பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊட்டச்சத்தின் வகைகள்

ஊட்டச்சத்தின் வகைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

புரதம்

இவை அமினோ அமில சங்கிலித் தொடர்களால் உண்டாக்கப்பட்டுள்ளன. முக்கிய அமினோ அமிலங்கள் எனப்படும் புரதத்தின் சில அமினோ அமில அங்கங்கள், உடலால் உருவாக்கப்பட முடியாதவை. அவற்றை உணவில் இருந்து நேரடியாகப் பெற வேண்டும். விலங்குப் புரதம் (பால், இறைச்சி, பாலாடைக் கட்டி, மீன், முட்டை)  அனைத்துத் தேவையான அமினோ அமிலங்களையும் சமமான அளவில் கொண்டுள்ளது. தாவரப் புரதம் சில முக்கியமான அமினோ அமிலங்களின் குறைந்த அளவைக் கொண்டுள்ளது. ஒரு கிராம் புரதம் 4 கி.எரிசக்தி (கலோரி) ஆற்றலைத் தருகிறது.

கொழுப்பு

கொழுப்பும் எண்ணெய்யும் முக்கிய ஆற்றல் ஆதாரங்கள் (1 கிராம் கொழுப்புக்கு 9 கி.எரிசக்தி. ஆற்றல்). மாச்சத்தோடும் (கார்போஹைடிரேட்) புரதத்தோடும் ஒப்பிடும்போது இரு மடங்கு ஆற்றல் அடக்கம் (எடைக்கு எடை). கொழுப்பு அமிலங்கள் தேவைப்படும் பல உடலியல் செயல்பாடுகளுக்கு இது அவசியம்.

மாச்சத்து

இவைகள் பொதுவாக தாவர மூலத்தைக் கொண்டவையும், தானியங்களின் பெரும்பகுதியுமான மாப்பொருட்களும் சர்க்கரையுமாகும். இந்தியா போன்ற பெரும்பாலான வளர்ந்துவரும் நாடுகளில் உணவு ஆற்றல் முக்கியமாகத் தானியங்கள் போன்ற மாச்சத்து மூலங்களில் இருந்தே கிடைக்கின்றன. மாச்சத்துக்கள் 1 கிராமுக்கு 4 கி.எரிசக்தி ஆற்றலை அளிக்கிறது.

உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)

உடல் போதுமான அளவுக்கு இயங்க உயிர்ச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் இரு முக்கிய வகைகள் உண்டு:

நீரில் கரையும் உயிர்ச்சத்துக்கள்

இவ்வகையில் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் அடங்கும் —— குறிப்பாக தியாமைன் (பி 1) ரிபோஃபிளாவின் (பி2), நியாசின் மற்றும் வைட்டமின் சி. முழு தானியங்கள், பருப்புகள், பிற காய்கறிகள் மற்றும் விலங்குணவுகள் பி-காம்ப்ளெக்ஸ் உயிர்சத்துக்களுக்கு சிறந்த மூல ஆதாரங்களாகும். பச்சைக் கனிகளிலும் காய்கறிகளிலும் வைட்டமின் சி காணப்படுகிறது. நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களை சமைக்கும்போது எளிதாக இழந்துபோக நேரிடுகிறது.

கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள்

பெரும்பாலான விலங்குப் பொருட்களில் காணப்படும் ஏ, டி, ஈ, கே வைட்டமின்களே இவ்வகையில் அடங்குவன. அவசர காலங்களில் தேவைப்படும் மிக முக்கியமானவை ஏ- யும் டி- யுமாகும்.

உயிர்ச்சத்து ஏ

தோல் மேற்புற உயிரணுக்களின் ஆரோக்கியத்தையும், சவ்வுகள் மற்றும் இரவுப்பார்வையையும்  பேண உயிர்ச்சத்து ஏ செயலாற்றுகிறது. இது பொதுவாக விலங்குணவுகளிலேயே காணப்படுகிறது. ஆயினும் இதன் முன்னோடிகளில் ஒன்றான பி-கரோடின் தாவரங்களில் காணப்படுகிறது. உடலில் இது வைட்டமின் ஏ யாக மாற்றப்படுகிறது.

உயிர்சத்துக்கள் டி சூரிய ஒளியால் தோலில் உண்டாக்கப்படுகின்றன. இது மீன் மற்றும் விலங்குகளின் ஈரலில் காணப்படுகிறது.

தாதுப்பொருட்கள்

  • முக்கியமானவை இரும்பு, ஐயோடின், சிங்க் போன்றவை. இரத்தப்புரதத்தை உண்டாக்க இரும்பு தேவைப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் இரும்புச் சத்துக் குறைவே இரத்தச் சோகை நோய்க்குப் பரவலான காரணமாகும். கீரைகள், சிவப்பு இறைச்சி, மீன் ஆகியவற்றில் இரும்பு அதிகமாக உள்ளது. இதுபோலவே ஐயோடின் குறைவால் முன்கழுத்துக் கழலை, தைராயிடு சுரப்புக் குறை, அங்கக்கோணல், உளநிலை மந்தம் போன்ற பல கோளாறுகள் ஏற்படுகின்றன. இவற்றை ஐயோடின் உப்பு வழங்குதல் போன்ற எளிமையான பொது ஆரோக்கிய நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்.
  • உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உட்கொள்ளப்படும் பொருளே உணவாகும். உணவு அளிக்கும் ஊட்டச்சத்தின் அடிப்படையில் அதைப் பத்து வகையாகப் பிரிக்கலாம்: தானியங்களும் சிறுதானியங்களும், மாச்சத்து வேர்கள், சர்க்கரைகளும், பாகுகளும் வெல்லமும், கொட்டைகளும் எண்ணெய் வித்துக்களும், காய்கறிகள், பழங்கள், இறைச்சியும் மீனும் முட்டையும், பாலும் பால் பொருட்களும், எண்ணெய்யும் கொழுப்பும், பானங்கள். அது பொதுவாக விலங்கு அல்லது தாவர மூலத்தையுடையது; ஓர் உயிரியால் உட்கொள்ளப்பட்டு, ஆற்றல் உற்பத்தி செய்யவும், உயிர்வாழ்க்கை பராமரிக்கப்படவும் அல்லது வளர்ச்சியைத் தூண்டவும் அதனுடைய உயிரணுக்களால் செரிமானம் செய்யப்படுகிறது.

சமநிலை உணவு

ஆரோக்கியத்தையும், உள்ளுரத்தையும், பொதுவான நலத்தையும் பேணுவதோடு, வாட்டம் ஏற்படும் சில குறைந்த கால அளவின் போது  தாக்குப்பிடிக்கக், கூடுதலான குறைந்தபட்ச  சேமிப்பைச் செய்யவும் தேவைப்படும் ஆற்றல், அமினோ அமிலங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், கொழுப்புகள், மாச்சத்துக்கள், மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றைப் போதுமான அளவுக்குப் பெற்றுக்கொள்ளத் தேவையானவற்றை தகுந்த அளவிலும் விகிதத்திலும் கொண்ட பலவகையான உணவுகளே சமநிலை உணவு என்று வரையறுக்கப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.15625
Kawsalya Jun 26, 2020 12:27 PM

சமநிலை உணவிற்கு உதாரண
ம்

Tamizhselvam Feb 02, 2017 05:23 PM

நன்று

Pavendan Dec 29, 2016 11:44 AM

அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top