பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / மாநில சுகாதார நிகழ்ச்சிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநில சுகாதார நிகழ்ச்சிகள்

மாநில அளவில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு சுகாதார நிகழ்ச்சிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சத்துணவு

1

திட்டத்தின் பெயர்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்

2

திட்டத்தின் நோக்கம்

2 வயது முதல் 5 வயதுவரையுள்ள முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, 5 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி (அரசு மற்றம் அரசுஉதவி பெறும்) மாணவ மாணவியர்களுக்கும் சத்துணவு வழங்குதல். இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலத்தையும் சத்துணவு பெறும் நிலைமையையும் நன்கு பாதுகாத்து, அவர்களது உடல் மற்றும் ஆற்றலை வளர்த்தல்.

3

ஒரு மைமயம் தொடங்க தேவையானமாணவ, மாணவிகள் எண்ணிக்கை

பள்ளியில் சத்துணவுத் திட்டம் துவக்க குறைந்தபட்சம் 25 மாணவர்கள் தேவை.

4

அலுவலர் யாரை தொடர்பு கொள்வது

வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியவர்களை அணுகலாம்.

5.

திட்டத்தில் குறைபாடுகள், முறைகேடுகள் பற்றி யாரிடம் முறையிடலாம்

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியவர்களை அணுகலாம்

 1. குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரத்திங்களில் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் சுமார் 46 கிராம் எடையுள்ள ஒரு வேகவைத்த முட்டையும், வியாழக்கிழமை அன்று 20 கிராம் வேகவைத்த கருப்புக் கொண்டை கடலை (அல்லது) 20 கிராம் வேகவைத்த பச்சை பயறும், வெள்ளிக்கிழமை அன்று 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கும் வழங்கப்படுகிறது. 15.7.2007 (கல்வி வளர்ச்சி நாள்) முதல் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கப்படும்.
 2. தேசிய மகப்பேறு திட்டத்தின் கீழ் பயன் பெறும் கருவுற்ற தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.
 3. ஓய்வூதியம் பெறும் முதியோர்களுக்கு (2 கிலோ அரிசி பெறும் முதியோர்) அங்கன்வாடி மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்

முன்னுரை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப்பணிகள் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி சமவெளிப் பகுதிகளில் 500 - 1500 மக்கட் தொகைக்கு ஒரு மையம் எனவும், மலைப்பகுதிகளில் 300-1500 மக்கட் தொகைக்கு ஒரு மையம் எனவும் செயல்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் குறிக்கோள்கள்

 • 0-5 வயதுக் குழந்தைகளின் ஊட்டத்சத்து, சுகாதாரம், மன மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்தி அதன் மூலம் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்து, குழந்தை பராமரிப்புப் பழக்கத்தினை குடும்ப அளவில் மேம்படுத்துவது.
 • பெண்களிடையே குறிப்பாக கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தனை மேம்படுததுதல்.
 • குடும்பத்தின் ஊட்டச்சத்து, சுகாதார பிரச்சனைகள் சம்பந்தமாக தேவையான பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை மேலோங்கச் செய்வது அதன் மூலம் தாய்மார்கள் மற்றும் இளம் பெண்களின் தன்னுரிமை மேம்பாட்டினை உயர்த்துவது.

வாழ்க்கை சுழற்சி முறையிலான சத்துணவு பாதுகாப்பு திட்டத்தினை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள தகுதியான தாய்மார்கள், குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு அளிப்பதன் மூலம் சத்துக் குறையில்லாத மாநிலமாக தழகத்தை மாற்றுவது.

திட்டத்தின் பயனாளிகள்

 • 0-3 வயது குழந்தைகள்
 • 3-5 வயது குழந்தைகள்
 • கர்ப்பிணித் தாய்மார்கள்
 • பாலூட்டும் தாய்மார்கள்
 • வளரிளம் பெண்கள்
 • முதியோர்கள்
 • சமுதாயக் குழுக்கள்/சமுதாய தலைவர்கள்

அங்கன்வாடி மையத்தில் அளிக்கப்படும் திட்டப் பணிகள்

 • எடை எடுத்து வளர்ச்சி நிலையை கண்காணித்தல்
 • தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இணை உணவு அளித்தல்
 • குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பள்ளி முன்பருவக் கல்வி
 • சுகாதாரப் பணியாளர்கள் (கிராம நல செவிலியர்/மருத்துவ அலுவலர்) மூலம்சுகாதார பணிகள் அளிப்பது
 • மேல்மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைத்தல்

ஊட்டச்சத்துப் பணிகள்

 1. குழந்தை பிறந்தது முதல் 5 வயது வரை அனைத்துக் குழந்தைகளும் மாதம் ஒருமுறை எடை எடுத்துப் பார்க்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியைக் கண்காணித்தல்
 2. வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாத 6-36 மாத வயதுக் குழந்தைகளுக்கு இணை உணவு 3 மாதங்கள் வரை அல்லது அக்குழந்தை வயதுக்கேற்ற வளர்ச்சி அடையும் வரை வழங்கப்படுகிறது.
 3. கர்ப்பிணித்தாய் கர்ப்பமுற்ற 6வது மாதம் முதல் குழந்தையை ஈன்றெடுத்தப்பிறகும் 6 மாதம் வபரை இணை உணவு வழங்கப்படுகிறது.
 4. 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் முதியோர் உதவித் தொகை பெறும் முதியவர்களுக்கும் மதிய சத்துணவு வழங்கப்படுகிறது.
 5. ஊட்டச்சத்து குறைபாடுள்ள வளரிளம் பெண்களுக்கு மாதம் 6 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டமானது தற்சமயம் திருவண்ணாமலை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரப் பணிகள்

ஒவ்வொரு 5000 மக்கட் தொகைக்கு ஒரு சுகாதாரத் துணை நிலையம் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒரு கிராம சுகாதாரச் செவிலியர் செயல்பட்டு வருகிறார். அந்த கிராம  சுகாதாரச் செவிலியரின் உதவியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகள் அங்கன்வாடி மையத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

 1. கர்ப்பிணிகளைப் பதிவு செய்தல்
 2. கர்ப்பக்கால பராமரிப்பு மற்றம் பிரசவக்கால பராமரிப்பு
 3. ஆபத்தான நிலையிலுள்ள கர்ப்பிணிகளை சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்தல்
 4. தடுப்பூசிகள் போடுதல்
 5. உயிர்ச்சத்து "ஏ" திரவம் அளித்தல்
 6. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்துதல்
 7. இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்குதல்
 8. சுவாசமண்டல நோய்கண்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தல்
 9. வயிற்றில் பூச்சி உள்ள குழந்தைகளக்கு பூச்சி நீக்க மருந்து அளித்தல்
 10. வளரிளம் பெண்களுக்கும் 24 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் ரூபெல்லா தடுப்பூசி போடுதல்.

ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பணிகளானது, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பணியாளர்களால் இணைந்து கிராம அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கன்வாடி மைய அளவில் பயனாளிகள் கூடுமானவரை பயனடைய வழிவகை ஏற்படுகிறது.

பள்ளி முன்பருவக் கல்வி


1. மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளிக்கப்படுகிறது. செயல், விளையாட்டுக்கள் போன்ற சூழ்நிலையின் மூலமாக குழந்தைகளுக்கு அறிவு, மனம், சமூகம், மொழி மற்றும் உடல் வளர்ச்சி போன்றவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்வது, குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்தும் முதல் நிலைதான் முன்பருவக் கல்வி.
2. குழந்தைகள் சுற்றுப்புறத்தில் ஒருவருக்கொருவர் தாராளமாக பழகுவதற்கும், குழந்தைகளிடம் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கு முன்பருவகக் கல்வி அவசியமான ஒன்றாகும்.
3. ஒரு நல்ல வருங்கால சமுதாயத்தை உருவாக்க இன்றைய குழந்தைக்கு முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது.
4. இத்திட்டத்தில் ஒவ்வொரு 1000 மக்கட் தொகைக்கும் ஒரு அங்கன்வாடி பணியாளரும், குழந்தை நல அமைப்பாளரும் பணியாற்றி வருகிறார்கள்.
திட்டத்தில் சேர்ந்து பயனடைவது எப்படி?
 1. தாய் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் உடனடியாக உங்கள் ஊரில் உள்ள அஙுகன்வாடி மையத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பேறுகால முன் மற்றும் பின் கவனிப்பு சிறந்த முறையில் கிடைப்பதோடு நலமான குழந்தை பிறக்க வழி வகுக்கும்.
 2. இன்றைய இளம் பெண்கள் எதிர்கால தாய்மார்கள் என்பதற்கிணங்க இளம் பெண்களின் வளர்ச்சியை அவர்களாகவே கண்காணக்கும் விதமாக அங்கன்வாடி மையத்தில் இளம் பெண்கள் தங்களை சுயமாக எடை எடுத்து மையத்தில் உள்ள அட்டையில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
 3. திட்டப்பணிகளில் மக்கள் முன்வந்து பங்கேற்றுக் கொள்ள மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறார்கள். திட்டப்பணிகள் செம்மையாக செயல்படுத்த திட்டமிடுதல், செயல்படுத்துல், கண்காணித்தல், மறுசீராய்வு செய்தல், போன்ற பல பொறுப்புகளில் மக்களே ஈடுபட்டால் திட்டம் சிறப்பாக செயல்பட உதவிடும்.
 4. குழந்தையை எடை எடுக்க அங்கன்வாடி பணியாளர் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று காத்திராமல் தாய்மார்கள் மையத்திற்கு சென்று குழந்தையை எடை எடுக்கசொல்லி  அதன் வளர்ச்சியினை தெரிந்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு தாயும் தொடர்ந்து தன்னுடைய குழந்தையின் வளர்ச்சியினை கட்டாயமாக தெரிந்து கொள்வது அவசியம்.
 5. அங்கன்வாடி பணியாளரால் மாதந்தோறும் நடத்தப்படும் குழு உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
 6. இத்திட்டத்தின் பயன்களைப் பெற எவ்விதமான படிவங்களையும் பூர்த்தி செய்து தர வேண்டிய அவசியமில்லை.
 7. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வருமான வரம்பு ஏதுமில்லை
 8. சாதி சமய வேறுபாடுகளின்றி ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துணவு அளிக்கப்படும்.
 9. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திற்காக பரந்த மனப்பான்மையுடன் பணியாற்றும் அனைதது சமுதாய குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையமானது கூட்டம் கூடும் இடமாக செயல்படும்.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி மையப் பணியார்களை அணுகவும். மாவட்ட அளவில் மாவட்ட திட்ட அலுவலர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்களை  அணுகி விவரங்களை பெறலாம். மாநில அளவில் சென்னை 113, தரமணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

2.91666666667
ராமநாதன் Jan 22, 2019 06:19 AM

பள்ளி சத்துணவு மையங்களில் 2010 ஆண்டில் இருந்து வாரம் ஜந்து நாள் முட்டை வழங்க படுகிறது

இளங்கோவன் Jun 16, 2018 06:30 AM

அங்கன்வாடி மையம் கா்பிணித் தாய்மாா்கள் பாலூட்டும் தாய்மாா்கள் வளா்இளம் பெண்கள் முதியோா் அனைவருக்கும் பயனளிக்கும் மையம்.ஆகவே மே மாதத்தில் மூட முடியாது.

ஜெயக்குமார் Apr 21, 2017 04:03 PM

வணக்கம் ஐயா : ஆரம்பப் பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி . இங்கு இருக்கும் மானவர்களுக்கு மே மாதம் விடுமுறை வெயிலின் காரனமாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அங்கன்வாடி மட்டும் இயங்குகிறது இது எந்த வகையில் குழந்தைகள் தாங்கும் இது எப்படி சாத்தியமாகும் அதனால் அங்கன்வாடி விடுமுறை விட்டால் தானே நாயமாகும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top