பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும் / காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது?

இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறவும்.

இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காண்பிக்கின்றனர். ஏனெனில் தற்போது பல்வேறு உடல்நல பிரச்சனைகள் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இதைக் காணும் போது ஒவ்வொருவரும் தனக்கு எந்த ஒரு நோயும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது பலர் தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களை நாடுகின்றனர். மேலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முனைகின்றனர். அதில் ஒன்றாக பலரும் நினைத்து பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது.

இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பாகற்காய் ஜூஸ்

உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லையா? மற்றும் உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.

வேப்பிலை ஜூஸ்

இது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று தான். ஆனால் வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ்.

கேரட் ஜூஸ்

நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.

சுரைக்காய் ஜூஸ்

உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.

ஆதாரம் : http://tamil.boldsky.com

2.97727272727
m.imrankhan Apr 15, 2018 01:16 PM

நன்றி

தா பாக்கியராஜ் Mar 22, 2018 11:31 PM

சந்தேகத்தை தீர்த்து கொண்டேன்

பாலமுருகன் Mar 20, 2018 08:41 AM

பயனுள்ள தகவளுக்கு நன்றி

வெங்கட்ராமன் Nov 05, 2017 03:14 PM

பயனுள்ள குறிப்புகள் மிக்க நன்றி

யூசுப் Jul 19, 2017 01:59 PM

வெள்ளேரிக்காயும் மோரும் கலந்து குடித்தால் என்ன நன்மை வரும் தெளிவு படுத்தவும்..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top