பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஊட்டச்சத்து வீடியோக்கள் / ஊட்டச்சத்துக்குறைப்பாட்டின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊட்டச்சத்துக்குறைப்பாட்டின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

ஊட்டச்சத்துக்குறைப்பாட்டின் அறிகுறிகள், பின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.


ஊட்டச்சத்துக்குறைப்பாட்டின் அறிகுறிகள், பின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்

ஊட்டச்சத்துக்குறைப்பாட்டினை  தடுத்தல்

அடிக்கடி நோய்வாய்படும், எளிதில் களைப்படையும் மற்றும் மெதுவாக கிரகிக்கும் ஆற்றல் கொண்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அவதிப்படுபவர்களாக இருக்கக்கூடும்.

ஒரு குழந்தைக்கு குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் ஆபத்து அது கருவாக உருவாவது முதல் இரண்டு வயது வரை உள்ளது. மொத்தமாக நீண்ட கால வளர்ச்சிக்கு இது மிக முக்கிய காலகட்டமாகும். குறைவான ஊட்டசத்து பிறப்பதற்கு முன்பே தொடங்கி, பொதுவாக வளரிளம்பருவம் மற்றும் முதிர்வயது வாழ்வு மற்றும் தலைமுறைகள் வரை தொடரலாம். இது பெரும்பாலும் மாற்ற முடியாத ஒன்றாகும். கர்பிணிகளின் ஆரோக்கியம், குழந்தையின் அரோக்கியம் மற்றும் பிழைத்து வாழ்வது ஆகியவற்றை பாதிக்கும் மாற்ற முடியாத  படிப்படியான வளர்ச்சி மற்றும் விருத்தி குறைப்பாட்டினை தடுக்க ஊட்டசத்து குறைபாட்டினை வாழ்நாளில் சீக்கிரமாக தடுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

வாடி வதங்கிய செடி எவ்வாறு செழிப்பான மரமாக  சாதாரணமாக வளர தேவையான கவனிப்பற்று மற்றும் ஊட்டங்களான மண், நீர், சுத்தமான காற்று மற்றும் சூரியஒளியின்றி வளர இயலாதோ அதைப்போல ஒரு குழந்தையும் முறையான கவனிப்பு மற்றும் ஊட்டசத்தில்லாமல் அரோக்கியமான மனிதனாக உருவாக முடியாது.

முழுதாக உருவாக்கிய பிறகு ஒரு மண் குடத்தில் விரிசல் ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்ய முடியாதோ அது போல சிறு வயதில் ஊட்டசத்து குறைப்பாட்டினால் பாதிப்படைந்த குழந்தையை சரி செய்ய முடியாது.

நோக்கம்

  • ஊட்டசத்து குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் அதன் ஆபத்தான பின் விளைவுகள்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • சமுதாயத்தை ஊக்கப்படுத்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க செய்தல்
  • ஊட்டசத்து குறைபாட்டினை தடுக்க, செய்ய வேண்டிய எளிதான செயல்களை விளக்குதல் போன்றவையாகும்.

ஆதாரம் : யூனிசெஃப் மற்றும் பல வளர்ச்சி பங்குதாரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு.

3.04109589041
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top