நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு சரிவிகிதமாக தேவைப்படுகிறது. செடிகளுக்குத் தேவையான தண்ணீர் சூரிய வெளிச்சம் தேவைப்படுவது போல் மனிதர்களுக்கும் தங்கள் உடலுக்கு நல்ல ஊட்டத்திற்கும். வளர்ச்சிக்கும் பலவகைப்பட்ட உணவுப் பொருட்கள் தேவை.
நாம் உண்ணும் உணவு, ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும். சக்திக்கும். உடல் நலத்திற்கும் என உடலில் பயன்படுத்தப்படும் எல்லா உணவு வழிகளையும் உள்ளடக்கியது.
சரியான உணவுகளை உண்ணாத அல்லது போதிய அளவு உண்ணாத ஒருவர் போதாத ஊட்டமுடையவராவர். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்துக்குறைவு மிகச் சாதாரணமாக உள்ளது. இந்த நிலையைப் பெரும்பாலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில், போதா ஊட்டம் உடைய ஒரு குழந்தை நன்றாக இருப்பது போலவே தான் தோன்றும். ஆனால், அதே வயதுடைய நலமார்ந்த குழந்தை ஒன்றின் (healthy child) பக்கத்தில் நிற்க வைத்துப் பார்த்தால், அவன் மிகவும் சிறியவனாகத் தெரிவான். அவன் குறை எடை உள்ளவனாக இருப்பான். ஏனெனில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் வகையான உணவு போதிய அளவு கிடைக்காததே அதற்கு காரணம். இந்தியாவின் பல பகுதிகளில் 40 சதவிகித குழந்தைகள் அவர்களது வயதுக்குக் குறைந்த எடை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். குறை எடை உள்ள ஒரு குழந்தைக்குத் தட்டம்மை அல்லது பேதி (Diarrhoea) அல்லது வேறு தொற்று வருமானால், போதா ஊட்டம் அதை விரைவில் மோசமான நிலைக்கு உள்ளாக்கி குழந்தைகள் இறக்க நேரலாம். நல்ல உணவூட்டம் உள்ள ஒரு குழந்தை தொற்றுகளால். நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு குறைவு. மற்றும் அவன் நோய் வாய்ப்பட்டாலும். விரைவில் மீண்டும் நலமடைவது வழக்கம்.
போதா ஊட்டம் குழந்தையின் அறிவுக் கூர்மையையே பாதிக்கும். குழந்தை பிறப்புக்கு முன்பே இந்தக் கெடுதல் தொடங்கிவிடும். அதாவது. கருவுற்ற தாய் சரியான உணவு உட்கொள்ளவில்லை என்றால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்கப்படும்.
போதாஊட்டம் உள்ள குழந்தை செயலிலும் கற்று கொள்வதிலும் பின்தங்கியிருப்பார்கள். பெரியவர்கள் போதாஊட்டம் உடையவர்களாக இருந்தால் கடினமாக உழைக்க அவர்களால் முடியாது. போதாஊட்டத்தின் காரணமாக நாட்டின் உற்பத்தியும் வளர்ச்சியும் மந்தமான நிலையை அடைகின்றன.
நாடு முன்னேறவும் விரைவில் வளர்ச்சியும் பெற வேண்டுமானால், சரியான வகை உணவுகள். போதிய அளவு ஒவ்வொருவருக்கும் தேவை. நல்ல உணவூட்டமும், போதாஊட்டமும் மனிதர்களில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய ஒப்பீடு பின்வருமாறு.
நல்ல உணவூட்டம் |
போதா ஊட்டம் |
உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்ற சரியான எடை |
எடை மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக இருத்தல் |
வலுவான தசைகள் |
வலுவற்ற தசைகள் |
கை, கால் எலும்புகள் நேரானவை |
வளைந்த கால்கள் அல்லது முட்டிகள் |
மென்மையான தெளிவான தோல் மற்றும் சளிச்சவ்வுகள் நல்ல நிறத்துடன் இருத்தல் ஆரோக்கியமான, ஒளி மிகுந்த கண்கள், தெளிவான பார்வை |
உலர்ந்த சொரசொரப்பான தோல் சளிச்சவ்வுகள் நிறம் வெளுத்து இருத்தல் ஒளி மங்கிய கண்கள், மாலைக் கண், பார்வை குறைபாடு |
காது கேட்டல் நன்றாக இருக்கும் |
காது கேட்டலில் குறைபாடு |
இடையின்றி மூச்சு விடுதல் |
வாயால் மூச்சு விடுதல், தொண்டை சதை வீங்கியிருத்தல் |
பற்கள் நன்கு அமைந்திருத்தல், பற்கள் குழியின்றி இருத்தல் |
சீரற்ற பற்கள் பற்கள் குழி விழுந்து இருத்தல் ஆரோக்கியமற்ற ஈறுகள் இருத்தல். |
தொண்டை சதை தொற்றின்றி இருத்தல் |
தொண்டை சதை வீங்கியும், தொற்றினால் புண்ணாகியும் இருத்தல் |
உட்கார்ந்து இருக்கும் போதும் நடக்கும் போதும் நிற்கும் போதும் நேராக இருத்தல் |
வளைந்த தோற்றம் கூன் விழுந்த முதுகு வயிறு வீக்கமாக இருத்தல் |
உறுதியான நரம்புகள், அமைதியான உற்சாகமுள்ள தோற்றம், கற்றுக் கொள்ளுவதில் விரைவு தன்மை |
நடுக்கம் உள்ளவர்களாகவும் கவலை நிறைந்த, எளிதில் சினம் கொள்ளுகிற தன்மை, கற்பதில் மந்தம் |
சக்தி நிறைந்தவர்களாகவும் இருத்தல் |
களைப்பான மற்றும் மந்தமான தன்மை இருத்தல் |
நோய் எதிர்ப்பு சக்தி உடையவராய் இருத்தல் |
தொற்றுநோய் எதிர்ப்பாற்றல் குறைவு |
ஊட்டம் பெறுவதற்கு உடல் பயன்படுத்திக் கொள்ளும் எந்த பொருளும் உணவு எனப்படும். அதாவது உடல் தனது வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் உயிருடன் வாழ உணவு தேவை. உணவுகள் பலவகைப் பயிர்களிலிருந்தும் மற்றும் பறவைகள், மீன் மற்றும் விலங்குகளிலிருந்தும் பெறப்படுகின்றன.
சத்துப் பொருட்கள்
பல உணவுப்பொருட்கள் இவற்றில் பலவற்றைக் கொண்டுள்ளன. ஊட்டம் அளிப்பவைகளில் எல்லாவற்றையுமே கொண்டுள்ள உணவுப் பொருள் இயற்கையில் எதுவும் இல்லை. ஆகவே, நல்ல ஊட்டம் அளிப்பவைகளைப் பெறப் பலவகை உணவுகளை உண்ணுவதும் அவைகளில் என்ன ஊட்டம் அளிப்பவை அடங்கியுள்ளன என்பதையும். அவை ஏன் முக்கியமானவை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உடலில் இந்தச் செயல்கள் எல்லாம் நிறைவேற்றப்படும் போது அந்த நபர் நல்ல ஊட்டம் நலமிக்கவராக உள்ளார்
சக்தி தரும் உணவுகள்
உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படுவது சக்தியாகும். ஒரு பேருந்து ஓடுவதற்கு டீசல் ஓர் எரிபொருளாயிருப்பது போல உடல் வேலை செய்யச் சக்தி தரும் உணவுகளே எரிபொருளாகும். உழைப்பு கடினமாக ஆக அதிகமாக சக்தி தரும் உணவு தேவை. ஆனால் ஓய்வெடுக்கும் போது கூட மூச்சு விடுவதற்கும் இருதயம் துடிப்பதற்கும். உடல் எரிபொருளை எப்போதும் பயன்படுத்துகிறது. சக்திக்காக எரிபொருள் உணவுகளை எரிக்கும் போது. வெப்பமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
குளிர்காலங்களில் உடற்பயிற்சி மூலமும் சக்தி தரும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதின் மூலமும் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளலாம். அடிப்படை உணவுகள் சக்தி தருபவைகளில் மலிவானவை மற்றும் நமது உணவின் அடிப்படையானவை. அவைகளில் அதிகமாகக் கார்போஹைடிரேட்டுகளும் சிறிதளவில் புரதங்களும் உள்ளன.
நாம் உண்ணும் மூல உணவின் வகை நமது உணவு பழக்கத்தைப் பொறுத்தும் சமுதாயத்தில் கிடைக்கிற வகையை பொறுத்தும் அது அமையும்.
அடிப்படை உணவுகளில் சில வருமாறு
நாம் ஒவ்வொரு முறை உண்ணும் போதும் இவற்றில் சிலவற்றைச் உணவில் சேர்த்துக் கொள்ள முயல வேண்டும். அதிக சக்தி தேவைப்படும்போது, உடலில் கொழுப்புச் சேமிப்பு இருந்தால் அது பயன்படும்.
கலோரிகள் என்பது சக்தியை அளிக்கப் பயன்படும் அலகாகும். சில உணவுகளில் எவ்வளவு சக்தி உள்ளது என்பதை அளக்க நாம் கலோரிகளைப் பயன் படுத்துகிறோம். ஒருவருக்கு தினசரி எவ்வளவு சக்தி தேவை என்பதை அளக்கவும்கூட (தேவையான சக்தி) நாம் கலோரிகளைப் பயன்படுத்துகிறோம்.
'சக்தி தரும் உணவுகளில் புரதங்கள் சேர்க்கப் படவில்லை. ஏனெனில் உடல் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.
சில உணவுப் பொருட்களும் அவற்றின் 100 கிராம் தரும் கலோரிகளும் இங்கே தரப்படுகின்றன.
உணவுகள் |
கலோரிகள் |
பசுவின் பால் |
65 |
எருமைப்பால் |
117 |
வெல்லம் |
383 |
தேன் |
320 |
எள் |
564 |
நிலக்கடலை |
549 |
வாழைப்பழம் |
150 |
மரவள்ளிக் கிழங்கு |
159 |
சர்க்கரை வள்ளிக்கிழங்கு |
152 |
உருளைக்கிழங்கு |
99 |
கோதுமை ரொட்டி |
238 |
கோதுமை மாவு |
348 |
சப்பாத்தி |
124 |
அரிசி |
345 |
கேழ்வரகு |
331 |
சோளம் |
342 |
கம்பு வகை |
360 |
புரதங்கள் - உடல் வளர்ச்சிக்கு தேவையானவை
புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அதாவது மனித உடலின் பல வகையான செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் வளர்ச்சிக்கு புரதங்கள் இன்றியமையாதவை எனவே கர்ப்பிணி பெண்களுக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும். சிறு குழந்தைகளுக்கும் அதிக புரதசத்து தேவை. நோயுற்றவர்களுக்குப் பாதிக்கப்பட்ட திசுக்களைப் பழுது பார்க்க அதிகப்படியான புரதம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் புரதம் தேவைப்படுகிறது. ஏனெனில் நமது உடல்கள் வாழும் செல்களால் ஆக்கப்பட்டவை. அந்த செல்கள் அழியும் போது அவற்றிற்குப் பதிலாக புதிய செல்கள் உண்டாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சிவப்பு இரத்தத்தில் அணுக்களில் 'ஆயுள் சுமார் 120 நாட்களாகும் புதிய சிவப்பு இரத்த அணுக்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
புரதங்களில் பல்வேறு வகையானவை உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் வெவ்வேறு அமினோ அமிலங்களை கொண்டுள்ளன. ஒரு தொகுப்பால் ஆனது. அமினோ அமிலங்களில் சுமார் 20 வகைகள் உள்ளன. புரதம் உள்ள உணவை நாம் வழங்கும் போது முதலில் அதிலுள்ள புரதங்கள் பிரிந்து தனியாகின்றன. புரதச் சங்கிலி உடைக்கப்படுகிறது. அமினோ அமிலங்கள் தனியாகப் பிரிகின்றன. உடலின் உள்ளே அந்த அமினோ அமிலங்கள் உடலின் தேவைக்கு ஏற்ப, வேறு அமைப்பில் ஒன்றாகச் சேர்ந்து புதிய புரதங்கள் அமைக்கப் படுகின்றன. இவைகள் உடல் புரதங்கள் எனப்படும்.
நம் உடல் மற்ற உணவிலிருந்து சில அமினோ அமிலங்களை உண்டாக்க முடியும். இவை. முக்கியமில்லாத அமினோ அமிலங்கள் எனப்படும். சுமார் 8 அமினோ அமிலங்களை உடலால் தானே உண்டாக்க முடியாது. அவற்றை நாம் நமது உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவை முக்கிய அமினோ அமிலங்கள் ஆகும். பால் மற்றும் முட்டையில் உள்ள புரதங்கள் முக்கிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளன. அதனால் அவை சிறந்த உடல் வளர்ச்சிக்கான உணவுகள் ஆகும். பிற விலங்குகளின் புரதங்கள் (இறைச்சி மற்றும் மீன்) கூட உடல் வளர்ச்சிக்கு சிறந்தவை. சைவ உணவு சாப்பிடுவோரும் விலங்கின உணவுகளை வாங்க முடியாதவர்களும் உணவில் பலவகை தாவர உணவுகளை சேர்த்துக் கொண்டும் இதன் மூலம் தங்களுக்குத் தேவையான முக்கிய அமினோ அமிலங்களைப் பெறலாம்.
நமது உணவில் உள்ள அமினோ அமிலங்களில் பல. உடல் வளர்ச்சிக்கு பயன்படாமல் அவை சக்தி உண்டாக்கும் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. தங்கள் உணவிலிருந்து முக்கிய அமினோ அமிலங்களைப் போதிய அளவு பெறாதவர்கள் போதா ஊட்டம் (malnourished) உள்ளவர் ஆகிவிடுகிறார்கள். என்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு வகையான தாவரங்களை உண்பதன் முலம் நமக்குத் தேவையான அமினோ அமிலங்களைப் பெறுவது இயலும். (எ.கா) அரிசியில் உள்ள புரதத்தில் இரண்டு முக்கிய அமினோ அமிலங்கள் இல்லை. ஆனால் பயறு வகைகள் இந்த இரண்டு அமிலங்களுக்கு மூல ஆதாரமாக உள்ளன. ஆகையால் பயறு வகைகளை அரிசியுடன் கலந்தால் அது அதிகப் படியான ஊட்டமுள்ள உணவாகிறது. இதே போல சோயா மாவு கோதுமை மாவுடன் கலந்து செய்யும் ரொட்டி அல்லது சப்பாத்தி ஊட்டம் நிறைந்ததாகும். கலப்பு தானிய உணவு ஒரே ஒரு வகைத் தானிய உணவை விடச் சிறந்ததாகும். ஓர் ஏழைக் குடும்பத்தால் வழக்கமாகச் சில கரும்பச்சை இலைக்காய்கறிகளைத் தான் சமைத்து மூல உணவுடன் சேர்த்துச் சாப்பிட முடியும். இது சில புரதங்களைத் தர உதவும்.
புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் - அதன் வேலைகள்
மூல ஆதாரங்கள்
விலங்குகளின் புரதம் (உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது) |
பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, மீன் மற்றும் இறைச்சி |
காய்கறிகளின் புரதம் |
நிலக்கடலை, சோயா பீன்ஸ் (இதில் அதிகமாக புரோட்டீன் உள்ளது.) சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் வகைகள், எண்ணெய் வித்துக்கள். |
தினசரி புரதச் சத்து தேவை
ஒரு கி.கிராம் உடல் எடைக்கு 1 கி. புரதச்சத்து தேவைப்படுகிறது
புரதக்குறைபாடு (deficiency) ஏற்படுத்தும் பாதிப்புகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
குழந்தை அதிக எடையுடன் இருக்கலாம். உடல் வீக்கம் குறைந்தால் குழந்தைகளின் எடையும் இறங்கிவிடும். உடல் வீக்கத்தின் போது கூட அவனது மேல்கை மெலிந்தே இருக்கும். மற்றும் கையின் சுற்றளவு குறைவாக இருக்கும்.
க்வாஷியார்க்கர் குழந்தைக்கு உடலில் புண்கள் இருக்கும். தோல் உரியும். அவன் தலை முடி இயற்கை நிறத்தை இழக்கும். மற்றும் அவனுக்கு வயிற்று போக்கு உண்டாக வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மகிழ்ச்சியற்றதாகவும் சுறுசுறுப்பில்லாதவர்களாகவும் இருப்பர்.
க்வாஷியார்க்கர் 1 - 2 வயதுள்ள குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு தட்டம்மை போன்ற நோய் தொற்றுக்கு பின் தோன்றும்.
க்வாஷியார்க்கரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த அதிக உணவு தேவை. அவர்களுக்கு முட்டை, கோழி இறைச்சி, மீன் கொடுக்கப்பட வேண்டும். வசதியற்றோர் புரதச்சத்து மிக்க விலை மலிவான சோயாபீன்ஸ் வேர்கடலையினைப் பயன்படுத்தலாம். சோயா பீன்ஸ் சமைப்பதற்கு முன் நன்கு ஊற வைக்க வேண்டும். அல்லது மற்ற மாவுகளுடன் கலந்து கஞ்சி செய்யலாம்.
க்வாஷியார்க்கரால் பாதிக்கப்பட்ட குழந்தை வாய் வழியாக உணவு உண்ண முடியவில்லையென்றால் அதிக புரதம் மற்றும் சக்தி நிறைந்த திரவ உணவுகளை ஒரு நாளைக்கு ஒரு கிலோ கிராம் எடைக்கு 150 மி.லி வீதம் குழாய் மூலம் (tube feeding) கொடுக்க வேண்டும்.
செயல்பாடுகள்
மூல ஆதாரங்கள்
தானியங்கள் |
அரிசி, கோதுமை, கம்புவகை, சோளம், கேழ்வரகு |
சர்க்கரைகள் |
வெள்ளைச் சர்க்கரை, வெல்லம, தேன் |
வேர்க்கிழங்குகள் |
உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு |
பழங்கள் |
வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் |
குறைபாடுகள்
மாராஸ்மல் என்பது கார்போஹைடிரேட்டு குறைபாடினால் குழந்தை சிறியதாகவும், மிக மெலிந்தும், தோலின் கீழ் கொழுப்பே இல்லாமல், எலும்பு உள்ளதாகவும் இருக்கும். அவன் முகம் மெலிந்து, வயது முதிர்ந்தவன் போலத் தோன்றுவான். அவன் வயதுக்கு இருக்க வேண்டிய எடையில் பாதிதான் இருப்பான் மற்றும் அவனது மேல் கைச்சுற்றளவு 14 செ.மீக்கும் மிகக் குறைந்து இருக்கும். அவனுக்கு நாட்பட்ட வயிற்று போக்கு இருக்கும்.
மராஸ்மஸ் வர காரணங்கள்
கொழுப்புச் சத்துக்கள் செயல்பாடுகள்
மூல ஆதாரங்கள்
வைட்டமின்கள் தாது உப்புக்கள் உடல் பாதுகாப்பிற்கான உணவுகள்
உடலை நல்ல சுகாதாரத்துடன் வைத்துக் கொள்ள மிகச் சிறிய அளவு வைட்டமின்களையும் தாது உப்புகளையும் நாம் தினமும் சாப்பிட வேண்டும். பல உணவுகளில் வைட்டமின்களும் தாது உப்புகளும் கூடவே கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியுள்ளன.
"வைட்டா' என்றால் உயிர் என்று பொருள். வைட்டமின்களின் குறைவால் உடல் நலமின்மை மற்றும் மரணம் கூட ஏற்படும். இவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்
வைட்டமின் ஏ உடலுக்குத் தரும் நன்மைகள்
வைட்டமின் ஏ அன்றாடம் 800 மைக்ரோகிராம்கள் தேவை. இந்த அளவுக்கு மிகவும் அதிகமானால் கெடுதல் தரும்
மூல ஆதாரங்கள்
மீன் எண்ணெயில் இது மிகவும் அதிகமாக உள்ளது. கோழி முட்டை, வெண்ணெய், நெய் மற்றம் பாலில் வைட்டமின் சத்து அதிகமாக உளளது.
தாவரங்களில் கரோட்டின் அல்லது வைட்டமின் ஏ ஆதரவு என்னும் பொருள் உள்ளது. அது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. கரோட்டீன் உள்ள பொருள்களாவன கீரைகள் காய்கறிகள். மஞ்சள் நிறப்பழங்கள் மற்றும் காரட், பப்பாளி, பழுத்த மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்ற காய்கள்.
வைட்டமின் ஏ பற்றாக்குறை
வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் மாலைக்கண் நோய், கண் உலர்தல் பின் கண் பார்வை இழக்கலாம்.
வைட்டமின் டி
நன்மைகள்
1. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உட்கிரகித்தலுக்கு உதவுகின்றன.
2. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூல ஆதாரங்கள்
வைட்டமின் இ
இனப்பெருக்கத்திற்கு வைட்டமின் இ தேவைப்படுகிறது.
மூல ஆதாரங்கள்
தாவர மூலங்கள் |
தாவர எண்ணெய்கள், சோயா பீன்ஸ், நிலக்கடலை, முழுச்சிறு தானியங்கள். |
விலங்கு மூலங்கள் |
முட்டைகள், இறைச்சி, மற்றும் மீன் |
குறைபாடு
வைட்டமின் இ குறைவினால் மகப்பேறின்மை ஏற்படும்
வைட்டமின் கே
வைட்டமின் கே இரத்தம் உறைவதற்குத் தேவை. அதனால் இரத்தப் போக்கு ஏற்படும்போதும் (எ-டு) பிரசவத்தின் போதும் சில வேளைகளில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் இது ஏற்படும் போது இதை குறைக்கவும் தடுக்கவும் உதவுகிறது.
மூல ஆதாரங்கள்
எல்லா வகையான கீரைகள், பயறுகள், சிறுதானியங்கள் மற்றும் பழங்கள். மேலும் சிறு குடலில் நுண்ணுயிர்களால் (பாக்டீரியா) இது உற்பத்தி செய்யப்படுகிறது. முளைக்கட்டிய தானியங்கள், பால் சார்ந்த பொருட்கள்
தினசரித் தேவை - 60 மைக்ரோகிராம்கள்
குறைபாடுகள்
வைட்டமின் குறைபாட்டினால் இரத்த ஒழுக்கு நோய் ஏற்படலாம்.
நீரில் கரையும் வைட்டமின்கள்
வைட்டமின் பி அல்லது தயமின்
வைட்டமின் பி, அல்லது தயமின் உடலுக்குத் தேவைப்படும் காரணங்கள்.
மூல ஆதாரங்கள்
உலர்ந்த பழங்கள், ஈஸ்ட், கைக்குத்தல் அரிசி மற்றும் கோதுமை மாவு முழுச்சிறு தானியங்கள் மற்றும் பயறுகள், கொட்டைகள் மற்றம் எண்ணெய் வித்துக்கள், ஈரல் மற்றும் பச்சை காய்கறிகள்
தினசரி தேவை – 1.1 மி.கி
தயமின் பற்றாக்குறை
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் தீட்டப்பட்ட பச்சரிசி அதிகம் உண்ணுவோரிடையே இது பொதுவாகக் காணப்படும். இதன் தொடக்க அறிகுறிகள் வருமாறு.
தயமின் பற்றாக்குறை தொடர்ந்தால் பெரிபெரி என்னும் நோய் உண்டாகும். பெரிபெரியில் இரண்டு வகைகள் உள்ளன. ஈரமான வகை - இதனால் இழைமங்களில் நீர்க்கோவை. அதாவது உடல் முழுவதில் வீக்கம் இருக்கும். உலர்ந்த வகை பெரிபெரியினால் பக்கவாதம் உண்டாகும். குழந்தை பருவப் பெரிபெரியினால் இருதயம் பெரிதாவதால் சிறுவயதிலேயே திடீரென மரணம் உண்டாகும்.
தயமின் பற்றாக்குறை என்பதில் வழக்கமாக ரிப்பேபிளேவின் மற்றும் நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையும் இருக்கும். அதனால் அதற்கு சிகிச்சை செய்யவும் அதிகப் படியான தயமினுக்கும் வைட்டமின் தொகுப்பு தேவைப்படும்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை கையேடு