பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / திட்ட உணவு / கல்லீரல் நோய்களுக்கானத் திட்ட உணவு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கல்லீரல் நோய்களுக்கானத் திட்ட உணவு

கல்லீரல் நோய்களுக்கானத் திட்ட உணவு முறை குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கல்லீரல், மிக அதிக அளவில் பல்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய ஒரு முக்கியமான உறுப்பு. இது உணவுப் பொருட்களின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜீரணித்தலின் விளைவாகப் பெறப்படும் இறுதிப் பொருட்கள் நேரடியாக கல்லீரலை வந்தடைகின்றன. அங்கு அவை சேமித்து வைக்கப்படுகிறது, அல்லது வேறு வடிவத்தில் இறுதிப் பொருள்களை உருவாக்குகின்றது (resynthesis).

கல்லீரலின் பணிகள்

புரத வளர்சிதை மாற்றம்

பிளாஸ்மா புரதங்களைத் தயாரிக்கிறது. அமினோ அமிலங்களிலிருந்து, அமினோ பிரிவுகளை பிரித்தெடுக்கிறது. (Deamination) அவ்வாறு பிரித்தெடுக்கும் போது பெறப்படும் அம்மோனியா, நச்சுத் தன்மையற்ற யூரியாவாக மாற்றப்படுகிறது. அமினோ பிரிவுகள் அமினோ அமிலங்களுக்கு மாற்றப்படுகிறது. (Transamination) இதன் மூலம் இரத்தத்தில் முக்கியமில்லாத அமினோ அமிலங்களின் (Nonessentialamin0 acids) சரியான அளவு நிலை நிறுத்தப்படுகிறது. மற்றும் புரோதிராம்பின், பைபிரினோஜன் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

கார்போஹைட்ரேட்டு வளர்சிதை மாற்றம்

நம் உணவில் உள்ள அதிகப்படியான குளுகோஸ், கிளைகோஜனாகக் கூட்டிணைப்பு செய்யப்படுகிறது. மேலும் கிளைக்கோஜன் இங்கு சேமிக்கப்படுகிறது. சக்தி தேவைகளுக்காக கிளைகோஜன் மீண்டும் குளுகோஸாக மாற்றப்பட்டு குறிப்பிட்ட கணத்தில் கிடைக்கும்படி செய்கிறது. இவ்வாறு கிளைகோஜன் சக்தி தேவைகளுக்காக குளுக்கோஸாக மாற்றப்படும் நிகழ்வுக்கு கிளைகோஜினோலைசிஸ் (glycogenolysis) என்றுப் பெயர். கல்லீரலில் செல்கள் சக்தி தேவைக்காகப் புரதங்களையும் குளுக்கோஸாக மாற்றுகின்றன. இந்நிகழ்வு குளுகோநியோஜெனிசிஸ் (glyconeogenesis) எனப்படும். ஹெபாரின், கல்லீரலில் தயாரிக்கப்படும் மற்றொரு முக்கியப் பொருளாகும்.

கொழுப்பு வளர்சிதை மாற்றம்

லிப்போபுரதங்கள், பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொலஸ்டிரால் தயாரிக்கப்படுகிறது. பித்தநீர் (bile) உருவாக்கப்படுகிறது. கொழுப்பு அமிலங்கள் இங்குதான் ஆக்ஸிகரணம் அடைகின்றன.

வைட்டமின்கள் வளர்சிதை மாற்றம்

கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K மற்றும் நீரில் கரையும் வைட்டமின்களான அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் B தொகுப்புகளும் சேமித்து வைக்கப்படுகின்றன. கல்லீரலில், கரோட்டீன், வைட்டமின் A ஆகவும் வைட்டமின் K, புரோதிராம்பினாகவும் மாற்றப்படுகிறது.

மருந்துப் பொருட்கள் வளர்சிதை மாற்றமடைகின்றன. ஹார்மோன்கள் செயலிழக்கம் அடைகின்றன (deactivation) உணவின் மூலமாக, நம் உடலை வந்தடையும் வேதிப் பொருட்கள், நச்சுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் நச்சுத் தன்மையை அழிக்கிறது. (Detoxification).

கல்லீரலைச் சேதப்படுத்தும் காரணிகள்

உணவியல் குறைபாடுகள் (Dietary Deficiencies)

அ. சவலை நோயில் (kWashiorkor) காணப்படுவது போல் குறைந்த அளவு புரதம் உட்கொள்ளுதல் மற்றும் பீட்டா லிப்போ புரதம் குறைவாக சுரத்தல், கல்லீரல் செல்களில் படிந்துள்ள கொழுப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய கல்லீரல் கொழுப்பு படிவங்களின் மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், பட்டினி மற்றும் உடல் பருமன் (obesity) ஆகிய நிலைகளிலும் ஏற்படுகிறது. ஆனால் இத்தகைய நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் திரும்ப சரி செய்யக் கூடியவை (reversible).

தொற்றுநோய் கிருமிகள்

அ. வைரஸ்கள், கல்லீரலில் தொற்றும் போது அவை கல்லீரலைச் சேதப்படுத்துகின்றன. ஹெப்படைடிஸ் A (Hepatitis-A) வைரஸ் மலத்தின் மூலமாக வெளியேற்றப்பட்டு, பிறகு அசுத்தமடைந்த உணவின் மூலமாக பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிக்கு மஞ்சட்காமாலை உண்டாகிறது. இந்நிலையில் நோயாளியின் கல்லீரல் வீங்கியும், மென்மையாகவும் மாறுகிறது.

சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை, இரத்தம் உட்செலுத்த பயன்படுத்தினால் ஹெப்படைடிஸ் B வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதனால் சீரத்தை ஒத்த அமைப்புடைய மூலக்கூறை தோற்றுவிக்கும் மஞ்சட் காமாலை ஏற்படுகிறது. (homologous serum jaundice)

நச்சுக் காரணிகள்

அ. ஆல்கஹால் : ஆல்கஹால் பானங்கள் அருந்துவதால் கல்லீரல் மிக வேகமாகப் பழுதடைகிறது.

ஆ. மருந்துகளும் வேதிப் பொருட்களும் கல்லீரலைச் சேதமடையச் செய்யும். அதிக அளவில் இரும்பு, தாமிரம், காலக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் சேமிக்கப்படும் போது இவை கல்லீரல் உலர்ச்சியை (cirrhosis) ஏற்படுத்துகிறது.

மஞ்சட்காமாலை - கல்லீரல் செயல்மாற்றங்களின் அறிகுறி

மஞ்சட்காமாலை என்பது கல்லீரல் மற்றும் பித்தநீர் குழாய்களில் நோய் உண்டாகியிருப்பதைக் காட்டும் அறிகுறியாகும். பித்தநீரின் நிறமிகள் இரத்தத்தில் கலப்பதால், தோலும், உடல் திசுக்களும் மஞ்சள் நிறமாக மாற்றம் அடைகின்றன.

மஞ்சட்காமாலை கீழ்கண்ட காரணங்களால் ஏற்படுகிறது

 1. பித்தநீர் பாதை அடைப்பினால் வரும் மஞ்சட் காமாலை (Obstructive jaundice) - பித்தக்கற்கள், கட்டிகள் உண்டாகி பித்தநீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதால், பித்தநீர் ஓட்டத்திற்குத் தடை ஏற்பட்டு, பித்தநீர் இரத்தத்தில் கலப்பதால் உண்டாகிறது.
 2. சிவப்பணுக்கள் சிதைவினால் ஏற்படும் மஞ்சட் காமாலை (Heamolytic jaundice) - பெருமளவில் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் இவ்வித மஞ்சட் காமாலை ஏற்படுகிறது.
 3. நச்சுப் பொருட்களினால் ஏற்படும் மஞ்சட் காமாலை (Toxic jaundice) - நச்சுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் வைரஸ் தொற்றினால் இவ்வகை மஞ்சட் காமாலை ஏற்படுகிறது.

தொற்றுக் கிருமிகளினால் ஏற்படும் மஞ்சட் காமாலை

வைரஸ்களினால் இந்த மஞ்சட் காமாலை ஏற்படுவதால், இது வைரஸ் ஹெப்படைடிஸ் (Viral hepatitis) என்றும் அறியப்படுகிறது.

அறிகுறிகள்

பசியின்மை (anorexia), காய்ச்சல், தலைவலி, விரைவாக எடைக்குறைதல் (Loss of muscletone), குழாய் மண்டலத்தில் அசெளகரியங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றிய பிறகே மஞ்சட் காமாலை வெளிப்படும். கவனிக்கப்படாமல் விடப்பட்ட மஞ்சட் காமாலை கல்லீரல் உலர்ச்சியை (Cirrhosis) ஏற்படுத்தும். போதுமான அளவு ஓய்வு, சத்துள்ள உணவு உட்கொள்ளல் போன்றவற்றை மேற்கொண்டு கல்லீரல் சேதமடையாமல் பாதுகாத்துக் கொள்வதே இந்நோய்க்கான சிறந்த சிகிச்சையாகும்.

திட்ட உணவு மேலாண்மை

பழுதடைந்த கல்லீரல் திசுக்களைப் புதுப்பித்து, மேலும் பழுதடையாமல் தடுப்பதே திட்ட உணவின் குறிக்கோள் ஆகும். புரதம் மிகுந்தக் கார்போஹைடிரேட் அதிகம் உள்ள, மிதமான கொழுப்புள்ள உணவே இந்நோய்க்கு பரிந்துரைக்கப்படுகிறது. உணவு குறிப்பிட்ட இடைவெளிகளில், சிறிய அளவில் விரும்பி உண்ணக் கூடியதாக அமைய வேண்டும். அத்தகைய உணவே நோயாளியால் ஏற்றுக் கொள்ள முடியும், அதிகமாக உணவளித்தலைத் தவிர்க்க வேண்டும்.

தேவையான சத்துக்களின் அளவு

போதுமான அளவு கலோரிகளைக் கொடுக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் உடல் எடை குறையாமல் இருப்பதுடன், புரதம் சிதைவடைந்து கலோரிகள் தருவதைக் குறைக்க முடியும். 1600 கலோரிகள் முதல் 2000 கலோரிகள் கொடுக்கக் கூடிய உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

புரதம்

1 கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதம் என்ற அளவில் தினமும் புரதம் தேவைப்படுகிறது. அப்போது தான் எதிர்மறை நைட்ரஜன் சமநிலை ஏற்படுவதையும், கொழுப்பு. கல்லீரல் செல்களில் ஊடுருவுவதையும் தடுக்க முடியும். கல்லீரல் அணுக்களைப் புதுப்பிக்க முடியும். மிக முற்றிய மஞ்சட் காமாலையில் 40 கிராம் புரதமும், குறைந்தளவு மஞ்சட் காமாலையில் 60-80 கிராம் புரதமும் அனுமதிக்கப்படுகிறது. ஹெபாடிக் கோமா நிலையில் (மஞ்சட் காமாலை முற்றிய நிலையில் இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்க நிலை ஏற்படுதல் - hepatic coma) புரதம் மிகுந்த உணவுகள் தவிர்க்கப்பட்டுக் கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

கொழுப்பு

முற்றிய மஞ்சட் காமாலையில் 20 கிராம் கொழுப்பும், மிதமான மஞ்சட் காமாலையில் 20-30 கிராம் கொழுப்பும் கொடுக்கலாம். பித்தநீர் ஓட்டத்திற்குத் தடையேற்பட்டிருந்தாலோ, ஹெபாடிக் கோமா வந்துள்ள நிலையிலோ, கொழுப்புவெகுவாக குறைக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்நிலையில் கொழுப்பு, கல்லீரலில் வளர்சிதை மாற்றம் அடையாது.

கார்போஹைட்ரேட்டு

கலோரிகள் போதுமான அளவு கிடைக்க, கார்போஹைடிரேட்டு அதிக அளவில் கொடுக்கப்பட வேண்டியது முக்கியம். இல்லையெனில் புரதங்கள் சக்தி தேவைக்காகச் சிதைக்கப்படும். பழங்கள், பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறு, சர்க்கரை, வெல்லம், தேன் ஆகியவை கலோரிகளுடன் போதுமான அயனித்திரவத்தையும் (electrolytes) அளிக்கக் கூடியது.

வைட்டமின்கள்

கல்லீரல் செல்களைப் புதுப்பிக்க வைட்டமின்கள் அவசியம். 500 மி.கி வைட்டமின் C, 10 மி.கி. வைட்டமின் K, மற்றும் B தொகுதி வைட்டமின்கள் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவை. பசியின்மை, குமட்டல் (nausea) வாந்தி இருந்தால், வைட்டமின்கள் ஊசி மூலமாக செலுத்தப்படலாம்.

தாது உப்புக்கள்

பழச்சாறு, காய்கறி மற்றும் மாமிச சூப்புகள், உப்பு சேர்த்து வாய்வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகக் குழாய் செலுத்தியும் கொடுக்கலாம். அப்போது தான் அயனிகள் சமநிலை நிலைநிறுத்தப்படும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்

 • பயறுகள்,
 • பீன்ஸ் வகைகள்,
 • மாமிசம்,
 • மீன்,
 • கோழிக்கறி,
 • முட்டை,
 • நெய் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகள்,
 • வெண்ணெய்,
 • எண்ணெய்,
 • அடுமனை உணவுகள்,
 • உலர்ந்த பழங்கள்,
 • கொட்டைகள்,
 • ஆல்கஹால் தயாரிப்புகள்,
 • பால்கிரீம்கொழுப்பு நீக்கப்படாத பால்

சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

 • தானிய கஞ்சி வகைகள்,
 • மிருதுவான சப்பாத்தி,
 • ரொட்டி,
 • சாதம்,
 • கொழுப்பு நீக்கப்பட்ட பால்,
 • உருளைக்கிழங்கு,
 • கருணைக் கிழங்கு,
 • பழங்கள்,
 • பழச்சாறு,
 • தேன்,
 • சர்க்கரை,
 • மிருதுவான பிஸ்கட்டுகள்,
 • வெண்ணெய் மற்றும் கொழுப்பில்லாத கஸ்டர்டு வகைகள்

கல்லீரல் உலர்ச்சி

கல்லீரல் உலர்ச்சியில் செல்கள் செயலிழப்பு (necrosis), கொழுப்பு (fatty infilteration) (fibrosis) ஆகியவை ஏற்படுவதால், கல்லீரல் சேதமடைகிறது. இது ஒரு மிக ஆபத்தான, திரும்ப சரிசெய்ய முடியாத நோயாகும். பல ஆண்டுகளாக ஆல்கஹால் பானங்கள் தொடர்ந்து குடித்து வருவதாலும், அதனுடன் ஊட்டக் குறைவு உணவு உண்பதாலும் ஏற்படுகிறது.

இயல்பு நிலையிலுள்ள கல்லீரல் திசுக்கள்

1-3 வயது குழந்தைகளுக்கு ஊட்டசத்துக் குறை உணவு அளிக்கப்பட்டால் அது கல்லீரல் உலர்ச்சியை விரைவுப்படுத்துகிறது. இது குழந்தைப் பருவ கல்லீரல் உலர்ச்சி (Childhood cirrhosis) எனப்படும். ஆரோக்கியமான கல்லீரலையும், உலர்ச்சி அடைந்த கல்லீரலையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

அறிகுறிகள்

உணவு குழாய் மண்டலம் சம்பந்தமான அசெளகரியங்களாகிய பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றில் வலி இவற்றுடன் படிப்படியாக கல்லீரல் உலர்ச்சி ஆரம்பமாகும். நோயாளி, பலமின்மை, தசை பிடிப்பு, எடைக் குறைவு மற்றும் காய்ச்சலால் அவதியுறுவர். இந்நோய் முற்றும் போது மஞ்சட் காமாலை ஏற்படும். வயிறு வீக்கம் (Ascites), அளவுக்கதிகமான திரவம் வயிற்றில் சேர்வதால் ஏற்படும்.

திட்ட உணவின் அடிப்படைக் கொள்கைகள்

அதிக கலோரி, அதிக புரதம், அதிக கார்போஹைடிரேட்டு மிதமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட கொழுப்பு, அதிக வைட்டமின் நிறைந்த திட்ட உணவே இந்நோய்க்கு அவசியம். அப்போது தான் கல்லீரல் செல்கள் புதுப்பிக்கப்பட்டு வயிறு வீக்கம் (ascites) ஏற்படாமல் தடுக்க முடியும். குறைந்த அளவு கொழுப்புடன், ஈடு செய்யப்பட்ட (Supplementation) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தரப்பட வேண்டும். வயிறு வீக்கம் இருக்கும்போது மட்டும் சோடியம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். திட்ட உணவு ஆர்வமூட்டுவதாகவும், சுவையாகவும் அமைக்கப்பட வேண்டும்.

திட்ட உணவு மேலாண்மை

சக்தி

பசியின்மையும், வயிறு வீக்கமும் இருப்பதால் உணவு உண்பது மிகவும் சிரமமாக இருக்கும். இதன் காரணமாக, நீண்ட காலமாக அளவு குறைத்து உணவு உண்டு வருவதால், இவர்களுக்கு அதிக சத்துக்கள் நிறைந்த, அதிக சக்தி நிறைந்த உணவு கொடுக்கப்பட வேண்டியது அவசியம். எனவே தினமும் 2000-2500 கலோரிகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

புரதம்

வயிறு வீக்கம் ஏற்படுத்தும் திரவத்தில் ஆல்புமின் கலந்து விடுவதால், சீரம் ஆல்புமினின் அளவு கணிசமாகக் குறைந்துவிடும். எனவே சீரம் ஆல்புமின் உற்பத்தி செய்யும் கல்லீரல் செல்களைப் புதுப்பிக்க அதிக புரதம் உதவும். ஹெபாடிக் கோமா ஏற்படாத நிலையில் தினமும் 12 கிராம் / 1 கி.கி. உடல் எடைக்கு சமமான புரதம் அளிக்கப்படலாம். நோயின் அறிகுறிகளைப் பொருத்து புரதத்தின் அளவு மாறுபடும்.

கொழுப்பு

தேவையான அளவு புரதம் உணவில் கிடைக்கும்போது சுமார் 20 கிராம் கொழுப்பு போதுமானது.

கார்போஹைடிரேட்டு

கிளைகோஜன் சேமிக்கப்படும் அளவுக்கு, தாராளமாக கார்போஹைடிரேட் கொடுக்கப்பட வேண்டும். கிளைகோஜன் போதுமான அளவு சேமிக்கப்படும் போது தான், கல்லீரலின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடையும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள்

வைட்டமின்கள் வளர்சிதை மாற்றம் அடைந்து இயங்கக் கூடிய நிலைக்கு மாற்றுவதும், வைட்டமின்கள் சேமிப்பு நிலையமாக விளங்குவதும் கல்லீரலே. எனவே கல்லீரல் உலர்ச்சி ஏற்படும் போது போலேட் (folate) ரைபோபிளேவின், நிக்கோடினமைடு, வைட்டமின் B, மற்றும் வைட்டமின் A ஆகியவற்றின் இருப்பு கல்லீரலில் குறைகிறது. மேலும் இரத்தசோகையைத் தடுப்பதற்கு குறிப்பாக, B, வைட்டமின்கள் ஈடு செய்ய வேண்டியது அவசியம். கொழுப்பு கல்லீரல் செல்களில் ஊடுருவும் தருணத்தில் கோலின், (choline) மித்தியோனின் (methionine) போன்ற அமினோ அமிலங்களை உணவில் ஈடு செய்வது மிகவும் நல்லது.

உடலில் நீர்தேக்கம் காணப்படும் போதும் (0edema) வயிறு வீக்கம் ஏற்படும் போதும் சோடியம் ஒரு நாளைக்கு 40-800 மி.கி என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வயிறுவீக்கம் இல்லாத போது மிகச் சிறிய அளவில் உப்பு உணவை பசியைத் தூண்டுவதாக அமைக்க அனுமதிக்கப்படும். நீர்த்தேக்கம், வயிறுவீக்கம் ஏற்படும் போது பொட்டாசியம் சேர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் ஹைப்போகாலீமியா (hypokalemia) என்ற பொட்டாசியக் குறைவு ஏற்பட்டுவிடும். இந்நோய் ஏற்படும் போது இரத்தசோகை வெகுவாக ஏற்படுவதால் இரும்புச் சத்து ஈடு செய்யப்பட வேண்டும். ஃபெரஸ்சல்பேட் (ferrous sulphate) மாத்திரைகள் மூன்று வேளை, உணவுக்குப் பிறகு கொடுப்பது நல்லது. மேக்ரோசைடிக் (macrocytic) அனிமியாவை (இரத்த சிவப்பணுக்களின் வடிவம் பெரியதாகி, எண்ணிக்கையில் குறைதல்) தடுக்க போலிக் அமிலம் (Folic acid) 1 மி.கி. அளவில் தினமும் வாய்வழியாக (Orally) கொடுக்கப்பட வேண்டும்.

கோலிசிஸ்டைடிஸ் மற்றும் கோலிலிதியாசிஸ்

 • கோலிசிஸ்டைடிஸ் எனப்படுவது பித்தப்பை அழற்சி (inflamation) ஆகும். கோலிலிதியாசிஸ் எனப்படுவது பித்தகற்கள் ஏற்படுவது ஆகும். பித்தப்பையில் நீண்ட காலமாக தொடர்ச்சியாக சிறிய அளவிலான தொற்றுநோய் காரணமாக பித்தப்பை அழற்சி ஏற்படுகிறது. இந்நோயில் பித்தகற்களும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
 • பித்தகற்கள் இரண்டு வகைப்படும். அவை கொலஸ்டிரால் கற்கள் என்றும் நிறமி கற்கள் என்றும் இருவகைப்படும்.
 • பித்தநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கல்லீரலில் இருந்து வெளிவரும் பித்தநீர் சிறு குடலுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது.

பித்தப்பையும், பித்தக்கற்களும்

பித்தப்பை அழற்சி மற்றும் பித்தக் கற்கள் தோன்றும்போது, கொழுப்பு நிறைந்த உணவு, பித்தப்பையை சுருங்கச் செய்து வலியை ஏற்படுத்துகிறது. எனவே, திடீரென்று ஏற்படும் கோலிசிஸ்டைடிஸ் மற்றும் கோலிலிதியாசிஸ் நிலையில் அறுவைச் சிகிச்சையே அறிவுறுத்தப்படுகிறது. எப்படியிருப்பினும் இந்நோயில் கொழுப்பு, ஒரு நாளைக்கு 20 கிராம் என்ற அளவில் வெகுவாக குறைக்கப்பட்டு, கார்போஹைடிரேட்டிலிருந்து சக்தி கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக கலோரி, அதிக புரதம் நிறைந்த உணவுகள் இந்நோய்க்கு சிறந்தது. அப்போதுதான் கல்லீரல் செல்கள் புதுப்பிக்கப்படும். எனவே மிருதுவான தயாரிப்புகளில் தானியங்களையும், சமைத்த சாதம், சப்பாத்தி, ரொட்டி, இட்லி, பால் புட்டிங், தயிர், வேகவைத்த காய்கறிகள், கிச்சடி, கஞ்சி ஆகியவை திட்ட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பயறுகள், பீன்ஸ் வகைகள், மாமிசம், பழம், பழச்சாறு, மீன், மிருதுவாக சமைக்கப்பட்ட முட்டை (Soft cooked egg) இரண்டுவகை உணவுகளும் அதிக கலோரி மற்றும் அதிக புரதம் தர வல்லவது.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன்

3.03448275862
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top