பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும் / சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள்

சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

தற்போது ஏராளமானோர் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள்.

இதற்கு அவர்களது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான் முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு அவர்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் முதன்மையான காரணமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன.

அதில் ஒன்று அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிப்பது. இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாவதோடு, இன்னும் வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி வலிமைப் பெறும்

சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள செல்கள் ஊட்டம் பெற்று, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, அதனால் நோய்களின் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

உடல் வறட்சி தடுக்கப்படும்

சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து தினமும் காலையில் குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

ஸ்டாமினா மேம்பட்டு ஆற்றல் கிடைக்கும்

தினமும் காலையில் மிளகுத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஸ்டாமினா அதிகரித்து, உள்ளுறுப்பு மண்டலங்கள் சீராக இயங்குவதோடு, வலிமையாகவும் இருக்கும்.

மலச்சிக்கல் தடுக்கப்படும்

சுடுநீருடன் மிளகுத் தூள் கலந்து பருகும் போது குடலியக்கம் மேம்பட்டு, உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

உடல் எடை குறையும்

சுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக பருகி வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.

சரும அழகு மேம்படும்

அதிகாலையில் மிளகுத் தூளை சுடுநீரில் சேர்த்து கலந்து பருகினால், உடல் மற்றும் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் எண்ணெய் பசை உற்பத்தியும் குறைந்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

உடல் சுத்தமாகும்

உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள், ஒரு மாதம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக்கப்பட்டு, மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

ஆதாரம் - மஹா, ஒன்இந்திய நாளிதழ்

2.97959183673
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top