অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

வயிற்றுச் சுத்தத்தின் முக்கியத்துவம்

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மிகவும் முக்கியம்.

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும்.

எப்படிச் சுத்தமாய் வைத்திருப்பது?

  • ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.
  • வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை மடல்களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடும். பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தினால் வயிறு கழியும். அத்துடன் வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும்.

இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.siththarkal.com/2012/05/blog-post_18.html



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate