பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை

ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

அரசு சமீப காலத்தில் வாரந்தோறும் இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், துணை ஆகாரத் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின் மூலம் ஆறு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இரத்த சோகையை தடுக்கும் வகையில் இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலம், துணை உணவு வழங்கப்படும்.

தமிழ் நாடு அரசு ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. குழந்தைகள் மையத்தில் உள்ள இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் ஐந்து முதல் பதினைந்து வயது வரையிலான மாணவர்களுக்கு, அதாவது முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், திங்கள், புதன், வியாழன் ஆகிய நாட்களில் வாரம் ஒன்றுக்கு மூன்று முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகளின் மொத்த ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் முயற்சியாக செவ்வாய்க் கிழமைகளில் 20 கிராம் கருப்பு கொண்டைக் கடலை அல்லது பச்சை பயிறுயும், வெள்ளிக் கிழமைகளில் 20 கிராம் உருளைக் கிழங்கும்  வழங்கப்படும்.

ஊட்டச்சத்து தேவைகளை எதிர்க்கொள்வதை தவிர்த்து மத்திய அரசு பள்ளி சுகாதாரத் திட்டத்தை அமலாக்கம் செய்ய உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் குழந்தைகளின் ஆரோக்கிய பிரச்சினைகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் கண்காணிக்கப்படும். இத்திட்டம் சமீபக்காலத்தில் இரண்டு புதிய தொழில்நுட்ப முறைகளை கையாண்டு வருகிறது. அவை பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை கண்காணிக்கும் வகையில் மாணவர்கள் - ஆரோக்கியம் தொடர்பான தரவுகளை தயாரிப்பது மற்றும் சமூகத்தில் சிறந்த ஊட்டச்சத்து பழக்க வழக்கங்களை மேற்கொள்வது குறித்து கைபேசி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.

ஊட்டச்சத்து வாரம்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் ஒன்று முதல் ஏழாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வின் மூலம் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் தோற்றத்தையும் உடல் நலத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 1982ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். மக்கள் இத்திட்டத்தில் கலந்து கொள்ள வழி செய்யும் வகையில் துணை ஊட்டச்சத்து திட்டம் இந்த விழிப்புணர்வுடன் இணைக்கப்பட்டது.

ஆரோக்கியமான உணவு

உணவில் ஆறு விதமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு, உயிர்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆகும். உயிர் வாழ்வதற்கு, வளர்ச்சிக்கு, உடல் செயல்பாட்டிற்கு மற்றும் திசு சரி செய்தல் ஆகியவற்றிக்கு இந்த ஊட்டச்சத்துகள் உதவுகின்றன. அனைத்து விதமான ஊட்டச்சத்துகளையும் சரியான அளவில் கொண்டுள்ளதே ஆரோக்கியமான உணவாகும். இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், வேர்கள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் மாமிச உணவுகள் அடங்கும். மாவுச்சத்து மூலம் 50 முதல் 60 சதவீத சக்தி, புரதச்சத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் சக்தியும் கொழுப்பு சக்தியிலிருந்து 20 முதல் 30 சக்தியையும் உங்கள் உணவு தர வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறிப்பு

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய மருத்துவ அமைப்பு தினசரி வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வது குறித்த விரிவான சிறிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள ஒரு சில குறிப்புகள் கீழ் வருமாறு:

  • குறைந்தபட்ச பதப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்ட புதிய உணவுகளை உண்ணுங்கள்.
  • முடிந்தவரை சமைக்கப்படாத கனி, காய்கறிகளை உட்கொள்ளுங்கள். ஏனென்றால் சமைக்கும் போது உணவில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடக்கூடும்.
  • பழங்களையும் காய்கறிகளையும் நன்கு கழுவிய பிறகு அதன் மேல் உள்ள தோலுடன் உட்கொள்ளுங்கள்.
  • நீங்கள் உணவை உட்கொள்ளத் தயாராக உள்ளவரை பழங்களையும் காய்கறிகளையும் சுத்தப்படுத்துவதோ அரிந்து வைப்பதோ அல்லது நீரில் ஊறவைப்பதோ கூடாது.
  • துரித உணவுகளுடன் ஒப்பிடும் போது பாரம்பரிய மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
  • சாப்பாட்டிற்கு பதிலாக நொறுக்குத் தீனியை உட்கொள்வதை தவிருங்கள்.
  • சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

ஆதாரம் : இந்திய மருத்துவ அமைப்பு, மதுரை

3.00917431193
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top