பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தை பராமரிப்பு / குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

சளி தொல்லை

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் காய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற  சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள்.

பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்  சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில்  குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல  மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி  சூரணம் செய்து 1ஸ்பூன்  அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி  இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய  சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

  1. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும்  தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம்  மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின்  உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.
  2. குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு  சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி  பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.
  3. அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும்.  எனவே பாலூட்டும்  தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து  மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை

3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
சீனுவாசன் Dec 17, 2018 07:36 AM

குழந்தை பிறந்து 15 நாட்க்கள் ஆகிறது தாய்க்கு சளி பிடித்துள்ளது சளி நீங்க தீர்வு சொல்லுங்கள்

கலா Jan 21, 2018 09:30 PM

2 வயது பையனுக்கு சளி பிடித்தால் இளப்பு வருகிறது என்பது என்ன மருந்து கொடுக்கலாம்

ரம் யா Dec 13, 2017 01:41 PM

என் குழந்தைக்கு 4 மாதம்.நெஞ்சு சளி உள்ளது அதற்கான வைத்தியம் கூறுங்கள். எத்தனை நாட்களில் குணமாகும்

ஆஷா Oct 26, 2017 10:31 PM

2வயது மகனுக்கு சளி பிடித்தால் இளைப்பு வருகிறது.... என்ன மருந்து கொடுக்கலாம்

சரண்யா Sep 13, 2017 11:56 AM

என் குழந்தை பிறந்து 50நாள் ஆகிறது.எனக்கு சளி பிடித்திருக்கிறது.பாலூட்டுவதனால் எனது மகனுக்கும் லேசாக சளி பிடித்திருக்கிறது.45நாள் தடுப்பூசி போடவில்லை போடலாமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top