பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / பள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)

பள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை) பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஆறு முதல் பன்னிரண்டு வரையுள்ள குழந்தைகளின் வளர்ச்சியானது அதிக மாற்றமின்றி, ஒரே சீராக இருக்கும். ஒன்பது வயது வரை சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரே அளவிலான ஊட்டச்சத்து தேவைகள் இருப்பினும், அதன்பின் இருவரின் ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வளர்ச்சியோடு இணைந்த மாற்றங்கள் (Growth pattern)

பள்ளிப் பருவத்தில் வளர்ச்சி விகிதம் (Growth rate) தாமதித்தாலும், விரைவான வளர்ச்சிப் பருவமான வாலிபப் பருவத்திற்கென உடலில் சேமிப்புகள் (reserves) சேர்த்து வைக்கப்படுகின்றது. எனவே இப்பருவத்தை “புயலுக்கு முன் வரும் அமைதிப் பருவம்” எனலாம்.

பொதுவாகச் சிறுமியரின் உடலில் கொழுப்புச் சேமிப்பு, சிறுவரை விட அதிக அளவில் காணப்பட்டாலும் தசைத் திசுக்களின் சதவீதம் குறைவாக இருக்கும். குழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு நிலையிலும் சிறுவர், சிறுமியரை விட உயரமானவர்களாகவும், அதிக எடை உடையவராகவும் காணப்பட்டாலும், 11 முதல் 12 வயது வரையுள்ள சிறுமியர் எடை அதிகமுள்ளவராகவும் உயரமானவராகவும் காணப்படுவர்.

குழந்தை (அவன் அல்லது அவள்) பள்ளி செல்லும் சமயத்தில் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனையும், குழு செயலில் பங்கேற்கும் திறனையும் பெறுகிறார்கள். இப்பருவத்தின் பல்வேறு உணர்ச்சிகளின் அழுத்தம் (emotional stress), போட்டி மனப்பான்மை, கனவுலகத்தில் சஞ்சரித்தல் போன்றவை, முந்தைய கற்றல் மற்றும் ஆளுமை தன்மையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இப்பருவத்தில் பெற்றோரைச் சார்ந்திருப்பதை விட, சமவயதினரோடு ஒத்து வாழவே விரும்புவர்.

ஊட்டச்சத்து தேவைகளின் அளவுகள் (Nutritional allowance)

சக்தி மற்றும் புரதம்

பள்ளிப் பருவத்தில் சக்தி மற்றும் புரதத் தேவைகள் அதிகரிக்கிறது. சிறுமியருக்கு தொடர்ந்து கலோரித் தேவைகள் ஒரே அளவாக உள்ளன. 10 வயது முதல் 12 வரையுள்ள சிறுவர்களுக்கு, திடீரென ஏற்படும் அதிக வளர்ச்சிக்கென்று (growth Spurt) அதிக கலோரி சேமிப்புகள் (reserve) தேவைப்படுகின்றன. 10 முதல் 12 வயது வரையுள்ள சிறுமியரின் புரதத் தேவைகள், பருவமடையும் நிலையை எதிர் கொள்வதால் சிறுவரை விட சிறிது அதிகரிக்கிறது.

கொழுப்பு

ICMRரின் பரிந்துரைப்படி, மொத்த கலோரித் தேவையில் 5 முதல் 6 சதவீதம் வரை லினோலியிக் அமிலத்திலிருந்து பெறப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கண்ணுக்குப் புலப்படும் கொழுப்பின் குறைந்த பட்ச தேவையை 12 கி/ நாள் என கணக்கிட்டிருப்பினும், பள்ளி செல்லும் குழந்தைகளின் விரும்பத்தக்க அளவு 22கி/ நாள் என பரிந்துரைக்கின்றது.

தாது உப்புக்கள்

10 முதல் 12 வயது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக, பெரியவர்களை விட அதிக அளவில் கால்சியம் தேவைப்படுகிறது.

இரத்தத்தின் கன அளவு அதிகரிப்பதால் இரும்புச்சத்தின் தேவை அதிகரிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் 2 வயது முதல் 12 வயது சிறுவர்களின் சராசரி எடை மற்றும் 2 வயது முதல் 10 வயது சிறுமியரின் சராசரி எடை 25 - 27 கிகி அதிகரிப்பிற்கு ஏற்றவாறு, ஒரு நாளையத் தேவை 0.3 மி.கி./நாள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரும்புச்சத்தின் தேவை,

ஹீமோகுளோபின் அடர்வினாலும் (haemoglobin Concentration) அல்லது இழப்பினாலும் சீராக அதிகரிக்கின்றது. 10 முதல் 12 வயது வரையுள்ள சிறுமியரின் இரும்புச்சத்து தேவை, 7 முதல் 9 வரையுள்ள சிறுமியரை விட குறைவு. ஏனெனில், 10 முதல் 12 வரையுள்ள சிறுமியரின் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுதல் அதிகமாகவும் அதாவது 5 சதவீதமாகவும், 7 முதல் 9 வரையுள்ள சிறுமியரில் 3 சதவீதமாகவும் உள்ளது.

உயிர்ச்சத்துக்கள்

பல்வேறு வயதினரின் வளர்ச்சி விகிதங்களைக் கருத்தில் கொண்டுக் குழவியரின் (infants) உயிர்ச்சத்து A யின் தேவைகள் 50 மை.கி கிகி எனவும், பெரியவருக்கு 93 மை.கி கிகி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உயிர்ச்சத்து A மற்றும் C யின் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைகள் (RDA) பெரியவர்களைப் போன்றதே. கலோரி தேவைகளைப் பொருத்து, உயிர்ச்சத்து B யின் தேவை மாறுபடுகின்றன.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவூட்டம் (Diet)

பள்ளிப் பருவக் குழந்தைகள் தங்களுக்கென குறிப்பிட்ட உண்ணும் பாங்கினை (Pattern) மேற்கொள்ளுகின்றனர். இப்பருவத்தில் சமவயதுள்ளவர்களின் (Peer group) தாக்கம் (influence) இருப்பதால் இவர்கள் உண்ணும் பாங்கு வீட்டில் உணவு உண்ணும் விதத்திலிருந்து சிறிது மாறுபடும். வீட்டில் இயல்பாக உண்ணாத உணவாக இருப்பினும் வெளியில் சாப்பிட முயல்வர்.

பள்ளிப் பருவக் குழந்தைகள் துடிப்பானவர்களாகவும் (restless) உணவு உண்ண மிகக் குறைந்த நேரத்தை செலவழிப்பவராகவும் இருப்பர். காலை சிற்றுண்டி மிக முக்கியமான உணவாகும். ஆனால் காலைச் சிற்றுண்டி உண்ணாதிருத்தல் (skipping) பள்ளி பருவ குழந்தைகளின் செயல்திறனைப் (performance) பாதிக்கும். குழந்தைகள் தங்கள் உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்கும் செயலில், விளம்பரங்களும், தொலைக்காட்சியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. “சாக்கலேட்,” “சுவைமிக்க” (Yummy), “உயர்தரமான” (rich) போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் ஆயத்த உணவிற்கு (processed) கூறப்படுவதால், குழந்தைகள் ஈர்க்கப்பட்டு, தவறான கருத்தினைக் கொண்டவர்களாய் இயற்கையான மணமும், நிறமுமுடைய பொருட்களை உண்ணும் ஆவலின்றி உள்ளனர்.

பற்சிதைவு

பற்சொத்தையினால் ஒழுங்கமைப்பு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பற்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பற்களின் ‘இனாமல் பூச்சிற்கு (enamel) உயிர்ச்சத்து A-யும், பல்லின் “டென்டைன்' (dentine) பகுதிக்கு உயிர்ச்சத்து C யும் அவசியம். பற்சிதைவினால் பாதிக்கப்படுவதைப் புளுரின் (fluorine) குறைக்கிறது. பற்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மையுடைய, எளிதில் புளிப்படையும் (fermentable) கார்போஹைட் ரேட்டுகளே பற்சிதைவிற்கு முக்கிய காரணிகளாகின்றன. பற்களில் ஒட்டும் தன்மையுடைய பொருட்களும், வாயில் அதிக நேரம் தங்கும் பொருட்களும் இந்த பாதிப்பை அதிகரிக்கின்றன. ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்பும், வாயை நன்கு கழுவுதல் மிக அவசியம். அது மட்டுமல்லாது, காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும், இரு முறை பற்களைத் துலக்கும் நற்பழக்கத்தை கைக்கொள்ளுதல் பற்சிதைவைத் தடுக்கும்.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன், ICMR

2.91044776119
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top