பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தாய்நலமும் ஊட்டச்சத்தும்

தாய்நலமும் ஊட்டச்சத்தும் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பேறுகாலத்தில் ஏறத்தாழ 9-11 கி.கி. எடை கூடும்.
  • தாயின் நலத்தைப் பேணவும், வளரும் கருவின் தேவைகளை நிறைவு செய்யவும், குழந்தைப் பிறப்பின் போது தேவைப்படும் வலிமையையும் உள்ளுரத்தையும் வழங்கவும்,
  • போதுமான அளவுக்குப் பால்சுரக்கவும் கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.
  • தாய்க்கு இரத்தச்சோகை நோய் இருந்தாலும் கரு தனக்குத் தேவையான இரும்புச்சத்தைத் தாயிடம் இருந்தே எடுத்துக்கொள்கிறது.
  • அதனால் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி, ஈரல், முட்டை, பச்சைப்பட்டாணி, பருப்புகள், கீரைகள், பேரீச்சை ஆகியவற்றை உட்கொள்ள தாயை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், எளிதில் செரிமானம் அடையத் தக்கதாகவும், புரதம், தாது, உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
  • குறைந்த அளவு ஒரு லிட்டர் பால், ஒரு முட்டை, நிறைய பச்சைக் காய்கறிகள் பழங்களைக் முக்கிய உணவோடு கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top