பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நில நெல்லி - மருத்துவ குணங்கள்

நில நெல்லி தாவரத்தின் மருத்துவ குணங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

நில நெல்லி சாலையோரங்களில் கிடைக்க கூடியது. கீழ்காய் நெல்லியை போன்ற வடிவமைப்பை பெற்றது. பல்வேறு நன்மைகளை கொண்ட நில நெல்லி மஞ்சள் காமாலை மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. விரை வீக்கத்தை குறைக்க கூடிய தன்மை கொண்டது. காய்ச்சலை தணிக்கவல்லது. பசியை தூண்டக் கூடியது. வயிற்று புண்களை ஆற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது. சீத பேதியை தணிக்க கூடியது. நில நெல்லியின் இலை முதல் வேர் வரை மருந்தாக பயன்படுகிறது. நில நெல்லியை பயன்படுத்தி வெள்ளைப்படுதல், அடிவயிற்றில் ஏற்படும் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். நில நெல்லி இலை மற்றும் வேர் ஒருபிடி அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கவும். 100 மிலி வரை எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.

நில நெல்லியில், இலைகளுக்கு சற்று இடைவெளியில் காய்கள் இருக்கும். நில நெல்லி தோல்நோய் மருந்தாகிறது. உள் மருந்தாக சாப்பிடுவதால் விட்டுவிட்டு வரும் வயிற்று வலி, சிறுநீர் தாரையில் ஏற்படும் வலி, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி, வெள்ளைப்போக்கு ஆகியவை குணமாகும்.  நில நெல்லியை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி நில நெல்லி இலை மற்றும் காய்கள் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி உணவுக்கு முன்பு 100 மிலி வரை குடித்துவர மஞ்சள் காமாலை குணமாகும். பித்தத்தை சமன்படுத்தும். சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது.

முறையற்ற உணவு, காரம், எண்ணெய் அதிகளவில் உபயோகப்படுத்துவதாலும், தண்ணீரினால் ஏற்படும் தொற்று போன்றவற்றால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இந்நோய்க்கு நில நெல்லி சிறந்த மருந்தாகிறது. நில நெல்லி பசியை தூண்டும்.  நில நெல்லி இலை பசையுடன் உப்பு சேர்த்து கலந்து சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால் சிரங்கு குணமாகும். நில நெல்லியானது தேமல், சொரி, சிரங்கு போன்றவற்றுக்கு மருந்தாகிறது.

நில நெல்லி இலையை பயன்படுத்தி புண்கள், பூச்சிக்கடிக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை பசையுடன் நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலம் புண்கள், பூச்சிக்கடியை குணப்படுத்தும். நில செல்லி செடி வகையை சார்ந்தது. கீழா நெல்லியை போன்று இருக்கும். பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. எளிதில் கிடைக்க கூடிய இது உன்னதமான மருத்துவ குணங்களை கொண்டது. நில நெல்லியின் இலைகளை மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோல்நோய்கள் குணமாகும். வேர் பகுதியை தேனீராக்கி குடிப்பதால் பேதி சரியாகிறது. தலைக்கு தேய்த்து குளிப்பதனால் பொடுகு இல்லாமல் போகும்.

ஆதாரம் : இயற்கை மருத்துவம்

2.90163934426
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top