பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவதன் நன்மைகள்

வெறும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு தன் உடலில் என்ன மாற்றங்களை உணரமுடியும் என்று பார்ப்போம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் ஆரோக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. பொதுவாக வாழைப்பழத்தை அனைவருமே சாப்பிடலாம். நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எவ்வித அச்சமும் இல்லாமல் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

தொடர்ந்து 4 வாரம் 3 லிட்டர் தண்ணீரை குடித்து ஆச்சரியப்படும் வகையில்

இத்தகைய வாழைப்பழத்தின் நன்மைகளைப் புரிந்து வாழைப்பழத்தை மட்டும் தொடர்ந்து 12 நாட்கள் சாப்பிட  இந்த 12 நாட்களும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மட்டும் உண்டு வந்து அதோடு தண்ணீர் அதிகம் குடித்து, உடற்பயிற்சியை மேற்கொண்டு, நன்கு ஓய்வும் எடுத்து  இதனால் தன் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறியுள்ளார்கல். அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில மாற்றங்களையும் உணர்ந்தார்கல். சரி, இப்போது 12 நாட்கள் தொடர்ந்து வெறும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு தன் உடலில் என்ன மாற்றங்களை உணர்ந்தால் என்று பார்ப்போம்.

வயிற்று பிரச்சனைகள் இல்லை

வாழைப்பழங்களை மட்டும் உட்கொண்டு வந்தல் முதலில் செரிமானம் சீராக நடைபெறுவதை உணர்ந்தல்

வாழைப்பழ டயட்டை மேற்கொண்ட பின் செரிமானம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படுவதை நன்கு உணர முடிந்தது இதற்கு வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து தான் காரணம்.

ரிலாக்ஸ்

வாழைப்பழ டயட்டை மேற்கொண்ட பின் மனம் நன்கு அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பதையும்  அதுமட்டுமின்றி நிறைய படைப்பாற்றல் அதிகரித்திருப்பதையும்  மேலும் எதிலும் நன்கு கவனத்தை செலுத்த முடியும் இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ட்ரிப்டோஃபேன் தான் முக்கிய காரணம். இவையே உடலில் உள்ள செல்கள் சீராக தொடர்பு கொள்ளவும், மூளையில் சரியான ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு

வாழைப்பழ டயட்டை மேற்கொள்ளும் முன் இருந்த உயர் இரத்த சர்க்கரை அளவானது, இந்த டயட்டை மேற்கொண்ட பின் சரியான அளவில் இருந்ததாம்.

உடலின் ஆற்றல்

இதுவரை சோர்வை சந்தித்த இவர், வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பதை உணரமுடியும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

இதுவரை இருந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனையானது, வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது இல்லை என்பதை நன்கு உணர முடியும்

எடை குறைவு

வாழைப்பழ டயட்டை பின்பற்றியதன் விளைவாக, உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும், உடலில் இதுவரை இருந்த பிரச்சனை நீக்கி ஆரோக்கியமாக இருப்பதை உணர முடியும்.

குறிப்பு :

வாழைப்பழ டயட் அனைவருக்குமே பொருந்தாது. குறிப்பாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த டயட் சரியானது அல்ல.

எனவே இந்த டயட்டை மேற்கொள்ளும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் ஆரம்பியுங்கள்.

கேள்வி பதில்கள்

1. வாழைப்பழத்திலிருந்து தயாரிக்கக் கூடிய பொருட்கள் யாவை?

வாழைப்பழ சிப்ஸ்.

வாழைப் பழப்பானம்.

வாழைப் பழச்சாறு (ஜீஸ்).

பல பழங்கள் கலந்த ஜாம்.

2. வாழையிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின் சேமிப்புக் காலம் எவ்வளவு?

சரியான சேமிப்பு வெப்பநிலையில் இப்பொருட்கள் 6 மாதங்கள் வரை கெடாது. டின்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன வெப்பநிலையில் இவற்றின் சேமிப்புக் காலம் இருமடங்கு ஆகும்.

3. பழங்களின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்க உதவும் சிறந்த முறை எது?

குளிர்பதன நிலையில் சேமித்து வைப்பதே நீண்ட காலச் சேமிப்புக்கு ஏற்ற முறை எனினும், மெழுகுக் கரைசலில் நனைத்தல், வளையக் கூடிய மென் நிழற்படங்களில் பேக் செய்து வைத்தல், எத்திலின் பயன்படுத்துதல் போன்றவை அறை வெப்பநிலையில் குறுகிய காலச் சேமிப்பிற்கு ஏற்ற முறைகளாகும்.

3.11818181818
ராஜ் Aug 10, 2017 12:08 AM

பணிக்கு செல்பவர்கள் இந்த டயட்டை எடுக்களாமா?

priya chennai Nov 13, 2016 03:38 PM

மாதவிடாய் நாட்களில் வாழைப்பழம் உண்ணலாமா...?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top