பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / அழகுக் குறிப்புகள் / சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும் சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதற்கான குறிப்புகள்.

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை போக்க முயற்சிக்கலாம். அதிலும் அதனைப் போக்க மருத்துவரிடம் சென்றால், அவர்கள் அதனை எரிக்கலாம் என்று பரிந்துரைப்பார்கள். ஆனால், நம்மால் அதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இருப்பினும் இந்த மருக்களை ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் போக்கலாம். இங்கு அந்த மருக்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இஞ்சி

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

அன்னாசி

இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காய சாறு

வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

டீ ட்ரீ ஆயில்

இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேடவி, 20-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.

பூண்டு

பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய நன்மைகளில் ஒன்று தான் மருக்களைப் போக்குவது. அதற்கு கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

ஆதாரம் : போல்ட் ஸ்கை

2.82222222222
Sakani Jul 20, 2017 05:27 PM

முகத்தில் பருவும் வந்த கறுப்பு அடையாளாமும் போக என்ன செய்ய வேண்டும்

ரத்தனகுமார்.... Jun 12, 2017 10:14 PM

இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, தினசரி இரவு தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக மருக்கள் உள்ளஇடத்தில் தடவி தூங்கவும்.காலை மருவில் நன்றாக ஓட்டி இருக்கும் இடத்தில் தண்ணீரை கொண்டு ஊரவைத்து சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யவும்.ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்தால் பலன் நிச்சயம் உண்டு.மேலே குறிப்பிட்டபடி நான் செய்த்தில் பலன் கிடைத்தது. நன்றி......

Sasha Jun 03, 2017 09:05 AM

அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, மரு,முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும்.

kaviyarasan .S Mar 11, 2017 08:37 PM

ஐயா என் உடம்பில் மரு அதிகமாக உள்ளது ரொம்ப அசிங்கமாக உள்ளது கல்லூரி சென்றால் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் எனக்கு உதவி செயுங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top