பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற உணவுப் பழக்கம்

உடற்பயிற்சி செய்ததற்கு ஏற்ப உணவையும் உட்கொள்ள வழிமுறைகள்.

உணவுப் பழக்கம்

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு வேண்டும் என்று உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது.அதற்கு ஏற்றார் போல உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

சிலர் நிறைய உடற்பயிற்சி செய்வார்கள் அதோடு சேர்த்து நிறைய உணவுகளும் உட்கொள்வார்கள். சிலர் உடற்பயிற்சி செய்துவிட்டு மிகவும் குறைவாக உணவு உட்கொள்வார்கள். இவை இரண்டுமே தவறு, நீங்கள் உடற்பயிற்சி செய்ததற்கு ஏற்ப உணவையும் உட்கொள்ள வேண்டும்.அப்போது தான் உங்களுக்கு ஃபிட்டான உடற்கட்டு கிடைக்கும். உணவிலும், நீங்கள் உட்கொள்ள வேண்டிய, உட்கொள்ள கூடாத உணவுகள் என நிறைய இருக்கின்றன.

ஏனெனில், கொழுப்பில் இருவகை உள்ளது, ஒன்று உடலுக்கு நன்மை (எச்.டி.எல்) விளைவிக்கும் மற்றொன்று (எல்.டி.எல்) கேடினை விளைவிக்கும்.

எப்போது உணவு சாப்பிட வேண்டும்

பெரும்பாலும், உடற்கட்டை பேணிக்காக்கும் பாடி பில்டர்கள் ஒரே வேளையில் நிறைய உணவு சாப்பிட மாட்டார்கள். அதற்கு பதிலாக, ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் இடைவேளையில் அளவான கலோரிகள் கொண்ட உணவுகளை உட்கொள்வார்கள். இதில் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். நேர தாமதமாக உட்கொள்ளுதல் கூடாது.

இனிப்பு உணவுகள்

அதிகம் வேண்டாம் முடிந்த அளவு முற்றிலும் இனிப்பு உணவை கைவிட்டுவிடுங்கள். பாடி பில்டிங் செய்பவர்கள் எப்போதும் அதிகம் இனிப்பை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

காலை உணவு முக்கியம்

பாடி பில்டர்கள் காலை உணவை எப்போதும் தவிர்ப்பது கிடையாது. காலை நீங்கள் உங்கள் உடல் வேலைக்கு ஏற்ப நிறைய உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல தான் மதிய உணவும். இரவு மட்டும் நீங்கள் குறைவான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். இரவு அதிகம் உட்கொள்வது கொழுப்பை அதிகரித்துவிடும்.

காலை உணவில் முட்டை

பாடி பில்டர்கள் புரதச்சத்தை அதிகம் உட்கொள்வார்கள். இது உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. அசைவம் பிடிக்காதவர்கள் சைவ உணவுகளை புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

மூன்று முறையல்ல, ஆறுமுறை

பாடி பில்டிங் செய்பவர்கள் மூன்று வேளையில் அதிக உணவை சாப்பிடுவதை தவிர்த்து, ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடுகின்றனர். இதனால், உடலில் அதிகம் கொழுப்பு சேர்வதை தவிர்க்க முடியும்.

பயிற்சிக்கு முன்பும், பின்பும்

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், பிறகும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பொதுவாக, வேக வைத்த முட்டையின் வெள்ளை கருவை உட்கொள்ளலாம் என பாடி பில்டர்கள் கூறுகிறார்கள்.

டயட் இல்லை

பாடி பில்டிங் செய்பவர்கள் தனித்துவமான டயட் எதையும் பின்பற்ற தேவையில்லை, உட்கொளும் கலோரிகள் கொழுப்பாக மாறும் முன்னர் அதை கரைத்துவிடுவதே போதுமானது என்று கூறுகிறார்கள்.

பழங்களும், காய்கறிகளும்

கண்ட ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம், உணவு உட்கொள்ளும் வேளைகளுக்கு நடுவே வேக வைத்த காய்கறிகள் சாப்பிடுவது நல்லது.

ஆதாரம்: http://tamil.boldsky.com

2.97701149425
அபுதல்ஹா Jun 05, 2018 10:53 AM

good


super

ராஜ்-இளநிலை உதவியாளா்-திண்டுக்கல் Aug 21, 2017 10:16 PM

உடலை கட்டுவதற்கு நல்ல குறிப்புகள் -பின்பற்றுவீா் பயன்பெறுவீா்.

Chandran Jul 09, 2017 03:23 AM

மிகவும் பயனுள்ள செய்தி.

முஹம்மது ஷரீப் May 18, 2017 06:26 AM

மிகவும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றி

ர.ராகுலன் May 04, 2017 02:53 PM

நன்று

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top