பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / அழகுக் குறிப்புகள் / முகத்தில் மேடு பள்ளங்களை மறைக்க சில டிப்ஸ்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முகத்தில் மேடு பள்ளங்களை மறைக்க சில டிப்ஸ்

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன்பெறவும்

சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி மேடு பள்ளமான சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அவர்களின் முகமே அசிங்கமாக காணப்படும். இதனால் பல நேரங்களில் இத்தகைய முகத்தைக் கொண்டவர்கள் அசௌகரியத்தை உணர்வார்கள்.

ஆனால் இப்படி திறந்துள்ள சருமத் துளைகளை ஒருசில செயல்களின் மூலம் மறையச் செய்யலாம். இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், சருமத் துளைகளை மறைக்கலாம்.

ஐஸ்கட்டி மசாஜ்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.

தயிர்

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதற்கு தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத் துளைகளை சுருங்கச் செய்யும். அதற்கு ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் கூட சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு அதனை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

களிமண் மாஸ்க்

களிமண் மாஸ்க்கை போட்டால், சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக களிமண் மாஸ்க் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் செய்யும். அதற்கு ஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

உங்கள் முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

ஆதாரம் : http://tamil.boldsky.com

3.0
ஆனந்த் Nov 01, 2017 03:16 PM

என் முகத்தில் மங்கு அதிகமாக உள்ளது... தழும்புகளும் உள்ளது.. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

Abisheak Oct 14, 2017 09:32 AM

என் முகத்தில் பரு ,தழும்பு, குழி நிறைய உள்ளன . அது மறைய வேண்டும்

சீனு Oct 05, 2017 11:11 AM

என் முகத்தில் அதிகமாக முகப்பருக்கள் வந்து மறைந்து போனது ஆனால் கரும்புள்ளிகள் அதிக மாக இருக்கிறது முகமே கருமையாகி விட்டது.
என் முகம் வெள்ளையாக வதற்கும் மற்றும் கரும் புள்ளிகள் மறைய நான் என்ன செய்ய வேண்டும்.

கருனாகர் Mar 15, 2017 12:32 PM

என் முகத்தில் பள்ளம் அதிகமாக
உள்ளது ... மற்றும் ஒரு சந்தே கம் பரு விட்டு சென்ற பள்ளமும் தளும்பும் ஒன்று தானா ?
அல்லது வேற வே றயா?
மேலும் தளும்புகான சிகிச்சை ஒன்று செய்ய வேண்டுமா?
அல்லது எல்லாம் செய்யலாமா?
பிலிஸ் உங்கள் கருத்தை கூறுங்கள்

selvi Nov 22, 2016 04:15 PM

good tips

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top