்சினைக்கொண்டு உள்ளிருந்து ளிெப்புறமாக துடைக்க வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு பஞ்சு உருண்டையை பயன்படுத்த வேண்டும். புதிதாக தயாரிக்கப்பட்ட சில்வர் நைட்ரேட் கரைசலில் ஒரு சொட்டு கண்ணில் விடப்பட வேண்டும். தடுப்பு முறையாக குறிப்பிட்ட பெண் இனப்பெருக்க சம்பந்தப்பட்ட தொற்றுக்கு பிரசவத்தின்போதோ, பிரசவத்திற்கு முன்போ சிகிச்சையளிக்கப்பட வேண்டும். மேலும் பிரசவத்தின்போதும் தனிக்கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தோல் பராமரிப்பு : பிறந்த குழந்தைக்கு முதல் குளியல் சோப்பு மற்றும் மிதமான வெண்ணீர் கொண்டு குளிக்கவைப்பதன் மூலம் வெர்னிக்ஸ், மெகோனியம் மற்றும் இரத்தகறைகளை நீக்கலாம். முதல் குளியல் 12-24 மணிநேரம் தாமதப்படலாம். இதன் மூலம் குழந்தையின் உடல் வெப்பநிலை குளிர்ச்சியாவதை தடுக்கலாம்.

உடல்நிலையை சீராக்கல் : குழந்தை பிறந்த உடனேயே, சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து வெதுவெதுப்பான துணியினால் நன்றாக மூடி தாயிடம் மார்போடு அணைக்க செய்யவேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுதல் : பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். முதல் பால் கொலஸ்ட்ரம் எனப்படும். இதில் குழந்தைகளுக்கு மிகவும் தேவையான அடர்ந்த புரதம் மற்றும் வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. பிறந்த குழந்தைக்கு தேவையான போதெல்லாம் தாய்ப்பாலை ஊட்டலாம்.

அதிக ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளை தெரிந்து கொள்ளுதல்

• பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருத்தல்.

• இரட்டை குழந்தைகள்

* குழந்தையின் பிறப்பு வரிசையில் 5க்கு மேல்

* செயற்கை பால் குடிக்கும் குழந்தைகள்

* எதிர்பார்த்த எடையை விட 70% குறைவாக இருத்தல்

• தொடர்ந்து 3 மாதங்களுக்கு எடை அதிகரிக்காமல் இருத்தல்

* பேதி மற்றும் புரதசத்து குறைவுள்ள குழந்தைகள்

• வேலை செய்யும் தாய்மார்களின் குழந்தைகள்

• ஒரு பெற்றோருடன் இருக்கும் குழந்தைகள்

பச்சிளங்குழந்தையின் பின் பராமரிப்பு

மீதமுள்ள 3 வாரத்தில் பச்சிளங் குழந்தைக்கு தொற்று மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பேதி மற்றும் நிமோனியா போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி தேவைகள்

இந்திய அரசாங்கம் மற்றும் சமுதாய மகளிர் சேவை துறைசேர்ந்து 1975ல் குழந்தைகளின் வளர்ச்சிக்காக ICDS என்னும் திட்டத்தை உருவாக்கியது. செப்டம்பர் 30, 2007 அன்று ICDS திட்டத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டது. 9.3 லட்ச அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

ICDS திட்டத்தின் நோக்கங்கள்

0-6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை முன்னேற்றுவதாகும்.

மனதளவில், சமுதாய அளவில் ஒரு நல்ல அடிப்படையை அமைத்து கொடுக்கவும் இறப்பு விகிதம் மற்றும் நோய்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் பள்ளியில் பின் தங்குதல், போன்றவை ICDS ன் நோக்கமாகும்.

திட்டம் உருவாக்குவதற்கும், நடைமுறைபடுத்துவதற்கு உறுதுணையாக இருப்பது.

சுகாதார போதனை மற்றும் ஒழுங்கான ஊட்டச்சத்து இவற்றின் மூலம் தாய் மற்றும் குழந்தையின் தேவைகளை சரிசெய்தல்.

சேவைகள் அளித்தல்

ஊட்டச்சத்து இணை உணவு

இவை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். குறைந்த வருமானம் உள்ள தாயார்.

ஒவ்வொரு 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 300 கலோரி மற்றும் 8-10 கிராம் புரதம்.

ஒவ்வொரு வளர்ந்த பெண் குழந்தைகளுக்கும் 50 கலோரி மற்றும் 20-25 கிராம் புரதம்

ஒவ்வொரு கர்ப்பணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு 500 கலோரி மற்றும் 20-25 கிராம் புரதம்

ஒவ்வொரு சத்து குறைந்த குழந்தைகளுக்கும் 600 கலோரி மற்றும் 16 - 20 கிராம் புரதம்

ஊட்டச்சத்து போதனை மற்றும் சுகாதார போதனை

15-45 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் ஊட்டச்சத்து போதனை மற்றும் சுகாதார போதனை கொடுக்க வேண்டும்.

தடுப்பூசி

தடுப்பூசியால் தடுக்கக்கூடிய 6 நோய்களுக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும். மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இரணஜன்னி தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் பரிசோதனை

இது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.

பிரசவத்திற்கு முன் மற்றும் பிரசவத்திற்குப் பின் கவனிப்பு

கர்ப்பிணி பெண்களுக்கும் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் (folic acid) மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். குறைந்தது 3 முறையாவது பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். அதிக ஆபத்திலுள்ள தாய்மார்களை (High risk mother) மருத்துவ ஆலோசனைக்கு அனுப்ப வேண்டும்.

ஆறு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்காக கவனிப்பு

* குறிப்பிட்ட கால அளவில் எடை மற்றும் உயரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

* மைல் கற்களை கவனிக்க வேண்டும்.

* சரியான நேரங்களில் அளித்தல்

* 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறை பொதுவான மருத்துவ பரிசோதனை

* சிறிய நோய்களுக்கான சிகிச்சை

* பூச்சிமருந்து கொடுத்தல் (Deworming)

• இரத்தசோகை மற்றும் விட்டமின் A குறைபாடுகளைத் தடுத்தல்

• மருத்துவ ஆலோசனை

பள்ளிக்கு முந்தியப் பருவத்திற்கான கல்வி

கிராமத்தில் (1000 மக்கள் தொகை) உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 - 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுபவக் கல்வி வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் குழந்தைகளிடையே விரும்பத்தக்க பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் வளர்ப்பதாகும்.

விடலைப்பருவத்தினரின் உடல்நலம்

வாலிப வயதினரிடையே நல்ல உடல் நலத்தை வளர்ப்பதற்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கும் அநேக அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* தனிமனித உடல்நலத்துக்கும், சமூக வளர்ச்சிக்கும் தேவையான அளவு செய்திகளும், அறிவுரைகளும் கொடுக்கப்பட வேண்டும்.

• சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் விடலைப்பருவத்தினரின் இனப்பெருக்க நலத்தை மேம்படுத்தலாம்.

* இளம்வயதினரிடையே கருத்தடை மற்றும் இனப்பெருக்க பழக்கங்களை குறித்த அறிவினை வளர்க்க வேண்டும்.

• சேவைகளை மாற்றியமைத்தல், விரிவுபடுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

• உடல்நலத்தை பேணுவதற்கு ஆற்றல் உருவாக்கும் தன்மை போன்றவற்றை கிடைக்க செய்தல் வேண்டும்.

• பெண்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.

தாய்சேய் நல பராமரிப்பு திட்டம்

இத்திட்டம் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கூறுகள்

* சீக்கிரமாக கர்ப்பத்தைப் பதிவு செய்தல்

* குறைந்தது 2 கர்ப்பகால பரிசோதனைகள்

* அனைத்து கர்ப்பணி பெண்களுக்கும் டி.டி. தடுப்பூசி போடுதல்

* உணவு, ஊட்டம் மற்றும் ஓய்வினைப் பற்றிய அறிவுரை

* மிக ஆபத்தான தாய்மார்களுக்கு உடனே மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.

* பயிற்சிப் பெற்றவர்களால் பிரசவம் பார்த்தல்

* குழந்தைகளுக்கான இடைவெளி

* மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவிக்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கான முக்கிய பராமரிப்பு

பச்சிளங்குழந்தை மற்றும் பிறக்கும்போதுள்ள இறப்பு விகிதத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும். இதன் முக்கிய அம்சங்களாவன

• மூச்சுதிணறும் குழந்தையைக் காப்பாற்றுதல்

* வெப்ப இழப்பைத் தடுக்க வேண்டும்

* நோய்தொற்றை தடுக்க வேண்டும்

• தாய்ப்பால் மட்டும் அளிக்க வேண்டும்

• நோயுற்ற குழந்தையை வேறு சிகிச்சைக்கு அனுப்புதல்

வாய்வழியான நீரேற்ற சிகிச்சை (Oralrehydration Therapy)

குழந்தை இறப்பிற்கு முக்கிய காரணம் வயிற்றுப்போக்காகும். துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருடத்திற்கு இரு முறை ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் (15) வழங்கப்படுகின்றன. இத்திட்டம் குழந்தைகளில் வயிற்றுப்போக்கிற்கான மருந்து வழங்குதலை முறைப்படுத்துகிறது. தேவையான ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் தாய்மார்களுக்கு சரியான கல்வி ஆகிய இரண்டும் இத்திட்டத்தின் முக்கிய அங்கங்களாகும்.

சுவாச மண்டல நோய்களைக் கட்டுப்படுத்தல்

நிமோனியாவை கண்டறிந்து குணப்படுத்துவதில் புறப்பணியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கோட்ரிமோக்சசோல் (Cotrimoxazole) சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

விட்டமின் A குறைபாட்டைத் தடுத்தல்

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் Vit A வழங்கப்படுகிறது. முதல் தவணை (1 lakh units) 9 மாத வயதில், தட்டம்மை தடுப்பூசியுடனும், இரண்டாவது தவணை (2 lakhs units), டிபிடி/போலியோ ஊக்க தடுப்பூசியுடனும் வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 6 மாத இடைவெளியில் 2 lakh units வழங்கப்படுகிறது.

குழந்தைகளில் இரத்தசோகையைத் தடுத்தல்

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு II (98-99) ன் படி 74.3% குழந்தைகள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் போலிக் அமிலம் மற்றும் 20கி இரும்புச்சத்து மாத்திரைகள் துணை நிலையங்களில் வழங்கப்படுகின்றன. தற்போது இரத்தசோகையின் அறிகுறிகள் தென்பட்டால் அக்குழந்தைக்கு 100 மாத்திரைகள் தர வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இனப்பெருக்க மற்றும் குழந்தை நலம் (Reproductive and Child health RCH)

1997ஆம் ஆண்டு தேசிய குடும்பநலதிட்டம் இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் நல திட்டமாக (RCH) மாற்றப்பட்டது.

இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் நல அணுகுமுறை என்பது மக்கள் கர்ப்பம் அடையவும் மற்றும் அதை ஒழுங்குப்படுத்துவதும், பாதுகாப்பான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளவும், தாய்சேய் நலவாழ்விலும் மற்றும் நோய்த்தொற்று பயத்திலிருந்து விலகி உடலுறவு கொள்ளவும் இயல்வதாகும்.

RCH சேவைகளின் கூறுகள்

• தேவையில்லாத கர்ப்பத்தைத் தடுத்தல்

* தாய்நலத்திற்கான சேவைகள்

• சேய் நலத்திற்கான சேவைகள்

* நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு சத்துணவு வழங்குதல்

• இனப்பெருக்க நோய்தொற்றுகளை தடுத்தல்

• விடலைப்பருவத்தினருக்கான இனப்பெருக்க கல்வி

* உடல்நலம் மற்றும் இனப்பெருக்க நலத்தைக் குறித்த ஆலோசனை

• மருந்து ஆலோசனைகள் கிடைக்கும்படி செய்தல்

தேசிய நோய் தடுப்பு அட்டவணை

வ.எண்.

வயது

நோய்தடுப்பு

1

பிறந்தவுடன்

BCG, OPV, O-dose

2

6 வாரங்கள்

BCG இது குழந்தை பிறந்த உடன் கொடுக்கப்படாவிட்டால் DPT - 2, OPV-1, HCP.B-1

3

10 வாரங்கள்

DPT-2, OPV-2, Hep.B.2

4

14 வாரங்கள்

DPT-3,OPV-3, Hep B-3

5

9 மாதங்கள்

அம்மை ஊசி

6

16 - 24 மாதங்கள்

DPT.OPV

7

5 - 6 வயது

D.T.

8

10 மற்றும் 16 வயது

T.T.

9

ஆரம்பகால கர்ப்பம்

TT-1/Booster

10 ஒருமாத இடைவெளிவிட்டு TT-11 dose

திடீரென ஏற்படும் சுவாச தொற்றுகளை கட்டுபடுத்தும் திட்டம்

ARI என்பது பெரிய அளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 20 - 30% குழந்தைகள் இதனால் இறக்க நேரிடலாம்.

ARI கட்டுபாட்டு திட்டம்

W.H.0 அட்டவணைப்படி இரண்டு விதமான ஆரம்ப காரணிகள் மூலமாக நிமோனியாவை கண்டறிய முடியும். அவையாவன: இருமல் மற்றும் சுவாச பிரச்சனை இருத்தல். நோயாளிகள் 3 வயதிற்கு உட்பட்டிருந்தால் அவர்களுக்கு ஆம்பிசிலின் 25 - 50 மிகி/கிகி/day சிரை வழியாக செலுத்தப்படலாம். ஜென்டாமைசின் 5 மிகி/கிகி day 7-10 நாட்களுக்கு கொடுக்கப்படலாம்.

கீழ்கண்டவற்றில் காணப்படும் அடையாளங்கள் இருப்பின் அவற்றிற்கான சிகிச்சை

* சுவாசம் 60/mt மேற்பட்டிருத்தல்

* மூக்கடைப்பு இல்லாத போது மூச்சு வாங்குதல்

* தூக்கமின்மை / தூக்கத்தில் இருந்து விழிப்பதில் சிரமம்

* காய்ச்சலில் குளிர்ந்த நிலை

* வலிப்புகள்

பேதி கட்டுபாட்டு திட்டம்

பெரும்பாலான முன் பள்ளி பருவ குழந்தைகள் பேதியினால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் நீர் இழப்பிற்கான காரணம் கணக்கெடுப்பின்படி பேதியே ஆகும்.

தலைமைத்துவம்

• பேதி மற்றும் நல பணியாளர்களை பயிற்றுவித்தல்

* தனிப்பட்ட முறையிலும் பயிற்ச்சியாளர்களை பயிற்று விக்க வேண்டும்.

* தாய்மார்களுக்கு பேதியை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அடையாளங்கள் அறிகுறிகளை பற்றியும் சிகிச்சை முறைப்பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

* அரசு சுகாதார நிலையங்களில் ORS பாக்கெட் இலவசமாக இடைக்கிறது.

ORS சிகிச்சை முறை

பேதியினால் நீர் இழப்பு ஏற்படும் இதனால் ORS சிகிச்சை முறையை கையாள வேண்டும். ORS-ல் அடங்கியுள்ளவை

சோடியம் குளோரைடு 2.6 மிகி

சோடியம் சிட்ரேட் 2.6 மிகி

பொட்டாசியம் குளோரைடு 1.5 மிகி

குளுக்கோஸ் 13.5 மிகி

ஒரு லிட்டர் பாக்கெட்டை கொதிக்க வைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கி 150-200 மிலி ஒவ்வொரு முறையும் பேதி ஆகும் போது கொடுக்கப்பட வேண்டும்.

சீதபேதி உள்ள நோயாளிகளுக்கு கோட்டிரமாக்சோல் உடன் ORSஐக் கூட கொடுக்கப்பட வேண்டும். ஒரு வேளை திருப்தி தரவில்லை என்றால் நலிடிக் அமிலம் 5 நாட்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.

பெற்றோர்களுக்கும் நீர் இழப்பு ஏற்படாமல் தடுப்பதை பற்றி கல்வி புகட்டப்படவேண்டும் தாய் பால் மற்றும், புதிதாத தயாரிக்கப்பட்ட இணை உணவு கொடுக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் போது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவேண்டும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.84
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top