பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர்ச்சத்து உணவுகளின் பயன்கள்

நீர்ச்சத்து உணவுகளின் பயன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் உடலில் நீர்ச்சத்து சீரான அளவு இருந்தாலே உங்கள் உடலில், உடல் உறுப்புகளில் எந்த விதமான பாதிப்புகளும் வராது.

இதற்கு நீங்கள் அன்றாடம் தேவையான அளவு காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

நீர்ச்சத்து மட்டும் தான் உடலில் நச்சுக்கள் மற்றும் கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த மூலப்பொருள்.

எலுமிச்சை

* நச்சுக்களை போக்க

* செரிமானத்தை சரி செய்ய

* நோய் எதிர்ப்பை ஊக்குவிக்க

* சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும்

வெள்ளரி

* நச்சுக்களை போக்க

* அழற்சியை சரி செய்ய

* செரிமானத்தை சீராக்கும்

ஆரஞ்சு

* நச்சுக்களை போக்க

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

திராட்சைப்பழம்

* நச்சுக்களை அழிக்க

* உடல் எடையை குறைக்க

* செரிமானத்தை சீராக்க

* ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகரிக்க

* குறைந்த கொலஸ்ட்ரால் சரி செய்ய உதவும்

பெர்ரி உணவுகள்

* நச்சுக்களை அழிக்க

* அழற்சியை எதிர்த்து போராட

* ஆண்டி-ஆக்ஸிடன்ட் அதிகரிக்க

* நோய் எதிர்ப்பு மண்டலம் வலுபெற

* புற்றுநோய் எதிர்த்து போராட தர்பூசணி:

* நச்சுக்களை போக்க

* அழற்சியை எதிர்த்து போராட

* இரத்த ஓட்டத்தை சீராக்க

* நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகரிக்க உதவும்

ஆப்பிள்

* நச்சுக்களை அழிக்க

* உடல் எடை குறைக்க

* புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட

* நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க

* அழற்சியை எதிர்க்க இலவங்கம்:

* வளர்சிதை மாற்றம் மேலோங்க

* அஜீரண கோளாறுகள் சரி செய்ய

* மூளையின் செயலாற்றல் மேலோங்க உதவும்

புதினா

* வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண

* செரிமானம் சிறக்க

* மன அழுத்தம், பதட்டம் குறைக்கும்

துளசி

* நச்சுக்களை அழிக்க

* அழற்சியை போக்க

* ஆண்டி-ஆக்ஸிடன்ட் அதிகரிக்க

* பாக்டீரியாக்களை நீக்க

* புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவும்

அற்புத ஜூஸ்கள் மற்றும் அதன் பலன்கள்

இந்த ஜூஸ்களை தயாரித்த பிறகு இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பிறகு குடியுங்கள்.

இதனால், இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் நன்கு கலக்கும். சிலர் இந்த ஜூஸ்களை குடித்த பிறகு பழங்கள் உண்ண கூடாது என எண்ணுகின்றனர்.

இந்த ஜூஸ்கள் குடித்த பிறகு பழங்கள் உண்பதால் எந்த பக்க விளைவுகளும் வராது.

இவை முழுமையாக இயற்கையான பானங்கள் தான்.

ஆப்பிள் இலவங்க ஜூஸ்

* அறுத்த ஓர் முழு ஆப்பிள்

* ஒரு இலவங்க பட்டை

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

தர்பூசணி புதினா ஜூஸ்

* ஒரு கப் அறுத்த தர்பூசணி

* 6-8 புதினா இலைகள்

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

எலுமிச்சை வெள்ளரி ஜூஸ்

* அறுத்த ஒரு எலுமிச்சை பழம்

* அறுத்த ஒரு எலுமிச்சை காய்

* பாதி வெள்ளரிக்காய்

* தேவையான அளவு நீர்

ஸ்ட்ராபெர்ரி லெமன் ஜூஸ்

* ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி

* அறுத்த எலுமிச்சை பழம் ஒன்று

* கால் கப் துளசி இலைகள்

* தேவையான ஐஸ் தண்ணீர்

ஆரஞ்சு ப்ளூபெர்ரி ஜூஸ்

* பாதி கப் ப்ளூபெர்ரி

* ஒரு கப் ஆரஞ்சு

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

ராஸ்பெர்ரி லெமன் ஜூஸ்

* பாதி கப் ராஸ்பெர்ரி

* ஒரு அறுத்த லெமன்

* 8 புதினா இலைகள்

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

லெமன் கிரேப்ஃப்ரூட் ஜூஸ்

* கால் கப் ஸ்ட்ராபெர்ரி

* ஒரு அறுத்த எலுமிச்சை சாறு

* ஒரு அறுத்த கிரேப்ஃப்ரூட்

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

பழரசம்

* ஒரு கப் அறுத்த ஸ்ட்ராபெர்ரி

* இரண்டு ஸ்லைஸ் செய்த கிவி

* இரண்டு அறுத்த எலுமிச்சை பழங்கள்

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

ஸ்ட்ராபெர்ரி கிவி ஜூஸ்

* 7-8 அறுத்த ஸ்ட்ராபெர்ரி

* ஒரு அறுத்த கிவி பழம்

* கால்வாசி அறுத்த வெள்ளரிக் காய்

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

ப்ளூபெர்ரி கிவி ஜூஸ்

* பாதி கப் ப்ளூபெர்ரி

* இரண்டு அறுத்த கிவி பழங்கள்

* மூன்று புதினா இலைகள்

* தேவையான அளவு ஐஸ் தண்ணீர்

ஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்

2.94
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top