பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / இடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி

இடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி

செஸ்ட் மசில்ஸ் ஸ்ட்ரெச்சிங் (Chest muscles stretch)

கால்களை அகட்டி, நேராக நிற்க வேண்டும். கைகளைப் பின்பக்கமாகக் கொண்டுசென்று கோத்துக்கொள்ள வேண்டும்.  முன் உடலை வளைத்து, தரையைப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் கைகளை மேலே உயர்த்த வேண்டும். இதே நிலையில் 15 விநாடிகள் இருக்க வேண்டும்.

பலன்கள்

நெஞ்சுப் பகுதி விரிவடையும். வயிறு, மார்புப் பகுதி தசைகளுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

சைடு மசில்ஸ் ஸ்ட்ரெச் (Side muscles stretch)

காலை அகட்டி நிற்க வேண்டும். உடலை வலது பக்கமாக வளைத்தபடி, வலது கையை வலது காலின் மூட்டுப் பகுதியில் வைக்க வேண்டும். இடது கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, வளைக்க வேண்டும். இடுப்புப் பகுதி நன்றாக வளைந்திருக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருக்க வேண்டும்.

பலன்கள்

இடுப்புப் பகுதிக்கு நல்ல தளர்ச்சி கிடைக்கும். பக்கவாட்டில் உள்ள சதைகள் குறையும்.

அப்டாமன் ஸ்ட்ரெச் (Abdomen stretch)

கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்பின் பின்புறமாக வைக்க வேண்டும். உடலை முடிந்தவரை பின்புறமாக வளைக்க வேண்டும். பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில், 10 முதல் 15 விநாடிகள் இருக்க வேண்டும்.

பலன்கள்

நெஞ்சுக்கூட்டுப் பகுதி நீட்டி தளர்த்தப்படும். தண்டுவடம் வளையும் தன்மைபெறும்.

ஆதாரம்: மாலைமலர்

2.97101449275
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top