பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி

கூந்தல் வளர்ச்சியில் செம்பருத்தியின் பயன்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

செம்பருத்தி

நாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும்,மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், கூந்தல் உதிர்ந்து, வரண்டு போய்விடுகிறது.

கூந்தலுக்கு கலரிங் செய்வது மிகவும் தவறு. இருப்பினும் அனைவரும் இப்போது செய்து கொள்வது ஃபேஷனாகி போய்விட்டது.

இவற்றினால் கூந்தல் பலவீனப்படுவதோடு மட்டுமல்லாமல் பொடுகு தொல்லையும் வலுக்கிறது.

இவற்றிற்கெல்லாம் அருமையான தீர்வு செம்பருத்தி மாஸ்க். செம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள் அற்புதமான கண்டிஷனர். தலைமுடியை பொடுகிலிருந்து காப்பாற்றுகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ, சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.

செம்பருத்தி மாஸ்க் செய்வது எப்படி?

செம்பருத்தியை தனியாக இல்லாமல் யோகார்ட் அல்லது வெந்தயத்துடன் சேர்த்து கலவையை தயாரிக்கவும். இது கூந்தலை இன்னும் அழகாக்கும், பலப்படுத்தும். முதலில் செம்பருத்தி-யோகார்ட் கலவை செய்யும் முறை - ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் - 8-10, யோகார்ட் - 3-4, டேபிள் ஸ்பூன், தேன் - 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்மெரி எண்ணெய் - சில துளிகள் (விருப்பமிருந்தால்)

1. முதலில் செம்பருத்தியின் தண்டினையும், அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும்.

2. அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும். தேவைக்கேற்ப நீர்விடவும்.

3. அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.

4. விருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம். ரோஸ்மெரி எண்ணெய் கூந்தல் வளர உதவிபுரிகிறது. இப்போது இந்த கலவையை தலை முடியின் வேர்கால்களிலிருந்து தடவ வேண்டும். முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.

ஆதாரம்: ஒன் இந்தியா நாளிதழ்

3.06896551724
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top