பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி

உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி

கொலம்பியன் டான்ஸர் மற்றும் நடன இயக்குநரான பெட்டோ பெரெஸ் (Alberto Beto Perez) என்பவரால் உருவாக்கப்பட்ட நடன உடற்பயிற்சி வகை இது. வழக்கமான போரடிக்கும் ஜிம் பயிற்சி நிமிடங்களை உற்சாகமானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும் ஆக்கியது ஜும்பாவின் இசை மற்றும் நடன முறை.

ட்ரெட் மில் மற்றும் க்ராஸ் ட்ரெயினரில் ஓடுவது ரொம்ப போர். என் சாய்ஸ் டான்ஸ்தான் என்று சொல்பவர்களுக்கு ஜும்பா ஒரு வரப் பிரசாதம். வழக்கமான போரடிக்கும் ஜிம் பயிற்சி நிமிடங்களை உற்சாகமானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும் ஆக்கியது ஜும்பாவின் இசை மற்றும் நடன முறை. உடலை நேர்த்தியாகவும் ஃபிட் ஆகவும் வைத்துக் கொள்வது ஒரு கலை. அதற்கும் ஜும்பா ரொம்பவே உதவும். எடைக் குறைப்பிலும் ரெகுலராக ஜும்பா பயிற்சி செய்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்கின்றனர்.  50 நிமிட தொடர்ச்சியான ஜும்பா பயிற்சியின் போது சராசரியாக 500-750 கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கை, கால், அடி வயிறு, தோள், இடுப்பு என அனைத்து அங்கங்களுக்கும் சரியான மற்றும் தீவிர அசைவுடன் கூடிய நடன அசைவுகள் மூலம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை உபயோகித்து எடை குறைக்க ஏதுவாகிறது. ஜும்பா பயிற்சியை முனைப்புடன் செய்யும்போது, மன நிலையை மகிழ்ச்சியாக மாற்ற உதவும் Endorphins என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கிறது.

ஆதாரம்: மாலைமலர்

3.08620689655
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top