பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும் / வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்

தினமும் வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள்.

சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது.

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.

இப்படி தினமும் குடித்து வந்தால், கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.

  • வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.
  • சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
  • வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
  • வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
  • நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

ஆதாரம் - தமிழ் போல்ட்ஸ்கை

3.13636363636
வே.சபாரத்தினம் Jan 26, 2018 09:24 AM

வெண்டக்காய் ஊறவைத்த நீரோடு ஊறவைத்த வெண்டக்காயையும் சாப்பிட வேண்டுமா?

சிவகுமார் Jul 03, 2017 11:04 AM

தகவலுக்கு நன்றி, வெண்டைக்காய் நீரை தினமும் அருந்துவதா அல்லது வாரம் ஓரிரு முறை அருந்துவதா என்பதையும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதா அல்லது ஏதாவது அருந்தி/சாப்பிட்ட பின்பு அருந்துவதா என தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

மேகநாதன் Apr 04, 2017 10:49 PM

வெண்டைக்காயை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிடுவது?

வெற்றிவேல் Aug 17, 2016 03:22 PM

வெண்டைக்காய் நறுக்கி ஊறவைத்து சாப்பிட வேண்டுமா?

சிவகுமார் Jun 11, 2016 04:35 PM

தகவலுக்கு நன்றி, வெண்டைக்காய் நீரை தினமும் அருந்துவதா அல்லது வாரம் ஓரிரு முறை அருந்துவதா என்பதையும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதா அல்லது ஏதாவது அருந்தி/சாப்பிட்ட பின்பு அருந்துவதா என தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top