பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / அழகுக் குறிப்புகள் / தலைக்கு குளிக்கும் போது பின்பற்ற வேண்டியவை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தலைக்கு குளிக்கும் போது பின்பற்ற வேண்டியவை

தலைக்கு குளிக்கும் போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செயல்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன்பெறவும்

உலகில் பெரும்பாலான மக்கள் தலைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இதற்கு அவர்கள் தலைமுடிக்கு கொடுக்கும் பராமரிப்புகளில் செய்யும் தவறுகளும் ஓர் முக்கிய காரணம். குறிப்பாக தலைக்கு குளிக்கும் போது ஏராளமானோர் பல தவறுகளைப் புரிகின்றனர். அந்த தவறுகள் என்னவென்று தெரிந்து, அவற்றைத் தவிர்த்து, தலைக்கு குளிக்கும் போது பின்பற்ற வேண்டியவைகளைத் தெரிந்து கொண்டு பின்பற்றி வந்தால், பாதி தலைமுடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இங்கு தலைக்கு குளிக்கும் போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செயல்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன.

தலையை சீவவும்

தலைக்கு குளிப்பதற்கு முன் ஒவ்வொருவரும் தவறாமல் சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் குளிக்கும் போது முடி உடைவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி குளிக்கும் முன் சீப்பு கொண்டு சீவினால், குளிக்கும் போது முடி கையில் கொத்தாக வருவதைத் தடுக்கலாம்.

தலையை நீரில் நன்கு அலசவும்

தலையை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் நன்கு அலச வேண்டும். பின் ஷாம்புவை நேரடியாக தலைக்கு பயன்படுத்தாமல், ஒரு பௌலில் போட்டு நீர் ஊற்றி நன்கு கலந்து, பின் தலையில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி ஷாம்புவைப் பயன்படுத்தினால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் முடியை நேரடியாக பாதிப்பதைத் தடுக்கலாம்.

மசாஜ் செய்யவும்

நிறைய பேர் தலைக்கு ஷாம்பு போட்ட பின், நுரை செல்லும் வரை மட்டும் நீரால் அலசி விட்டுவிடுவார்கள். ஆனால் அப்படி செய்தால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் அப்படியே படிந்து, அது பின் பொடுகை உண்டாக்கும். ஆகவே எப்போதும் ஷாம்பு போட்டு அலசியப் பின், தலையை நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்கு அலசவும்

அடுத்து தலை முடியை நீரால் நன்கு அலசி விட வேண்டும். அதிலும் பலமுறை நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

கண்டிஷனர்

பின் தலையில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துவிட்டு, பின் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக கண்டிஷனரை ஸ்கால்ப்பில் தடவாமல், முடியின் மட்டும் படுமாறு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

குளிர்ந்த நீர் பயன்படுத்தவும்

இறுதியில் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். ஆரம்பத்தில் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தினாலும், இறுதியில் ஒருமுறை குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள மயிர்துளைகள் இறுக்கமடைந்து, முடி உதிர்வதைத் தடுக்கும்.

முடியை உலர்த்தவும்

தலைக்கு குளித்த பின், முடியை எப்போதும் டவல் கொண்டு கடுமையாக தேய்க்காதீர்கள். இதனால் முடி உடையக்கூடும். மேலும் முடி நன்கு உலராமல், சீப்பைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் கையோடு முடி வரக்கூடும்.

குறிப்பு

தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால், தினமும் தலைக்கு குளிக்காமல், வாரத்திற்கு 2-3 முறை மட்டும் அலசுங்கள். தினமும் தலைமுடியை அலசினால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய் முழுமையாக வெளியேறி, முடி வறட்சி அடையக்கூடும்.

ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்

2.85
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top