பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு / குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து இங்கு விவரிக்கப்பாட்டுள்ள்ன.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்

வளர்ச்சி

வளர்ச்சி என்பது மொத்த உடல் அல்லது உடல் உறுப்புகளின் பரிமாண அளவு அதிகரிப்பது ஆகும். இதை அங்குலம் (அல்லது) செ.மீ மற்றும் பவுண்ட் (அல்லது) கிலோகிராம் மூலமும் கணக்கிடலாம். இது குழந்தையின் உடல் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. செல் பிரிவு மூலமும், புரதம் உருவாதல் மூலமும் வளர்ச்சி ஏற்படுகிறது.

முன்னேற்றம்

முன்னேற்றம் என்பது படிப்படியாக திறமை மற்றும் செயல்திறன் அதிகரிப்பது ஆகும். இது குழந்தையின் செயல் திறனில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கும் காரணிகள்

பல காரணிகள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கிறது.

மரபு (Genetics)

உடல் வளர்ச்சியில் மரபு முக்கியப் பங்கினை வகிக்கிறது. உயரமான பெற்றோர்களுக்கு உயரமான குழந்தைகள் பிறக்கும். சில நோய் உண்டாக்கும் மரபணுக்கள் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படுவதால், சில மரபு சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

ஊட்டச்சத்து (Nutrition)

ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடைச்செய்கிறது.

சமூக பொருளாதார காரணிகள் (Socio-economic)

வறுமை, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் குறைக்கிறது. செல்வம் செழிந்த நிலை, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

சுற்றுசூழல் காரணிகள்

நம்மை சுற்றியுள்ள இயற்கை காரணிகளான (சூரிய ஒளி, சுகாதாரம்) மனரீதியான மற்றும் சமூக ரீதியான காரணிகள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

நீண்டநாள் நோய்கள் (Chronic Diseases)

இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், செரிமான மண்டலத்தில் ஏற்படும் நீண்டகால நோய்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

வளர்ச்சி நிகழும் தன்மை (Growth potential)

குழந்தைப் பிறக்கும் போதுள்ள அளவு வளர்ச்சி நிகழும் தன்மையை நிர்ணயிக்கிறது.

பிரசவத்திற்கு முன் உள்ள காரணிகள் (Prenatal causes)

பிறக்கும் போதே வளர்ச்சி குன்றிய சிசு (IUGR), கருவுற்றிருக்கும் போது தாய்க்கு ஏற்படும் சில நோய்கள் மற்றும் தொற்றுகள் சிசு மற்றும் பச்சிளம் குழந்தையைப் பாதிக்கிறது.

மனரீதியான காரணிகள்

நிலையற்ற குடும்பம், பாதுகாப்பாற்ற நிலை, உடன்பிறந்தவர்களின் பொறாமை, போட்டி, பெற்றோர்களின் இழப்பு, கல்வியின்மை ஆகியவை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.

குழந்தைப் பருவத்தின் நிலைகள்

குழந்தைப் பருவத்தைக் கீழ்க்கண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. பிறந்த குழந்தை (New born)

பிறப்பு முதல் 28 நாட்கள் வரை

பச்சிளங் குழந்தை (1-12 மாதங்கள்)

2. முன் குழந்தைப் பருவம் (1-6 வயது)

குழந்தை பருவம் (1 - 3 வயது)

முன் பள்ளி பருவம் (3 - 6 வயது)

3. இடை குழந்தை பருவம் (6 - 12 வயது)

பள்ளி பருவம் (6 - 12 வயது)

4. வாலிப பருவம் (1 - 19 வருடம்)

முன் வாலிப பருவம் (10 - 13 வருடம்)

வளரும் பருவம் (13 - 19 வயது)

இளம் குழந்தை (1 12 மாதங்கள்)

இந்நிலையில் இயங்கும் சக்தி, அறிவாற்றல், சமூக வளர்ச்சியில் துரிதமாக மாற்றம் ஏற்படுகிறது. தாயின் அரவணைப்பால் குழந்தைக்கு உலக ரீதியில் நம்பிக்கை ஏற்படுகிறது. இதுவே, பிறரிடம் தொடர்பு (Interpersonal relationship) கொள்ள அடிப்படையாக உள்ளது.

வ.எண்.

வயது (மாதம்)

முன்னேற்றம்

உடல் வளர்ச்சி

தூண்டல்

துலக்கம்

மொழிகள்

சமுதாய சூழல் /நடத்தைகள்

1.

1­-4 மாதம்

எடை 4.4 + 08. கிலோ

ஆறு மாதம் வரை ஒவ்வொரு மாதமும்

680 கிராமுக்கு மேல் எடை அதிகரிக்கும்

நீளம்.

53 + 2.5 செ.மீ ஆறு மாதம் வரை 2.5 செ.மீ நீளம் அதிகரிக்கும்

தலை சுற்றளவு ஆறு மாதத்திற்கு 1.5 செ.மீ / மாதம் அதிகரிக்கும்

நாடி துடிப்பு 130 + 20

சுவாச அளவு 36 + 10

இரத்த அழுத்தம் 80/50 + 20/10

நரம்பு தூண்டுதல் ஆரம்ப நிலை தூண்டுதலில் இருந்து முன்னேற்ற தூண்டுதல் அடைதல்

சுவாச குழாய் முழுமை அடையாத நிலையில் இருத்தல்

கவிழும் போது தலையை உயர்த்துதல்

சிறிது நேரம் உதவியுடன் உட்காருதல்

உட்காரும்போது தலையை உறுதியாக வைத்தல்

தலை உறுதி அடைதல்

பின்புறமாக திரும்பி படுத்தல்

தவழ்வதற்கு முயற்சி செய்தல்

 

 

 

 

பொருளை எடுக்க கூடிய முயலுதல்

பொருட்களின் பின்னால் செல்லுதல்

பொருட்களை வாயின் அருகில் கொண்டு செல்லுதல்

கை மற்றும் காலை பார்த்தல்

பொருட்களை இரண்டு

கைகளாளும் பிடித்தல்

 

ஒலியுடன் கூடிய புன்னகை செய்தல்

கூ என ஒலி எழுப்புதல்

வாயிலிருந்து உமிழ் நீர் ஒழுகுதல்

மனிதனின் முகம் பார்த்து புன்னகை செய்தல்

பகலில் அதிகம் விழித்து இருத்தல்

தூக்கம் மற்றும் விழித்தல் தொடர்ச்சியாக அமைதல்

முகங்கள் பார்த்து பழகுதல்

அந்நிய முகங்களை அறிந்து கொள்ளுதல்

 

2.

4-8 மாதம்

6 மாதத்திற்கு பிறகு எடை பிறப்பு எடையை விட இரண்டு மடங்காகும்.

உயரம் உடல் பகுதியில் மட்டும் அதிகரிக்கும்

நீண்ட நேரம் தலையை நேராக வைத்தல்

முன்புறம் பின்புறம் தாவுதல்

பக்கவாட்டில் திரும்பி படுத்தல்

சிறிது நேரம் உதவியுடன் உட்காருதல்

விரல்களை பிடிப்பதற்கு பயன் படுத்துதல்

பிடித்த பொருளை பரிசோதித்தல்

ஒரு பொருளை ஒரு கையிலிருந்து  மற்றொருகைக்கு மாற்றுதல்

 

ஒலிகளை அதிகரித்தல்

வௌவல் ஓசையை உபயோகப் படுத்தல் (பா...பா...)

இரண்டு ஓசை ஏற்படுத்துதல்

அந்நியரை பார்த்து பயப்படுதல்

பொம்மையுடன் விளையாடுதல்

எளிதில் ஏமாற்றம் அடைதல்

 

3.

8 - 12 மாதம்

ஒரு வயதின் முடிவில் உடல் எடை பிறப்பு எடை போல் மூன்று மடங்காகும்.

தோராயமாக ஒரு வயதில் எடை 22 பவுண்ட் ஆகும்.

பச்சிளங்குழந்தை ஒரு மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் உயரத்தை பெறும். உடல் பகுதியில் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஒரு வயதில் 50% உயரம் அதிகரிக்கும்.

ஒரு வயதில் தலை சுற்றலவு மார்பு சுற்றளவிற்கு சமமாக அமையும்.

உதவியின்றி நின்ற நிலையில் இருந்து உட்காருதல்

உதவியின்றி நிற்பது

தவழுதல்

உதவியுடன் நடத்தல்

இரு விரலால் பிடித்தல்

விளையாட கைகளை உயர்த்துதல்

.பொருட்களை பாத்திரத்தில் போடுதல்

கப்பின் (cup) உதவியுடன் நீர் பருகுதல்

மற்றவர்களின் உதவியுடன் ஸ்பூன் பயன் படுத்துதல்

விரல்களால் சாப்பிடுதல்

படம் வரைதல்

 

 

முதல் வார்த்தை பேசுதல்

ஒலிகளைக் கொண்டு மற்றவர்களை அறிதல்

மற்றவர்களை போல் நடித்து ஒலி எழுப்புதுல்

வார்த்தையை புரிந்துக் கொண்டு இல்லை என்று தலை.அசைத்தல்

தன் பெயரை அழைத்தால் உடனே திரும்புதல்

மூன்று வார்த்தைகளை சேர்த்து உச்சரித்தல்

 

 

 

சிறு சிறு விளையாட்டு விளையாடுதல்

திட்டும்போது அழுதல்

சாதாரன கோரிக்கைகளைத் தெளிவற்ற உச்சரிப்பில் சொல்லுதல்

தனிமையில் பயப்படுதல்

உறவினர்களைக் கண்டறிதல்

 

மைல் கற்களின் வளர்ச்சி (Mile stone development)

மாதம்

மைல் கற்களின் வளர்ச்சி

2

முகம் பார்த்து சிரித்தல் (social smile)

3

நேரடியாக தலையை உயர்த்துதல் அல்லது தலைகட்டுப்பாடு

4

வயிற்றில் வைக்கும்போது தலையை 90° ல் வைத்தல்

5

உருளுதல்

6

உதவியுடன் சிறிது நேரம் உட்காருதல்

7

உதவியின்றி உட்காருதல்

8

தவழ ஆரம்பித்தல்

9

பொருளைப் பிடித்து கொண்டு நிற்றல்

10

யாரையேனும் பிடித்து நிற்றல்

11

சிறிது நேரம் தானாகவே நிற்றல்

12

உதவியுடன் நடத்தல், ஒரு வார்த்தை உச்சரித்தல்

பல் முளைத்தல்

நடு வெட்டும் பற்கள் 6 - 8 மாதங்கள்

பக்கவாட்டு வெட்டும் பற்கள் 8 - 11 மாதங்கள்

நடைபயிலும் பருவம் (Toddler)

நடைபயிலும் பருவம் என்பது 1 வயது முதல் 3 வயது வரையிலானப் பருவம் ஆகும். இந்த பருவத்தில் குழந்தைகள் துரிதமாகச் செயல்படும். இந்த பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட குணத்தில் (personality) முன்னேற்றம் ஏற்படும்.

முன்னேற்றம்

வ.எண்.

வயது (மாதம்)

உடல் வளர்ச்சி

தூண்டல்

துலக்கம்

மொழிகள்

சமுதாய சூழல் /

நடத்தைகள்

1

15 மாதங்கள்

பொதுவாக (1 - 3 வயது வரை)

வருடத்திற்கு (சராசரி எடை 1 - 8) - 2.7 கிலோ வரை அதிகரிக்கும்

உடல் எடை 2 1/2 வயதில் பிறப்பு எடையை போல் நான்கு மடங்காகும்

உடல் எடை அதிகரிப்பு சிறிதளவே இருக்கும்.

அகலமாக கால் வைத்து மெதுவாக நடக்கும்

படிகட்டில் பிடித்து ஏறுவது

பொருட்களை எரிதல்

இரண்டு பிளாக் வைத்து கட்டிடம் கட்டுதல்

டப்பாவை திறத்தல்

பொருள்களைப் பிடித்தல்

கரண்டிகளைப் பயன்படுத்துதல் ஆனால் சிந்தி விடும்.

உடல் பாகங்களின் பெயர்களை கண்டறிதல்

தெரிந்த கட்டளைக்கு பணிதல்

2-6 வார்த்தைகள் வரை பேசுதல்

தெரிந்த படம் மற்றும் பொருட்களுக்கு பெயர் சொல்லுதல்

பெற்றோர்களை அனைத்து முத்தம் கொடுத்தல்

குறைவாகப் பயப்படுதல்

பெற்றோர்களைப் பார்த்து அப்படியே செய்தல் அடம் பிடித்தல்

2

18 மாதங்கள்

 

10-12.5 செ.மீ வருடம் வரை அதிகரிக்கும்2 வயதில் உயரம் 85 செ.மீ ஆகும்.

.கை மற்றும் கால்களின் வளர்ச்சி உடல் மற்றும் தலையின் வளர்ச்சியை விட அதிகம்

அகலமாக கால் வைத்து நடத்தல்

ஓடி கீழே விழுதல்

படிகட்டில் ஏறி இறங்குதல்

மரசாமான் மீது ஏறுதல்

தானாகவே நாற்காலியில் உட்காருதல்

3 பிளாக் வைத்து வீடு கட்டல்

விருப்பப்படி இறுக்குதல்

டம்ளர் உதவியுடன் நீர் பருகுதல்

 

ஒன்றுக்கு மேற்பட்ட உடல் பாகங்களை அறிதல்

சரியான வார்த்தை பேசுதல்

படத்தின் பெயர் கூறுதல்

வார்த்தை உபயோகப் படுத்துதல்

அடம் பிடித்தல் அந்நியர்களுக்கு குறைவாகப் பயப்படுதல்

3

18 – 22 மாதம்

முதுகெலும்புகள் இடுப்பு எலும்புகள் வளைந்து காணப்படும்.

கால்கள் வளைந்து காணப்படும்.

உடல் பகுதி (ம) கால் பகுதியில் விகிதம் 1:7 : 1 ஆகும்.

தலை சுற்றளவு, மார்பு சுற்றளவுக்கு சமமாக 1-2 வயது வரை இருக்கும்.

நேராக நடத்தல்

விழாமல் ஓடுதல்

இரண்டு கால்களைப் பயன்படுத்தி படிக்கட்டில் மேலும், கீழும் இறங்குதல்

குதித்தல்

பந்தை உதைத்தல்

 

 

ஒரு கையினால் டம்ளரைப் பிடித்து நீர் குடித்தல்

கீழே சிந்தாமல் ஸ்பூன் பயன்படுத்தி உண்ணுதல்

கோடு மாற்றம் வட்டம் வரைதல்

பாத்திரத்தி லுள்ள நீரை ஊற்றுதல்

கடினமான வார்த்தையை பிரித்துக் கொள்ளுதல்

கதைகள், படங்கள் மூலம் மகிழ்தல்

அனுபவங்க ளைப் பற்றி கூறுதல்

உணவு வேண்டும் என்று கேட்டல்

மற்ற குழந்தை களுடன் பழகுதல்

தன்னுடையது என்ற எண்ணம் தோன்றுதல்

எதையாவது காட்டுவதற்கு மற்றவர்களை இழுத்து வருதல்

நடைமுறையில் மற்றும் ஏற்பட்டால் சோர்ந்து போதல்

4

30 மாதங்கள்

இரண்டு வயதில் தலைச்சுற்றளவு 49-50 செ.மீ ஆகும்.

முன்புற ஃபான்டனல் (Anterior Frontanalle)

11/2 வயதில் மூடும்

மார்பு சுற்றளவு, தலைச் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். AP விட்ட அளவு பக்க அளவு விட்டம் நடுமேற்கை சுற்றளவு 13-16 செ .மீ.

ஒரு காலால் நிற்பது

இரண்டு கால்களினால் குதித்தல்

நாற்காலியிலி ருந்து கீழே விழுதல்

மூன்று சக்கர வாகனங்களை ஓட்டுதல்

கைவிரல்களி னால் கலர் பென்சிலைப் பிடித்தல்

குறுக்கு கோடு வரைதல்

6 பிளாக் பயன்படுத்தி டவர் கட்டுதல்

சரியான முறையில் உடல் பாகத்தை பெயரிடுதல்

பெயர் கேட்கும் போது முழு பெயரைக் கூறுதல்

உறுதியாக பேசுதல்

ஏன் என்ற கேள்வி எழுப்புதல் 4-5 வார்த்தை பேசுதல்

சில தன்னல் குணநலன்

மதசடங்குகள்  பற்றி அறிதல்

பாலினத்தை அறிதல்

தனிமையாக இருக்க பழகிக் கொள்ளுதல்

5

36 மாதங்கள்

 

பற்கள் முளைத்தல் முதல் கடைவாய் பற்கள் 10-16 மாதம் இரண்டாம் கடைவாய் பற்கள் 20 - 39 மாதம் வெப்பநிலை 97.8" - 98.4F

நாடிதுடிப்பு 110-130/b/mt

(1-2 வயது) 110-130/b/mt

(3 வயது) மூச்சு விடல் (24-40 b/mt)

இரத்த அழுத்தம் 91/56 mm/Hg

தானாகவே உடை அணிந்து கொள்ளுதல்

மூன்று சக்கர வாகனங் களை ஓட்டுதல்

பின்னால் நடப்பது இரண்டு கால்களால் மேலும், கீழும் செல்லுதல்

ஒரு காலில் நிலையாக நிற்பது

 

மணிகளை நாரில் கோர்த்தல் கோடு, வட்டத்தை பார்த்து வரைதல் சட்டையில் உள்ள பட்டனை மாட்டுதல்

10 பிளாக்கைக் கொண்டு கட்டிடம் கட்டுதல்

 

தொடர்ந்து கேள்வி கேட்டல்

யாரும் இல்லாவிட் டாலும் தானாகவே பேசுவது

'W’  வார்த்தை விட்டு பேசுதல்

பன்மையில் பேசுதல்

அர்த்த மின்றி வார்த்தை களை திரும்பத் திரும்பப் பயன்படுத் துதல்

 

அடம் பிடித்தல்

கழிவு பயிற்சி அடையும்

சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்லுதல்

பெரியவர் களைப்போல் செய்து காட்டுதல்

900

வார்த்தைகள் தெரியும்

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.92452830189
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top