பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / உள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்

அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர்.

தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும்,  வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும்,  இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும்.  உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு >70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம்.  குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.

நாமும் பயிற்சி மேற்கொண்டு நல்லதொரு ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம்.

ஆதாரம் : சர்ச்சில் துரை

3.02857142857
Anonymous Mar 27, 2018 09:41 PM

நன்றி

M. Dinesh. BCA 1st year Dharmapuram adhinam arts college Jul 15, 2017 02:23 PM

தங்களின் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது..
மிக்க நன்றி..
👏👏👏👏👏👌👌👏👏👏👏👏👏👏💞💞💞

thenappankrodc Jul 12, 2016 03:30 PM

Thanks

muthu May 10, 2016 05:49 PM

நல்ல தகவல்

Charchil Durai P Apr 25, 2016 06:27 PM

நண்பர்களே உரிய படங்களை இணைக்கவும். மக்களுடன் கருத்துக்களை சேர்க்க அவை பயனளிக்கும்
நன்றி அய்யா

C. Dinesh Apr 22, 2016 04:00 PM

நல்லதொரு பதிவு இதற்க்கு படங்கள் இருந்தால் இணைக்கலாமே. இதனை சூபர் பிரைன் யோகா என்று வெளிநாடுகளில் பயிற்சி கொடுக்கிறார்கள்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top