பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / உணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்

வாழை மற்றும் ஓட்ஸ் போன்ற உணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வாழைப்பழம்

எல்லா நேரத்திலும் விரும்பபக்கூடிய மற்றும் அனைவராலும் வாங்கக்கூடிய பழம். வாழைப்பழம் எல்லா நேரத்திலும் (வருடம் முழுவதும்) கிடைக்கக்கூடிய பழமாகும். இது பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. இப்பழம் எல்லா மனிதர்களாலும் சுலபமாக வாங்கக்கூடியது மற்றும் அதிகளவில் கிடைக்கக்கூடியது. அனைத்துவகை வாழைப்பழங்களும் ஏதோ ஒரு வகையில் பலனளிக்கக்கூடியவைகளாகும். வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது. வாழைப்பழம் சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள்ள உதவுகிறது.

 • மனஅழுத்தம் - வாழைப்பழத்தில் ஒருவகை புரதம் உள்ளது. நம் உடல் இப்புரதத்தினை செரடோனன் எனும் வேதிப்பொருளாக மாற்றுகிறது. இப்பொருள் மனதை தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
 • ப்ரிமென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் - (மாதவிடாய் முன் அளிகுறிகள்) வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிப்படுத்துகிறது. இது ஒருவரின் மனநிலையினை மாற்றச் செயல்படுகிறது.
 • இரத்த சோகை - வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது இரத்தசோகை நோயை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது
 • இரத்த அழுத்தம் - வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் தாதுப் பொருளும் அதே வேளையில் குறைந்த உப்பும் உள்ளது. எனவே இரத்த அழுத்தத்தை குறைக்க இது தகுந்த உணவாகும்.
 • மூளைத்திறன் - பொட்டாசியம் அதிகமுள்ள பழங்கள் மக்கள் சுதாரிப்பாக இருக்கச் செய்து, அதிகளவில் கற்றுக்கொள்ள உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
 • மலச்சிக்கல் - வாழைப்பழத்தில் உள்ள அதிக நார் சத்தானது மலச்சிக்கல் பிரச்சினையை மேற்கொள்ள உதவுகிறது மற்றும் சாதாரணமாக எவ்வித கஷ்டமுமின்றி மலம் கழிக்க உதவுகிறது.
 • நெஞ்செரிச்சல் - வாழைப்பழத்தில் இயற்கையாகவே நம் உடலில் உள்ள அமிலத்தை சமமாக்கும் தன்மை உள்ளது. இது நெஞ்செரிச்சலிலிருந்து நல்ல நிவாரணம் தர உதவுகிறது.
 • அல்சர் எனப்படும் வயிற்று மற்றும் குடல்புண் - வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், இது குடலில் ஏற்படும் கோளாறு உள்ளவர்களுக்கும், நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது.
 • ஸ்ட்ரோக் - வாழைப்பழத்தினை உணவில் ஒருபகுதியாக தவறாமல் எடுத்துக்கொள்வதினால் அதிகளவு (40 சதம்) ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தினை தவிர்க்கிறது.

ஓட்ஸ் (புல்லரிசி உணவு)

 • ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது.
 • இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது.
 • ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இதினால்தான இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது
 • அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது.
 • நரம்பு சம்மந்தமான கோளாறுகளிலும் ஓட்ஸ் உதவுகிறது
 • ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது
 • ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டிஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

கேள்வி பதில்கள்

1. முட்டைகளில் ஊட்டச்சத்துக்கள் யாவை?

100 கிராம் இறைச்சியில் பெறும் புரதச்சத்துக்களை 2 முட்டை உட்கொள்வதன் மூலம் சமப்படுத்தலாம். 60 கிராம் முட்டையிலிருந்து கிடைக்கும் சக்தியானது 376 கி.ஜூல் ஆகும். கொழுப்பு சத்துக்கள் 7 கிராம் மற்றும் கொலஸ்டிரால் 180 மி.கி. ஆகும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ,டி,இ மற்றும் நுண்ணூட்ட சத்துக்களான இரும்பு மற்றும் துத்தநாகமும் காணப்படும்.

2. அதிக பழங்களை உட்கொள்வதன் மூலம் அனைத்து நார் சத்துக்களும் கிடைக்குமா?

பழ மற்றும் காய்கறிகள் அதிக நார்ச்சத்து கொண்டதாகும். நீரில் ஜெல்லாக மாறி, உடலில் கொலஸ்டிராலின் அளவை குறைக்கும். கரையாத நார்ச்சத்துக்கள் தானியங்களில் அதிகம் காணப்படும். மேலும் தானியங்கள் பாதுகாப்பான உயர்ரக எதிர்ப்பு தாதுவான வெலினியம் மற்றும் வைட்டமின் இ தரவல்லதாகும்.

3. இறைச்சி அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டதா?

அதிக புரதச் சத்துக்கள் (எ-டு) ஆட்டு இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள்

 • இரும்பு சத்து - சிவப்பு இறைச்சி
 • வைட்டமின் பி - குறிப்பாக பி12
 • வைட்டமின் பி
 • துத்தநாகம்
 • மக்னீசியம்

4. நார்சத்து கொண்ட உணவுகள் யாவை?

செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், பாலிசாக்ரைடு, பெக்டின் தாவர பிசின் விக்னின் ஆகியவை நார் வகைகள் ஆகும். மனித உடலினால் இத்தகைய நார்களை ஜீரணிக்க முடியாது. உணவில் நார் சத்துக்களை அதிகரிக்க வேண்டுமெனில். கீழ் வருவன சேர்க்க வேண்டும்.

 • தானிய உணவு வகைகள் (தவிடு வகை, பருப்பு அரிசி, முழு தானிய பாஸ்டா) மற்றும் ரொட்டிகள்
 • பழங்கள் (தோல் மற்றும் சதை உட்பட)
 • உலர்ந்த பழ வகைகள் (புரூன்ஸ், உலர்திராட்சை, ஏப்ரிகாட்ஸ்)
 • வேர் காய்கறிகள் (காரட், டர்னிப் மற்றும் உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு)
 • பூக்கோலி உலர்ந்த பட்டாணி மற்றும் பீன்ஸ் (லிமா, சிக் பீ, துவரை மற்றும் சோமர) சோளம்
 • குறைந்த மட்டும் நார்சத்து இல்லாத உணவு வகைகள் (எ-டு) வெண்ரொட்டி, சர்க்கரை இறைச்சி மற்றும் மீன்.
3.05035971223
சிவா Jun 04, 2019 05:21 PM

உங்கள் டிப்ஸ் சூப்பர்

TASNA Feb 20, 2016 12:47 PM

நன்கு வேக வைத்த உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் சார்ந்த தின்பண்டங்கள் மற்றும் டீ போன்ற உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். நன்றி

ஹபீப்கான் .அ Feb 19, 2016 08:17 PM

இரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைய உணவு பொருள் விபரம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top