பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நோய் எதிர்ப்பு (தடுப்பு) மருந்து

நோய் எதிர்ப்பு (தடுப்பு) மருந்து பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோய் தடுப்பு ஊசிகள் குழந்தை இறப்பை தடுக்கவும், குழந்தைகளுக்கு வரும் நோய்களை தடுக்கவும், குழந்தை ஊனத்தை குறைக்கவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

நோய் தடுப்பு மருந்தின் மூலம் எந்த நோய்கள் தடுக்கப்படுகிறது

a)  6 நோய்களுக்கான தடுப்பு மருந்து

 • இளம்பிள்ளை வாதம்
 • காசநோய்
 • தொண்டை அடைப்பான்
 • கக்குவான் இருமல்
 • இரண ஜன்னி
 • அம்மை

b) மற்ற மருந்துகள் தடுக்கும் நோய்கள்

 • ஹெப்படைடிஸ் - B
 • பொன்னுக்குவீங்கி
 • ரூபெல்லா
 • ஹீமோபிலஸ் இன்பூளுயன்சா வகை (B)
 • டைபாய்டு
 • மெனிஞ்ஜோ காக்கல் மெனிஜ்ஜைட்டிஸ் மூளைக்காய்ச்சல்
 • இன்பூளுயின்சா
 • நீமோகாக்கல் நிமோனியா
 • விளையாட்டு அம்மை.
 • ரோட்டோ நுண்ணுயிரி பேதி
 • மஞ்சள் காய்ச்சல்
 • காலரா, மலேரியா
 • பிளேக், வெறிநாய்க்கடி

பரிந்துரைக்கப்பட்ட உலகளாவிய தடுப்பூசி அட்டவணை

(இந்தியாவில் பின்பற்றப்படும் முறை)

வ.எண்.

வயது

தடுக்கும் நேரங்கள்

தடுக்கும் மருந்து

1

பிறந்தவுடன்

ஹெப்படைட்டிஸ் இளம்பிள்ளைவாதம் காசநோய்

ஹெப்படைட்டிஸ் பி 1 OPV BCG

2

பிறந்து ஆறு வாரங்களுக்குள்

காசநோய்

BCG

3

4-6 வாரங்கள்

ஹெப்படைட்டிஸ் பி

ஹெப்படைட்டிஸ் பி

4

6 வாரங்கள்

தொண்டை அடைப்பான் கக்குவான் இருமல் இரணஜன்னி இளம்பிள்ளை வாதம்

DPT-I

OPV-II

5

10 வாரங்கள்

தொண்டை அடைப்பான் கக்குவான் இருமல் இரணஜன்னி இளம்பிள்ளை வாதம் ஹெப்படைட்டிஸ் பி

DPT-I

OPV-II

ஹெப்படைட்டிஸ் பி III

6

14 வாரங்கள்

 

தொண்டை அடைப்பான் கக்குவான் இருமல் இரணஜன்னி இளம்பிள்ளை வாதம் ஹெப்படைட்டிஸ் பி

DPT-III

OPV-III ஹெப்படைட்டிஸ் பி (Boaster dose)

7

9 மாதங்கள்

தட்டம்மை இளம்பிள்ளை வாதம்

Measles I

OPV - IV

8

16-24 மாதங்கள்

தொண்டை அடைப்பான் கக்குவான் இருமல் இரணஜன்னி இளம்பிள்ளை வாதம்

DTP Booster

OPV Booster

9

5-6 வயது

தொண்டை அடைப்பான் இரணஜன்னி

DT B00ster

10

10-16 வயது. கர்ப்பிணி தாய் கர்ப்பத்தின் ஆரம்ப காலம் ஒரு மாதத்திற்கு பிறகு

இரணஜன்னி

இரணஜன்னி

இரணஜன்னி

T.T.

T.T. Ist Dose

T.T. II Dose

பொதுவான விதிமுறைகள்

 • குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போட ஆரம்பிக்காவிட்டால் எந்த வயதிலிருந்து வேண்டுமானாலும் தடுப்பூசி போட ஆரம்பிக்கலாம். குழந்தையின் வயதிற்க்கு ஏற்றவாறு அட்டவணையில் சில மாற்றங்கள் இருக்கும்.
 • தொடர்ச்சியாக போடப்படும் தடுப்பூசிகளை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து உரிய காலகட்டத்தில் போட வேண்டும். இடையில் விட்டு விட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே தொடரவேண்டும்.
 • நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் சில குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்யலாம்.

குளிர் சங்கிலி (The cold chain)

தடுப்பு மருந்தை சேமிக்கும் பொழுதும். இடம் மாற்றும் பொழுதும் அதனுடைய தன்மை மாறாமல் இருக்க குறிப்பிட்ட வெப்பநிலையிலேயே வைத்துக் கொள்வது முக்கியமாகும்.

குளிர் சங்கிலி- வரையறை (Cold chain)

குளிர் சங்கிலி என்பது தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடம் வரை குறிப்பிட்ட குறைந்த வெப்பநிலையிலேயே சேமித்து இடம் மாற்றும் முறையாகும்

குளிர் சங்கிலி உபகரணங்கள்

அ) Walkin cold rooms (WIC)

இது 4-5 மாவட்டங்களுக்கான தடுப்பு மருந்துகளை மூன்று மாதங்கள் வரை மண்டல அளவில் சேமிக்கும் இடம் ஆகும்.

ஆ) உறைந்த நிலை உபகரணம் (Deep Freezers)

இது மேல் பக்கமாக திறக்கக்கூடிய 300l/140L கொள்ளளவு கொண்ட குளிர் சங்கிலி உபகரணம் ஆகும். சிறிய அளவிலான உறைந்த நிலை உபகாரணங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் குடும்ப கட்டுப்பாட்டு மையங்களுக்கும். பிறசவத்திற்கு பின் பராமரிப்பு மையங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இ) ஐஸ் லைன் குளிர்சாதனப்பெட்டி (Ice line refrigerator) (ILR)

இது மேல்பக்கமாக திறக்கக்கூடிய குளிர்சாதனப்பெட்டி, இதன் இருவகைகள்

i) ஐஸ் குழாய்களால் ஆனது. ii) ஐஸ் பேக் (Ice packs) ளால் ஆனது. இதன் அடிப்பகுதி மிகவும் குளிர்வான பகுதியாகும்.

இதன் அடிப்பகுதி மிகவும் குளிர்வான பகுதியாகும்.

ஆரம்ப சுகாதாரமையங்களில் எல்லா தடுப்பு மருந்துகளம் இதில் (ILR) சேமிக்கப்படுகிறது. மற்றும் கரைப்பான்கள் ஒரு கூடையில் வைக்கப்பட்டு இதனுள் சேமிக்கப்படுகிறது. DPT, TT, DT ஏனெனில் இவற்றை நேரிடையாக குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் அதன் தன்மை மாறவாய்ப்புள்ளது. இதில் ஒரு வெப்பமானி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு இருமுறை அதன் வெப்பநிலையை குறிக்க வேண்டும். முறையான இடைவெளியில் பனிக்கட்டிகள் அகற்றப்பட வேண்டும்.

செய்ய வேண்டியவை

 • குளிர் சங்கிலி உபகரணங்களை குளிர்ச்சியான அறைகளில் சூரிய வெளிச்சம் படாதவாறு சுவர்களில் இருந்து 10 செ.மீ தள்ளி வைக்கவும்.
 • உபகரணங்களை சமநிலையில் வைக்க வேண்டும்.
 • உபகரணங்களை வோல்டேஜ் ஸ்டெடிலைசர் மூலம் இணைக்கவும்.
 • தடுப்பு மருந்துகளை சரியான கற்றோட்டம் இருக்குமாறு குளிர் சாதாரண பெட்டிகளில் அடுக்கி வைக்கவும்.
 • உபகரணங்களை தேவையான நேரங்களில் மட்டும் திறக்கவும் மற்ற நேரங்களில் மூடி வைக்கவும்

செய்ய கூடாதவை

 • குளிர் சங்கிலி உபகரணங்கள் மேல் எந்த பொருட்களையும் வைக்கக்கூடாது.
 • மற்ற மருந்துகள் தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை இதனுள் சேமிக்கக் கூடாது.
 • ஒரு மாதத்திற்க்கும் அதிகமாக தேவைப்படும் பொருட்களை ஆரம்ப சுகாதார நிலைய அளவில் வைக்கக் கூடாது.
 • காலாவதியான தடுப்பு மருந்துகளை வைக்கக்கூடாது.

ஈ) குளிர் பெட்டிகள்

துணை சுகாதார நிலையங்களில் மின்தடை ஏற்படும் பொழுது தடுப்பு மருந்துகளை சேமிக்கவும், அவற்றை எடுத்துச் செல்லவும் குளிர் பெட்டிகள் பயன்படுகிறது. தடுப்பு மருந்துகளை குளிர் பெட்டிகளில் வைக்கும் முன் அதன் பக்கங்களிலும் அடியிலும் ஐஸ் பேக்குகளை (Ice parks) வைக்க வேண்டும். தடுப்பு மருந்துகளை பாலித்தீன் பைகளில் வைக்க வேண்டும். DPT, TT, DT தடுப்பு மருந்துகளை பாலித்தீன் பைகளில் வைக்க வேண்டும். மற்றும் கரைப்பான்கள் நேரிடையாக (Ice parks) ஐஸ்பேக்குகளில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உ) தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்லும் உபகரணம்

இது குறைந்த அளவிலான தடுப்பு மருந்துகளை (16 - 20) எடுத்துச் செல்ல உதவும். அதன் பக்கங்களிலும் அடியிலும் ஐஸ் பேக்குகள் (Ice packs) வைக்கப்பட்டு இருக்கமாக மூடப்பட வேண்டும்.

ஊ) பகலில் தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்லும் உபகரணம்

இதில் 6 முதல் 8 வரையிலான தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்ல முடியும். இதில் இரண்டு ஐஸ் பேக்குகள் (Ice packs) பயன்படுத்தப்படும். இதை சில மணி நேரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

) ஐஸ் பேக்குகள் (Ice packs)

இவைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருக்க வேண்டும். உப்பு சேர்க்க கூடாது. குளிர் சங்கிலி திட்டம் வெற்றிகரமாக அமைய முறையான குளிர் சங்கிலி உபகரணங்களும். எடுத்துச் செல்லும் முறைகளும், மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியும் அவசியம்.

உணவூட்டுதல்

இளங்குழந்தைகளுக்கு உணவூட்டுதல் (0 -1 வயது)

முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தையின் தேவை அதிகரிப்பதால் தாய்ப்பாலுடன் இணை உணவை சேர்க்க வேண்டும்.

இணை உணவு ஊட்டுதல்

இளம் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலின் அளவை குறைத்து திட உணவை படிப்படியாக சேர்த்துக்கொள்வதற்கு இணை உணவூட்டுதல் என்று பெயர்.

இணை உணவூட்டுதலின் முக்கியத்துவம்

 • குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லாமல் போகும் பொழுது குழந்தையின் இருப்புச் சத்து, வைட்டமின் மற்றும் பிற ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இணை உணவுத் தேவை.
 • திட உணவுகளின் செரிமானத்திற்கான நொதிகள் உருவாக ஆரம்பிப்பதால் இணை உணவு கொடுக்க வேண்டும்.
 • குழந்தைகள் உணவை மெல்லும் திறன் 6 மாதங்களில் முழுமை அடைவதால் இணை உணவு கொடுக்கப்பட வேண்டும்.
 • கப் (Cup) மற்றும் ஸ்புன் (Spoon) பயன்படுத்தி தானாக உணவை உட்கொள்ளுவதன் மூலம் தனியாக செயலாற்றும் திறணைகற்றுக் கொள்கிறது.
 • குழந்தை திட உணவுகளை நன்றாக மென்று விழுங்கும் முறையினை கற்றுக் கொள்கிறது.

இணை உணவின் கோட்பாடுகள்

 • குழந்தைகளுக்கு இணை உணவு தொடங்கும் பொழுது உணவு மண்டலத்தில் எந்த கோளாறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • குழந்தைக்கு புதிதாக ஒரு உணவினை கொடுத்து நான்கு முதல் ஏழு நாட்களுக்கு பிறகு அடுத்த உணவினை கொடுப்பதன் மூலம் உணவு ஒவ்வாமையை கண்டறியலாம்.
 • புதிய உணவு வகைகளை குறைந்த அளவிலேயே கொடுக்க வேண்டும்.
 • உணவு பொருட்களை பாட்டிலில் கலந்து ரப்பர் சூப்பான் (Nipple) மூலம் கொடுக்கக் கூடாது.

நடை பயிலும் குழந்தைக்கு உணவூட்டுதல் (1-3 வயது)

நடை பயிலும் குழந்தைகளுக்கு தினமும் 1200 கலோரிகள் தேவை. இவர்களுக்கு உணவூட்டுதலில் முக்கியமாக,

 • சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உணவு வகைகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.
 • குழந்தைகளுக்கு விருப்பம் இல்லாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அடிப்படை உணவு ஒரே உணவாக இருக்க வேண்டும். உணவின் தன்மை மற்றும் அளவு குழந்தையின் வளர்ச்சி, உடல் அமைப்பு மற்றும் உணவு பழக்கத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.

பள்ளிக்கு முந்தைய பருவ குழந்தைகளுக்கு உணவூட்டுதல்

தினமும் 1500-1600 கிலோ கலோரிகள் கொடுக்க வேண்டும். இவற்றில் அடிப்படை உணவு ஒரே உணவாகவும் மற்றவை உணவின் முக்கிய பங்காகவும் இருத்தல் வேண்டும். இவ்வயது குழந்தைகள் உணவினை விதவிதமான வடிவங்களிலும், அளவுகளிலும் உட்கொள்ள பிரியப்படுவர்.

(எ.கா) கேரட்.

பள்ளி பருவ குழந்தைகளுக்கு உணவூட்டுதல் (6 12 வயது)

 • இக்குழந்தைகளுக்கு தினமும் 2000 - 2500 கிலோ கலோரி கொடுக்க வேண்டும். அடிப்படை உணவு ஒரே உணவாக இருத்தல் வேண்டும். ஆனால் அதன் அளவு அதிகரிக்க வேண்டும்.
 • குழந்தை பசியாக இருக்கும் பொழுது புதிய உணவு வகைகளை கொடுக்க வேண்டும். ஆனால் குழந்தைகளை உண்ணும்படி கட்டாயப் படுத்தக்கூடாது.

இணை உணவு ஊட்டும் முறைகள்

முதலில் உணவை ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்க வேண்டும். பிறகு உணவின் அளவையும் உணவு கொடுக்கும் தவணைகளையும் அதிகரிக்க வேண்டும்.

வ.எண்

வயது

கொடுக்கப்பட வேண்டியவை

1

4-6 மாதங்கள்

பருப்பு சூப், ஆரஞ்சு ஜீஸ்/ பழச்சாறு - பச்சை காய்கறி சூப் - கேழ்வரகு கஞ்சி -வாழைப்பழம்.

2

6 - 9 மாதங்கள்

இட்லி -மசித்த சாதம் மற்றும் - பருப்பு காய்கறி சூப் - முட்டைகரு /மீன் - மசித்த கேரட் /உருளை - கிழங்கு /பிஸ்கட்/ கிச்சடி/- கேசரி.

3

9 - 12 மாதங்கள்

கோழிகறி /கல்லீரல் - சாப்பாத்தி / இட்லி - இடியாப்பம்/ பிரட் - சாதம் /பருப்பு முட்டை - (குடும்ப உணவு)

குழந்தைகளுக்கு உணவூட்டும் பொழுது நினைவில் கொள்ள வேண்டியவை

 • குறைந்த அளவில் பரிமாறவேண்டும். திரும்பவும் உணவை கேட்டு உண்பதை ஊக்குவிக்க வேண்டும்.
 • கவர்ச்சிகரமான முறையில் பரிமாறவேண்டும்.
 • பெரிய குழந்தைகள் தங்கள் உணவை தானே தேர்ந்தெடுக்க உரிமை அளிக்க வேண்டும்.
 • உணவிற்கு முன் பாலை முழுவதுமாக குடிக்க விடக் கூடாது.
 • தண்டனையாக உணவுக் கொடுக்காமல் இருக்கக் கூடாது.
 • குழந்தை உண்ணும் பொழுது அவசரப்படுத்தக் கூடாது.
 • காரமான உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளதால் அவற்றை குறைவான அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
 • சாப்பிட்டு முடித்தப்பின் பாராட்ட வேண்டும்.

பச்சிளங்குழந்தைகளுக்கு வரும் சிறு பிரச்சினைகள்

மூக்கடைப்பு :

மூக்கடைப்பு ஏற்படுவதால் குழந்தை வாய் வழியாக சுவாசித்து அதிகமான காற்றை விழுங்குதினால் வயிறு உப்புதல் ஏற்பட்டு வாந்தி ஏற்படும். மூக்கு துவாரங்களை சோடியம் குளோரைடில் ஊறவைத்த பஞ்சு துடைப்பான்கள் மூலம் துடைப்பதன் மூலம் மூக்கடைப்பை தவிர்க்கலாம்.

ஒட்டும் கண்கள் :

எரிச்சலுட்டும் வேதிப் பொருட்கள் மற்றும் ஸ்டெபைலோஃ காக்கை பாக்டீரியா இதற்கு காரணம் ஆகும். 0.5% எரித்ரோமைசின் 6 முதல் 7 மணி நேரங்களுக்கு ஒரு முறை பத்து நாட்கள் கண்களில் போடுவதன் மூலம் சரிப்படுத்தலாம்.

தோல் தடிப்பு (Skin Rashes) :

இது எரிதீமா நியோநேடோரம் என்றும் அழைக்கப்படும். இந்த தடிப்புகள் திடீரென உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கு சிகிச்சை தேவையில்லை.

மேஸ்டைடிஸ் நியோநேடோரம் :

கர்ப்பத்தின் போது தாய்க்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் மார்பக திசுக்கள் வீங்கி காணப்படும். பிறந்த சில நாட்களில் சரியாகிவிடும். இதற்கு சிகிச்சை தேவையில்லை.

நாக்கில் வெண் பூசனம் :

வெண் பூசனம் வாய்ப்பகுதி அல்லது புட்ட பகுதி அல்லது தொடையின் உள் பகுதியில் காணப்படும். இதற்குக் சிகிச்சை முறை 1% ஜென்டியன் வயலட் அல்லது நிஸ்டாடின் சஸ்பென்ஷ்னை பஞ்சு துடைபான்களின் மூலம் ஒரு நாளைக்கு 3-4 முறை போட வேண்டும்.

பைமோஸிஸ் :

ஆண் குழந்தைகளுக்கு ஆண்குறியின் நுனி பகுதியின் முன் தோல் மூடி காணப்படும். இதனால் குழந்தை சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படும். இதனை சரி செய்ய மஸ்கிட்டோ இடுக்கியை பயன்படுத்தி விலக்கி விடவேண்டும்.

மங்கோலின் புள்ளிகள் :

குழந்தைகளின் முதுகு மற்றும் புட்டப் பகுதியில் நீலம் கலந்த கருப்பு நிறமிகள் பரவலாக காணப்படும். இது நாளடைவில் மறைந்துவிடும்.

நேவி (Nevi) :

டெலன்ஜியாக்டேக்டிக் நேவி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இது கண்களின் மேல் இமை, மூக்கு, மேல் உதடு மற்றும் பின் கழுத்துப் பகுதியில் ஏற்படலாம். இது குழந்தையின் இரண்டாம் வயதில் மறைந்து விடும்.

சிசுதாரை இரத்தப்போக்கு :

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிசுதாரை இரத்தப்போக்கு அல்லது பொய்யான மாதவிடாய் ஏற்படும். சிசுவின் உடலிலிருந்து இந்த ஹார்மோன்களின் அளவு குறையும் போது இது சரியாகிவிடும்.

உடற்செயலியல் காரணங்களால் வரும் மஞ்சள் காமாலை

40% பச்சிளங்குழந்தைகளுக்கும் 60%. குறைமாத பச்சிளங்குழந்தைகளுக்கும் இந்த வகையான மஞ்சள் காமாலை ஏற்படும். மஞ்சள் காமாலையானது 2 முதல் 3 நாளைக்கு ஏற்பட்டு 2 முதல் 4 நாட்களில் உச்சநிலையை அடையும் 5 முதல் 7 நாட்களுக்குள் குறைந்து விடும். இது சிசுவின் இரத்த சிவப்பு அணுக்கள் அதிக அளவில் சிதைவடைந்து அதிக அளவில் பிலிரூபின் அதிகமாக உண்டாவாதல் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை தேவையில்லை. சில குழந்தைகளுக்கு போட்டோதெரபி (Photo therapy) தேவைப் படலாம்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.03333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top