பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / முதியோருக்கான உணவூட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முதியோருக்கான உணவூட்டம்

முதியோருக்கான உணவூட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

60 வயதுக்கு மேற்பட்டோரே, வயது முதிர்ந்தோர் ஆவர். தற்சமயம் இந்த வயதினைச் சார்ந்தவர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால் இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே வயது முதிர்ந்தோரைக் கீழ்காணுமாறு வகைப்படுத்தலாம். 65-75 வயது வரை உள்ளவர்களை இளம் முதியவர்கள் (young old) என்றும், 75-85 வயது வரை உள்ளவர்களை முதியவர்கள் என்றும் (old), 85 வயதுக்கு மேற்பட்டவர்களை வயோதிகர்கள் (0ldest) என்றும் வகைப்படுத்தலாம்.

மூப்படைதல்

மாற்ற இயலாத உயிரியல் வேதி மாற்றமே மூப்படைதல் எனப்படும். இது ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும், இறக்கும் வரை தொடர்ந்து நடைபெறும் ஒரு மாற்றமாகும். மேலும், மூப்படைதலை நிர்ணயிப்பது மரபணுக்கள் ஆகும். இருப்பினும் ஆரோக்கியமும், நல்ல ஊட்டமும் மூப்படைதலைத் தள்ளிப் போடுகிறது. ஒருவரது ஊட்டச்சத்து நிலை மற்றும் வாழும் சூழலுக்கேற்ப, மூப்படைதல் மாறுபடுகிறது.

முதியவர்களின் ஊட்டச்சத்து நிலை அவர்களின் திசுக்களின் ஊட்டநிலையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை, சீரற்ற ஜீரணித்தல் மற்றும் உறிஞ்சுதல், ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு திசுக்களைச் சென்றடையாமை, கழிவுப் பொருட்கள் அதிக அளவில் சேருதல் போன்ற காரணங்களால், செல்களுக்குத் தேவையான ஊட்டம் கிடைப்பதில்லை.

ஒருவர் மூப்படையும்போது, செல்களின் வேலை செய்யும் திறன் குறைகிறது. ஹார்மோன்களின் செயலாற்றத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதும் குறைகிறது. மேலும் என்ஸைம்கள் உருவாதலும் குறைகிறது. இம்மாற்றங்கள், செல்களின் வேலை செய்யும் திறன் குறைவதால் ஏற்படுகிறது. செல்கள் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை கொண்டது. இத்தன்மை காரணமாக, ஒரு செல் இறப்பின், மற்ற செல்கள் வேலை செய்யும் திறனை இழக்கிறது. இதனால், அந்தக் குறிப்பிட்ட உடலுறுப்பின் செயல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு உடலுறுப்பின் செயல்கள் பாதிக்கப்படும்போது இறப்பு நேரிடுகிறது.

உடல், உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த மாற்றங்கள்

வயோதிகப் பருவத்தினை அடையும் போது, பலவித மாற்றங்கள் ஏற்படுகிறது. அவையாவன.

உடலியல் மாற்றங்கள்

முடி வெளுப்பாதல், தோல் சுருக்கம், உயரம் குறைதல் மற்றும் உடல் வில்லைப் போன்று வளைதல் போன்ற உடலியல் மாற்றங்கள் வயதானவர்களிடையே தோன்றுகிறது. பார்வையும், புரிந்து கொள்ளும் திறனும் குறைகிறது. மேலும், வயதானவர்களின் உடல் வலிமை (strength and vigour) குறைகிறது.

உடலியியல் மாற்றங்கள் (Physiological changes)

வயதாகும் போது ஏற்படும் உள்ளுறுப்புகளின் குறைந்த செயல்திறன் எல்லா உறுப்புகளிலும், ஒரே மாதிரியாகக் காணப்படுவதில்லை. இது, உறுப்புக்கு உறுப்பு மாறுபடுகிறது. பொதுவாக நோக்கின், பல்வேறு உறுப்புகள் அடங்கிய மண்டலத்தின் திறன் குறைவதில்லை. ஆனால், சவாலை எதிர்கொள்ளும் திறனும், உடலின் சமநிலையை பராமரிக்கும் திறனும் குறைந்துவிடுகிறது. வெவ்வேறு மண்டலங்களில் (system) ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் காணலாம்.

சுவை மற்றும் மணம்

நாக்கிலுள்ள சுவை அரும்புகள் மற்றும் "பேப்பில்லே’ (papilae) ஆகியவற்றின் எண்ணிக்கை குறைகிறது. சர்க்கரையை உணர்ந்து கொள்ளும் திறன் குறையாது. ஆனால் உப்பின் சுவையை உணர்ந்து கொள்ளும் திறன் குறைந்து விடுகிறது. நுகரும் உணர்வு குறைவதினால், வாசனையை அறிந்து கொள்ளும் திறனும் குறைந்து விடுகிறது. இதனால், உணவை ரசித்து உண்ண இயலாமல், உட்கொள்ளும் அளவு குறைகிறது. சுவையும் மணமும் குறைவதினால், உணவு உண்ணும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய உணர்வுகள் குறைந்து விடுகிறது. இதனால் வளர்சிதை மாற்றங்களின் செயல்கள் பாதிக்கப்படுகிறது.

உமிழ்நீர்ச்சுரப்பிகள்

உமிழ்நீர் சுரப்பு குறைவதினால் அல்லது உமிழ் நீர் இல்லாமல் போவதினால் (xerostomia) நாவறட்சி உணர்வு ஏற்படுகிறது. இதனால் உணவை மென்று விழுங்குதல் சிரமமாகிறது. எனவே, மொறுமொறுப்பான, உலர்ந்த மற்றும் ஒட்டும் தன்மையுள்ள உணவுகள் வயதானவர்கள் உணவினில் தவிர்க்கப்பட வேண்டும்.

பற்கள்

பற்கள் விழுந்து விடுவதாலும், பற்கள் ஈறுகளுடன் (gum) பிணைக்கப்படுதல் குறைந்து விடுவதாலும், உணவை மெல்லுதல் சிரமமாகிறது. இதனால் முதியவர்கள் புதிய (fresh) காய்கறிகள் மற்றும் கனிகளை சேர்த்துக் கொள்வதில்லை. இதனால் வைட்டமின் மற்றும் தாதுஉப்புகளின் குறைவு ஏற்படுகிறது. இதனுடன் இரைப்பை குடல் (gastrointestinal) பகுதியில் உணவு உட்செல்லும் வேகம் குறைந்து, கழிவுகளை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

உணவுக் குழாய் பாதையின் செயல்கள்

ஜீரணித்தலுக்கு உதவும் என்ஸைம்களும், சுரப்புநீர்களும் உற்பத்தியாவது குறைந்துவிடுகிறது. இதனால் ஜீரணித்தல் அயனிப் பொருள்களை மறுபடியும் உறிஞ்சுக் கொள்ளுதலும் பாதிப்படைகிறது. மேலும், 40 வயதுக்கு மேல், நெப்ரான் (nephron) உருவாக்கும் திறனை (regenerate) உடல் இழந்து விடுகிறது. இதனால், கரைபடு (solute) பொருள்கள் ஒவ்வொரு நெஃப்ரானிலும் (nephron) அதிகமாக சேருவதால், திசுக்கள் அழிந்து, சிறுநீரகத்தின் செயல்கள் பாதிப்படைகிறது.

எலும்புகளிலிருந்து தாதுக்கள் (கால்சியம், பாஸ்பரஸ் அதிக அளவில் வெளியேறுகிறது. இதனால் கீழே விழும்போது எலும்பு உடைதலும், முதுகெலும்புகள் பாதிக்கப்படுதலும் அதிகரிக்கிறது. உயரம் குறைந்தும், கூனுடனும் காணப்படுவர். மார்பறை குறுகுவதால் சுவாசித்தல் பணி பாதிப்படையலாம்.

நுரையீரல்களின் பணிகள்

வாழ்நாளில், நுரையீரல்களின் பணித்திறன் 40 சதவிகிதம் குறைந்துவிடும். ஆனால் வயோதிகத்தில், இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. இருப்பினும், இவர்களால் சக்தி அதிகமாக செலவிடப்படும் உடற்பயிற்சிகளை செய்ய இயலாது.

ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்

தைராய்டு, அட்ரினல் கார்டெக்ஸ், கணையம் சுரப்பிகளின் (gland) செயல்பாடு குறைவதால், வளர்சிதை மாற்றத்திலும், வளர்சிதை மாற்றப் பணிகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஹார்மோன்களில் சமச்சீரற்ற நிலை ஏற்படுவதால் கால்சியத்தின் வளர்சிதை மாற்றம் பாதிப்படைகிறது. எனவே, எலும்புகளில் நுண் துளைகள் ஏற்பட்டு, எலும்பு இழப்பு (bone loss) ஏற்படுகிறது. பெண்களுக்கு, மாதவிடாய் நின்று விடுவதால், இரும்புச்சத்தின் தேவை குறைகிறது.

அ. நகரமயமாதலினாலும், தலைமுறையினரிடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டதாலும், தனிக் குடித்தனங்கள் பெருகி விட்டன. இதன் காரணமாக, பெரியவர்களை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களது குடும்பமே ஒதுக்கி வைக்கின்றன. இதனால் தனிமை ஏற்படுகிறது. தனித்து விடப்படுவதால் மனச்சோர்வு (depression) ஏற்பட்டு பசியெடுக்கும் திறன் குறைந்து விடுகிறது. மேலும், உணவினை உணவு வேளைகளில் உண்ணாமல் தவிர்ப்பதால், ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படுகிறது.

ஆ. பொருளாதார வசதி

பொருளாதார நிலை திருப்தியடையும் விதத்தில் இல்லாமலிருப்பதால், உணவு உட்கொள்ளும் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.

இ. தவிப்பு (Anxiety)

வீட்டில் அன்பு கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனாலும் வயோதிகர்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் நிகழ்கிறது. இது மட்டுமின்றி உணவினைப் பற்றிய மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்படுகிறது. மேலும், ஹார்மோனின் மாற்றங்களால் நிகழும் பரபரப்புத் தன்மையின் (anxiety) காரணமாக, சீரணிக்க உதவும் சுரப்பு நீர்களின் ஓட்டம் குறைகிறது. இதனால் சீரணித்தலும், உறிஞ்சுதலும் பாதிக்கப்படுகிறது.

ஈ. சுயமரியாதை மற்றும் சுதந்திரம் இழத்தல்

வேலையிருந்து ஓய்வு பெற்றவுடன், சுயமரியாதை இழக்கப்படுவதாக உணருகிறார்கள். உடல் பலம் குறைதல், நடக்க இயலாமை, பணப்பற்றாக்குறை போன்ற காரணங்களால், வயதானவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழ நேரிடுகிறது. முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தனக்கு அதிகாரம இல்லை என நினைத்து இளம் சந்ததியிடம் விட்டுவிடுகிறார்கள். இதனால், முதியோர் மன வருத்தமும், வெறுப்பும் அடைகின்றனர்

வயோதிகம்

இரும்புச்சத்து தேவையைப் பாதிப்பதில்லை. எனவே, பெரியவர்களுக்காக (adult) பரிந்துரைக்கப்பட்ட இரும்புச்சத்தின் அளவே, வயதானவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. ஆகவே, இரும்புச்சத்து போதுமான அளவு வயோதிகத்தில் உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின்கள்

அ. வைட்டமின் A தேவை, பெரியவர்களுக்கான அதே அளவாகும். அதாவது, 600 mg ரெட்டினால்.

ஆ போதுமான அளவு சூரிய ஒளி உடலில் படாமல் இருக்கும்போது வைட்டமின் D யின் அளவு ஈடு செய்யப்பட வேண்டும்.

இ. மருந்து உட்கொள்வதாலும், அழுத்தம் அதிகரிப்பதாலும், வைட்டமின் C தேவை அதிகரிக்கிறது.

ஈ. இரைப்பை அழற்சியால் திசுக்கள் வீணாகிறது.

இதனால் B, உறிஞ்சுதலில் தடை ஏற்படுகிறது. மேலும் கல்லீரல் சரிவர வேலை செய்யாது இருத்தலினால் (dysfunction) B, குறைவு ஏற்படுகிறது. இதனால் B, தேவை அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாது, நீர் அதிகமாக அருந்த வேண்டும். இத்தேவையை, நீரை மட்டும் அருந்துவதாலும் இல்லையெனில் மோர், பழச்சாறுகள் மற்றும் சூப்புகள் உட்கொள்வதாலும் நிறைவு செய்யலாம். இவ்வாறு உட்கொள்வதால் சிறுநீரகத்தின் வேலைப்பளு குறைகிறது. மலச்சிக்கலும் தவிர்க்கப்படுகிறது.

சர்க்கரை

கொழுப்பு மற்றும் எண்ணெய் உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. இதனால் நீண்ட கால நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். ஊட்டம் குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் பின்வருமாறு 1. எலும்புகளில் நண்துளைகள் ஏற்படுதல் (Osteoporosis) எலும்பின் நிறை மற்றும் அடர்வு குறைவதன் மூலம் எலும்புகளில் நுண்துளைகள் ஏற்படுதலை அறிய முடியும். இத்துளைகள் ஏற்படுதலினால், எலும்புகள் மிருதுவாகி எலும்புமுறிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

உடல் பருமன்

பெரும்பாலான வயோதிகர்கள் உடல்பருமனுடன் காணப்படுகிறார்கள். உடலியல் செயல்பாடுகளுக்கேற்ப குறைவாக கலோரி உட்கொள்ளாததால் இந்நிலை ஏற்படுகிறது.

இரத்த சோகை

சோர்வு, தவிப்பு (anxiety), சக்தியற்று இருத்தல் போன்ற இரத்த சோகை நோயின் அறிகுறிகள் காணப்படும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாக உண்ணுதல், இரும்புச்சத்து குறைவாக உறிஞ்சப்படுதல் அல்லது Heam என்ற இரும்புச்சத்து இல்லாமை, வைட்டமின் C குறைதல் அல்லது இரத்த இழப்பு போன்றவையே இரும்புச் சத்து குறைவு ஏற்பட காரணங்களாகும்.

வைட்டமின் B, குறைவால் ஏற்படும் பெர்னிசியஸ் இரத்த சோகை (pernicious Anaemia) வயதான பெண்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. எனவே, வயதானவர்களின் உணவூட்டம் இரும்புச்சத்து மற்றும், வைட்டமின் B, நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்து குறைவு

வயதானவர்களிடையே ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள் பின்வருமாறு:

 • அ. பொருளாதார சூழல்.
 • ஆ. உடலியல் செயல்பாடு இல்லாதிருத்தல்.
 • இ. நீண்ட கால நோய்களாலும், அதற்காக உட்கொள்ளும் மருந்துகளாலும் ஏற்படும் பாதிப்பு.
 • ஈ. சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுதல்.
 • உ. ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் உணவுகளைப் பற்றிய அறிவின்மை.

மலச்சிக்கல்

ஒரே சீராக சுருங்கும் தன்மை கொண்ட மலக்குடலின் (colon) செயல்திறன் வயதான காலத்தில் கீழ்கண்ட காரணங்களால் பாதிப்படைகிறது.

 • நிலையானத்தன்மை இழத்தல்
 • மன அழுத்தம்.
 • மருந்துகள் மூலமான சிகிச்சை.
 • நார்ச்சத்து குறைந்த உணவு
 • குறைவாக திரவம் உட்கொள்ளுதல்.

இக்காரணங்கள் மலச்சிக்கலை உண்டாக்குகிறது. மேலும், அதிகளவு மலமிளக்கிகளை உட்கொள்ளுவதாலும், எனிமா (enema) வைப் பயன்படுத்துவதாலும் கூட மலச்சிக்கல் உண்டாகலாம். இன்சுலின் சாராத நீரிழிவு நோய் (NIDDM) அதிகமாக ஏற்படுகிறது. குளுக்கோஸ் ஏற்புத்திறன் பாதிக்கப்படுதலும், செல்கள் இன்சுலினை ஏற்றுக் கொள்ளும் தன்மை குறைதலும் இதற்குக் காரணமாகும்.

இருதய சுற்றோட்ட நோய்கள் (CVD)

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய சுற்றோட்டத்தில் ஏற்படும் நோய்களான இரத்தக் குழாய் சுவர்கள் தடித்துப் போதல், குறுகிய காலத்தில் இருதயத் திசுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டம் இல்லாததின் காரணமாக இறந்து போதல் (Myocardial infarction), செயல் இழத்தல் போன்றவை ஏற்படுகிறது. இந்நோய்கள் அனைத்தும் இருதய சுற்றோட்டத்தின் செயல்களில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கிறது. இதன் காரணமாக, உணவுக் கட்டுப்பாடுகளும், உணவின் தன்மையில் (texture) மாற்றமும், இரத்த அழுத்தத்தை திடீரென குறைக்க உதவும். சிறுநீர் அதிகமாக வெளியேற உதவும் மாத்திரைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த மாத்திரைகளால் உணவு உட்கொள்ளுதல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது.

தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் உணவூட்ட மாற்றங்கள்

வயோதிகத்தில் ஏற்படும், உடல், உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த மாற்றங்களால், உணவூட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

 1. பற்கள் உறுதியாக இல்லாததாலும், பற்கள் விழுந்து விடுவதாலும், உண்ணும் உணவு மிருதுவாகவும், எளிதில் மெல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
 2. சீரணத்திற்கு உதவும் சுரப்பு நீர்களின் அளவு குறைவதால், உணவு எளிதில் சீரணமடையக் கூடியதாக இருக்க வேண்டும்.
 3. உடல் பருமனையும், இருதய சுற்றோட்டத்தில் நோய்களை ஏற்படுத்தும் கொழுப்பு நிறைந்த உணவினைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 4. செறிவுற்ற (saturated) கொழுப்பு நிறைந்த உணவினையும் தவிர்க்க வேண்டும்.
 5. சக்தி நிறைந்த இனிப்புகள், பொரித்த உணவுகள் மற்றும் ஸ்டார்ச் செறிந்த உணவினைத் தவிர்க்க வேண்டும்.
 6. எலும்பு இழப்பைச் சரிப்படுத்துவதற்கும் மற்றும் எலும்பில் நுண்துளைகள் ஏற்படுவதைக் குறைக்கவும், கால்சியம் செறிந்த பால் மற்றும் பால்சார்ந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 7. வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்ப்பொருள்கள் மற்றும் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் கனிகளை, சாறுகளாகவும், மசித்த வடிவிலும் (purees), சூப்புகளாகவும், பச்சடிகளாகவும் கொடுக்கலாம்.
 8. காபி, டீ மற்றும் கார்பனேற்றம் செய்த பானங்கள் நரம்புகளைத் தூண்டி தூக்கமின்மையை உண்டாக்குவதால், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
 9. உணவுகளை மூன்று முக்கிய உணவு வேளைகளில் மட்டும் தராமல், சிறுசிறு இடைவெளியில் தருவது நல்லது. ஏனெனில், இவை எளிதில் சீரணமாகிவிடும்.
 10. உடலில் நீர்வற்றிப் போதலைத் தடுக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், அதிக அளவில் திரவ உணவுகள் சேர்க்கப்பட வேண்டும்.
 11. உப்பு உட்கொள்ளும் அளவினைக் குறைக்க வேண்டும். நல்ல ஊட்டம் வயதான காலத்தில் மிகவும் தேவையான ஒன்று. ஊட்டச்சத்து போதுமான அளவில் அளிக்கும் உணவாக நாம் தயாரிக்கும் உணவு இருக்க வேண்டும். மேலும், இவ்வுணவானது சரிவிகித உணவாகவும், உண்ணத் தகுந்ததாகவும் இருக்க வேண்டும்.

வயதானோர்க்கு ஏற்ற உணவு தயாரிப்புகள் (Recipes)

சமூக பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, வயதானோர் தனித்து வாழும் சூழ்நிலையும், அவர்களே தமக்குத் தேவையான உணவை சமைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே எளிதில் தயாரிக்கக் கூடிய, சத்துமிகுந்த மற்றும் ஆரோக்கியத்தைப் பேணக் கூடிய உணவுகளின் செய்முறை இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

 • இவ்வுணவுகள் சத்துள்ளதாகவும்,
 • எளிதில் சமைக்கக் கூடியதாகவும்,
 • குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடியதாகவும்,
 • உண்பதற்கு ஏற்ற ஆயத்த உணவாகவும் இருக்க வேண்டும்.

எளிதில் சமைக்கக் கூடிய மற்றும் சில ஆயத்த உணவுகள் ஹைதராபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன் (NIN) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் முதியோர்களின் எண்ணிக்கையாலும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளாலும் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை நிலைநிறுத்த வேண்டியும் அக்டோபர் முதல் தேதி உலக வயதானோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிசன், ICMR

2.96666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top