பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / அழகுக் குறிப்புகள் / முகப்பருவைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முகப்பருவைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

முகப்பருவைப் போக்கும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் இருந்தால், சருமத்துளைகளில் அடைப்புக்களை உண்டாக்கி பருக்களாக மாறும். சிலசமயம் முகப்பருக்கள் ஒருவரது தன்னம்பிக்கையை கூட இழக்கச் செய்யும்.

அவ்வளவு மோசமான முகப்பருவைப் போக்க பல வழிகள் இருக்கலாம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களால் முகப்பருக்களானது வேகமாக மறைவதோடு, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்கள் வராமல் செய்யும். அதற்கு எலுமிச்சை சாற்றினை பருக்கள் மீது தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அல்கலைன் தன்மை, முகப்பருவை போக்க உதவும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இச்செயலால் பருக்கள் மறைவதோடு, பருக்களால் ஏற்படும் தழும்புகளும் நீங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவும் முகப்பருவைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து முகப்பருக்களின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளியிலும் சிட்ரிக் அமிலம் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வர, பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

தேன்

தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஏராளமாக உள்ளதால், இதனை பருக்களின் மீது தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பருக்கள் வரும் வாய்ப்புக்கள் குறையும்.

டீ-ட்ரீ

ஆயில் டீ-ட்ரீ எண்ணெயில் பருக்களைப் போக்கும் உட்பொருட்கள் உள்ளது. எனவே இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால், பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி வந்தாலே, முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம். மேலும் கற்றாழை ஜெல் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கும்.

மஞ்சள்

மஞ்சளை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பருக்கள் வரும் பகுதியில் இரவில் படுக்கும் போது தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போய்விடும்.

ஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்

2.94202898551
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top